சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் இ%%
இகல்     இங்கு     இங்கும்     இங்கே     இசைந்த     இசைமின்கள்     இசைவித்து     இட     இடகிலேன்     இடங்கை     இடந்தது     இடம்     இடர்     இடுமே     இடும்பையால்     இடை     இட்ட     இணை     இணையில்லா     இண்டை     இண்டையும்     இது     இதுவோ     இத்தனை     இந்திரனுக்கு     இந்திரனும்     இந்திரனோடு     இந்திரன்     இந்திரற்கும்     இந்து     இன     இனி     இனிது     இன்     இன்னன்ன     இன்னார்     இன்னிலா     இன்னிள     இன்னிளம்பூந்     இன்னை     இன்னைசை     இன்பம்     இன்பு     இன்றா     இன்றிப்     இன்று     இன்றே     இப்போதும்     இமம்     இமயப்     இமையவர்     இமையாத     இம்மை     இம்மைக்கும்     இம்மையை     இயக்கு     இயலும்     இயல்வாயின     இயல்வு     இரக்க     இரக்கம்     இரங்கி     இரந்து     இரவியர்     இரவு     இரு     இருக்கு     இருக்கொடு     இருங்     இருங்கை     இருடீகேசன்     இருட்டிற்     இருத்தும்     இருந்     இருந்தான்     இருந்தேன்     இருப்பிடம்     இரும்     இரும்பு     இருளின்     இருள்     இரைக்கும்     இறந்ததும்     இறுக்கும்     இறை     இறைஞ்சப்     இறையும்     இறையோ     இறைவனைக்     இலகிய     இலங்கு     இலங்கை     இலங்கைப்     இலங்கையும்     இலன்     இலம்     இலிங்கத்து     இலை     இலைத்     இல்-பிறப்பு     இல்லதும்     இல்லறம்     இல்லை     இளைப்பாய்     இளைப்பினை     இழந்த     இழை     இவளைப்     இவள்     இவை     இவையா     இவையும்    
Number of search results : 160
Pages:    1    2
2751.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 11   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்

2753.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, -
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்

2754.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்

2796.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 1   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே
2799.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே
2802.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 7   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே   
2820.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 3   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? எண் இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே   
2837.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ் உலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே
2852.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர்த் தாள்
பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப்பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே   
2888.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 3   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகில் இட்டுச்
சுடுமே? அவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே? சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே     
2896.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே   
2897.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 1   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்பு உற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே   
2901.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்ம உபதேசம்

இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே     
2913.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலகிற்கு உபதேசம்

இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை இல் அந் நலம்
புல்கு பற்று அற்றே     
2987.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

இவையும் அவையும் உவையும்
      இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
      ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
      கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
      என்னுடைச் சூழல் உளானே   
3016.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே?   
3035.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே   
3044.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே?
3045.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே
3046.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே?
3084.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே
3224.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை

இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
      உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
      திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
      வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
      ஒன்றும் துயர் இலனே
3288.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வெறி விலக்கு

இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின்
மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே
3290.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வெறி விலக்கு

இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே
3305.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன்
கடவன் ஆகி காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?
3334.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (தி

இலிங்கத்து இட்ட புராணத்தீரும்
      சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும்
      தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும்
      திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
      பொய் இல்லை போற்றுமினே
3355.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

இடம் கொள் சமயத்தை எல்லாம்
      எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான்
      தன்னுடைப் பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
      கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
      நாடகம் செய்கின்றனவே
3359.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

இறுக்கும் இறை இறுத்து உண்ண
      எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
      அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
      பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
      மேவித் தொழுது உய்ம்மின் நீரே
3373.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

இரைக்கும் கருங் கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்
3401.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
      இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
      இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
      இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்
      இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?
3426.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத

இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே
3454.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே
3489.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமில்
      ஏறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்
      உட்பட மற்றும் பல
அகல் கொள் வையம் அளந்த மாயன் என்
      அப்பன் தன் மாயங்களே
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு
      என்ன மனப் பரிப்பே?
3503.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்
      கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
      மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை
      தொலைவில்லிமங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
      திருநாமம் கற்றதன் பின்னையே
3522.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்
தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே
3568.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ

இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும்
      மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
      கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே
3575.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
      எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
      கடல்வண்ணா கடியைகாண் என்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்
      வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்
      இவள்திறத்து என் சிந்தித்தாயே?
3586.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

இழந்த எம் மாமைத்திறத்துப் போன
      என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ?
      ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
      தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
      அன்னையர்காள் என்னை என் முனிந்தே?
3630.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன்
தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே
3647.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச

இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே
3654.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்

இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே
3659.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே
3660.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும்
      இவ் ஏழ் உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து
      ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில்
      சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும்
      நாள்களும் ஆகும்கொலோ?
3677.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
      நிகழ்வதோ நீ இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று
      அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே
      கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
      பின்னை தோள் மணந்த பேர் ஆயா
3689.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
      பூவைகள்காள் குயில்காள் மயில்காள்!
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
      ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
      அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையறப் பாசங்கள் விட்டபின்னை
      அன்றி அவன் அவை காண்கொடானே
3723.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு

இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
      படையாய் ஏறும் இரும் சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே
      என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
      இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தர
      மதுரைப் பிறந்த மாயனே?
3737.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே
3738.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா

இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே
3773.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
      இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச்
      செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
      புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
      வழிபட்டு ஓட அருளிலே?
3786.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப் போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே
3810.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 34   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே
3825.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 49   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்
என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?
3826.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 50   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்?
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே
3835.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 59   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே
3871.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 95   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்

இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?
      இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து
      துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
      தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
      பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
3889.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே  
3892.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே  
3894.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்

இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே  
3903.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே  
3976.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே  
Pages:    1    2
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list