சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் இ%
இகல்     இங்கு     இங்கும்     இங்கே     இசைந்த     இசைமின்கள்     இசைவித்து     இட     இடகிலேன்     இடங்கை     இடந்தது     இடம்     இடர்     இடுமே     இடும்பையால்     இடை     இட்ட     இணை     இணையில்லா     இண்டை     இண்டையும்     இது     இதுவோ     இத்தனை     இந்திரனுக்கு     இந்திரனும்     இந்திரனோடு     இந்திரன்     இந்திரற்கும்     இந்து     இன     இனி     இனிது     இன்     இன்னன்ன     இன்னார்     இன்னிலா     இன்னிள     இன்னிளம்பூந்     இன்னை     இன்னைசை     இன்பம்     இன்பு     இன்றா     இன்றிப்     இன்று     இன்றே     இப்போதும்     இமம்     இமயப்     இமையவர்     இமையாத     இம்மை     இம்மைக்கும்     இம்மையை     இயக்கு     இயலும்     இயல்வாயின     இயல்வு     இரக்க     இரக்கம்     இரங்கி     இரந்து     இரவியர்     இரவு     இரு     இருக்கு     இருக்கொடு     இருங்     இருங்கை     இருடீகேசன்     இருட்டிற்     இருத்தும்     இருந்     இருந்தான்     இருந்தேன்     இருப்பிடம்     இரும்     இரும்பு     இருளின்     இருள்     இரைக்கும்     இறந்ததும்     இறுக்கும்     இறை     இறைஞ்சப்     இறையும்     இறையோ     இறைவனைக்     இலகிய     இலங்கு     இலங்கை     இலங்கைப்     இலங்கையும்     இலன்     இலம்     இலிங்கத்து     இலை     இலைத்     இல்-பிறப்பு     இல்லதும்     இல்லறம்     இல்லை     இளைப்பாய்     இளைப்பினை     இழந்த     இழை     இவளைப்     இவள்     இவை     இவையா     இவையும்    
Number of search results : 160
Pages:    1    2  Next
29.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
      வாணுதலீர் வந்து காணீரே
121.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

இருட்டிற் பிறந்து போய் ஏழை வல் ஆயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
135.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

இரு மலை போல் எதிர்ந்த மல்லர்
      இருவர் அங்கம் எரிசெய்தாய் உன்
திரு மலிந்து திகழு மார்வு
      தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து
      ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறை முறையாய்
      ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
192.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

இந்திரனோடு பிரமன்
      ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு
      மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
      சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும்
      அழகனே காப்பிட வாராய்
199.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

இன்பம் அதனை உயர்த்தாய்
      இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே
      கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன் மதில் வெள்ளறையாய்
      செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு
      கடிது ஓடிக் காப்பிட வாராய்
200.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு
      எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று
      தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த
      தேசு உடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று
      ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
276.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

இட அணரை இடத் தோளொடு சாய்த்து
      இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்
குடவயிறு பட வாய் கடைகூடக்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
மட மயில்களொடு மான்பிணை போலே
      மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ
உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி
      ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே
394.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள
      ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
      நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்
      இரு கரை உலகு இரைத்து ஆடக்
கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே
515.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

இன்று முற்றும் முதுகு நோவ
      இருந்து இழைத்த இச் சிற்றிலை
நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும்
      ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகன் ஆகி ஆலிலை
      மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக்
      கம் எழாதது எம் பாவமே
525.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

இது என் புகுந்தது இங்கு? அந்தோ
      இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே
      மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம்
      வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்
      குருந்திடைக் கூறை பணியாய்
558.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
563.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
593.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

இன்று வந்து இத்தனையும்
      அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
      கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
      திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
      மனத்தே வந்து நேர்படிலே
647.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி
      இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்
      அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித்
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி
      திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
      கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே
651.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
      தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்
      தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
      மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு என்
      மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே
764.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 13   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?
805.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 54   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்
மலைத் தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே
807.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 56   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?
817.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 66   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ
அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?
852.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 101   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றிநின்று நின்ன பாத-பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
871.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 120   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான்
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே
889.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 18   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

இனி திரைத் திவலை மோத
      எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும்
      தாமரைக்கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க்
      கண்ணனைக் கண்ட கண்கள்
பனி-அரும்பு உதிருமாலோ
      என் செய்கேன் பாவியேனே?
922.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 6   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ
      இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
      மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
      குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
942.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 6   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே
954.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பெரிய திருமந்திரத்தின் மகிமை

இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
      இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
      கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
      சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
      - நாராயணா என்னும் நாமம்
965.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பிரிதி

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை
      இரும் பசி-அது கூர
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
      அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
      எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
      பிரிதி சென்று அடை நெஞ்சே
980.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்
      இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த
      கொற்றவன்-கொழுஞ் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்
      வெண் துகில் கொடி என விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
1002.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று
      இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ
      நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்
      படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1039.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே
1050.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள்
      ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கட மலை
      கோயில் கொண்டு அதனோடும் மீமிசை-
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
1067.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே
1071.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
      எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
      மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
      எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
1072.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
      இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
      -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
      வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
1134.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

இலகிய நீள் முடி மாவலி-தன்
      பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
      கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1144.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி
      இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு
      வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை-
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று
      காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
1148.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

