சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் பொன்%
பொன்     பொன்னரும்     பொன்னவிலும்     பொன்னி     பொன்னுடம்பு     பொன்னும்     பொன்னை     பொன்னைக்     பொன்னொடு     பொன்போல்    
Number of search results : 21
76.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம்
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி
      மாயவனே கொட்டாய் சப்பாணி
97.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித்
தன் இயல் ஓசை சலன்-சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல்
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ
      எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ
224.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப்
      போனேன் வருமளவு இப்பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி
      வடக்கில் அகம் புக்கு இருந்து
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
      வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண்டேன்
      உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
467.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
      நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
      மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
      என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா
      என் உயிர்க் காவலனே
737.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்
      தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்
      மருகியையும் வனத்திற் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
      என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி இரு நிலத்தில்
      இனிதாக இருக்கின்றாயே
870.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 119   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே
1116.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்
      பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ்
      அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
      வீங்கிய வன முலையாளுக்கு
என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே
1417.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து
      பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த
      அரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்று அறுப்பாரே
1533.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:6

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்-இயலைத் திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே
1758.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

பொன் இவர் மேனி மரகதத்தின்
      பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
      வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
      ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
      அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
      அச்சோ ஒருவர் அழகியவா
1787.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 2

பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார்
மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே
1849.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பதினென் திருப்பதிகள்

பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே
2061.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
      புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால்
      என் அறிவன்-ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய்
      குணபால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி
      திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே
2179.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 98   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்
2730.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்
கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,
அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே

2735.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பொன்னொடு வீதி புகாதார், - தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக-போர்வேந்தன்

2740.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,
தன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,
2746.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்
கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள

2769.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,
மன்னிய தண்சேறை வள்ளலை, - மாமலர்மேல்
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி

3060.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே
3528.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
நல் நலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன்
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list