சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ந%
நகரமும்     நகரம்     நகர்     நங்கள்     நங்கைமீர்     நச்சு-அரா     நச்சுவார்     நஞ்சு     நடந்த     நடம்     நடை     நண்ணா     நண்ணாத     நண்ணாதார்     நண்ணினம்     நந்தன்     நந்தா     நன்கு     நன்னகரம்     நன்மணி     நன்மை     நன்மையால்     நன்றாய்     நன்று     நமக்கும்     நமனும்     நம்பனே     நம்பனை     நம்பி     நம்பினேன்     நம்பியை     நம்முடை     நயவேன்     நறை     நலமே     நலம்     நலியும்     நல்     நல்கித்     நல்குரவும்     நல்ல     நல்லது     நல்லார்     நல்லை     நளிர்     நளிர்ந்த     நவின்று     நா     நாகத்தின்     நாகத்து     நாகம்     நாகு     நாக்     நாடாத     நாடி     நாடிலும்     நாடீர்     நாடும்     நாட்டினான்     நாட்டினாய்     நாட்டிய     நாட்டில்     நாட்டைப்     நாணி     நாணும்     நாதனை     நாதன்     நாதமுனிகள்     நாத்     நாந்தகம்     நானக்     நானிலம்     நான்     நான்முகனை     நான்முகன்     நான்ற     நான்றில     நாமங்கள்     நாமம்     நாம்     நாயகனாய்     நாயகன்     நாரணன்     நாராயணன்     நார்     நாறிய     நாறு     நால்     நால்-திசைத்     நாளும்     நாளேல்     நாளை     நாள்கள்     நாள்தொறும்     நாழால்     நாழிகை     நாவலம்     நாவினால்     நாவினுள்     நிகர்     நிகழ்ந்தாய்     நிச்சலும்     நிச்சித்து     நிதியினை     நிதியைப்     நினைக்கிலேன்     நினைதொறும்     நினைத்து     நினைந்து     நினைப்பன்     நினைப்பான்     நினையார்     நின்னையே     நின்ற     நின்றது     நின்றனர்     நின்றார்     நின்றிடும்     நின்று     நின்றுநின்று     நின்றும்     நிறம்     நிறுத்தி     நிறைந்த     நிறையினால்     நிற்கும்     நிற்பதும்     நிற்றி     நிலத்தைச்     நிலவொடு     நிலை     நிலைமன்னும்     நில்லா     நில்லாத     நிழல்     நீ     நீங்க     நீடு     நீண்டான்     நீண்டாயை     நீந்தும்     நீயும்     நீயே     நீரகத்தாய்     நீரிலே     நீர்     நீர்புரை     நீர்மை     நீர்மையால்     நீல     நீலத்     நீள்     நீள்வான்     நுகர்ச்சி     நுங்கட்கு     நுமக்கு     நுமரோடும்     நும்மைத்     நூலின்     நெஞ்சமே     நெஞ்சால்     நெஞ்சினால்     நெஞ்சில்     நெஞ்சு     நெடியானே     நெடியான்     நெடுமாற்கு     நெடுமால்-அவன்     நெடுமையால்     நென்னல்     நெய்     நெய்க்     நெய்யிடை     நெறி     நெறித்திட்ட     நெறிந்த     நெறியார்     நெற்றி     நெற்றிமேல்     நெற்றியுள்     நெல்லில்     நேசம்     நேர்     நேர்சரிந்தான்     நேர்ந்தேன்     நேர்பட்ட     நையும்     நைவளம்     நைவாய     நொந்து     நோக்கி     நோக்கும்     நோய்     நோற்ற     நோற்றுச்     நோற்றேன்     நோலாது     நோவ    
Number of search results : 268
Pages:    1    2  3  Next
0.5   -பாசுரம்   பாடல் # 0      
இயற்பா

நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
2742.0
8.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
      அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
      காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
      வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
      பல்லாண்டு கூறுவனே
33.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
      சுரிகுழலீர் வந்து காணீரே
37.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 15   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே
      மொய்குழலீர் வந்து காணீரே
66.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே
      நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும்
      தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும்
      விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
100.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி அவளும் திருவுடம்பிற் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோ அச்சோ
      எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ
107.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே
111.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்
      உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
236.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே
கல்மணி நின்று அதிர் கான்- அதரிடைக் கன்றின்பின்
என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே
275.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

