சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ப%%
பகலும்     பகல்     பகு     பக்கம்     பங்கயக்     பச்சை     பஞ்சவர்     பஞ்சிச்     பஞ்சிய     பட     படங்கள்     படர்     படல்     படி     படை     படைத்த     படைத்திட்டு     படைப்பொடு     பட்ட     பட்டம்     பட்டர்     பட்டி     பட்டு     பணங்கள்     பணி     பணிந்து     பணிந்தேன்     பணிமின்     பணிமொழி     பணியா     பணிவினால்     பணைத்தோள்     பண்     பண்டிப்     பண்டு     பண்டும்     பண்டை     பண்ணினை     பண்ணின்     பண்பு     பதக     பதி     பதினாறாம்     பதிப்     பத்தர்     பத்தினோடு     பத்து     பந்து     பந்தோடு     பனி     பனிக்     பனிப்     பனிப்பு     பன்னாக     பன்னி     பன்னிய     பன்னிரு     பன்றி     பன்றியும்     பப்ப     பயன்     பயின்றது     பயிலும்     பரக்க     பரஞ்சோதி     பரதனும்     பரத்திலும்     பரந்த     பரந்திட்டு     பரனே     பரன்     பரம்     பரவாள்     பரவி     பரிசு     பரிதியொடு     பரிய     பரியன்     பரிவது     பரிவு     பரு     பருங்     பருந்தாள்-களிற்றுக்கு     பருப்பதத்துக்     பருவக்     பருவம்     பறவை     பறையும்     பற்பநாபன்     பற்றா     பற்றார்     பற்று     பற்றுமஞ்சள்     பற்றேல்     பல     பலபல     பலபலவே     பல்     பல்லவம்     பல்லாண்டு     பல்லாயிரவர்     பள்ளத்தில்     பள்ளி     பள்ளியில்     பழகு     பழி     பழித்திட்ட     பழுது     பழுதே     பவளம்போல்     பவ்வ     பா     பாசங்கள்     பாசறவு     பாசி     பாஞ்சசன்னியத்தைப்     பாடு     பாடும்     பாடோமே-எந்தை     பாட்டும்     பாண்     பாண்டவர்     பாதங்கள்மேல்     பாதம்     பாம்பு     பாயும்     பாய்     பாய்ந்தானை     பாரம்     பாரித்து     பாரினை     பாரும்     பாருள்     பாரை     பாரோர்     பார்     பார்-ஆயது     பார்-உருவி     பார்த்த     பார்த்தனுக்கு     பார்த்தற்கு     பார்த்தான்     பார்த்து     பாற்கடலும்     பால     பாலகனாய்     பாலகன்     பாலன்     பாலின்     பாலில்     பாலைக்     பாலொடு     பால்     பால்-ஆலிலையில்     பாவமும்     பாவியாது     பாவியேன்     பிச்சச்     பிடி     பிடித்தேன்     பிடியைத்     பிணக்கி     பிணக்கு     பிணங்கள்     பிணி     பிண்டத்     பிண்டி     பிதிரும்     பின்     பின்நின்று     பின்னால்     பின்னிதனைக்     பின்னுமோர்     பின்னை     பின்னை,தன்     பின்னைகொல்     பிரா     பிரான்     பிரிந்து     பிரியாது     பிறங்கிய     பிறந்த     பிறப்பினோடு     பிறப்பு     பிறப்பொடு     பிறவித்துயர்     பிறிது     பிறிந்தேன்     பிறை     பிறையின்     பிள்ளை     பிள்ளைகள்     பிள்ளைத்     பிழைக்க     பீடு     பீளை     புகர்     புகலிடம்     புகழும்     புகழ்வாய்     புகழ்வோம்     புகு     புகுந்து     புக்க     புக்கு     புட்டியிற்     புணரா     புணர்     புணர்க்கும்     புண்டரிக     புண்ணிய     புண்ணியம்     புதம்     புது     புந்தி     புனமோ?     புனை     புன்     புயல்     புரங்கள்     புரி     புரிந்து     புறம்     புற்றரவு     புலக்     புலன்     புலன்கள்     புலம்     புலம்பின     புலம்பு     புலம்பும்     புலை-அறம்     புல்லி     புளிங்குடிக்     புள்     புள்ளது     புள்ளினை     புள்ளின்     புள்ளும்     புவியும்     புவியுள்     பூ     பூங்     பூசும்     பூணாது     பூணித்     பூண்     பூண்டு     பூதம்     பூந்     பூவை     பூவைகள்     பூவையும்     பெடை     பெண்     பெண்டிரால்     பெண்டிர்     பெண்மை     பெயரும்     பெய்யு     பெய்யும்     பெய்வளைக்     பெரிய     பெரியவர்     பெரியானை     பெரு     பெருகு     பெருங்     பெருப்     பெருமக்கள்     பெருமையனே     பெரும்     பெருவரங்கள்     பெற்ற     பெற்றத்     பெற்றம்     பெற்றாரும்     பெற்றார்     பெற்று     பேச     பேசவும்     பேசினார்     பேசிற்றே     பேசுகின்றது     பேசுமின்     பேசும்     பேசுவார்     