சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ந%%
நகரமும்     நகரம்     நகர்     நங்கள்     நங்கைமீர்     நச்சு-அரா     நச்சுவார்     நஞ்சு     நடந்த     நடம்     நடை     நண்ணா     நண்ணாத     நண்ணாதார்     நண்ணினம்     நந்தன்     நந்தா     நன்கு     நன்னகரம்     நன்மணி     நன்மை     நன்மையால்     நன்றாய்     நன்று     நமக்கும்     நமனும்     நம்பனே     நம்பனை     நம்பி     நம்பினேன்     நம்பியை     நம்முடை     நயவேன்     நறை     நலமே     நலம்     நலியும்     நல்     நல்கித்     நல்குரவும்     நல்ல     நல்லது     நல்லார்     நல்லை     நளிர்     நளிர்ந்த     நவின்று     நா     நாகத்தின்     நாகத்து     நாகம்     நாகு     நாக்     நாடாத     நாடி     நாடிலும்     நாடீர்     நாடும்     நாட்டினான்     நாட்டினாய்     நாட்டிய     நாட்டில்     நாட்டைப்     நாணி     நாணும்     நாதனை     நாதன்     நாதமுனிகள்     நாத்     நாந்தகம்     நானக்     நானிலம்     நான்     நான்முகனை     நான்முகன்     நான்ற     நான்றில     நாமங்கள்     நாமம்     நாம்     நாயகனாய்     நாயகன்     நாரணன்     நாராயணன்     நார்     நாறிய     நாறு     நால்     நால்-திசைத்     நாளும்     நாளேல்     நாளை     நாள்கள்     நாள்தொறும்     நாழால்     நாழிகை     நாவலம்     நாவினால்     நாவினுள்     நிகர்     நிகழ்ந்தாய்     நிச்சலும்     நிச்சித்து     நிதியினை     நிதியைப்     நினைக்கிலேன்     நினைதொறும்     நினைத்து     நினைந்து     நினைப்பன்     நினைப்பான்     நினையார்     நின்னையே     நின்ற     நின்றது     நின்றனர்     நின்றார்     நின்றிடும்     நின்று     நின்றுநின்று     நின்றும்     நிறம்     நிறுத்தி     நிறைந்த     நிறையினால்     நிற்கும்     நிற்பதும்     நிற்றி     நிலத்தைச்     நிலவொடு     நிலை     நிலைமன்னும்     நில்லா     நில்லாத     நிழல்     நீ     நீங்க     நீடு     நீண்டான்     நீண்டாயை     நீந்தும்     நீயும்     நீயே     நீரகத்தாய்     நீரிலே     நீர்     நீர்புரை     நீர்மை     நீர்மையால்     நீல     நீலத்     நீள்     நீள்வான்     நுகர்ச்சி     நுங்கட்கு     நுமக்கு     நுமரோடும்     நும்மைத்     நூலின்     நெஞ்சமே     நெஞ்சால்     நெஞ்சினால்     நெஞ்சில்     நெஞ்சு     நெடியானே     நெடியான்     நெடுமாற்கு     நெடுமால்-அவன்     நெடுமையால்     நென்னல்     நெய்     நெய்க்     நெய்யிடை     நெறி     நெறித்திட்ட     நெறிந்த     நெறியார்     நெற்றி     நெற்றிமேல்     நெற்றியுள்     நெல்லில்     நேசம்     நேர்     நேர்சரிந்தான்     நேர்ந்தேன்     நேர்பட்ட     நையும்     நைவளம்     நைவாய     நொந்து     நோக்கி     நோக்கும்     நோய்     நோற்ற     நோற்றுச்     நோற்றேன்     நோலாது     நோவ    
Number of search results : 268
Pages:    1    2  3
3189.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே  
3194.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே
3199.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே
3218.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
சென்று சென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?  
3234.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ
3250.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்?
3282.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
3302.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே
3311.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை எ

நிறையினால் குறைவு இல்லா நெடும் பணைத் தோள் மடப் பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கைச்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே
3319.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே
3331.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமான் எல்லாத் தேவதைகளுக்கும் மேற்பட்டவன் (தி

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
      முன் படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன்
      மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய
      திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்
      பல் உலகீர் பரந்தே
3358.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
      தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்
      மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா
      கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி
      யாயவர்க்கே இறுமினே
3371.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே
3376.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே
3383.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே
3387.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர

