சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ச%%
சக்கரக்     சக்கரத்து     சங்க     சங்கின்     சங்கு     சங்கும்     சங்கையும்     சண்ட     சதிர்     சதுர     சதுரம்     சத்திரம்     சந்த     சந்தம்     சந்திர-மண்டலம்     சந்தொடு     சன்ம     சன்மம்     சரங்களைத்     சரணம்     சரணா     சல     சலங்     சலம்     சழக்கு     சாடு     சாதலும்     சாதி     சாது     சாந்தமும்     சாந்து     சாம்     சாயக்     சாயால்     சாரா     சார்ங்கம்     சார்ந்த     சார்ந்தது     சார்ந்து     சார்வு     சார்வே     சாலப்     சாலி     சிக்கெனச்     சிங்கம்-அது     சிதைக்கின்றது     சித்தமும்     சித்திரகுத்தன்     சித்திரகூடத்து     சித்திரத்     சிந்தனையை     சிந்தப்     சிந்திக்கும்     சிந்துரச்     சிந்துரப்-பொடி     சிந்துரம்     சிந்தை     சிந்தை-தன்னுள்     சிந்தையாலும்     சிந்தையினோடு     சின     சினம்     சிரம்     சிரீதரன்     சிறந்த     சிறந்தார்க்கு     சிறப்பில்     சிறியன்     சிறியாய்     சிறியார்     சிறுவிரல்கள்     சிறை     சிற்றஞ்     சிலம்பின்     சிலம்பு     சிலம்பும்     சிலை     சிலையால்     சில்மொழி     சீத     சீதக்     சீதை     சீமாலிகன்     சீயினால்     சீரால்     சீரிய     சீர்     சீர்மை     சீற்றம்     சீலம்     சீலைக்     சுடர்     சுடர்-ஒளி     சுடர்ப்     சுடலையில்     சுமந்து     சுரக்கும்     சுரர்     சுரி     சுரிகையும்     சுரிந்திட்ட     சுருக்காக     சுருக்குவாரை     சுருங்கு     சுருப்பார்     சுரும்பு     சுற்றம்     சுற்றி     சுற்றும்     சுளை     சுழன்று     சுவரில்     சூடு     சூட்டாய     சூட்டு     சூதனாய்க்     சூதினைப்     சூது     சூர்மையில்     சூழல்     சூழல்கள்     சூழ்     சூழ்கண்டாய்     சூழ்கின்ற     சூழ்ச்சி     சூழ்ந்த     சூழ்ந்து     செக்கரிடை     செக்கர்     செங்     செங்கனி     செங்கமல     செங்கமலக்     செங்கமலப்     செஞ்சொல்     செடியாய     செண்பக     செத்துப்     செந்தழலே     செந்நெல்     சென்னி     சென்ற     சென்றது     சென்றால்     சென்று     செப்பாடு     செப்பு     செம்     செம்பொன்     செம்மை     செய்கின்ற     செய்கின்றது     செய்த்தலைச்     செய்ய     செய்யும்     செய்யேல்     செரு     செருவரை     செறி     செறும்     செற்றதுவும்     செற்றவன்     செற்று     செலக்     செல்ல     செல்வ     செழு     செழுங்     செழுந்திரைப்     செவி     செவிகளால்     செவிக்கு     செவ்     செவ்வரி     செவ்வாய்     சேப்     சேம     சேமமே     சேமம்     சேயன்     சேய்     சேரா     சேரும்     சேர்த்தடத்     சேர்ந்த     சேர்ந்தார்     சேர்வன்     சேல்     சொட்டைநம்பிகள்அருளிச்செய்தது     சொன்னால்     சொல்     சொல்ல     சொல்லாது     சொல்லாய்     சொல்லினால்     சொல்லினும்     சொல்லில்     சொல்லீர்     சொல்லு     சொல்லும்     சோதி     சோத்தம்     சோத்து     சோராத     சோர்வினால்     சோர்வு     சோலைத்    
Number of search results : 264
Pages:    1    2  3
2871.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 8   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே   
2873.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே     
2895.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே   
2906.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்ம உபதேசம்

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே   
2920.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலகிற்கு உபதேசம்

