சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் வ%%
வகை     வகையால்     வக்கரன்     வங்க     வங்கக்     வங்கத்தால்     வங்கம்     வசை     வஞ்சனே     வஞ்சனை     வஞ்சனையால்     வஞ்சம்     வஞ்சி     வட     வடிக்     வடிவாய்     வடிவு     வட்கு     வட்ட     வட்டு     வணங்கல்     வணங்கும்     வணம்     வண்     வண்டினம்     வண்டு     வண்டுகளோ     வண்ண     வண்ணக்     வண்ணப்     வண்ணம்     வண்ணம்-திரிவும்     வண்மையினாலும்     வதுவை     வந்த     வந்தருளி     வந்தாய்     வந்திக்கும்     வந்தித்து     வந்திருந்து     வந்து     வன்     வம்பவிழ்     வம்பு     வம்மின்     வயிறு     வயிற்றிற்     வயிற்றில்     வரத்தால்     வரத்தினிற்     வரம்     வரம்பு     வரவு     வரி     வரிசிலை     வருக     வருங்கால்     வருத்தும்     வருந்தாத     வருந்தாது     வரும்     வருவார்     வரை     வரைச்     வற்பு     வற்றா     வலங்     வலஞ்செய்து     வலத்தனன்     வலம்     வலம்புரி     வலி     வலியம்     வலையுள்     வல்     வல்லாளன்     வல்லாள்     வல்லி     வல்லிச்     வல்வினை     வள     வளரும்     வளர்ந்த     வளர்ந்தவனைத்     வளைக்     வளைத்து     வள்ளலே     வள்ளி     வழக்கு     வழக்கொடு     வழி     வழித்     வழிபட்டு     வழு     வவ்வி     வா     வாக்குத்     வாங்கு     வாசகமே     வாசகம்     வாசி     வாட     வாடினேன்     வாட்டம்     வாட்டாற்றான்     வாத     வாதை     வானகமும்     வானத்தில்     வானத்து     வானத்தும்     வானவர்     வானவர்-தங்கள்     வானவர்-தங்கள்-கோனும்     வானவர்-தம்     வானவர்தாம்     வானிடை     வானிடைப்     வானுளார்     வானே     வானை     வானோ     வானோர்     வான்     வாமனன்     வாம்     வாயிற்     வாயும்     வாயுள்     வாய்     வாய்கொண்டு     வாய்க்க     வாய்க்கும்கொல்     வாய்த்     வாய்ப்போ     வாரணம்     வாரா     வாராகம்-அது     வாராது     வாராய்     வாரி     வாரிக்கொண்டு     வார்     வார்த்தை     வாலி     வாலியது     வால்     வாளா     வாளால்     வாளை     வாள்     வாள்கள்     வாழக்     வாழாட்பட்டு     வாழும்     வாழ்தல்     வாழ்த்தி     வாழ்த்திய     வாழ்த்துக     வாழ்த்துவார்     வாழ்ந்தார்கள்     வாழ்வு     வாவித்     விடத்த     விடம்     விடம்-தான்     விடல்     விடுவேனோ     விடை     விடைக்     விட்டு     விண்     விண்ட     விண்டான்     விண்டாரை     விண்ணகரம்     விண்ணவர்-தங்கள்     விண்ணின்மீது     விண்ணுளார்     விண்ணெல்லாம்     விண்மீது     விதியினால்     விதிவகை     வித்தும்     வித்துவக்கோட்டு     வினை     வினையார்     வினையால்     வினையேன்     வியன்     வியப்பு     வியம்     வியலிடம்     விரலோடு     விரும்பி     விரும்பிப்     விரை     விரைந்து     விற்     விலங்கலால்     விலங்கும்     விலைக்கு     வில்     வில்லார்     வில்லால்     விளங்கனியை     விளம்பும்     விளரிக்     விளைத்த     விள்வு     வீசும்     வீடு     வீடுமின்     வீற்றிருந்து     வீற்று     வீவன்     வீவு     வெங்கண்-திண்களிறு     வெஞ்சினத்த     வெண்     வெண்கலப்     வெண்ணிறத்     வெண்ணெய்     வெண்ணெய்-தான்     வெந்     வெந்தார்     வென்ற     வென்றி     வென்றியே     வெம்     வெம்பும்     வெய்ய     வெய்யன்     வெருவாதாள்     வெறி     வெறுப்பொடு     வெற்பால்     வெற்பு     வெற்பை     வெற்றிக்     வெளிய     வெள்ள-நீர்     வெள்ளத்துள்     வெள்ளியான்     வெள்ளியார்     வெள்ளை     வெள்ளைச்     வெள்ளைப்     வெவ்வாயேன்     வேங்கடமும்     வேங்கடமே     வேடர்     வேடு     வேட்டத்தைக்     வேண்டிச்     வேண்டித்     வேத     வேதத்தை     வேதமும்     வேதம்     வேதியாநிற்கும்     வேந்தர்     வேம்     வேம்பின்     வேயர்     வேயின்     வேய்     வேறா     வேறு     வேறுகொண்டு     வேறே     வேலிக்     வேலை     வேல்     வேள்வி     வேவு     வை     வைகலும்     வைகல்     வைகுந்த     வைகுந்தம்     வைகுந்தா     வைது     வைத்த     வைத்தார்     வைத்தேன்     வைப்பன்     வைப்பு     வைம்மின்     வையத்து     வையம்    
Number of search results : 416
Pages:    1    2  3  4  5  Next
863.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 112   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே
874.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 3   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வேத நூற் பிராயம் நூறு
      மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
      நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்
      பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
      அரங்க மா நகருளானே
879.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 8   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வெறுப்பொடு சமணர் முண்டர்
      விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
      போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
      கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
      அரங்க மா நகருளானே
885.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 14   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வண்டினம் முரலும் சோலை
      மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
      குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
      அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
      விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
888.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 17   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

