சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ச%
சக்கரக்     சக்கரத்து     சங்க     சங்கின்     சங்கு     சங்கும்     சங்கையும்     சண்ட     சதிர்     சதுர     சதுரம்     சத்திரம்     சந்த     சந்தம்     சந்திர-மண்டலம்     சந்தொடு     சன்ம     சன்மம்     சரங்களைத்     சரணம்     சரணா     சல     சலங்     சலம்     சழக்கு     சாடு     சாதலும்     சாதி     சாது     சாந்தமும்     சாந்து     சாம்     சாயக்     சாயால்     சாரா     சார்ங்கம்     சார்ந்த     சார்ந்தது     சார்ந்து     சார்வு     சார்வே     சாலப்     சாலி     சிக்கெனச்     சிங்கம்-அது     சிதைக்கின்றது     சித்தமும்     சித்திரகுத்தன்     சித்திரகூடத்து     சித்திரத்     சிந்தனையை     சிந்தப்     சிந்திக்கும்     சிந்துரச்     சிந்துரப்-பொடி     சிந்துரம்     சிந்தை     சிந்தை-தன்னுள்     சிந்தையாலும்     சிந்தையினோடு     சின     சினம்     சிரம்     சிரீதரன்     சிறந்த     சிறந்தார்க்கு     சிறப்பில்     சிறியன்     சிறியாய்     சிறியார்     சிறுவிரல்கள்     சிறை     சிற்றஞ்     சிலம்பின்     சிலம்பு     சிலம்பும்     சிலை     சிலையால்     சில்மொழி     சீத     சீதக்     சீதை     சீமாலிகன்     சீயினால்     சீரால்     சீரிய     சீர்     சீர்மை     சீற்றம்     சீலம்     சீலைக்     சுடர்     சுடர்-ஒளி     சுடர்ப்     சுடலையில்     சுமந்து     சுரக்கும்     சுரர்     சுரி     சுரிகையும்     சுரிந்திட்ட     சுருக்காக     சுருக்குவாரை     சுருங்கு     சுருப்பார்     சுரும்பு     சுற்றம்     சுற்றி     சுற்றும்     சுளை     சுழன்று     சுவரில்     சூடு     சூட்டாய     சூட்டு     சூதனாய்க்     சூதினைப்     சூது     சூர்மையில்     சூழல்     சூழல்கள்     சூழ்     சூழ்கண்டாய்     சூழ்கின்ற     சூழ்ச்சி     சூழ்ந்த     சூழ்ந்து     செக்கரிடை     செக்கர்     செங்     செங்கனி     செங்கமல     செங்கமலக்     செங்கமலப்     செஞ்சொல்     செடியாய     செண்பக     செத்துப்     செந்தழலே     செந்நெல்     சென்னி     சென்ற     சென்றது     சென்றால்     சென்று     செப்பாடு     செப்பு     செம்     செம்பொன்     செம்மை     செய்கின்ற     செய்கின்றது     செய்த்தலைச்     செய்ய     செய்யும்     செய்யேல்     செரு     செருவரை     செறி     செறும்     செற்றதுவும்     செற்றவன்     செற்று     செலக்     செல்ல     செல்வ     செழு     செழுங்     செழுந்திரைப்     செவி     செவிகளால்     செவிக்கு     செவ்     செவ்வரி     செவ்வாய்     சேப்     சேம     சேமமே     சேமம்     சேயன்     சேய்     சேரா     சேரும்     சேர்த்தடத்     சேர்ந்த     சேர்ந்தார்     சேர்வன்     சேல்     சொட்டைநம்பிகள்அருளிச்செய்தது     சொன்னால்     சொல்     சொல்ல     சொல்லாது     சொல்லாய்     சொல்லினால்     சொல்லினும்     சொல்லில்     சொல்லீர்     சொல்லு     சொல்லும்     சோதி     சோத்தம்     சோத்து     சோராத     சோர்வினால்     சோர்வு     சோலைத்    
Number of search results : 264
Pages:    1    2  3  Next
22.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே
23.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
      பவள வாயீர் வந்து காணீரே
43.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 21   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாதகேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றியிருப்பரே             
47.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
      தேவகி சிங்கமே தாலேலோ
56.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா                       
57.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலைமேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்             
61.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்           
73.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்
      சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்
      பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்
      மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
87.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்
      சிறுபிறை முளைப் போல
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே
      நளிர் வெண்பல் முளை இலக
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி
      பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ
98.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ
      ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
113.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான்
      பார் அளந்தான் என் புறம்புல்குவான்
122.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