பேணாத     பேணிச்     பேண்     பேதம்     பேதையர்     பேயரே     பேயினார்     பேயின்     பேய்     பேய்ச்சி     பேய்த்     பேரானை     பேராமல்     பேரே     பேர்     பேர்கின்றது     பேர்த்தனை     பேர்த்து     பேர்ந்து     பேறு     பை     பைங்     பைங்கிளி     பைம்பொழில்     பையரவின்     பொங்கி     பொங்கிய     பொங்கு     பொத்த     பொன்     பொன்னரும்     பொன்னவிலும்     பொன்னி     பொன்னுடம்பு     பொன்னும்     பொன்னை     பொன்னைக்     பொன்னொடு     பொன்போல்     பொய்     பொய்ந்     பொய்யைச்     பொரு     பொருத்தம்     பொருந்தலன்     பொருந்தா     பொருந்தார்     பொருந்திய     பொருந்து     பொருப்பிடையே     பொருளால்     பொருளும்     பொருள்     பொறுத்தேன்     பொற்பு     பொற்றிகழ்     பொற்றை     பொற்றொடித்     பொலிக     பொலிந்து     பொல்லா     பொல்லாக்     போகின்ற     போகு     போதர்     போதான     போதில்     போது     போதெல்லாம்     போந்தது     போனாய்     போயிருந்து     போய்த்     போய்ப்பாடு     போர     போர்     போர்க்களிறு     போற்றி     போற்று     போழ்து    
Number of search results : 510
Pages:    1    2  3  4  5  6  Next
803.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 52   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே
823.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 72   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே
827.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 76   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர்கொளீஇ
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே?
830.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 79   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே?
835.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 84   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பின் பிறக்க வைத்தனன் கொல்? அன்றி நின்று தன் கழற்கு
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் ஆழியான்?
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன்
என் திறத்தில் என்கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே?
840.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 89   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே?
842.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 91   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண் இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
851.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 100   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பிறப்பினோடு பேர் இடர்ச் சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றுமா
பெறற்கு அரிய நின்ன பாத-பத்தி ஆன பாசனம்
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே
870.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 119   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே
873.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 2   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பச்சை மா மலை போல் மேனி
      பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
      ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
      இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
      அரங்க மா நகருளானே
876.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 5   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
      பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
      உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
      தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
      தொழும்பர்சோறு உகக்குமாறே
878.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 7   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

