சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ப%
பகலும்     பகல்     பகு     பக்கம்     பங்கயக்     பச்சை     பஞ்சவர்     பஞ்சிச்     பஞ்சிய     பட     படங்கள்     படர்     படல்     படி     படை     படைத்த     படைத்திட்டு     படைப்பொடு     பட்ட     பட்டம்     பட்டர்     பட்டி     பட்டு     பணங்கள்     பணி     பணிந்து     பணிந்தேன்     பணிமின்     பணிமொழி     பணியா     பணிவினால்     பணைத்தோள்     பண்     பண்டிப்     பண்டு     பண்டும்     பண்டை     பண்ணினை     பண்ணின்     பண்பு     பதக     பதி     பதினாறாம்     பதிப்     பத்தர்     பத்தினோடு     பத்து     பந்து     பந்தோடு     பனி     பனிக்     பனிப்     பனிப்பு     பன்னாக     பன்னி     பன்னிய     பன்னிரு     பன்றி     பன்றியும்     பப்ப     பயன்     பயின்றது     பயிலும்     பரக்க     பரஞ்சோதி     பரதனும்     பரத்திலும்     பரந்த     பரந்திட்டு     பரனே     பரன்     பரம்     பரவாள்     பரவி     பரிசு     பரிதியொடு     பரிய     பரியன்     பரிவது     பரிவு     பரு     பருங்     பருந்தாள்-களிற்றுக்கு     பருப்பதத்துக்     பருவக்     பருவம்     பறவை     பறையும்     பற்பநாபன்     பற்றா     பற்றார்     பற்று     பற்றுமஞ்சள்     பற்றேல்     பல     பலபல     பலபலவே     பல்     பல்லவம்     பல்லாண்டு     பல்லாயிரவர்     பள்ளத்தில்     பள்ளி     பள்ளியில்     பழகு     பழி     பழித்திட்ட     பழுது     பழுதே     பவளம்போல்     பவ்வ     பா     பாசங்கள்     பாசறவு     பாசி     பாஞ்சசன்னியத்தைப்     பாடு     பாடும்     பாடோமே-எந்தை     பாட்டும்     பாண்     பாண்டவர்     பாதங்கள்மேல்     பாதம்     பாம்பு     பாயும்     பாய்     பாய்ந்தானை     பாரம்     பாரித்து     பாரினை     பாரும்     பாருள்     பாரை     பாரோர்     பார்     பார்-ஆயது     பார்-உருவி     பார்த்த     பார்த்தனுக்கு     பார்த்தற்கு     பார்த்தான்     பார்த்து     பாற்கடலும்     பால     பாலகனாய்     பாலகன்     பாலன்     பாலின்     பாலில்     பாலைக்     பாலொடு     பால்     பால்-ஆலிலையில்     பாவமும்     பாவியாது     பாவியேன்     பிச்சச்     பிடி     பிடித்தேன்     பிடியைத்     பிணக்கி     பிணக்கு     பிணங்கள்     பிணி     பிண்டத்     பிண்டி     பிதிரும்     பின்     பின்நின்று     பின்னால்     பின்னிதனைக்     பின்னுமோர்     பின்னை     பின்னை,தன்     பின்னைகொல்     பிரா     பிரான்     பிரிந்து     பிரியாது     பிறங்கிய     பிறந்த     பிறப்பினோடு     பிறப்பு     பிறப்பொடு     பிறவித்துயர்     பிறிது     பிறிந்தேன்     பிறை     பிறையின்     பிள்ளை     பிள்ளைகள்     பிள்ளைத்     பிழைக்க     பீடு     பீளை     புகர்     புகலிடம்     புகழும்     புகழ்வாய்     புகழ்வோம்     புகு     புகுந்து     புக்க     புக்கு     புட்டியிற்     புணரா     புணர்     புணர்க்கும்     புண்டரிக     புண்ணிய     புண்ணியம்     புதம்     புது     புந்தி     புனமோ?     புனை     புன்     புயல்     புரங்கள்     புரி     புரிந்து     புறம்     புற்றரவு     புலக்     புலன்     புலன்கள்     புலம்     புலம்பின     புலம்பு     புலம்பும்     புலை-அறம்     புல்லி     புளிங்குடிக்     புள்     புள்ளது     புள்ளினை     புள்ளின்     புள்ளும்     புவியும்     புவியுள்     பூ     பூங்     பூசும்     பூணாது     பூணித்     பூண்     பூண்டு     பூதம்     பூந்     பூவை     பூவைகள்     பூவையும்     பெடை     பெண்     பெண்டிரால்     பெண்டிர்     பெண்மை     பெயரும்     பெய்யு     பெய்யும்     பெய்வளைக்     பெரிய     பெரியவர்     பெரியானை     பெரு     பெருகு     பெருங்     பெருப்     பெருமக்கள்     பெருமையனே     பெரும்     பெருவரங்கள்     பெற்ற     பெற்றத்     பெற்றம்     பெற்றாரும்     பெற்றார்     பெற்று     பேச     பேசவும்     பேசினார்     பேசிற்றே     பேசுகின்றது     பேசுமின்     பேசும்     பேசுவார்     பேணாத     பேணிச்     பேண்     பேதம்     பேதையர்     பேயரே     பேயினார்     பேயின்     பேய்     பேய்ச்சி     பேய்த்     பேரானை     பேராமல்     பேரே     பேர்     பேர்கின்றது     பேர்த்தனை     பேர்த்து     பேர்ந்து     பேறு     பை     பைங்     பைங்கிளி     பைம்பொழில்     பையரவின்     பொங்கி     பொங்கிய     பொங்கு     பொத்த     பொன்     பொன்னரும்     பொன்னவிலும்     பொன்னி     பொன்னுடம்பு     பொன்னும்     பொன்னை     பொன்னைக்     பொன்னொடு     பொன்போல்     பொய்     பொய்ந்     பொய்யைச்     பொரு     பொருத்தம்     பொருந்தலன்     பொருந்தா     பொருந்தார்     பொருந்திய     பொருந்து     பொருப்பிடையே     பொருளால்     பொருளும்     பொருள்     பொறுத்தேன்     பொற்பு     பொற்றிகழ்     பொற்றை     பொற்றொடித்     பொலிக     பொலிந்து     பொல்லா     பொல்லாக்     போகின்ற     போகு     போதர்     போதான     போதில்     போது     போதெல்லாம்     போந்தது     போனாய்     போயிருந்து     போய்த்     போய்ப்பாடு     போர     போர்     போர்க்களிறு     போற்றி     போற்று     போழ்து    
Number of search results : 510
Pages:    1    2  3  4  5  6  Next
1.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
12.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 12   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
      மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
      சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
      நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
      ஏத்துவர் பல்லாண்டே
15.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே
20.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே
25.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
      காரிகையீர் வந்து காணீரே
27.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
      குவிமுலையீர் வந்து காணீரே
32.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

பெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
      சேயிழையீர் வந்து காணீரே
39.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 17   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்யத்
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணிவண்ணன்
புருவம் இருந்தவா காணீரே
      பூண்முலையீர் வந்து காணீரே
60.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா
72.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
76.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம்
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி
      மாயவனே கொட்டாய் சப்பாணி
77.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன
என் மணிவண்ணன் இலங்கு பொற் தோட்டின் மேல்
நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மைதன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி
      ஆழியங் கையனே சப்பாணி
79.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
      பற்பநாபா கொட்டாய் சப்பாணி
81.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
சரந் தொட்ட கைகளால் சப்பாணி
      சார்ங்க விற்கையனே சப்பாணி
92.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

படர் பங்கைய மலர்வாய் நெகிழப்
      பனி படு சிறுதுளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
      இற்று இற்று வீழநின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
      உடை மணி கணகணென
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி
      தளர்நடை நடவானோ
93.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
      அருவிகள் பகர்ந்தனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ
      அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினிற் பெய்து அறியா
      மணிக் குழவி உருவின்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ
97.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித்
தன் இயல் ஓசை சலன்-சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல்
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ
      எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ
99.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ
      ஆயர் பெருமானே அச்சோ அச்சோ
102.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

போர் ஒக்கப் பண்ணி இப் பூமிப்பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
கார் ஒக்கு மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
      ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ
114.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
      ஆழியான் என்னைப் புறம்புல்குவான்
126.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
134.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்
      பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
      கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டு உலாம் பூங்குழலினார் உன்
      வாயமுதம் உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார்
      கோவிந்தா நீ முலை உணாயே
139.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்
      பொரு திறற் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை
      தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ
      நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
      அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்
154.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