சேப் பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
123.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
143.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்
      சுரிகுழலாரொடு நீ போய்க்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்
      குணங்கொண்டு இடுவனோ? நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
      பிரானே திரியிட ஒட்டில்
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்
      விட்டுவே நீ இங்கே வாராய்
176.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
      தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
189.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

சீமாலிகன் அவனோடு
      தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
      சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்
191.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

செண்பக மல்லிகையோடு
      செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
      இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி
      மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்
      பட்டர்பிரான் சொன்ன பத்தே
194.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

செப்பு ஓது மென்முலையார்கள்
      சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய்
      அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப் போதும் வானவர் ஏத்தும்
      முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன்
      எம்பிரான் காப்பிட வாராய்
208.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

செந்நெல் அரிசி சிறு பருப்புச்
      செய்த அக்காரம் நறுநெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
      பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி
      எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
      கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே
211.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

சொல்லில் அரசிப் படுதி நங்காய்
      சூழல் உடையன் உன்பிள்ளை தானே
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்
      கையில் வளையைக் கழற்றிக்கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
      அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
      நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே
244.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது
      செந்நிற மேற் தோன்றிப்பூ
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்
      குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
      வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்
      நானே மற்று ஆரும் இல்லை
256.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்
      மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி
      ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
      மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்
      அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே
258.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
      சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
      பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
      மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
      கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே
259.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
      திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்
      வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை
      அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
      பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ
260.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
      தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
      குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே
261.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
      திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை
      அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை
      எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்
      துகிலொடு சரிவளை கழல்கின்றதே
269.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

செப்பாடு உடைய திருமால் அவன் தன்
      செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்
      காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி
      இலங்கு மணி முத்துவடம் பிறழக்
குப்பாயம் என நின்று காட்சிதரும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
271.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச்
      சர- மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்
      நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்
      இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
280.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்
      தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்
      கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்
      அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி
      நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே
282.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
      செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
      வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
      கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே
323.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்
346.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத்-தனம் செய் அப்பன் மலை
இந்திர-கோபங்கள் எம்பெருமான் கனி- வாய் ஒப்பான்
சிந்தும் புறவிற் தென் திருமாலிருஞ் சோலையே
370.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல்
ஏதம் இன்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே
372.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்
      செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி
      எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று
      மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும்
      பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே
373.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
      சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே
      அந்த காலம் அடைவதன் முன்னம்
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து
      மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு
      அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே
380.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

செத்துப் போவதோர் போது நினைந்து
      செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்
      பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்
      செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல்
      சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே
390.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய
வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த சொல்
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
392.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்
      சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின்
      மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
      நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
421.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும்
      நாந்தம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்
      விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப்
      பெரும் பேராளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற
      திருவரங்கமே
424.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்
      சங்கொடு சக்கரம் ஏந்தினானே
நா மடித்து என்னை அனேக தண்டம்
      செய்வதா நிற்பர் நமன்தமர்கள்
போம் இடத்து உன்திறத்து எத்தனையும்
      புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
429.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற
      தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடை இன் அமுதே
      ஏழ் உலகும் உடையாய் என் அப்பா
வஞ்ச உருவின் நமன்தமர்கள்
      வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது
அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
434.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்
      சங்கு சக்கரம் ஏந்து கையானே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல்
      பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்
      வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்
      ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே
444.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

சித்திரகுத்தன் எழுத்தால்
      தென்புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
      தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்துத் திரைக் கடற் சேர்ப்பன்
      மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
462.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் திரு
      மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடிமேல் அடிமைத் திறம்
      நேர்பட விண்ணப்பஞ் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புது
      வைக்கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உல
      கம் அளந்தான் தமரே   
463.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