புலை-அறம் ஆகி நின்ற
      புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர்
      காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன்
      சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற
      தேவனே தேவன் ஆவான்
891.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 20   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பாயும் நீர் அரங்கந் தன்னுள்
      பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
      மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
      துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
      அடியரோர்க்கு அகலல் ஆமே?
892.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 21   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பணிவினால் மனமது ஒன்றிப்
      பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
      தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
      அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
      மனத்தினால் நினைக்கல் ஆமே?
893.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 22   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பேசிற்றே பேசல் அல்லால்
      பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால்
      அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை
      வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ?
      பேதை நெஞ்சே நீ சொல்லாய்
897.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 26   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

போதெல்லாம் போது கொண்டு உன்
      பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
      திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
      கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
      என் செய்வான் தோன்றினேனே?
913.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 42   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பழுது இலா ஒழுகல்-ஆற்றுப்
      பல சதுப்பேதிமார்கள்   
இழிகுலத்தவர்களேலும்
      எம் அடியார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
      என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்
      மதில்-திருவரங்கத்தானே             
915.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 44   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

பெண் உலாம் சடையினானும்
      பிரமனும் உன்னைக் காண்பான்
எண் இலா ஊழி ஊழி
      தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து
      ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ?
      களைகணாக் கருதுமாறே
921.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 5   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
      போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
      களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
      அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
      எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
931.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 5   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்?
      அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
934.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 8   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து
      மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
946.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 10   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே
963.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பிரிதி

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப்
      பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர
      இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற
      நிமிர்ந்து அவை முகில் பற்றிப்
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே
971.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

பீளை சோரக் கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவத் தம்மில் முட்டி தள்ளி நடவாமுன்
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே
972.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றி தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே             
974.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே
976.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றாமுன்
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு ஆயிரம் நாமம் சொலி
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே
982.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன்
      பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று
      தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்-
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த
      செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
1019.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

பள்ளி ஆவது பாற்கடல் அரங்
      கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
      பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
      வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1021.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்
      திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில் குரவை
      பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார்-தம் மனத்து உள்ளான் இட-
      வெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1024.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

பாரும் நீர் எரி காற்றினோடு
      ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
      பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
      சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1026.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
      சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
      பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
      சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1036.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!-
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே
1051.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே
      பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்
  வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
1052.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

பொங்கு போதியும் பிண்டியும் உடைப்
      புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து
      ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
1061.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1062.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே
1066.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1074.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

பரதனும் தம்பி சத்துருக்கனனும்
      இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
      இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
      குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
1075.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
      வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
      ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
      பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே
1083.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
      கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
      அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
      பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1084.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
      புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்
      பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1085.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
      பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்
      அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு
      அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு
      இடம் மா மலை ஆவது- நீர்மலையே
1086.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
      பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்
      அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்-
      மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல்
நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1088.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை
      படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்-தங்கள்
      சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை
      புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே
1089.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
      பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை
      என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை
      நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே
1091.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை
      பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
      அந்தணர்-தம் அமுதத்தை குரவை முன்னே
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை
      கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1092.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ
      பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன
      ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப்
      பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1094.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பேணாத வலி அரக்கர் மெலிய அன்று
      பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர்-கோனைப்
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை
      பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான்-தன்னை
      உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1095.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை
      பிரை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
      தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண் இறந்த புகழினானை
      இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானைக் கண் ஆரக் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1097.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப்
      பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித்
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
      தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக்
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க்
      கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
      தீவினையை முதல் அரிய வல்லார் தாமே
1099.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்-அவர் எம்மை ஆள்வாரே
1102.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் அவ் இறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நல் நெஞ்சே
1103.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார்-அவரை வலங்கொள் என் மட நெஞ்சே
1104.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா
கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே
1106.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார்-அவரை வணங்கு என்-தன் மட நெஞ்சே
1116.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்
      பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ்
      அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
      வீங்கிய வன முலையாளுக்கு
என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே
1136.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
      முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
      கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1137.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
      பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
      தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
      திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
      செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே
1145.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
      பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை
      செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்
      புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
1169.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண்
பூ-மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடித்
தே மலர் தூவ வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1170.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு
திண் திறல் பாட வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1172.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