சேர்த்தடத் தென் குரு
கூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து
ஓர்த்த இப் பத்தே     
2952.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

சார்ந்த இரு வல் வினைகளும்
      சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
      திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
      அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
      இவற்றின் உயிராம் நெடுமாலே   
2984.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே     
2988.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

சூழல் பலபல வல்லான்
      தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
      கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
      விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
      அவன் என் அருகவிலானே   
3005.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே     
3019.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே   
3036.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே   
3061.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை
எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே
3065.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
      தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
      மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
      பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
3083.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே
3097.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
3101.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
புருஷார்த்த நிர்ணயம்

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கை ஆர் சக்கரக் கண்ண பிரானே
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே
3103.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
புருஷார்த்த நிர்ணயம்

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே
3111.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே
3119.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
போது அவிழ் மலையே புகுவது பொருளே
3135.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே
3147.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே?
3149.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே
3157.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

சாதி மாணிக்கம் என்கோ?
      சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
      தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?
ஆதி அம் சோதி என்கோ?
      ஆதி அம் புருடன் என்கோ?
ஆதும் இல் காலத்து எந்தை
      அச்சுதன் அமலனையே
3169.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை

சாது சனத்தை நலியும்
      கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
      அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
      வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
      என் சவிப்பார் மனிசரே?
3176.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு
      ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
      மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப்
      பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு
      மூவர் ஆகிய மூர்த்தியே
3193.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே
3203.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே
3209.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே
3215.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே
3220.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
      சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
      தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
      மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
      நான் ஓர் குறைவு இலனே
3297.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்று என்று
காலந்தோறும் யான் இருந்து கைதலைபூசல் இட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே
3306.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
3320.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே
3356.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
      ஒக்கின்றது இவ் உலகத்து
வைகுந்தன் பூதங்களே ஆய்
      மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்
      அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர்
      ஊழி பெயர்த்திடும் கொன்றே
3399.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
      செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
      செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
      செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
      செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
      செய்ய கனி வாய் இள மான் திறத்தே?
3421.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே
3423.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத

சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்?
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரிஏறே
3431.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே?
3505.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

சிந்தையாலும் சொல்லாலும்
      செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்று அடைந்த
      வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை
      வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
      அடிமைசெய்வார் திருமாலுக்கே
3507.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே
3513.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே
3564.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் எ

சூது நான் அறியாவகை சுழற்றி ஓர் ஐவரைக்
      காட்டி உன் அடிப்
போது நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி
      ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே
3576.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவரங்கப் பெருமானிடம் தலைவி மிகவும் மோகித்திருப்

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
      திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண் நீர் மல்க
      வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே
      அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த
      தையலை மையல் செய்தானே
3585.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

செங்கனி வாயின் திறத்ததாயும்
      செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
      தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத
      தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ
      நாணும் நிறையும் இழந்ததுவே
3591.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்
      அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
      நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை
கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
      கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழன
      தென் திருப்பேரெயில் மாநகரே.
3609.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே?
3612.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை
மல்லல் அரி உரு ஆய் செய்த மாயம் அறிந்துமே?
3640.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச

சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே
3653.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்

சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே
3669.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
      தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
      மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
      குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
      தீர்த்தனுக்கு அற்ற பின்னே
3694.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர

சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே
3719.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகு

சொல்ல மாட்டேன் அடியேன் உன்
      துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு
      இரண்டுபோல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு
      உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட
      மா நீர்க் கொண்டல் வண்ணனே?
3736.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால்

சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே
3743.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா

செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே
3747.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வா

சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை
அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே
3785.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி

சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே
3813.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 37   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே
3853.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 77   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக

சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே.
3884.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 108   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே
3923.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்
      திருவடி திருவடிமேல் பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர்
      வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை
      அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
      உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே  
3924.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே  
3942.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

சாரா ஏதங்கள்
நீர் ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே  
3957.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா

செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே  
3979.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின:
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே  
3999.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே  
Pages:    1    2  3
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list