நின்றிடும் திசைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
      சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
      நெஞ்சுள்ளும் நீங்காவே
3388.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
      அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
பூந் தண் மாலைத் தண் துழாயும்
      பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
      பாவியேன் பக்கத்தவே
3391.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
      அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
      நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
      நேமி அங்கை உளதே
3407.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும்
      இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்
      சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே
3432.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே
3433.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே?
3436.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே?
3439.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே
3445.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்
      நினைப்பு அரியன
ஒன்று அலா உருவு ஆய் அருவு ஆய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம்
      நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே
3450.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்
      நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச்
      சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள்
      இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து
      மகிழ்வு எய்துவர் வைகலுமே
3471.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உர

நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால்
      அரசு களைகட்ட
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய
      கருமாணிக்கச் சுடர்
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே
3473.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
3475.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே
3482.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே
3486.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி

நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
      நீள் நெடும் கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை
      போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை
      நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு
      என் இனி நோவதுவே?
3487.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்
      வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும் ஊர் சகடம்
      இறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை
      நினைந்து மனம் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு
      என் இனி வேண்டுவதே?
3491.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி

நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
      போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்
      உட்பட மற்றும் பல
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என்
      அப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு
      இனி என்ன கலக்கம் உண்டே?
3494.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களி

நாயகன் முழு ஏழ் உலகுக்கும்
      ஆய் முழு ஏழ் உலகும் தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து
      அவை ஆய் அவை அல்லனும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக்
      குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப் பத்தால்
      பத்தர் ஆவர் துவள் இன்றியே
3498.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

நிற்கும் நால்மறைவாணர் வாழ்
      தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்
      கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்
      வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து
      உள் மகிழ்ந்து குழையுமே
3500.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு
      செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை
      வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத் திசை அல்லால் மறு
      நோக்கு இலள் வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
      நாமமே இவள் அன்னைமீர்!
3508.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தா

நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே
3526.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே
3532.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலை செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே
3539.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்ப

நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் சிவன் ஆய் அயன் ஆனாய்
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே
3557.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

நோலாது ஆற்றேன் உன பாதம்
      காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
      நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
      விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
      வந்தாய் போலே வாராயே
3584.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

நானக் கருங் குழல் தோழிமீர்காள்
      அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன்
      என் வசம் அன்று இது இராப்பகல் போய்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
      தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்
      செங்கனி வாயின் திறத்ததுவே
3592.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
      நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
சிகர மணி நெடு மாடம் நீடு
      தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
      நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என்
      நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே?
3596.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே
3597.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
3601.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே
3606.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?
3636.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே?
3666.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அ

நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
      சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால்
      கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய
      வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண்
      அன்றி மற்று ஒன்று இலமே
3682.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று

நங்கள் வரிவளை ஆயங்காளோ
      நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம்
      நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
      தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
      வேங்கடவாணனை வேண்டிச் சென்றே
3752.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
      அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
      உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
      யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
      நன்றாய் ஞானம் கடந்ததே
3753.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

நன்றாய் ஞானம் கடந்துபோய்
      நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
      உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள்
      செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு
      அதுவே வீடு வீடாமே
3769.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே
3770.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
      அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும்
      தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
      அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ!
      வியன் மூவுலகு பெறினுமே?
3775.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

நுகர்ச்சி உறுமோ மூவுலகின்
      வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
      பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள்
      நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன்
      பெரிய தனி மாப் புகழே?
3777.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

நாளும் வாய்க்க நங்கட்கு
      நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
      சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங் கற்பகக்
      காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலைபோல்
      கிடந்தான் தமர்கள் கூட்டமே.
3780.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பாகவதர்களுக்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ

நல்ல கோட்பாட்டு உலகங்கள்
      மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
      அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
      இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
      கொண்ட பெண்டீர் மக்களே
3830.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 54   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொரு

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான்
3837.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 61   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே
3838.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 62   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்
3848.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 72   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே
3861.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 85   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப்பணி செய்யப் புகுந்தேன்
நீள் ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா
3900.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம்

நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்  
3910.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ

நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன
சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே. 
3928.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப்படான் பிறர்க்கு மெய்போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே  
3929.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே  
3936.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே  
3939.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே  
3945.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப் பத்து
அடியார்க்கு அருள்பேறே  
3948.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளை

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே  
3961.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே  
3978.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே
3980.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருநாடு செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களைத் தாமே

நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே  
Pages:    1    2  3
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list