சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் பா%
பா     பாசங்கள்     பாசறவு     பாசி     பாஞ்சசன்னியத்தைப்     பாடு     பாடும்     பாடோமே-எந்தை     பாட்டும்     பாண்     பாண்டவர்     பாதங்கள்மேல்     பாதம்     பாம்பு     பாயும்     பாய்     பாய்ந்தானை     பாரம்     பாரித்து     பாரினை     பாரும்     பாருள்     பாரை     பாரோர்     பார்     பார்-ஆயது     பார்-உருவி     பார்த்த     பார்த்தனுக்கு     பார்த்தற்கு     பார்த்தான்     பார்த்து     பாற்கடலும்     பால     பாலகனாய்     பாலகன்     பாலன்     பாலின்     பாலில்     பாலைக்     பாலொடு     பால்     பால்-ஆலிலையில்     பாவமும்     பாவியாது     பாவியேன்    
Number of search results : 64
60.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
72.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
206.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
      பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
      சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
      சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
      அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்
354.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே
576.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே
601.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட-
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே
614.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

பாசி தூர்த்தக் கிடந்த பார்-மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
628.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

பால்-ஆலிலையில் துயில் கொண்ட
      பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல்
      வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
      குடந்தைக் கிடந்த குடம்-ஆடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
      நெறி மென் குழல்மேல் சூட்டிரே
723.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ
795.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 44   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?
840.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 89   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே?
891.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 20   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பாயும் நீர் அரங்கந் தன்னுள்
      பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
      மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
      துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
      அடியரோர்க்கு அகலல் ஆமே?
931.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 5   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்?
      அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
1021.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்
      திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில் குரவை
      பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார்-தம் மனத்து உள்ளான் இட-
      வெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1024.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

பாரும் நீர் எரி காற்றினோடு
      ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
      பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
      சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1051.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே
      பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்
  வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
1062.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே
1083.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
      கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
      அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
      பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1088.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை
      படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்-தங்கள்
      சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை
      புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே
1092.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ
      பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன
      ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப்
      பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1099.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்-அவர் எம்மை ஆள்வாரே
1137.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
      பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
      தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
      திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
      செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே
1145.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
      பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை
      செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்
      புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
1296.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

பாவமும் அறமும் வீடும்
      இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
      குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
      இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே
1327.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
      பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்
      பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன்
      கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்
      இன்பம் நாளும் எய்துவாரே
1342.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து
      பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த
      செங் கண் மால் சென்று உறை கோயில்-
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி
      எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற-
      திருவெள்ளியங்குடி-அதுவே
1452.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
1462.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:2

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே
1496.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்-தன்
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர்-
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த-நறையூரே
1589.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த தேவ-தேவன் ஊர்போலும்-
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே
1720.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை-
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும்
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே
1835.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன்-தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல்-என் மொய் குழற்கே?
1979.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே-ஆயிரம் பேரானை? பேர் நினைந்து
சூடோமே-சூடும் துழாய் அலங்கல்? சூடி நாம்
கூடோமே-கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே
1999.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத்
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ!-
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர்-தங்கள் தலைமேலான் சாழலே
2006.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

பார் ஆரும் காணாமே பரவை மா
      நெடுங் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
      நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல்
      உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள்
      ஆயிரங்களுமே பேசீர்களே
2034.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

பா இரும் பரவை-தன்னுள்
      பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட
      அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து
      விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய
      மைந்தனை-வணங்கினேனே
2053.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி
      பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
      இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ
      ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
      முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே
2084.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 3   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்-
நீ அளவு கண்ட நெறி
2150.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 69   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு
2313.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 32   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன்
2314.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 33   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று
2349.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 68   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த
களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு
2384.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 3   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து
ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு?    
2457.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 76   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு    
2512.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 35   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

பால் வாய்ப் பிறைப் பிள்ளை ஒக்கலைக் கொண்டு பகல் இழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே
2599.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 15   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம்
தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்
2618.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 34   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று
2626.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 42   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை
2709.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர்

2842.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 3   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே     
3059.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே
3159.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

பால் என்கோ? நான்கு வேதப்
      பயன் என்கோ? சமய நீதி
நூல் என்கோ? நுடங்கு கேள்வி
      இசை என்கோ? இவற்றுள் நல்ல
மேல் என்கோ? வினையின் மிக்க
      பயன் என்கோ? கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ?
      வானவர் ஆதியையே
3242.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி
ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே
3244.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே
3435.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே?
3535.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள்செய்து ஒருநாள்
மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே
3544.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்ப

பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
3578.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
      பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட
      கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
      என்னும் என் தீர்த்தனே என்னும்
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
      என்னுடைக் கோமளக் கொழுந்தே
3616.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப

பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ
பா மரு மூவுலகும் அளந்த பற்ப பாதா ஓ
தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ
தாமரைக் கையா ஓ உன்னை என்றுகொல் சேர்வதுவே?
3642.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனும் ஆய் கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே
3692.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று

பாதம் அடைவதன் பாசத்தாலே
      மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
கோது இல் புகழ்க் கண்ணன் தன் அடிமேல்
      வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
      இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும்
      அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.
3872.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 96   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்

பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
      வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ
      மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ
தூவி அம் புள் உடைத் தெய்வ வண்டு
      துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ
      யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ
3888.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே  
3890.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே  
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list