சென்னி ஓங்கு தண் திருவேங்
      கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ
      தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன்
      சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
      இனி என் திருக்குறிப்பே?   
502.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 29   ஆண்டாள்   திருப்பாவை  

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
      குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
  எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
  மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய்
507.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
      சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
      காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
      ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
      தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே
523.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

சீதை வாயமுதம் உண்டாய் எங்கள்
      சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர்
      சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி
      புத்தூர் மன் விட்டு சித்தன்தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு
      இன்றி வைகுந்தம் சேர்வரே             
552.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
      சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம்
      நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும்
      சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில்
      அவனை நான் செய்வன காணே
570.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

சந்திர-மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே
573.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

செங்கமல நாள்-மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன-வசஞ் செய்யும்
சங்கு-அரையா உன் செல்வம் சால அழகியதே
582.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
      தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
      நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
      உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
      நடலை-நோய் செப்புமினே
583.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

சங்க மா கடல் கடைந்தான்
      தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ்
      அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின்
      குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
      தங்கும் என்று உரையீரே
587.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

சிந்துரச் செம்பொடிப் போல்
      திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
      எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
      மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
      சுழலையினின்று உய்துங் கொலோ?
596.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

சந்தொடு காரகிலும்
      சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
      உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
      குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
      திருமாலடி சேர்வர்களே             
616.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே?
685.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
693.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
724.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ
743.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
      சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு
      வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
      இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே.
749.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று
      செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்
      தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை
      உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே
762.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 11   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?
802.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 51   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே
808.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 57   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
810.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 59   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட விற்குனித்த வில்-கை வீரனே
811.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 60   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?
818.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 67   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ
829.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 78   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சோர்வு இலாத காதலால் தொடக்கு அறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலங் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
837.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 86   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என்கொல்? கண்ணனே
844.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 93   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்கவாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே
860.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 109   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்க மெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
864.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 113   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
869.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 118   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

சொல்லினும் தொழிற்கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும்
அல்லி நாள்-மலர்க் கிழத்தி நாத பாத-போதினைப்
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே
887.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 16   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

சூதனாய்க் கள்வனாகித்
      தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்
      வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப்
      புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
      அழகன் ஊர் அரங்கம் அன்றே
919.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 3   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
      பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
930.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 4   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில்
      ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
950.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பெரிய திருமந்திரத்தின் மகிமை

சேமமே வேண்டி தீவினை பெருக்கி
      தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
      ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
      தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்
999.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
      திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
      போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
      வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1000.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
      சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
      தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
      வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1017.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய
எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்-புலவன்
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார்க் கலியன்
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே
1027.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
      வேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி
      வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்
      லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர்
      ஆகி வான்-உலகு ஆள்வரே
1045.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே
1055.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

சேயன் அணியன் சிறியன் பெரியன்
      என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்-
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி
      வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
1063.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1105.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே
1110.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
      தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்
      பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்
      வளைகளும் இறை நில்லா என்-தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே
1120.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த

செம் பொன் இலங்கு வலங்கை வாளி
      திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
      கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
      வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே
1128.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
      சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
      பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1166.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்
      சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகல புகழ் சேர்
      அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்
      வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1167.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
      திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப
      அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா
      ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்
      பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே
1187.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்
      சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்
      அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
      கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார்
      தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே
1195.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

சங்கு தங்கு தடங் கடல் கடல்
      மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!-
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்
      புல்கி இன் இள வண்டு போய் இளந்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே
1221.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
      திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
      கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
      ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
1228.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
      தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்
      நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
      செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1237.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
      தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய
      வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள்
      தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே
1247.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை
      செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான்
      கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
      உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே            
1262.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன்
      படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
      துணித்தவன் உறை கோயில்-
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
      பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே
1285.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
      திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
      கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
      ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1287.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
      கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
      பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
      சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே             
1295.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

சங்கையும் துணிவும் பொய்யும்
      மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப்
      பொருள்களும் ஆய எந்தை-
பங்கயம் உகுத்த தேறல்
      பருகிய வாளை பாய   
செங் கயல் உகளும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே   
Pages:    1    2  3  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%9A