சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ம%
மகனாகக்     மகன்     மகிழ்     மகிழ்ந்தது     மக்கள்     மங்க     மங்கல     மங்கிய     மங்குல்     மச்சு     மச்சொடு     மஞ்சு     மட     மடந்தையர்     மடந்தையை     மடல்     மடவரல்     மடி     மட்டு     மணங்கள்     மணந்த     மணாளன்     மணி     மணித்     மணியை     மண்     மண்ணின்     மண்ணிற்     மண்ணும்     மண்ணுலகம்     மண்ணுளாய்     மண்ணுளார்     மண்ணை     மண்மகள்     மண்மிசை     மண்மிசைப்     மத     மதிக்     மதித்தாய்     மதுசூதனை     மதுவார்     மத்த     மத்தக்     மத்தளம்     மத்து     மந்தி     மன     மனக்     மனத்தில்     மனத்து     மனன்     மனப்     மனமே     மனம்     மனிசரும்     மன்     மன்னன்     மன்னன்தன்     மன்னர்     மன்னவன்     மன்னா     மன்னா.     மன்னிய     மன்னியபல்பொறிசேர்     மன்னு     மன்னும்     மன்றில்     மயக்கா     மயக்கும்     மயங்க     மயர்வு     மரம்     மரவடியைத்     மருங்கு     மருட்டார்     மருதப்     மருந்து     மருந்தும்     மருந்தே     மருமகன்     மருள்     மருவும்     மறந்தேன்     மறப்பும்     மறம்     மறுக்கி     மறை     மறைவலார்     மற்     மற்று     மற்றுத்     மற்றும்     மற்றொன்று     மலங்கு     மலம்     மலர்     மலர்ந்தே     மலி     மலை     மலையதனால்     மலையால்     மலையை     மல்கிய     மல்கு     மல்லரை     மல்லிகை     மல்லே     மல்லை     மல்லொடு     மழுங்காத     மழுவினால்     மழுவு     மழைக்கு     மழையே     மா     மாகம்     மாசு     மாசூணாச்     மாட     மாடே     மாட்டாதே     மாட்டீர்     மாணிக்     மாணிக்கக்     மாணிக்கம்     மாண்     மாண்பு     மாதர்     மாதலி     மாதவன்     மாதவன்பால்     மாத்     மான     மானம்     மானிட     மானை     மான்     மாமிமார்     மாய     மாயக்     மாயச்     மாயனை     மாயன்     மாயப்     மாயம்     மாயவனை     மாயவன்     மாயா     மாயோன்     மாயோம்     மாய்த்தல்     மாய்ந்து     மாரனார்     மாரி     மார்கழித்     மார்வில்     மாறி     மாறு     மாற்றங்கள்     மாற்றம்     மாற்றரசர்     மாற்றுத்தாய்     மாலாய்ப்     மாலிருஞ்சோலை     மாலுக்கு     மாலும்     மாலே     மாலை     மாலைப்     மாலையும்     மால்     மால்பால்     மாவலி     மாவினை     மிக்க     மிக்கானை     மிடறு     மிடையா     மின்     மின்னி     மின்னிடைச்     மின்னின்     மின்னு     மின்னுக்     மின்னும்     மின்னொத்த     மீது     மீனோடு     மீன்     முகில்வண்ணன்     முடி     முடிசேர்     முடிச்     முடிந்த     முடியாதது     முடியானே     முடிவு     முட்டு     முதலைத்     முதல்     முதுகு     முத்திறத்து     முத்தும்     முந்து     முந்துற     முந்தை     முந்நீரை     முந்நீர்     முனி     முனிந்து     முனியார்     முனியே     முனிவன்     முனை     முனைத்த     முனைமுகத்து     முன்     முன்னம்     முன்னம்நான்     முன்னிருந்து     முன்னிவ்     முன்னை     முப்பத்து     முப்போதும்     முயன்று     முயற்றி     முரணை     முரியும்     முருக்கு     முற்ற     முற்றத்து     முற்றிலும்     முற்று     முலை     முலைத்     முலையோ     முல்லைப்     முளிந்தீந்த     முளைக்     முள்     முழு     முழுசி     முழுது     முழுதும்     மூத்தவற்கு     மூத்தவை     மூன்று     மூள     மூவரில்     மூவர்     மூவுலகங்களும்     மெச்சு     மென்னடை     மென்ற     மெய்     மெய்ந்     மெய்ந்நின்று     மெய்யன்     மெய்யர்க்கே     மெலியும்     மெல்     மெல்லியல்     மேகங்களோ     மேகலையால்     மேட்டு     மேம்     மேயான்     மேய்     மேலாத்     மேலும்     மேல்     மேல்-தோன்றிப்     மேவா     மேவி     மேவித்     மேவு     மை     மைஆர்     மைத்     மைத்த     மைத்தடங்     மைத்துனன்மார்     மைந்     மைந்நம்பு     மைப்     மைய     மையல்     மொய்த்த     மொய்த்துக்     மொய்ம்     மொழியைக்     மோடியோடு     மோர்     மௌவல்    
Number of search results : 453
Pages:    1    2  3  4  5  Next
24.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
      ஒண்ணுதலீர் வந்து காணீரே
28.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
      முகிழ்நகையீர் வந்து காணீரே
34.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 12   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
      கனங்குழையீர் வந்து காணீரே
40.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 18   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
      சேயிழையீர் வந்து காணீரே
41.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 19   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

