சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் த%
தகவிலை     தகவு     தகும்     தக்கன்     தக்கார்     தக்கிலமே     தங்கா     தங்கையை     தஞ்சம்     தட     தடத்து     தடம்     தடாவிய     தணியும்     தண்     தண்டகாரணியம்     தண்டொடு     தண்ணனவு     தத்துக்     தந்தம்     தந்தை     தந்தையும்     தனக்கு     தனம்     தனி     தனை     தன்     தன்நேர்     தன்னடியார்     தன்னாலே     தன்னிகரொன்     தன்னின்     தன்னுடைய     தன்னுளே     தன்னை     தன்முகத்துச்     தன்மை     தமக்கு     தமர்     தமர்கள்     தம்     தம்பரம்     தம்பியொடு     தம்மையே     தரங்க     தரித்திருந்தேன்     தரு     தருக்கினால்     தரும     தருமம்     தற்கச்     தற்பு     தலைக்     தலைபெய்து     தலைப்பெய்     தலைப்பெய்து     தலைமேல     தலைமேல்     தளர்ந்திட்டு     தளர்ந்தும்     தளர்வு     தளிர்     தளை     தளைக்     தள்ளித்     தழும்பு     தழுவிநின்ற     தழைகளும்     தவத்துளார்     தவம்     தவள     தா     தாங்காதது     தாங்கு     தாங்கு-அரும்     தாது     தான     தானவன்     தானாக     தானே     தான்     தான்போலும்     தாமத்     தாமரை     தாமரைக்     தாமோதரனை     தாம்     தாம்பால்     தாயப்     தாயர்     தாயே     தாய்     தாய்-முலைப்     தாய்மார்     தாரா     தாராய்     தாரித்து     தாரேன்     தார்     தார்க்கு     தாள     தாளால்     தாள்     தாள்களை     தாழம்     தாழியில்     தாழை     தாழ்     தாழ்ந்து     தாழ்வு     தாவி     திகழ     திகழும்     திகழ்கின்ற     திக்கு     திங்கள்     திசைக்கின்றதே     திசையும்     திட     திடர்     திண்     திண்ணக்     திண்ணன்     திண்ணியது     திரண்டு     திரிகின்றது     திரிதந்து     திரிந்தது     திரிபுரம்     திரியும்     திரிவிக்கிரமன்     திரு     திருக்     திருக்கடித்தானமும்     திருச்செங்குன்றூரில்     திருத்தனை     திருத்தாய்     திருந்தக்     திருந்து     திருப்பேர்     திருமகளும்     திருமங்கை     திருமறுமார்வ     திருமாலிருஞ்சோலை     திருமாலிருஞ்சோலையானே     திருமால்     திருமேனி     திருவடியை     திருவடிவில்     திருவில்     திருவுக்கும்     திரை     திறங்கள்     திறத்துக்கு     திறம்     திறம்பாது     திறம்பாமல்     திறம்பிற்று     திறம்பேல்மின்     திறல்     தில்லைநகர்த்     திவளும்     தீ     தீதில்     தீது     தீய     தீயிற்     தீரா     தீராத     தீராது     தீர்     தீர்த்தனுக்கு     தீர்த்தன்     தீர்ந்த     தீர்ப்பாரை     தீவினை     தீவினைக்கு     துக்கச்     துக்கம்     துங்க     துஞ்சா     துடி     துடைத்த     துணிந்தது     துணிவு     துணை     துணைநிலை     துணையும்     துண்ட     துன்னி     துன்னிய     துன்னு     துன்பமும்     துன்று     துப்பனை     துப்பு     துப்புடையாரை     துயக்கு     துயரங்கள்     துயரமே     துயர்     துறந்தேன்     துறப்பேன்     துளக்கம்     துளங்கு     துளம்     துளை     துழா     துவரி     துவரிக்     துவரித்த     துவர்     துவள்     தூ     தூங்கு     தூண்     தூது     தூமணி     தூம்பு     தூயனாயும்     தூயானை     தூயாய்     தூய்மை     தூராத     தெந்தில்லைச்     தென்     தென்னவன்     தென்னிலங்கை     தெய்வ     தெய்வங்காள்     தெரிதல்     தெரிந்துணர்வு     தெரியேன்     தெரிவு     தெருளும்     தெருவின்கண்     தெருவில்     தெளி     தெளிது     தெளிந்த     தெளிவிலாக்     தெளிவுற்று     தெள்     தெள்ளிய     தெள்ளியார்     தெள்ளியீர்     தெவ்     தே     தேசும்     தேடற்கு     தேட்டு     தேனுகன்     தேனை     தேனொடு     தேன்     தேரார்     தேருங்கால்     தேர்     தேவராய்     தேவரையும்     தேவர்     தேவிமார்     தேவு     தேவும்     தை     தையலாள்மேல்     தையல்     தொகுத்த     தொக்கு     தொடர்     தொட்ட     தொண்டரும்     தொண்டர்     தொண்டீர்     தொண்டு     தொத்தார்     தொத்து     தொன்னெறிக்கட்     தொல்     தொல்லை     தொழில்     தொழுதனர்     தொழுதால்     தொழுது     தொழுத்தையோம்     தொழும்     தோடு     தோட்டம்     தோயம்     தோயா     தோய்த்த     தோற்றம்     தோற்றோம்     தோளி     தோள்    
Number of search results : 411
Pages:    1    2  3  4  5  Next
3914.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

