சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் எ%
எக்காலத்து     எங்களுக்கு     எங்கள்     எங்கானும்     எங்கு     எங்குத்     எங்கும்     எங்கே     எங்ஙனும்     எங்ஙனே     எங்ஙனேயோ     எஞ்சல்     எஞ்சா     எஞ்ஞான்றும்     எடுத்த     எட்டுத்     எட்டும்     எண்     எண்ணில்     எண்ணெய்க்     எண்மர்     எதிர்     எத்     எத்தனை     எத்தனையும்     எத்திறத்தும்     எந்தாய்     எந்தை     எந்தையே     எந்நாளே     எந்நாள்     எனக்கு     எனக்கே     எனது     என்     என்கொல்     என்தம்பிரானார்     என்ன     என்னது     என்னாலே     என்னின்     என்னுடை     என்னுடைக்     என்னுடைய     என்னும்     என்னுள்     என்னை     என்னைப்     என்னையும்     என்பு     என்று     என்றுகொல்     என்றும்     என்றே     என்றைக்கும்     எப்     எப்போதும்     எமக்கு     எம்     எம்பிரானே     எம்பிரானை     எம்பிரான்     எம்மனா     எம்மானும்     எம்மானே     எய்தக்     எய்தற்கு     எய்தான்     எய்த்த     எய்த்தார்     எய்யச்     எரி     எரிந்த     எருதுகளோடு     எருத்துக்     எறியும்     எல்லியும்     எல்லே     எல்லையில்     எளிதாயினவாறு     எளிதில்     எளிவரும்     எள்     எள்கி     எழ     எழில்     எழுமைக்கும்     எழுவதும்     எழுவார்     எவரும்     எவைகொல்     எவ்வ     எவ்வம்    
Number of search results : 164
Pages:    1    2  Next
6.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
      ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
      வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
      அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
      தாண்டு என்று பாடுதுமே
10.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
      யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
      வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
      சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
      பல்லாண்டு கூறுதுமே
36.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 14   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

எம் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே
      சேயிழையீர் வந்து காணீரே
46.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச்
சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு
இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ
      தாமரைக் கண்ணனே தாலேலோ
48.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ
      தூமணி வண்ணனே தாலேலோ
55.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா                       
104.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானிற் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ அச்சோ
      வேங்கடவாணனே அச்சோ அச்சோ
146.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்
      என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
      அனைவர்க்கும் காட்டிற்றிலையே?
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன
      நம்பீ உன்காதுகள் தூரும்
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே
      திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
157.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

எண்ணெய்க் குடத்தை உருட்டி
      இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
      கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
      ஒலிகடல் ஓதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ
      மஞ்சனம் ஆட நீ வாராய்
187.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

எருதுகளோடு பொருதி
      ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
      கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
      சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
      புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்
243.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே
307.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையைப் பாடிப் பற
      எம்பிரான் வன்மையைப் பாடிப் பற
308.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
      தாசரதி தன்மையைப் பாடிப் பற
347.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

எட்டுத் திசையும் எண்- இறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே
356.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய
வரி சிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரிசுடர் சூழும் மலை திரு மாலிருஞ் சோலையதே
425.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
      எற்றி நமன்-தமர் பற்றும்போது
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை
      நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
      சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
458.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

எருத்துக் கொடி உடையானும் பிரமனும்
      இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு
      மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா
      மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயிற் கடைப் புகப் பெய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
460.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

எத்தனை காலமும் எத்தனை ஊழியும்
      இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்
      இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
      நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
465.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

எம்மனா என் குலதெய்வமே
      என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்
      உலகினில் ஆர் பெறுவார்?
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
      நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடித்
      தூறுகள் பாய்ந்தனவே
488.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 15   ஆண்டாள்   திருப்பாவை  

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
  சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
  வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை?
      எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
      வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்
526.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

எல்லே ஈது என்ன இளமை?
      எம் அனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய்
      பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்
      வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
      பட்டைப் பணித்தருளாயே
548.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
      இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
      தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
      நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
      புண்ணியனை வரக் கூவாய்
550.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும்
      இருடீகேசன் வலி செய்ய
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும்
      முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை
      கொள்ளும் இளங் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில்
      தலை அல்லால் கைம்மாறு இலேனே
608.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
649.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
      எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்
      தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற
      அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு
      அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே
673.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
674.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
694.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல்
மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்
சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே
705.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

என்னை வருக எனக் குறித்திட்டு
      இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
      மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்
      பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்
      வருதியேல் என் சினம் தீர்வன் நானே
828.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 77   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
833.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 82   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே
884.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 13   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