முற்றிலும் தூதையும் முன்கைமேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப்
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே
      நேரிழையீர் வந்து காணீரே
44.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
      வையம் அளந்தானே தாலேலோ
52.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழேல் அழேல் தாலேலோ
      அரங்கத்து அணையானே தாலேலோ
63.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே
68.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்
      வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை
      ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்
      முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
75.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி
பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
      கருங்குழற் குட்டனே சப்பாணி
88.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
      சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னற் துலங்கும் அரசிலையும்
      பீதகச் சிற்றாடையொடும்
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
      கழுத்தினிற் காறையொடும்
தன்னிற் பொலிந்த இருடிகேசன்
      தளர்நடை நடவானோ
90.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
      மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
      பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
      பலதேவன் என்னும்
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்
      தளர்நடை நடவானோ
103.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியிற்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
      சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ
115.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்
      எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
118.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி
பொய்ச் சூதிற் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
119.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
133.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

மின் அனைய நுண் இடையார்
      விரி குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்
      இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
      இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
      இருடிகேசா முலை உணாயே
145.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்
      கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி
      காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா
      திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே
      விட்டிட்டேன் குற்றமே அன்றே?
147.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
      தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
      காணவே கட்டிற்றிலையே?
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
      சிரீதரா உன்காது தூரும்
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற
      காரிகையார் சிரியாமே
170.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப்
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்
      பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்
179.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத்
தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
      வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
184.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

மச்சொடு மாளிகை ஏறி
      மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து
      காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்
      நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு
      பாதிரிப் பூச் சூட்ட வாராய்
219.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று  
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
      தரணி அளந்தானால் இன்று முற்றும்
226.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
      மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
      குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
      புத்தகத்துக்கு உள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
227.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி
      னோடு தயிரும் விழுங்கி
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த
      கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல
      விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
229.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
      வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
      சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப்
      பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
239.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப்
படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கான் -அதரிடைக் கன்றின் பின்
இடற என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே
279.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

முன் நரசிங்கமது ஆகி அவுணன்
      முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்
      குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க
நன் நரம்பு உடைய தும்புருவோடு
      நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம்
      கின்னரம் தொடுகிலோம் என்றனரே
306.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே
310.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
      சீதை மணாளனைப் பாடிப் பற
312.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
      அயோத்தியர் கோமானைப் பாடிப் பற
315.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
      ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற
322.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத்
தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப்
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம்
324.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்
325.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே
336.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இருநிலம் புக்கு இடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர்
344.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல்
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே
348.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக்
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பரே
351.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே
352.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே
359.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக்-கடல் அமுதை
மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே
374.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
      மேல் மிடற்றினை உள் எழ வாங்கிக்
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்
      கண் உறக்கமது ஆவதன் முன்னம்
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை
      மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்
      விண்ணகத்தினில் மேவலும் ஆமே
375.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

மடி வழி வந்து நீர் புலன்சோர
      வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்
      கண் உறக்கமது ஆவதன் முன்னம்
தொடை வழி உம்மை நாய்கள் கவரா
      சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்
      இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே
384.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
385.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
387.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
400.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
      மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
      மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே
402.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

மா தவத்தோன் புத்திரன் போய்
      மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
      உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தித் தூய் மறையோர்
      துறைபடியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும்
      புனல் அரங்கம் என்பதுவே
404.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

மருமகன் தன் சந்ததியை
      உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே
      குருமுகமாய்க் காத்தான் ஊர்
திருமுகமாய்ச் செங்கமலம்
      திருநிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும்
      புனல் அரங்கம் என்பதுவே
412.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்
      வானோர் வாழச்
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட
      திருமால் கோயில்
திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும்
      காட்டி நின்று
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும்
      ஒளி அரங்கமே
417.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே
      மன்னர் ஆக்கி
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன்
      உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும்
      பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற
      திருவரங்கமே
432.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

மாயவனை மதுசூதனனை
      மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
      அரங்கத்து அரவணைப் பள்ளியானை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன்
      விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தினர் ஆகி வல்லார்
      தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே
446.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

மங்கிய வல்வினை நோய்காள்
      உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்
      எளிது அன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான்
      சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
447.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

மாணிக் குறள் உரு ஆய
      மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத
      வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
      வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
474.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   திருப்பாவை  

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
  கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
      கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்
478.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   திருப்பாவை  

