சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ச%
சக்கரக்     சக்கரத்து     சங்க     சங்கின்     சங்கு     சங்கும்     சங்கையும்     சண்ட     சதிர்     சதுர     சதுரம்     சத்திரம்     சந்த     சந்தம்     சந்திர-மண்டலம்     சந்தொடு     சன்ம     சன்மம்     சரங்களைத்     சரணம்     சரணா     சல     சலங்     சலம்     சழக்கு     சாடு     சாதலும்     சாதி     சாது     சாந்தமும்     சாந்து     சாம்     சாயக்     சாயால்     சாரா     சார்ங்கம்     சார்ந்த     சார்ந்தது     சார்ந்து     சார்வு     சார்வே     சாலப்     சாலி     சிக்கெனச்     சிங்கம்-அது     சிதைக்கின்றது     சித்தமும்     சித்திரகுத்தன்     சித்திரகூடத்து     சித்திரத்     சிந்தனையை     சிந்தப்     சிந்திக்கும்     சிந்துரச்     சிந்துரப்-பொடி     சிந்துரம்     சிந்தை     சிந்தை-தன்னுள்     சிந்தையாலும்     சிந்தையினோடு     சின     சினம்     சிரம்     சிரீதரன்     சிறந்த     சிறந்தார்க்கு     சிறப்பில்     சிறியன்     சிறியாய்     சிறியார்     சிறுவிரல்கள்     சிறை     சிற்றஞ்     சிலம்பின்     சிலம்பு     சிலம்பும்     சிலை     சிலையால்     சில்மொழி     சீத     சீதக்     சீதை     சீமாலிகன்     சீயினால்     சீரால்     சீரிய     சீர்     சீர்மை     சீற்றம்     சீலம்     சீலைக்     சுடர்     சுடர்-ஒளி     சுடர்ப்     சுடலையில்     சுமந்து     சுரக்கும்     சுரர்     சுரி     சுரிகையும்     சுரிந்திட்ட     சுருக்காக     சுருக்குவாரை     சுருங்கு     சுருப்பார்     சுரும்பு     சுற்றம்     சுற்றி     சுற்றும்     சுளை     சுழன்று     சுவரில்     சூடு     சூட்டாய     சூட்டு     சூதனாய்க்     சூதினைப்     சூது     சூர்மையில்     சூழல்     சூழல்கள்     சூழ்     சூழ்கண்டாய்     சூழ்கின்ற     சூழ்ச்சி     சூழ்ந்த     சூழ்ந்து     செக்கரிடை     செக்கர்     செங்     செங்கனி     செங்கமல     செங்கமலக்     செங்கமலப்     செஞ்சொல்     செடியாய     செண்பக     செத்துப்     செந்தழலே     செந்நெல்     சென்னி     சென்ற     சென்றது     சென்றால்     சென்று     செப்பாடு     செப்பு     செம்     செம்பொன்     செம்மை     செய்கின்ற     செய்கின்றது     செய்த்தலைச்     செய்ய     செய்யும்     செய்யேல்     செரு     செருவரை     செறி     செறும்     செற்றதுவும்     செற்றவன்     செற்று     செலக்     செல்ல     செல்வ     செழு     செழுங்     செழுந்திரைப்     செவி     செவிகளால்     செவிக்கு     செவ்     செவ்வரி     செவ்வாய்     சேப்     சேம     சேமமே     சேமம்     சேயன்     சேய்     சேரா     சேரும்     சேர்த்தடத்     சேர்ந்த     சேர்ந்தார்     சேர்வன்     சேல்     சொட்டைநம்பிகள்அருளிச்செய்தது     சொன்னால்     சொல்     சொல்ல     சொல்லாது     சொல்லாய்     சொல்லினால்     சொல்லினும்     சொல்லில்     சொல்லீர்     சொல்லு     சொல்லும்     சோதி     சோத்தம்     சோத்து     சோராத     சோர்வினால்     சோர்வு     சோலைத்    
Number of search results : 264
Pages:    1    2  3  Next
57.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலைமேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்             
3306.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
583.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

