சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் த%%
தகவிலை     தகவு     தகும்     தக்கன்     தக்கார்     தக்கிலமே     தங்கா     தங்கையை     தஞ்சம்     தட     தடத்து     தடம்     தடாவிய     தணியும்     தண்     தண்டகாரணியம்     தண்டொடு     தண்ணனவு     தத்துக்     தந்தம்     தந்தை     தந்தையும்     தனக்கு     தனம்     தனி     தனை     தன்     தன்நேர்     தன்னடியார்     தன்னாலே     தன்னிகரொன்     தன்னின்     தன்னுடைய     தன்னுளே     தன்னை     தன்முகத்துச்     தன்மை     தமக்கு     தமர்     தமர்கள்     தம்     தம்பரம்     தம்பியொடு     தம்மையே     தரங்க     தரித்திருந்தேன்     தரு     தருக்கினால்     தரும     தருமம்     தற்கச்     தற்பு     தலைக்     தலைபெய்து     தலைப்பெய்     தலைப்பெய்து     தலைமேல     தலைமேல்     தளர்ந்திட்டு     தளர்ந்தும்     தளர்வு     தளிர்     தளை     தளைக்     தள்ளித்     தழும்பு     தழுவிநின்ற     தழைகளும்     தவத்துளார்     தவம்     தவள     தா     தாங்காதது     தாங்கு     தாங்கு-அரும்     தாது     தான     தானவன்     தானாக     தானே     தான்     தான்போலும்     தாமத்     தாமரை     தாமரைக்     தாமோதரனை     தாம்     தாம்பால்     தாயப்     தாயர்     தாயே     தாய்     தாய்-முலைப்     தாய்மார்     தாரா     தாராய்     தாரித்து     தாரேன்     தார்     தார்க்கு     தாள     தாளால்     தாள்     தாள்களை     தாழம்     தாழியில்     தாழை     தாழ்     தாழ்ந்து     தாழ்வு     தாவி     திகழ     திகழும்     திகழ்கின்ற     திக்கு     திங்கள்     திசைக்கின்றதே     திசையும்     திட     திடர்     திண்     திண்ணக்     திண்ணன்     திண்ணியது     திரண்டு     திரிகின்றது     திரிதந்து     திரிந்தது     திரிபுரம்     திரியும்     திரிவிக்கிரமன்     திரு     திருக்     திருக்கடித்தானமும்     திருச்செங்குன்றூரில்     திருத்தனை     திருத்தாய்     திருந்தக்     திருந்து     திருப்பேர்     திருமகளும்     திருமங்கை     திருமறுமார்வ     திருமாலிருஞ்சோலை     திருமாலிருஞ்சோலையானே     திருமால்     திருமேனி     திருவடியை     திருவடிவில்     திருவில்     திருவுக்கும்     திரை     திறங்கள்     திறத்துக்கு     திறம்     திறம்பாது     திறம்பாமல்     திறம்பிற்று     திறம்பேல்மின்     திறல்     தில்லைநகர்த்     திவளும்     தீ     தீதில்     தீது     தீய     தீயிற்     தீரா     தீராத     தீராது     தீர்     தீர்த்தனுக்கு     தீர்த்தன்     தீர்ந்த     தீர்ப்பாரை     தீவினை     தீவினைக்கு     துக்கச்     துக்கம்     துங்க     துஞ்சா     துடி     துடைத்த     துணிந்தது     துணிவு     துணை     துணைநிலை     துணையும்     துண்ட     துன்னி     துன்னிய     துன்னு     துன்பமும்     துன்று     துப்பனை     துப்பு     துப்புடையாரை     துயக்கு     துயரங்கள்     துயரமே     துயர்     துறந்தேன்     துறப்பேன்     துளக்கம்     துளங்கு     துளம்     துளை     துழா     துவரி     துவரிக்     துவரித்த     துவர்     துவள்     தூ     தூங்கு     தூண்     தூது     தூமணி     தூம்பு     தூயனாயும்     தூயானை     தூயாய்     தூய்மை     தூராத     தெந்தில்லைச்     தென்     தென்னவன்     தென்னிலங்கை     தெய்வ     தெய்வங்காள்     தெரிதல்     தெரிந்துணர்வு     தெரியேன்     தெரிவு     தெருளும்     தெருவின்கண்     தெருவில்     தெளி     தெளிது     தெளிந்த     தெளிவிலாக்     தெளிவுற்று     தெள்     தெள்ளிய     தெள்ளியார்     தெள்ளியீர்     தெவ்     தே     தேசும்     தேடற்கு     தேட்டு     தேனுகன்     தேனை     தேனொடு     தேன்     தேரார்     தேருங்கால்     தேர்     தேவராய்     தேவரையும்     தேவர்     தேவிமார்     தேவு     தேவும்     தை     தையலாள்மேல்     தையல்     தொகுத்த     தொக்கு     தொடர்     தொட்ட     தொண்டரும்     தொண்டர்     தொண்டீர்     தொண்டு     தொத்தார்     தொத்து     தொன்னெறிக்கட்     தொல்     தொல்லை     தொழில்     தொழுதனர்     தொழுதால்     தொழுது     தொழுத்தையோம்     தொழும்     தோடு     தோட்டம்     தோயம்     தோயா     தோய்த்த     தோற்றம்     தோற்றோம்     தோளி     தோள்    
Number of search results : 411
Pages:    1    2  3  4  5  Next
1109.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள்
      துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம் படு குவளைக் கண்-இணை எழுதாள்
      கோல நல் மலர் குழற்கு அணியாள்
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த
      மால் என்னும் மால் இன மொழியாள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே
1113.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்
      தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த
      வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
      மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே
1118.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
      மலர்மிசைமேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி
      மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு
      இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே
1126.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
      நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி
      வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்
      நான் இவர்-தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே
1132.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
      துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
      திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1133.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