நாவலம் பெரிய தீவினில் வாழும்
      நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால்
      தூய வாயிற் குழல்-ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை
      குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலை
      ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே
290.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

நாடும் ஊரும் அறியவே போய்
      நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம்
      சோதித்து உழிதர்கின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்
      கேசவனோடு இவளைப்
பாடிகாவல் இடுமின் என்று என்று
      பார் தடுமாறினதே
297.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

நல்லது ஓர் தாமரைப் பொய்கை
      நாண்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
      அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
      என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய்
      மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?
317.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே
318.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
329.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரற் சீதைக்கு ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியிற் கண்டார் உளர்
332.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டார் உளர்
335.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற அரசர்கள்தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப்
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்
360.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

நா அகாரியம் சொல் இலாதவர்
      நாள்தொறும் விருந்து ஓம்புவார்
தேவ காரியம் செய்து வேதம்
      பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர்காரியமும் திருத்தும்
      முதல்வனைச் சிந்தியாத அப்
பாவகாரிகளைப் படைத்தவன்
      எங்ஙனம் படைத்தான் கொலோ
367.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

நளிர்ந்த சீலன் நயாசலன் அபி
      மான துங்கனை நாள்தொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட
      செங்கண் மால் திருக்கோட்டியூர்க்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம்
      பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர்
      மீது கொள்ளகிலார்களே
386.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக்
கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடு இறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
388.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
430.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன்
      நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே என்று மோதும்போது அங்கு
      உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன்
வான் ஏய வானவர் தங்கள் ஈசா
      மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
435.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
      நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
      புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
      ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை ஆவது உன் கோயிலில் வாழும்
      வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே
436.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

நெடுமையால் உலகேழும் அளந்தாய்
      நின்மலா நெடியாய் அடியேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
      கூறை சோறு இவை வேண்டுவதில்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே
      அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை
      கோத்த வன் தளை கோள் விடுத்தானே
441.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள்
      நாதனே நரசிங்கமது ஆனாய்
உம்பர்கோன் உலகு ஏழும் அளந்தாய்
      ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்திக்
கம்ப மா கரி கோள் விடுத்தானே
      காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆள் உடைத் தேனே
      ஏழையேன் இடரைக் களையாயே
443.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
      எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
      காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து
      வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பு- அணையோடும்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
483.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   திருப்பாவை  

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
      தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
      தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்
489.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 16   ஆண்டாள்   திருப்பாவை  

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
      கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
      தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
      நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்
514.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
      நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்
      எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்
      குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள்
      சிற்றில் வந்து சிதையேலே
530.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

நீரிலே நின்று அயர்க்கின்றோம்
      நீதி-அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
      ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே உடையோம்
      அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப்
      பூங்குருந்து ஏறியிராதே
557.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
559.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
586.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

நாகத்தின் அணையானை
      நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக்கோன்
      விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத
      புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார்
      அவர் அடியார் ஆகுவரே
592.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

நாறு நறும் பொழில்
      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
      வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
      அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?
603.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

நடம் ஆடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடம்-ஆட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ-மிறை செய்து எம்மை
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே?
606.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்?
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே             
618.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

நாணி இனி ஓர் கருமம் இல்லை
      நால்-அயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
      பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த
      மாயனைக் காணிற் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
      ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்.
632.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

நடை ஒன்று இல்லா உலகத்து
      நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்
      குளப்புக்கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான்
      போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
      போகா உயிர் என் உடம்பையே
645.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

நாட்டைப் படை என்று அயன் முதலாத்
      தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
      விமலன்தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும்
      களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே
669.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

நூலின் நேர்-இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் எழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே
696.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
756.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 5   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய் நின் உந்திவாய்
அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே?
757.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 6   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே
812.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 61   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
814.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 63   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?
815.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 64   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
816.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 65   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
836.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 85   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நச்சு-அரா அணைக்கிடந்த நாத பாத-போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
838.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 87   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின்மேல்
நற்றவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே
881.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 10   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

நாட்டினான் தெய்வம் எங்கும்
      நல்லது ஓர் அருள்தன்னாலே
காட்டினான் திருவரங்கம்
      உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்
      கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடியகத்துச்
      செல்வம் பார்த்து இருக்கின்றீரே
883.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 12   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