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
      தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
      தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
      தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்
493.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 20   ஆண்டாள்   திருப்பாவை  

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
      கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
      வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
      நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
      இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்
496.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 23   ஆண்டாள்   திருப்பாவை  

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
      சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
      மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
      கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
      காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய்
499.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 26   ஆண்டாள்   திருப்பாவை  

மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
      பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
      சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
      ஆலின் இலையாய் அருள்-ஏலோர் எம்பாவாய்
506.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

மத்த நன் நறுமலர் முருக்க மலர்
      கொண்டு முப்போதும் உன் அடி வணங்கித்
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து
      வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
      கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
      விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே
511.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

மாசு உடை உடம்பொடு தலை உலறி
      வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா
      நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
      பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்
      என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய்
519.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

முற்று இலாத பிள்ளைகளோம் முலை
      போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது
      உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்
      கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
      சேவகா எம்மை வாதியேல்
522.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்
      கக் கடவையோ? கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண் உற
      நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப்
      பக்கம் நின்றவர் என் சொல்லார்?
531.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

மாமிமார் மக்களே அல்லோம்
      மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
      தொல்லை இராத் துயில்வானே
சேமமேல் அன்று இது சால
      சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே
      குருந்திடைக் கூறை பணியாய்
538.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே
545.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
      வண்ணன் மணி-முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்
      சங்கு இழக்கும் வழக்கு உண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
      பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
      பவள-வாயன் வரக் கூவாய்
547.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
      இராவணன் மேல் சர-மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த
      தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவிற் புதுமணம் நாறப்
      பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என்
      கருமாணிக்கம் வரக் கூவாய்
549.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
      வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என்
      பொரு கயற் கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பால்-அமுது ஊட்டி
      எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே
      உலகு அளந்தான் வரக் கூவாய்
561.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
578.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

மா முத்தநிதி சொரியும்
      மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
      தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து
      கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு
      இங்கு இலக்காய் நான் இருப்பேனே?         
580.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

மின் ஆகத்து எழுகின்ற
      மேகங்காள் வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை
      தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை
      விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என்
      புரிவுடைமை செப்புமினே
585.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

மத யானை போல் எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
      பாம்பு-அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான்
      கருதாது ஓர் பெண்-கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
      வையகத்தார் மதியாரே?
598.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

மேல்-தோன்றிப் பூக்காள் மேல்-உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே?
600.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே?
604.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற
அழகப்பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே?
610.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல்
இச்சை உடையரேல் இத் தெருவே போதாரே?
617.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
      மாதவன் என்பது ஓர் அன்புதன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்
      ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்
      பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமற் களம் அடைந்த
      மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்.
626.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

மன்னு மதுரை தொடக்கமாக
      வண் துவராபதிதன் அளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
      தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்
      புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே.
639.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

மாலாய்ப் பிறந்த நம்பியை
      மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
      இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில்காப்பான்
      வினதை-சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே
641.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

மாதவன் என் மணியினை
      வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
      ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
      பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே
650.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
      வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை
      அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்
      பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்
      கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே
653.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
      வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத்
      தொல் நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி
      அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
      நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே
665.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

மாலை உற்ற கடற் கிடந்தவன்
      வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை உற்ற வரைப் பெருந் திரு
      மார்வனை மலர்க் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு
      மாலை உற்றது என் நெஞ்சமே
666.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

மொய்த்துக் கண் பனி சோர மெய்கள்
      சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
      ஆடிப் பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
      யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே
668.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

மெய் இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் இவ்
வையம்தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே
670.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

மாரனார் வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவது இல்லை யான்
ஆர-மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே
682.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தேன் ஆவேனே
687.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக்
கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன
பன்னிய நூற் தமிழ்-வல்லார் பாங்காய பத்தர்களே             
690.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்-
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்-வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே
702.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு
      வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்
      போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்
      கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?
      இன்னம் அங்கே நட நம்பி நீயே.
703.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

மற் பொரு தோள் உடை வாசுதேவா
      வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
      இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
      அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
      எம்பெருமான் நீ எழுந்தருளே
706.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

மங்கல நல் வனமாலை மார்வில்
      இலங்க மயில்-தழைப் பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி
      பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
      குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத
      உன் குழலின் இசை போதராதே?
710.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்
      முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே
      எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
      விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
      நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே.
712.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
      அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
      வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
      வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
715.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
      முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
      நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
      அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை
      தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே
718.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை
      வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
      தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடிமேல்
      கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
      நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
719.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ
726.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

மலையதனால் அணை கட்டி மதில்-இலங்கை அழித்தவனே
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ
738.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி
      அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின்
      வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக்
      கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
      ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே!
755.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 4   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம் இல் விளக்கமாய்
ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list