சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் உ%%
உகக்கும்     உகந்து     உகந்தே     உகப்பு     உகவையால்     உங்கள்     உச்சியில்     உச்சியுள்ளே     உடன்     உடம்பினால்     உடம்பு     உடல்     உடுத்துக்     உடை     உடையானை     உடையார்     உணர     உணரில்     உணர்த்தல்     உணர்ந்த     உணர்ந்தாய்     உணர்ந்து     உணர்வார்     உணர்வில்     உண்டாய்     உண்டாய்-உறிமேல்     உண்டியே     உண்டு     உண்டும்     உண்ண     உண்ணாது     உண்ணும்     உண்பது     உதவிக்     உதிப்பன     உந்தம்     உந்தி     உந்திமேல்     உந்து     உனக்குப்     உன்னி     உன்னித்து     உன்னிய     உன்னுடைய     உன்னைச்     உன்னையும்     உன்னோடு     உமர்     உம்பரால்     உம்பரும்     உம்பர்     உம்பர்-உலகோடு     உயர்வு     உயிரினால்     உயிர்     உயிர்கள்     உயிர்க்கு     உய்த்து     உய்ந்து     உய்ம்மின்     உய்ய     உய்யும்     உய்வு     உரக     உரங்களால்     உரம்     உரு     உருகி     உருகுமால்     உருக்கு     உருத்து     உருப்பிணி     உருவின்     உருவு     உரை     உரைக்க     உரைக்கின்ற     உரைக்கில்     உரையா     உறகல்     உறங்குவான்     உறவு     உறி     உறிகள்     உறியை     உறு     உறுகின்ற     உறுமோ     உறும்     உறுவது     உற்ற     உற்றார்கள்     உற்று     உற்றேன்     உலகமும்     உலகம்     உலகில்     உலகு     உலகுதன்னை     உலகும்     உலவு     உலாகின்ற     உளது     உளனாகவே     உளனாய     உளன்     உளம்     உளரும்     உளைந்த     உளைந்திட்டு     உளைய     உள்     உள்ளத்தே     உள்ளன     உள்ளமோ     உள்ளம்     உள்ளிலும்     உள்ளே     உழந்தாள்     உழலை     உழுவது     உவந்த    
Number of search results : 146
Pages:    1    2
2941.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைமகள் தூதுவிடல்

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே   
2950.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே
      உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்
      உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும்
      மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டாவண்ணம் மண் கரைய
      நெய் ஊண் மருந்தோ? மாயோனே   
2990.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

உடன் அமர் காதல் மகளிர்
      திருமகள் மண்மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர்
      ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி
      ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான்
      கண்ணன் என் ஒக்கலையானே   
2997.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

உச்சியுள்ளே நிற்கும் தேவ
      தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
      வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
      இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
      நீள் கழல் சென்னி பொருமே   
3048.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல

உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே
3068.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
      நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
      ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
      சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே?
3069.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
      பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
      உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
      முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே?
3142.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே
3190.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு எமக்கு எம் பெருமக்களே
3210.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?
3232.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ
3261.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

உரைக்க வல்லேன் அல்லேன் உன்
      உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
      காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
      பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
      ஏத்த யானும் ஏத்தினேன்
3263.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி
      கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத்
      தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
      விண்ணும் ஆள்வர் மண்ணூடே
3284.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே
3295.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வெறி விலக்கு

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே
3317.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ

உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடைமுடியன் தனி ஒருகூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே
3318.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ

உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே
3339.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (தி

உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
      மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
      நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
      திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
      கூத்தனுக்கு ஆள் செய்வதே
3343.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே?
3384.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?
3402.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
      உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
      உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
      உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்
      உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?
3403.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
      உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
      உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
      உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
      உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே?
3428.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே
3444.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
      அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து
      மணந்த மாயங்கள்
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே
3455.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே
3470.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உர

உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரைத்
      தடம் கண் விழிகளின்
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு
      சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே
3517.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே
3545.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்ப

உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே
3550.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

உலகம் உண்ட பெருவாயா
      உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
      நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
      திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
      கூடும் ஆறு கூறாயே
3561.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ

உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை
      உன் பாதபங்கயம்
நண்ணிலாவகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண் இலாப் பெறு மாயனே இமையோர்கள்
      ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே
3632.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்
பை விடப் பாம்பு அணையான் திருக் குண்டலக் காதுகளே?
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே
3658.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே
3674.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்

உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
      ஆகி உன் தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை
      அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ்
      அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
      என்னுடை ஆர் உயிரேயோ
3703.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர

உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே
3750.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

உணர்வில் உம்பர் ஒருவனை
      அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்
      அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
      மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
      யானும் தானாய் ஒழிந்தானே.
3757.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

உளரும் இல்லை அல்லராய்
      உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என்
      உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும்
      போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல்
      தெருளும் மருளும் மாய்த்தோமே
3772.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

உறுமோ பாவியேனுக்கு இவ்
      உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என்
      செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்
      புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை
      ஆண்டார் இங்கே திரியவே?
3817.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 41   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்கண்
பெறுவது எதுகொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே
3820.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 44   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே
3821.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 45   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே
3832.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 56   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழஞ் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! பண்பு உடையீரே
3836.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 60   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே?
3921.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன்
      திருவுள்ளம் இடர் கெடும்தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
      எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
      நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே
      அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ 
3974.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே?  
3977.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே 
3993.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்

உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே 
Pages:    1    2
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list