நமனும் முற்கலனும் பேச
      நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும்
      நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது
      அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
      அதனுக்கே கவல்கின்றேனே
938.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 2   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
940.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 4   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே
941.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 5   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
948.5   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 0   திருமங்கையாழ்வார்   பெரிய திருமொழி  
இயற்பா

நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே?, - சூழ்கடலுள்,
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,.0
2742.0
1004.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
      நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே
      துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா
      வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1015.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே
1016.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிங்கவேழ்குன்றம்

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்-
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே
1020.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

நின்ற மா மருது இற்று வீழ
      நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத்
      தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது
      ஆ-நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1035.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே
1040.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே
1087.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
      நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன்
      ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும்
      எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்
      குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே
1098.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே
1163.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்
      துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு
மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்
      மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்
அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்
      அரு மா மறை அந்தணர் சிந்தை புக
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1179.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை
      நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை
      ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்
      தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1189.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

நீலத் தட வரை மா மணி நிகழக்
      கிடந்ததுபோல் அரவு அணை
வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்-
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட
      மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி ஆலி அம்மானே
1190.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி
      இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன்-எறி நீர் வளஞ் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார்
      முகத்து எழு வாளை போய் கரும்பு
அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே
1192.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

நீடு பல் மலர் மாலை இட்டு நின்
      இணை-அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல்-மரம் எய்த மா முனிவா
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை
      பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே
1200.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே
1206.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே
1218.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
      நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
      இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
      களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
1317.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் என வல்லவர் வானவர்-தாமே
1324.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

நாடி என்-தன் உள்ளம் கொண்ட
      நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
      செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
      நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
1328.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

நும்மைத் தொழுதோம் நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே?
1402.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்-
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே
1421.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்
      வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு
      அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர்
      கொடிய செய்வன உள அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன்
      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
1436.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம்
சேல் உகள் வயல் திருப்பேர்ச் செங் கண் மாலோடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே
1447.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்
      நண்ணி உறையும்
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
      யானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை
      ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்
      முழுது அகலுமே
1451.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினை ஆய்
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
1517.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:4

நன்மை உடைய மறையோர் வாழ்
      நறையூர் நின்ற நம்பியைக்
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்
      கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
பன்னி உலகில் பாடுவார்
      பாடு சாரா பழ வினைகள்
மன்னி உலகம் ஆண்டு போய்
      வானோர் வணங்க வாழ்வாரே
1544.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:7

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்-
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்-நமோ நாராயணமே
1562.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நான்-தான் உனக்கு ஒழிந்தேன்-நறையூர் நின்ற நம்பீயோ
1567.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன்
சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே
1597.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே
1598.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே
1606.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில மகள்-தன்
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதிதொறும்
அலை ஆர் கடல்போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற
கலை ஆர் சொற்பொருளை-கண்டுகொண்டு களித்தேனே
1611.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்
      நீண்ட தோள் உடையாய் அடியேனைச்
செய்யாத உலகத்திடைச் செய்தாய்
      சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்
      போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்-
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1616.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

நெடியானே கடி ஆர்கலி நம்பீ
      நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து
      காவல் செய்த அக் காவலைப் பிழைத்து
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
      கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய்
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1633.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிறுபுலியூர்ச் சலசயனம்

நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே
1660.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள்
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே
1682.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 4

நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ
1686.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 4

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ
1687.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 4

நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ
1746.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே
1805.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

நார் ஆர் இண்டை நாள் மலர் கொண்டு நம் தமர்காள்
ஆரா அன்போடு எம்பெருமான் ஊர்-அடைமின்கள்-
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே
1806.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே
1814.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் எனக் கொண்டு வாளா
பேயர்-தாம் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் மங்குல் வான் ஆகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1833.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி-தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ?
1902.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும்
      அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்
      செல வைத்த பிரான் அது அன்றியும் முன்
வேண்டாமை நமன்-தமர் என் தமரை
      வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ்
ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
1905.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு
      உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
      இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்
      செழு நீள் முடி தோளொடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
Pages:    1    2  3  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%A8