எறியும் நீர் வெறிகொள் வேலை
      மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூந்துளவ மாலை
      விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம்
      அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம்
      புல் எழுந்து ஒழியும் அன்றே
953.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பெரிய திருமந்திரத்தின் மகிமை

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
      எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
      அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
      மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்
973.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன்
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே
1011.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்-
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே
1013.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்-
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே
1023.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

எண் திசைகளும் ஏழ் உலகமும்
      வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்
      பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர்
      வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1032.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்-
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே
1123.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்
      ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்
      தம்மன ஆகப் புகுந்து தாமும்
பொங்கு கருங் கடல் பூவை காயா
      போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே
1173.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல
தெய்வப் புள் ஏறி வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1213.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ?
1336.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே
1412.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?
      -இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து
      பொழிதரும் அருவி ஒத்து இழிய
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்
      விண் உறக் கனல் விழித்து எழுந்தது
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே
1445.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
      யாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
      கூட எழில் ஆர்
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
      தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே
1560.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே
1563.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ!-என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ
1565.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல்மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ
1573.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும்
      என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்
      தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை
      காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை பரவைத் துயில் ஏற்றை என்
      பண்பனை அன்றி பாடல் செய்யேனே
1576.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
      என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த்
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்
      அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட
      சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
      அன்றி என் மனம் போற்றி என்னாதே
1596.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே
1641.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
      வாச வார் குழலாள் மலை-மங்கை-தன்
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை
      பான்மையை பனி மா மதியம் தவழ்
மங்குலை சுடரை வட மா மலை
      உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை-சென்று நாடி
      -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1733.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை-
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்-
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே
1766.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

எண் திசையும் எறி நீர்க் கடலும்
      ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
      மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
      கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
      கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
      அச்சோ ஒருவர் அழகியவா
1773.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே
1793.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 1

எல்லியும் நன் பகலும் இருந்தே
      ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர் திறம் நாம் அறியோம்
      நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும்
      மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளர் இள முல்லை புல்கு
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
1838.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோட்டியூர்

எங்கள் எம் இறை எம் பிரான்
      இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்-
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்-
பொங்கு தண் அருவி புதம் செய்ய
      பொன்களே சிதற இலங்கு ஒளி
செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே
1839.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோட்டியூர்

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை
      இன் நகைத் துவர் வாய் நில-மகள்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்-
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை
      மாலையொடும் அணைந்த மாருதம்
தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே
1861.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன்
      தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே
நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று
      நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
      வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
1869.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
குழமணிதூரம்

எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப்போனான்_-குழமணிதூரமே
1898.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?
      -நர நாரணன் ஆய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான்
      அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும்
      நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது
அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
2083.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 2   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது-
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
2107.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 26   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை
2115.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 34   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில்
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண்
ஆய்த் தாய் முலை தந்த ஆறு?
2132.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 51   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில்
பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண்
2133.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 52   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று
2170.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 89   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம்
பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம்
2219.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 38   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து
2236.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 55   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே! இன்பக்
கடல் ஆழி நீ அருளிக் காண்
2276.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 95   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்
2278.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 97   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடு மால் திருமார்பா பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாக் கொண்டு
2333.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 52   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று
2367.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 86   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல
கார் வானம் காட்டும் கலந்து
2432.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 51   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை?    
2439.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 58   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு      
2473.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 92   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கரு இருந்த நாள் முதலாக் காப்பு    
2502.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 25   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே?
2518.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 41   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே
2559.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 82   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

எரி கொள் செந் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே?
2574.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 97   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே?
2588.0   பெரிய திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருமழிசை ஆழ்வார்   பெரிய திருவந்தாதி  
திருவாசிரியம்

என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று
எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று
2632.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 48   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு
2658.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 74   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி     
2716.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட

2719.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி,
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்
மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,
பெரிய திருமடல்
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து

2744.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,
மன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்

2745.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,
மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,
அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்

2749.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்
மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,
பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்

2757.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி

2770.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை

2794.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
2795.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே
2808.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே   
2860.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே?     
2919.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலகிற்கு உபதேசம்

எண் பெருக்கு அந் நலத்து
ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன்
திண் கழல் சேரே     
2922.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியவர்க்கு எளியவன்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே   
2933.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைமகள் தூதுவிடல்

என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே     
2935.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைமகள் தூதுவிடல்

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ?   
2938.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைமகள் தூதுவிடல்

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே?   
2972.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதிப்பார்க்கு மிக இனியன்

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை
முன்னை அமரர் முழுமுதல் தானே       
3000.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே   
Pages:    1    2  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%8E