பேய்ச்சி முலை உண்ணக் கண்டு
      பின்னையும் நில்லாது என்நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி
      அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி
      கடாரத்திற் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா
      மஞ்சனம் ஆட நீ வாராய்
160.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

பூணித் தொழுவினிற் புக்குப்
      புழுதி அளைந்த பொன்-மேனி
காணப் பெரிதும் உகப்பன்
      ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்
      நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே
      மஞ்சனம் ஆட நீ வாராய்
162.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை
முன்னை அமரர் முதற் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்
      மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்
163.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்
      தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்
165.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்
      பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்
168.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்
      மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்
178.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
      மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
186.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

புள்ளினை வாய் பிளந்திட்டாய்
      பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு
      காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
      அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த
      செங்கழுநீர் சூட்ட வாராய்
196.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

பல்லாயிரவர் இவ் ஊரில்
      பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது
      எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்
      ஞானச் சுடரே உன்மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்
      சொப்படக் காப்பிட வாராய்
201.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

போது அமர் செல்வக்கொழுந்து புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே
206.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
      பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
      சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
      சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
      அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்
207.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்
      போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
      ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடைக்குட்டனேயோ
      குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா
      வித்தகனே இங்கே போதராயே
224.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப்
      போனேன் வருமளவு இப்பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி
      வடக்கில் அகம் புக்கு இருந்து
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
      வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண்டேன்
      உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
235.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே
241.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின்
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே
248.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை
      வாய்வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
      சிறுக்குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை
      கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்
      கலந்து உடன் வந்தாய் போலும்
250.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
      பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த
      கள்ள அசுரர் தம்மைச்
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
      விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
      அங்ஙனம் ஆவர்களே
253.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன்
      புத்திரன் கோவிந்தனைக்
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள்
      கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புது
      வை விட்டுசித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல்வண்ணன்
      கழலிணை காண்பர்களே
270.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்
      படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
      தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
      அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
281.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
      பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத
      அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
      ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
      கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே
288.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்
      முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்
      அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
      கோவிந்தனோடு இவளைச்
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
      தட்டுளுப்பு ஆகின்றதே
291.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்
      பாடகமும் சிலம்பும்
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு
      என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்
      பூவைப் பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே
292.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

பேசவும் தரியாத பெண்மையின்
      பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்
      கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும்
      கிஞ்சுக வாய் மொழியாள்
வாச வார்குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே
295.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
      பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
      வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்து இடுமின் இவளை
      உலகளந்தான் இடைக்கே
311.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
      அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற
333.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மா மணிவண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு பௌவம் எறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர்
353.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே
354.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே
365.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
      புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையி
      னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று
      ஏத்துவார்கள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்
      உலகம் பாக்கியம் செய்ததே
401.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து
      உறை புருடோத்தமன் அடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன்
      விட்டுசித்தன் விருப்பு உற்றுத்
தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை
      தங்கிய நா உடையார்க்குக்
கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே
      குளித்திருந்த கணக்கு ஆமே
403.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த
      பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து
      ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்
      வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ்
      திருவரங்கம் என்பதுவே
406.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

பெருவரங்கள் அவைபற்றிப்
      பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
      உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்
      குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
      என் திருமால் சேர்விடமே
411.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

பரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து எழுந்தானைச்
செரு அரங்கப் பொருது அழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்-மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே
415.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
      துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
      மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
      பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
      புனல் அரங்கமே
427.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

பை அரவின் அணைப் பாற்கடலுள்
      பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி
      உந்தியிற் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக்
      காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
464.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

பறவை ஏறு பரமபுருடா
      நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்
      பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக் காடு
      தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத-ஆறு
      தலைப்பற்றி வாய்க்கொண்டதே
467.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
      நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
      மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
      என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா
      என் உயிர்க் காவலனே
469.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

பருப்பதத்துக் கயல் பொறித்த
      பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
      சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
      என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை
      உனக்கு உரித்து ஆக்கினையே
471.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