தகவிலை தகவிலையே நீ கண்ணா
      தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்கச்
      சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு
      ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்
      வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே  
3856.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 80   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக

தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே
3047.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகிநின்று உள் உளே
3024.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே?   
1363.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்-
எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ்-கூடலூரே
340.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத்
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே
3849.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 73   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக

தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக் கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே
2669.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 85   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் பொங்கு ஓதத்
தண் அம் பால் வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய
கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்?   
391.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
      தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
      எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
      கடு வினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
      கண்டம் என்னும் கடிநகரே
3184.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
      தானும் ஆய் அவை அல்லன் ஆய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல்
      மூவர் தம்முள்ளும் ஆதியை
      அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
      அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
      ஆகும் நீள் கடல் வண்ணனே
1126.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
      நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி
      வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்
      நான் இவர்-தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே
569.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வட மதுரையார்-மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே
472.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
      தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
      தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
      மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
      இடவகை கொண்டனையே
529.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
      தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல
      வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
      பட்டைப் பணித்தருளாயே
215.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
      உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
2483.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
3291.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வெறி விலக்கு

தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே
713.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா
      தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன்
      மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
      வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
      என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே
2505.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 28   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே?
3166.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
      தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத்
      தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடி
      பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார்
      வல்வினை மோத மலைந்தே
1860.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

தண்டகாரணியம் புகுந்து அன்று
      தையலை தகவிலி எம் கோமான்
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர்
      குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப்
      பேசுகின்றது என்? தாசரதீ உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
59.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங் காவிடில்
விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா             
428.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

தண்ணனவு இல்லை நமன்தமர்கள்
      சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும்
      மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்
      எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
124.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ?
சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்
கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
130.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

தந்தம் மக்கள் அழுது சென்றால்
      தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்
வந்து நின்மேற் பூசல் செய்ய
      வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன்திறத்தர் அல்லர்
      உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா
      நான் சுரந்த முலை உணாயே
1588.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்-
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே
1689.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய
      தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்
      பெறும் அளவு இருந்தேனை
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்
      அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து
      வலிசெய்வது ஒழியாதே
1993.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ!-
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே
1808.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1912.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்
      தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே
      விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்து துகில் பற்றிக் கீறி
      படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய்
      என் செய்கேன்? என் செய்கேனோ?
1444.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்
      நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ
      நின்ற நகர்-தான்-
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள்
      ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே
619.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
      தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பு அரிது
      மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்
      குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே
      நள்-இருட்கண் என்னை உய்த்திடுமின்
2197.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 16   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வனத் திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று?
746.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
      தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு
      வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை
      ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே.
2481.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே?
3776.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
      நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
      உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
      நாளும் வாய்க்க நங்கட்கே
2490.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 13   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர்? எனை ஊழிகள் ஈர்வனவே
2556.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 79   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும்
பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே
413.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்
      சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
      என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி
      மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு
      ஆள் ஆவரே?
1113.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்
      தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த
      வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
      மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே
1884.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ
நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே
223.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
      தளர்நடைஇட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
      புள்ளுவன் பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
      துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே             
2780.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், - தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்