இருந் தண் மா நிலம் ஏனம்-அது ஆய் வளை
      மருப்பினில் அகத்து ஒடுக்கி
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்-
      கமல நல் மலர்த் தேறல்
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம்
      பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு
      திருவயிந்திரபுரமே
1222.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
      இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து
      தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்-
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே
      குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே             
1251.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்   
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை-
சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே
1266.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான்
      முகனைத் தன் எழில் ஆரும்
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்
      உகந்து இனிது உறை கோயில்-
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன்
      குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்-
      வண்புருடோத்தமமே
1409.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்
      எண் இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
      சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
      பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே
1575.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு-
      இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்
      தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
      முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர்
கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட
      கள்வனை-இன்று கண்டுகொண்டேனே
1704.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 6

இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் முதலை-தன்னால் அடர்ப்புண்டு
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
1709.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 7

இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்-
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம்-அடிகள்-தம் இடமே
1777.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள்
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே
1819.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி
      எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
      சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்-
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில்
      விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன்
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே
1858.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை
      இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன்
      பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்?
குரக்கு-நாயகர்காள் இளங்கோவே
      கோல வல் வில் இராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
1887.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல்கொண்டு செங்கண் நெடியவன்-தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே
1949.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத

இங்கே போதும்கொலோ-
இன வேல் நெடுங் கண் களிப்ப?
கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால்
இங்கே போதும்கொலோ?
1950.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை-
இன்னார் என்று அறியேன்
1973.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர்
பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங் கண்
பெருந் தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே
1987.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்

இரு நில மன்னர்-தம்மை இரு நாலும் எட்டும்
      ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க
      மழுவாளில் வென்ற திறலோன்
பெரு நில-மங்கை மன்னர் மலர்-மங்கை நாதர்
      புலமங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி
      யவர் நம்மை ஆள்வர் பெரிதே
1988.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்

இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன
      இனம் ஆய மான் பின் எழில் சேர்
அலை மலி வேல்கணாளை அகல்விப்பதற்கு
      ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை
      பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
      திருமால் நமக்கு ஓர் அரணே
2036.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

இரும்பு அனன்று உண்ட நீர்போல்
      எம் பெருமானுக்கு என்-தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
      அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை
      மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போலப்
      பருகினேற்கு இனியவாறே
2038.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

இம்மையை மறுமை-தன்னை
      எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
      வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
      திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
      தலைமிசை மன்னுவாரே
2044.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 13   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

இரும்பு அனன்று உண்ட நீரும்
      போதரும் கொள்க என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம்
      அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
      அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
      கண்-இணை களிக்குமாறே
2049.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 18   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

இளைப்பினை இயக்கம் நீக்கி
      இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி
      அன்பு அவர்கண்ணே வைத்து
துளக்கம் இல் சிந்தைசெய்து
      தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
      மெய்ம்மையைக் காண்கிற்பாரே?
2055.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை
      இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி
      திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
      அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
      வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே   
2075.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 24   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!-
      இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
      பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
      உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து
      புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
2094.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 13   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர்
2110.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 29   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி
2113.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 32   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர்
2120.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 39   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே-
பேர் ஓத வண்ணர் பெரிது
2159.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 78   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு
2168.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 87   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

இனி யார் புகுவார் எழு நரக வாசல்?
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு
2216.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 35   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது
2218.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 37   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசைமுகனைத் தந்தாய் பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு
2247.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 66   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவி ஆவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்
2252.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 71   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த போது
2268.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 87   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்
2280.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 99   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

இறை எம் பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால்
2283.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 2   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டுகொண்டு என் மனம்
2312.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 31   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்
2320.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 39   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய்
மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்
2345.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 64   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு?
2354.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 73   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம்
2364.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 83   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இனி அவன் மாயன் என உரைப்பரேலும்
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன்
2379.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 98   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு
2388.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 7   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது
நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னை அன்றி இலை    
2389.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 8   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை    
2402.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 21   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு    
2409.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 28   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு    
2447.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 66   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்    
2453.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 72   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும்
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத் தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்?    
2468.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 87   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்?    
2477.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 96   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்
2494.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 17   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இருள் விரிந்தால் அன்ன மா நீர்த் திரைகொண்டு வாழியரோ!
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு அணைமேல்
இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதிப் பெருமான் உறையும் எறி கடலே
2501.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 24   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெரு நீர்க் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால்
புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க்
கொயல்வாய் மலர்மேல் மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே?
2506.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 29   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட
மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மைகொலோ? குடிச் சீர்மை இல் அன்னங்களே
2508.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 31   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே?
2539.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 62   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே?
2541.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 64   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமச் சொல் கற்றனமே
2553.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 76   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே?
2587.0   பெரிய திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 3   திருமழிசை ஆழ்வார்   பெரிய திருவந்தாதி  
திருவாசிரியம்

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என்?   
2594.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 10   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே
நாமா மிக உடையோம் நாழ்   
2607.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 23   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான்
2614.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 30   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு?
2645.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 61   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த அந் நாள்
மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீது இலகித் தான் கிடக்கும் மீன்?
2655.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 71   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே?
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர்
அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின் உந்தி முதல்   
2671.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 87   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்     
2725.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்
மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்

Pages:    1    2  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list