பனிக் கடலில் பள்ளி- கோளைப்
      பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல
      மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
      தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
      உனக்கு உரித்து ஆக்கினையே
479.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   திருப்பாவை  

புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில்
      வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
      கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை
      உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம்
      உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்
486.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 13   ஆண்டாள்   திருப்பாவை  

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்
  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்
  குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
      கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்
517.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

பெய்யு மா முகில்போல் வண்ணா உன்தன்
      பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம்
      மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை
      நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே
520.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

பேதம் நன்கு அறிவார்களோடு இவை
      பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக
      ளோமை நீ நலிந்து என் பயன்?
ஓத மா கடல்வண்ணா உன் மண
      வாட்டிமாரொடு சூளறும்
சேது-பந்தம் திருத்தினாய் எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே
527.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
      பலர் குடைந்து ஆடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்
      அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்
      இலங்கை அழித்த பிரானே
குரக்கு-அரசு ஆவது அறிந்தோம்
      குருந்திடைக் கூறை பணியாய்
536.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே
543.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே
551.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
      புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
      ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு?
      ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ
      சாலத் தருமம் பெறுதி
553.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர்
      பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி
      லே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்
      பொன்வளை கொண்டு தருதல்
இங்கு உள்ள காவினில் வாழக் கருதில்
      இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும்
572.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு
சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே
575.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே
576.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே
588.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

போர்க்களிறு பொரும்
      மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
      தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
      கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
      அவன் தார் செய்த பூசலையே
590.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

பைம்பொழில் வாழ் குயில்காள்
      மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
      வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
      அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
      நிறம் உங்களுக்கு என் செய்வதே?
601.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட-
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே
609.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்-உலகும்
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எம் கோல்-வளையால் இடர் தீர்வர் ஆகாதே?
611.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே
614.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

பாசி தூர்த்தக் கிடந்த பார்-மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
628.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

பால்-ஆலிலையில் துயில் கொண்ட
      பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல்
      வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
      குடந்தைக் கிடந்த குடம்-ஆடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
      நெறி மென் குழல்மேல் சூட்டிரே
637.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

பட்டி மேய்ந்து ஓர் காரேறு
      பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
      இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
      இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே
643.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

பொருத்தம் உடைய நம்பியைப்
      புறம்போல் உள்ளும் கரியானைக்
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
      கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா-கணங்களால்
      ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே
646.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த
      பரமன்தன்னைப் பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை
      விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே
      வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்
      பிரியாது என்றும் இருப்பாரே
662.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம்
      இறுத்தப் போர்-அரவு ஈர்த்த கோன்
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் திண்ண
      மா மதில்-தென் அரங்கனாம்
மெய் சிலைக் கருமேகம் ஒன்று தம்
      நெஞ்சில் நின்று திகழப் போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து
      என் மனம் மெய் சிலிர்க்குமே
675.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
679.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல்
மின் வட்டச் சுடர்-ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்-வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே
684.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே
704.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

பையரவின் அணைப் பள்ளியினாய்
      பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும்
மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
      வைகி எம் சேரி வரவு ஒழி நீ
செய்ய உடையும் திருமுகமும்
      செங்கனிவாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
      புள்ளுவம் பேசாதே போகு நம்பீ
720.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ
723.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ
734.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய
      மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
      வெம் பசிநோய் கூர இன்று
பெரும்பாவியேன் மகனே போகின்றாய்
      கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற் கேட்ட அருவினையேன்
      என் செய்கேன் அந்தோ யானே
736.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப்
      புனைந்து பூந் துகில் சேர் அல்குற்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
      அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
      செலத்தக்க வனம் தான் சேர்தல்
தூ மறையீர் இது தகவோ? சுமந்திரனே
      வசிட்டனே சொல்லீர் நீரே
737.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்
      தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்
      மருகியையும் வனத்திற் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
      என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி இரு நிலத்தில்
      இனிதாக இருக்கின்றாயே
752.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 1   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?
770.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 19   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே?
773.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 22   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே
வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரும் மார்ப பூமிநாதனே
779.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 28   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன்-ஊர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
780.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 29   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?
795.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 44   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?
Pages:    1    2  3  4  5  6  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list