சங்க மா கடல் கடைந்தான்
      தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ்
      அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின்
      குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
      தங்கும் என்று உரையீரே
47.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
      தேவகி சிங்கமே தாலேலோ
2984.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே     
1195.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

சங்கு தங்கு தடங் கடல் கடல்
      மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!-
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்
      புல்கி இன் இள வண்டு போய் இளந்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே
808.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 57   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
1237.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
      தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய
      வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள்
      தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே
3507.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே
1954.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

சங்கும் மாமையும் தளரும் மேனிமேல்
திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?-
பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார்
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே
1295.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

சங்கையும் துணிவும் பொய்யும்
      மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப்
      பொருள்களும் ஆய எந்தை-
பங்கயம் உகுத்த தேறல்
      பருகிய வாளை பாய   
செங் கயல் உகளும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே   
818.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 67   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ
3111.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே
930.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 4   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில்
      ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
3785.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி

சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே
113.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான்
      பார் அளந்தான் என் புறம்புல்குவான்
1878.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

சந்த மலர்க் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே
வந்து என் முலைத்தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே
1306.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்க் காவளம்பாடி

சந்தம் ஆய் சமயம் ஆகி
      சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
      அரு மறை-அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
      மட மயில் ஆலும் நாங்கைக்
கந்தம் ஆர் காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே
570.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

சந்திர-மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே
596.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

சந்தொடு காரகிலும்
      சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
      உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
      குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
      திருமாலடி சேர்வர்களே             
3193.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே
3220.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
      சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
      தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
      மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
      நான் ஓர் குறைவு இலனே
802.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 51   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே
2857.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 7   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ் ஆர் உயிர்க்கே?   
3694.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர

சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே
3884.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 108   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே
2141.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 60   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு
271.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச்
      சர- மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்
      நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்
      இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
582.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
      தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
      நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
      உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
      நடலை-நோய் செப்புமினே
864.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 113   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
1228.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
      தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்
      நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
      செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
392.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்
      சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின்
      மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
      நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
434.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்
      சங்கு சக்கரம் ஏந்து கையானே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல்
      பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்
      வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்
      ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே
837.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 86   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என்கொல்? கண்ணனே
1262.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன்
      படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
      துணித்தவன் உறை கோயில்-
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
      பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே
1456.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
3157.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

சாதி மாணிக்கம் என்கோ?
      சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
      தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?
ஆதி அம் சோதி என்கோ?
      ஆதி அம் புருடன் என்கோ?
ஆதும் இல் காலத்து எந்தை
      அச்சுதன் அமலனையே
3169.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை

சாது சனத்தை நலியும்
      கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
      அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
      வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
      என் சவிப்பார் மனிசரே?
1110.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
      தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்
      பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்
      வளைகளும் இறை நில்லா என்-தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே
1471.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:3

சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே
3320.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே
424.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்
      சங்கொடு சக்கரம் ஏந்தினானே
நா மடித்து என்னை அனேக தண்டம்
      செய்வதா நிற்பர் நமன்தமர்கள்
போம் இடத்து உன்திறத்து எத்தனையும்
      புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
3513.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே
2598.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 14   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த்
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து
3942.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

சாரா ஏதங்கள்
நீர் ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே  
552.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
      சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம்
      நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும்
      சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில்
      அவனை நான் செய்வன காணே
2952.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

சார்ந்த இரு வல் வினைகளும்
      சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
      திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
      அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
      இவற்றின் உயிராம் நெடுமாலே   
2861.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்தது அத் தாமரைத் தாள்களுக்கு உன் தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே   
2356.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 75   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு
2381.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 100   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண்
தேன் அமரும் பூமேல் திரு
3924.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே  
260.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
      தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
      குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே
810.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 59   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட விற்குனித்த வில்-கை வீரனே
3065.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
      தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
      மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
      பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
1599.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
செங் கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அம் கமலக் கண்ணனை-அடியேன் கண்டுகொண்டேனே
1831.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்கொல்-என் நல் நுதலே?
2511.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 34   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி தன் சீறடியால்உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண் தார்ததைக்கின்ற தண் அம் துழாய்
அணிவான் அதுவே மனமாய்ப்பதைக்கின்ற மாதின்திறத்து அறியேன் செயற்பாலதுவே
2041.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