1503.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:3

தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்
      தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்
      தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை
      விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
2789.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்

2765.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் றன்றியும்,
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்

2736.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,
மன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள்
மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு

2763.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க

2762.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,
கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து

2759.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,
கொன்னவிலு மெகில் கொடிதாய் நொடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த

2743.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,
கன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,
மன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்

761.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 10   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே
2887.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே     
2788.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,
மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்

1768.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு-
பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே
2715.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்

2784.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப

54.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ
3608.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ
பன்மைப் படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே?
2616.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 32   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது?
2472.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 91   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று    
2125.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 44   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம்-ஆழியான் ஆம்
2251.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 70   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்
3778.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

தமர்கள் கூட்ட வல்வினையை
      நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
      வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள்
      தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
      சதிரே வாய்க்க தமியேற்கே
1403.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த
அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே
301.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

தம் மாமன் நந்தகோபாலன்
      தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
செம்மாந்திரே என்று சொல்லி
      செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும்
      கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர்
      இனித் தரியார் என்னுங் கொல்லோ?
1920.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 13   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

தம்பரம் அல்லன ஆண்மைகளைத்
      தனியே நின்று தாம் செய்வரோ?
எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன்
      இனி யான் என் செய்கேன்?
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல்
      அங்கு அனல் செங் கண் உடை
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு
      பிணங்கி நீ வந்தாய் போலும்
1443.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை
      ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது
      மேவும் நகர்-தான்-
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில்
      ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே
1976.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே
1665.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர்
அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே
2444.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 63   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர்
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னைத் தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது    
688.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
1729.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே
1054.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

தருக்கினால் சமண் செய்து சோறு தண்
      தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
      கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
2962.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனிக் கேள்வன்
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே   
642.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

தருமம் அறியாக் குறும்பனைத்
      தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
      பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் சேய்தாய்
      உதயப் பருப்பதத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
      விருந்தாவனத்தே கண்டோமே
2889.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே   
2458.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 77   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக்
கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு    
767.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 16   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே
396.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம்
      சலசல பொழிந்திடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை
      மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்
      அவபிரதம் குடைந்து ஆடக்
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே
3141.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே
2567.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 90   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால்
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே
3951.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளை

தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே 
3927.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே  
1901.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான்
      சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த
      பெருமான் திருமால் விரி நீர் உலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை
      மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்
அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
3542.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்ப

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே
2551.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 74   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங் கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
3229.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த
      தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
      அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
      ஐந்தை இரு சுடரை
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றி
      யான் என்றும் கேடு இலனே
3312.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ

தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே
727.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ
1985.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்

தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க
      எரி கான்று இரண்டு தறு கண்
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று
      பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர்-ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம்
      மதியாது சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம்-அது வையம் மூடு
      பெரு நீரில் மும்மை பெரிதே
1224.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
      தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
      அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
      செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
218.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
      துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்
2104.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 23   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த-
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத வண்ணர் விரல்
3307.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

தழுவிநின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை
குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே
254.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
      தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
      கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
      மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
      உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே
902.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 31   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

தவத்துளார் தம்மில் அல்லேன்
      தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
      உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
      துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
      அரங்க மா நகருளானே
2259.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 78   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன்
கை அனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்
2400.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 19   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக்
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம்
ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந    
2884.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந் தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே   
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list