705.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 8
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
என்னை வருக எனக் குறித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர்-நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய் பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப் பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
|
2588.0
பெரிய திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 4
திருமழிசை ஆழ்வார்
பெரிய திருவந்தாதி
திருவாசிரியம்
என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று
|
2716.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத் தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட
|
2719.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன் மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், பெரிய திருமடல் இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து
|
2744.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 4
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள், மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய், கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ, மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்
|
2745.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 5
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன், மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும், அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்
|
2749.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 9
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும் மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும், பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின் பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்
|
2757.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும், மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி
|
2770.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 8
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல்
இயற்பா
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை, கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை, மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல் பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை
|
2794.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 10
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
|
2860.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 10
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி
இயற்பா
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால் பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே?
|
2972.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 10
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆராதிப்பார்க்கு மிக இனியன்
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை முன்னை அமரர் முழுமுதல் தானே
|
3055.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 5
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்
என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம் மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே
|
3260.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்
என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே?
|
3562.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 6
நம்மாழ்வார்
திருவாய் மொழி
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய் கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே
|
3620.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 9
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
|
3645.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா? இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே
|
3646.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 2
நம்மாழ்வார்
திருவாய் மொழி
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா? துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும் உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே
|
3691.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 3
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
|
3959.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர் தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான் இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே?
|