விரும்பி நின்று ஏத்த மாட்டேன்
      விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
      இறை-இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
      அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என்
      கண்ணினை களிக்குமாறே
895.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 24   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வெள்ள-நீர் பரந்து பாயும்
      விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும்
      கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும்
      ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
      கள்ளத்தே கழிக்கின்றாயே
912.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 41   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வானுளார் அறியல் ஆகா
      வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலைச்
      சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும்
      ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம்
      தருவரேல் புனிதம் அன்றே                
916.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 45   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

வள எழும் தவள மாட
      மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
      தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும்
      எம்பிராற்கு இனியவாறே
924.0   திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்   பாடல் # 8   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருப்பள்ளி எழுச்சி  

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
      ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
      தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
948.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பெரிய திருமந்திரத்தின் மகிமை

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
      பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
      அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
      உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்
951.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பெரிய திருமந்திரத்தின் மகிமை

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
      வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
      என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
      பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்
958.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பிரிதி

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
      வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
      இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
      அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
      பிரிதி சென்று அடை நெஞ்சே
977.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக்
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே
984.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்
      விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்
      எந்தை எம் அடிகள் எம் பெருமான்-
அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க
      ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
987.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி
      கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்
      வானவர் உலகு உடன் மருவி
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்
      இமையவர் ஆகுவர் தாமே
995.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

வெந்தார் என்பும் சுடு நீறும்
      மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும்
      திரியும் பெரியோன்-தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன
      இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
998.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
      மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
      பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
      இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1001.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
      பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
      எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
      தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1022.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 1

வண் கையான் அவுணர்க்கு நாயகன்
      வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
      ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
      இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே
1046.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்-
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே
1047.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக்
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார்-அவர் வானவர் ஆகுவர் தாமே
1048.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

வானவர்-தங்கள் சிந்தை போல என்
      நெஞ்சமே இனிது உவந்து மா தவ
மானவர்-தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில்-புகை
      ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
1068.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
      வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த
      சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
      பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே
1069.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
      விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
      குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
      அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
1070.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லிக்கேணி

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
      வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
      நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
      வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே
1101.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:2

விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரைக்
கொண்டாடும் நெஞ்சு உடையார்-அவர் எங்கள் குலதெய்வமே
1119.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த

வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார்
      வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும்
      தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து
      மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே
1147.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல
      மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னைச்
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்
      வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த
      கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர்-தாமே
1150.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
      மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்-
      மெய்தகு வரைச் சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய
      முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு
      திருவயிந்திரபுரமே
1155.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்
      வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்
      நிலவிய இடம்-தடம் ஆர்
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு
      மலை வளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு
      திருவயிந்திரபுரமே
1156.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்
      விசயனுக்கு ஆய் மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்-
      குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம்
      பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு
      திருவயிந்திரபுரமே
1160.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்
      விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்
      அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
      படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1168.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

வாட மருது இடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்-
சேடு உயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே
1171.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 2

வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத்
திளைத்து அமர் செய்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே
1180.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்காழிச் சீராமவிண்ணகரம்

வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்
      மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்
      நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்
      மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச்
      சீராமவிண்ணகரே சேர்மின் நீரே
1188.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
      புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
      தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே
1202.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:2

வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த     
தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே   
1226.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
      விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
      இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப
      தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்
      மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே
1227.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் மணிமாடக்கோயில்

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
      மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
      கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
      கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
      விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே
1234.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து
      வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை
      உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்-
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல்
      ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால்
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே <>
1236.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு
      மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்
      ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப
      சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1239.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும்
      விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
      குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்-
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
      ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1243.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
      மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத்
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன்
      தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
      செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1246.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த
      தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை
      கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
      வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1250.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும்   
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெருஞ் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்__
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே
1255.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

வார் ஆரும் இளங் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
கார் ஆர் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே
1265.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன்
      சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம்
      முகில் வண்ணன் உறை கோயில்-
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண்
      பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே   
1271.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
      மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க
      அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானை-
      கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே
1274.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்
      வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை
      கரு முகில் திரு நிறத்தவனை
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
      செம்பொன்செய்கோயிலினுள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை-
      கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே   
1281.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்

வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
      வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
      கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
       எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே
1312.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடாவருவேன் வினை ஆயின பாற்றே
1315.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே
1351.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புள்ளம்பூதங்குடி

வெற்பால் மாரி பழுது ஆக்கி
      விறல் வாள் அரக்கர் தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்
      துணித்த வல் வில் இராமன் இடம்-
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்
      கவின் ஆர் கூடம் மாளிகைகள்
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்-
      புள்ளம்பூதங்குடி-தானே
1368.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை
      மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ!-நின் குரை கழல் தொழுவது ஓர்
      வகை எனக்கு அருள்புரியே-
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை
      மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திரு
      வெள்ளறை நின்றானே
1369.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
      அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய
      மாருதம் வீதியின்வாய
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு
      வெள்ளறை நின்றானே
1370.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்
      உடலகம் இரு பிளவாக்
கையில் நீள் உகிர்ப் படை-அது வாய்த்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண்
      தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு
      வெள்ளறை நின்றானே
1371.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளறை

வாம் பரி உக மன்னர்-தம் உயிர் செக
      ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!-நின்
      காதலை அருள் எனக்கு-
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்
      வாய்-அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனித் தேன்-அது நுகர் திரு
      வெள்ளறை நின்றானே
1379.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் மணி நீள் முடி
பை கொள் நாகத்து அணையான் பயிலும் இடம் என்பரால்-
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே
1381.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்-
துளைக் கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன
்திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே
1382.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்-
உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல
்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே
1388.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே
      வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண்
      துயில் மறந்தாள்-வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர்-தம் உயிராளன்
      ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
1394.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

வார் ஆளும் இளங் கொங்கை வண்ணம் வேறு
      ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இப்
      பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்
      ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன் என் மகளைச் செய்தனகள்
      எங்ஙனம் நான் செப்புகேனே?
1401.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம்
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் பண்டு ஒருநாள்
அளந்தவனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே
1419.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

வாத மா மகன் மர்க்கடம் விலங்கு
      மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
      செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோது இல் வாய்மையினாயொடும் உடனே
      உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
1425.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 5

வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்
      எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
      கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்
      செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
1429.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே
1432.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே
1433.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான்
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே
1434.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வெண்ணெய்-தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே
1437.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத்
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே
1446.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக
      மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார்
      அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி
      எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே
1448.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
1464.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:2

வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி
கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத்
தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே
1474.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:3

வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே
1482.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:1

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார்-தாங்கள் சிரித்து இகழாத முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
1484.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:1

வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் -உரை கேட்பதன்முன்
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
1485.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:1

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மைக்
கேள்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாதமுன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
1492.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்-
பெடையோடு அன்னம் பெய்வளையார்-தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும்-நறையூரே
1495.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் விறல் வியூகம்
விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர்-
கொள்ளைக் கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும்
நள்ளக் கமலத் தேறல் உகுக்கும்-நறையூரே
1512.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:4

வில் ஆர் விழவில் வட மதுரை
      விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
      காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்-
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்
      சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
      நறையூர் நின்ற நம்பியே
1513.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:4

வள்ளி கொழுநன் முதலாய
      மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட விறல் வாணன்
      வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்-
பள்ளி கமலத்திடைப் பட்ட
      பகு வாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த
      நறையூர் நின்ற நம்பியே
1539.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:7

விடம்-தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால்
நடந்தானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே
1547.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:7

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவித் தடங் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே
1549.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும்
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடு-என் எந்தை பிரானே
1552.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

வில் ஏர் நுதல் நெடுங் கண்ணியும் நீயும்
கல் ஆர் கடுங் கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய்-உன்னை யான் வணங்கித் தொழும் ஆறே
1557.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:8

வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே
1570.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
      மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச்
      சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
      கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை
      எம்பிரானை-எத்தால் மறக்கேனே?
1582.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின்
      வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை
      முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்-
சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை
      எம் பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி
      எப்பொழுதும் தித்திக்குமே
1591.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர்போலும்-
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே
1595.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற ஊர்போலும்-
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே
1613.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்
      பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்
      பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
      கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1624.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி
      மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்
      தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்-
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி
      செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
1632.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிறுபுலியூர்ச் சலசயனம்

வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தான் ஆகிய தலைவன்-அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே
1646.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

வெம் சினக் களிற்றை விளங்காய் விழக்
      கன்று வீசிய ஈசனை பேய் மகள்
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை
      தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை
      நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1657.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
      என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன்
      என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே
      பயில்கின்றாளால்-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
1664.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே?
1673.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்-என் வரி வளையே
1675.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே
1677.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு-அணைமேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன்-என் பெய் வளையே
1679.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 4

விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list