பருவக் கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து
அருவித் திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன்மலை ஒத்து
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து இன மால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1175.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

பொங்கி அமரில் ஒருகால் பொன்பெயரோனை வெருவ
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட
பைங் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்
சிங்க உருவின் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1181.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்
      பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட
      நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே
      தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால்
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1183.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள
      படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த
      விண்ணவர்-கோன் தாள் அணைவீர் வெற்புப்பாலும
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்
      துடி இடையார் முகக் கமலச் சோதி-தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1184.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்
      புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்
      திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி
      வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1185.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்
      பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்
      மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ
      நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1186.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
      பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில்
      கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத்
      தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1197.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்
      தென் ஆலி இருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர்
      ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன்
வல்லர் ஆய் உரைப்பார்க்கு இடம் ஆகும்-வான் உலகே
1199.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்   
அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே   
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்   
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே
1209.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ?
1223.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
      பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
      உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி
      கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
1233.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
      பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்
      தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள்
      உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1248.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

போது அலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல்
மாதவன்-தான் உறையும் இடம் வயல் நாங்கை-வரி வண்டு
தேதென என்று இசை பாடும்-திருத்தேவனார்தொகையே
1259.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக்
      காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த
      உம்பர்-கோன் உறை கோயில்-
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ
      வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
      -வண்புருடோத்தமமே
1261.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன்
      பாகனைச் சாடிப் புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை
      உதைத்தவன் உறை கோயில்-
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு
      கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்
      -வண்புருடோத்தமமே
1268.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்
      பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர்-மகளோடு
      மண்-மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை-
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
1269.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை
      பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை
      ஏழ் இசையின் சுவை-தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை-
      கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே
1279.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட
      பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
      பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்-
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
      இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம்
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1280.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
      பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
      அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
      மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1284.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
      பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
      மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
      குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1296.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருமணிக்கூடம்

பாவமும் அறமும் வீடும்
      இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
      குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
      இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே
1302.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்க் காவளம்பாடி

பட அரவு உச்சி-தன்மேல்
      பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை-தன்னை
      மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
      தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே
1316.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே
ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே
1327.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
      பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்
      பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன்
      கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்
      இன்பம் நாளும் எய்துவாரே
1330.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிந்தளூர்

பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த   
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும்   
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே
1342.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து
      பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த
      செங் கண் மால் சென்று உறை கோயில்-
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி
      எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற-
      திருவெள்ளியங்குடி-அதுவே
1347.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
      பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
      திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே
1360.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்-
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும்-கூடலூரே
1366.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருகப் புகுந்த ஒருவர் ஊர் போல்-
அருகு கைதை மலர கெண்டை
குருகு என்று அஞ்சும்-கூடலூரே
1373.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ
      அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை-அது ஆகிய ஆதி!-நின்
      அடிமையை அருள் எனக்கு-
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
      தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திரு
      வெள்ளறை நின்றானே
1380.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர
கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்-
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே
1392.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண்
      மை எழுதாள் பூவை பேணாள
் ஏண் அறியாள் எத்தனையும் எம் பெருமான்
      திருவரங்கம் எங்கே? என்னும்-
நாள் மலராள் நாயகன் ஆய் நாம் அறிய
      ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர்
1396.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
      பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன்? வாரானோ?
      என்று என்றே வளையும் சோரும்-
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
      தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே
1399.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது-தென் அரங்கத்ே்த
1406.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே
1408.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
      பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
      பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்
      ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே
1416.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால்
      பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய் மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
      மணி முடி வானவர்-தமக்குச
சேயன் ஆய் அடியோர்க்கு அணியன் ஆய் வந்து என்
      சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்
      -அரங்க மா நகர் அமர்ந்தானே
1417.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து
      பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த
      அரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்று அறுப்பாரே
Pages:    1    2  3  4  5  6  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list