சித்தமும் செவ்வை நில்லாது
      என் செய்கேன் தீவினையேன்?
பத்திமைக்கு அன்பு உடையேன்
      ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே
      முழங்கு ஒளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால்
      யாதும் ஒன்று அறிகிலேனே
444.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

சித்திரகுத்தன் எழுத்தால்
      தென்புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
      தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்துத் திரைக் கடற் சேர்ப்பன்
      மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
323.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்
3640.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச

சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே
1404.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே
346.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத்-தனம் செய் அப்பன் மலை
இந்திர-கோபங்கள் எம்பெருமான் கனி- வாய் ஒப்பான்
சிந்தும் புறவிற் தென் திருமாலிருஞ் சோலையே
3576.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
      திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண் நீர் மல்க
      வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே
      அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த
      தையலை மையல் செய்தானே
587.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

சிந்துரச் செம்பொடிப் போல்
      திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
      எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
      மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
      சுழலையினின்று உய்துங் கொலோ?
261.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
      திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை
      அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை
      எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்
      துகிலொடு சரிவளை கழல்கின்றதே
259.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
      திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்
      வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை
      அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
      பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ
3669.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
      தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
      மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
      குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
      தீர்த்தனுக்கு அற்ற பின்னே
1329.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே
3505.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

சிந்தையாலும் சொல்லாலும்
      செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்று அடைந்த
      வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை
      வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
      அடிமைசெய்வார் திருமாலுக்கே
2859.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே   
1568.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்
      செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
      மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை
      நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்
      கண்-இணைகள் களிப்பக் களித்தேனே
2324.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 43   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனம் மேய பூமி அதனைத் தனமாக
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
ஓர் அகலத்து உள்ளது உலகு
1623.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி
      திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
      மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்-
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை
      ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
1801.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர்போலும்-
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே-தான் மணம் நாறும் குறுங்குடியே
3083.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே
2307.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 26   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார்
2225.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 44   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு
3103.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
புருஷார்த்த நிர்ணயம்

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே
61.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்           
1561.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது-தான்
அறியாது இருந்தறியேன் அடியேன்-அணி வண்டு கிண்டும்
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ
2217.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 36   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு
282.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
      செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
      வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
      கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே
1221.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
      திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
      கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
      ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
502.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 29   ஆண்டாள்   திருப்பாவை  

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
      குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
  எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
  மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய்
1285.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
      திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
      கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
      ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
999.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
      திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
      போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
      வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1622.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம்
      திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி
      எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்-
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க
      பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
2371.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 90   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ
வண் துழாய் மால் அளந்த மண்?
1649.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம்
      என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண்
      என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி
      இருக்கின்றாளால்-
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1807.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம்
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலை ஆர் பாடல் பாடப் பாவம் நில்லாவே
2497.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 20   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

சில்மொழி நோயோ கழி பெருந் தெய்வம் இந் நோய் இனது என்று
இல் மொழி கேட்கும் இளந் தெய்வம் அன்று இது வேல நில் நீ
என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே
370.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல்
ஏதம் இன்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே
23.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
      பவள வாயீர் வந்து காணீரே
523.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

சீதை வாயமுதம் உண்டாய் எங்கள்
      சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர்
      சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி
      புத்தூர் மன் விட்டு சித்தன்தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு
      இன்றி வைகுந்தம் சேர்வரே             
189.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

சீமாலிகன் அவனோடு
      தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
      சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்
372.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்
      செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி
      எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று
      மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும்
      பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே
2600.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 16   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப்
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே?
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து     
2801.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் பாண்பெருமாள் சரண் ஆம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே   
390.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய
வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த சொல்
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
Pages:    1    2  3  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list