திண் படைக் கோளரியின் உரு ஆய்
      திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
      பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1141.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து
      தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்
      அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை-
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்
      குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
1146.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

தூ வடிவின் பார்-மகள் பூ-மங்கையோடு
      சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
      கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
      செம் பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை-
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
1177.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்-கோன்மருவார்
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தான் இவை கற்று வல்லார்மேல் சாரா தீவினை-தானே
1182.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு
      திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட
      விண்ணவர்-கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட
      அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1198.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே
1201.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்   
ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே
1203.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ?
1212.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ?
1217.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே
1224.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
      தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
      அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
      செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
1225.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம்
      துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்
      விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று
      மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
1229.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க
      தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்
      நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்
      ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
1238.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்
      தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
      அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்-
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
      தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1244.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
      தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
      கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
      வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே   
1270.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்
      செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை
      பங்கயத்து அயன்-அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன்
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
1272.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
      என்று சென்று அடைந்தவர்-தமக்குத்
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
      தயரதன் மதலையை சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன்
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
1277.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
வானவர்-கோனைக் கண்டமை சொல்லும்
      மங்கையார் வாள் கலிகன்றி
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்
      ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு
      வானவர் ஆகுவர் மகிழ்ந்தே             
1283.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
      அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்   
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
      இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்-
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
      மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1288.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

தூம்பு உடைப் பனைக் கை வேழம்
      துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்
      கடு மழை காத்த எந்தை-   
பூம் புனல் பொன்னி முற்றும்
      புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே
1291.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

தாங்கு-அரும் சினத்து வன் தாள்
      தடக் கை மா மருப்பு வாங்கி
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
      பிளந்து எருது அடர்த்த எந்தை-
மாங்கனி நுகர்ந்த மந்தி
      வந்து வண்டு இரிய வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே
1297.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

திங்கள் தோய் மாட நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானை   
மங்கையர் தலைவன் வண் தார்க்
      கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு
      பொன்-உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
      ஊடு போய் விளங்குவாரே
1298.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்க் காவளம்பாடி

தா அளந்து உலகம் முற்றும்
      தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
      நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
      மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
      கண்ணனே களைகண் நீயே
1332.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்-
கே எம் பெருமான் அல்லீரோ நீர்?-இந்தளூரீரே
1356.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புள்ளம்பூதங்குடி

துன்னி மண்ணும் விண் நாடும்
      தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள்
      அருளிச்செய்த அமலன் இடம்-
மின்னு சோதி நவமணியும்
      வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்-
      புள்ளம்பூதங்குடி-தானே
1358.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

தாம் தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்-
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்
கூந்தல் கமழும்-கூடலூரே
1362.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

தொண்டர் பரவ சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகள் ஊர்போல்-
வண்டல் அலையுள் கெண்டை மிளிர
கொண்டல் அதிரும்-கூடலூரே
1363.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்-
எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ்-கூடலூரே
1391.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
      தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
      திருவரங்கம் எங்கே? என்னும்-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
      பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள்
      மங்கைமீர் மதிக்கிலேனே
1393.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

தாது ஆடு வன மாலை தாரானோ?
      என்று என்றே தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான்
      திருவரங்கம் என்னும்-பூமேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்
      மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் சொல்லுகேனே?
1403.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த
அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே
1405.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது-தென் அரங்கத்தே
1426.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்
      தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு
      ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
      செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
1438.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு
      விசும்பும் அவை ஆய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை
      ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட
      மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே
1443.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை
      ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது
      மேவும் நகர்-தான்-
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில்
      ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே
1444.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்
      நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ
      நின்ற நகர்-தான்-
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள்
      ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே
1465.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:2

தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல்
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே
1467.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:2

தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே             
1468.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:3

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே
1469.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:3

துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே
1477.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:3

தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக்
கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே
1497.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

தாமத் துளப நீள் முடி மாயன்-தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை-
சேமத் துணை ஆம் செப்பும்-அவர்க்கு திருமாலே             
1503.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:3

தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்
      தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்
      தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை
      விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
1506.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:3

தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல்
      தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன் ஆயிரம் பேர் உடைய ஆளன்
      பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர்
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
      படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
1510.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:4

தெள் ஆர் கடல்வாய் விட வாயச்
      சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி
      துரந்தான் இரந்தான் மாவலி மண்-
புள் ஆர் புறவில் பூங் காவி
      பொலன் கொள் மாதர் கண் காட்ட
நள் ஆர் கமலம் முகம் காட்டும்
      நறையூர் நின்ற நம்பியே
1520.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:5

தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனை செங் கமலக் கண்ணானை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே
1531.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:6

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல்
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
மன்று ஆரக் குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே
1537.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:6

திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடல்-இவை பத்தும் வல்லார்
விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வாரே
1550.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்-
கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி
ஊரே உகந்தாயை உகந்து அடியேனே
1556.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

தூயாய் சுடர் மா மதிபோல் உயிர்க்கு எல்லாம்
தாய் ஆய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே
1569.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும்
      தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
      அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழைக் காதனை
      மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என்
      அன்பனை அன்றி ஆதரியேனே
1577.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்
      தோன்றல் வாள் கலியன் திரு ஆலி
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி-தன்
      நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
      தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்-மாலைப்
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
      பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
1581.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை
      வெம் சமத்துப் பொன்றி வீழ
போர் ஆளும் சிலை-அதனால் பொரு கணைகள்
      போக்குவித்தாய் என்று நாளும்
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை
      எம் பெருமான் உம்பர் ஆளும்
பேராளன் பேர் ஓதும் பெரியோரை
      ஒருகாலும் பிரிகிலேனே
1588.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்-
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே
1605.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா
உரு ஆய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அரு ஆய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கரு ஆர் கற்பகத்தை-கண்டுகொண்டு களித்தேனே
1608.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல்வன்-அவனை அணி ஆலியர்-கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர்-வான்-உலகே
1609.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

திருவுக்கும் திரு ஆகிய செல்வா
      தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே
      உலகு உண்ட ஒருவா திரு மார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்
      உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1614.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண
      சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும்
      தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர
      கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய்
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1630.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிறுபுலியூர்ச் சலசயனம்

தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்-
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின்-உணர்வீரே
1644.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

துப்பனை துரங்கம் படச் சீறிய
      தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை திருமங்கை மணாளனை
      தேவனை திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை
      ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை-கழுநீர் மலரும் வயல்
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1645.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

திருத்தனை திசை நான்முகன் தந்தையை
      தேவ-தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை
      விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை அரியை பரி கீறிய
      அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற
கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1651.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால்
      என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும்
      என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால்
      என்கின்றாளால்-
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1652.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன்
      என்கின்றாளால்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான்
      என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு
      என்கின்றாளால்-
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1659.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ
துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே?
1665.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர்
அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே
1666.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள்
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே?
1671.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
பைங் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த
செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன்-என் செறி வளையே
1678.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே
1689.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய
      தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்
      பெறும் அளவு இருந்தேனை
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்
      அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து
      வலிசெய்வது ஒழியாதே
1698.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 6

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர்-மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே.
1712.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 7

தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல்-இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக்
கண்டவர் கணபுரம்-அடிகள்-தம் இடமே
1722.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை-
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே
1726.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை-
உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே
1729.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே
1759.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
      சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
      செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க
      பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-
      அச்சோ ஒருவர் அழகியவா
1768.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு-
பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே
1785.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 2

தூம்பு உடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த
பாம்பின் அணையான் அருள்தந்தவா நமக்கு
பூஞ் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்-தனக்கு ஓர் வெம் தழலே
1788.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 1

தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்
      தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி
துவள என் நெஞ்சகம் சோர ஈரும்
      சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்
      என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
1789.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 1

தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த
      தண் மதியின் இள வாடை இன்னே
ஊதை திரிதந்து உழறி உண்ண
      ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதைமையால் இருந்து
      பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்வன்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
1792.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 1

திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன்
      தீம் குழல் ஒசையும் தென்றலோடு
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற
      கோல இளம்பிறையோடு கூடி
      பண்டைய அல்ல இவை நமக்கு
      பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
1799.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

துங்க ஆர் அரவத் திரை வந்து உலவ தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்-
செங் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே
1803.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 2

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!-
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில்
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே
1808.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1824.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
      செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
      எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
வானகச் சோலை மரகதச் சாயல்
      மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே
1832.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர்-கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ?
1837.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே
1851.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பதினென் திருப்பதிகள்

துளக்கம் இல் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே
1860.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

தண்டகாரணியம் புகுந்து அன்று
      தையலை தகவிலி எம் கோமான்
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர்
      குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப்
      பேசுகின்றது என்? தாசரதீ உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
1864.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று
      தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு
      வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை
      எங்களை ஒழியக் கொலையவனை
சூழுமா நினை மா மணி வண்ணா
      சொல்லினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ
1880.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்
1884.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ
நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே
1889.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சப்பாணி கொட்ட வேண்டுதல்

தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி
      மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி
1890.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சப்பாணி கொட்ட வேண்டுதல்

தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால் ஆர்க்க தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி
      தாமரைக் கண்ணனே சப்பாணி
1901.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான்
      சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த
      பெருமான் திருமால் விரி நீர் உலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை
      மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்
அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
1910.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
      உறிமேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை
      வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்
      கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும்
      பேதையேன் என் செய்கேனோ?
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list