சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ம%%
மகனாகக்     மகன்     மகிழ்     மகிழ்ந்தது     மக்கள்     மங்க     மங்கல     மங்கிய     மங்குல்     மச்சு     மச்சொடு     மஞ்சு     மட     மடந்தையர்     மடந்தையை     மடல்     மடவரல்     மடி     மட்டு     மணங்கள்     மணந்த     மணாளன்     மணி     மணித்     மணியை     மண்     மண்ணின்     மண்ணிற்     மண்ணும்     மண்ணுலகம்     மண்ணுளாய்     மண்ணுளார்     மண்ணை     மண்மகள்     மண்மிசை     மண்மிசைப்     மத     மதிக்     மதித்தாய்     மதுசூதனை     மதுவார்     மத்த     மத்தக்     மத்தளம்     மத்து     மந்தி     மன     மனக்     மனத்தில்     மனத்து     மனன்     மனப்     மனமே     மனம்     மனிசரும்     மன்     மன்னன்     மன்னன்தன்     மன்னர்     மன்னவன்     மன்னா     மன்னா.     மன்னிய     மன்னியபல்பொறிசேர்     மன்னு     மன்னும்     மன்றில்     மயக்கா     மயக்கும்     மயங்க     மயர்வு     மரம்     மரவடியைத்     மருங்கு     மருட்டார்     மருதப்     மருந்து     மருந்தும்     மருந்தே     மருமகன்     மருள்     மருவும்     மறந்தேன்     மறப்பும்     மறம்     மறுக்கி     மறை     மறைவலார்     மற்     மற்று     மற்றுத்     மற்றும்     மற்றொன்று     மலங்கு     மலம்     மலர்     மலர்ந்தே     மலி     மலை     மலையதனால்     மலையால்     மலையை     மல்கிய     மல்கு     மல்லரை     மல்லிகை     மல்லே     மல்லை     மல்லொடு     மழுங்காத     மழுவினால்     மழுவு     மழைக்கு     மழையே     மா     மாகம்     மாசு     மாசூணாச்     மாட     மாடே     மாட்டாதே     மாட்டீர்     மாணிக்     மாணிக்கக்     மாணிக்கம்     மாண்     மாண்பு     மாதர்     மாதலி     மாதவன்     மாதவன்பால்     மாத்     மான     மானம்     மானிட     மானை     மான்     மாமிமார்     மாய     மாயக்     மாயச்     மாயனை     மாயன்     மாயப்     மாயம்     மாயவனை     மாயவன்     மாயா     மாயோன்     மாயோம்     மாய்த்தல்     மாய்ந்து     மாரனார்     மாரி     மார்கழித்     மார்வில்     மாறி     மாறு     மாற்றங்கள்     மாற்றம்     மாற்றரசர்     மாற்றுத்தாய்     மாலாய்ப்     மாலிருஞ்சோலை     மாலுக்கு     மாலும்     மாலே     மாலை     மாலைப்     மாலையும்     மால்     மால்பால்     மாவலி     மாவினை     மிக்க     மிக்கானை     மிடறு     மிடையா     மின்     மின்னி     மின்னிடைச்     மின்னின்     மின்னு     மின்னுக்     மின்னும்     மின்னொத்த     மீது     மீனோடு     மீன்     முகில்வண்ணன்     முடி     முடிசேர்     முடிச்     முடிந்த     முடியாதது     முடியானே     முடிவு     முட்டு     முதலைத்     முதல்     முதுகு     முத்திறத்து     முத்தும்     முந்து     முந்துற     முந்தை     முந்நீரை     முந்நீர்     முனி     முனிந்து     முனியார்     முனியே     முனிவன்     முனை     முனைத்த     முனைமுகத்து     முன்     முன்னம்     முன்னம்நான்     முன்னிருந்து     முன்னிவ்     முன்னை     முப்பத்து     முப்போதும்     முயன்று     முயற்றி     முரணை     முரியும்     முருக்கு     முற்ற     முற்றத்து     முற்றிலும்     முற்று     முலை     முலைத்     முலையோ     முல்லைப்     முளிந்தீந்த     முளைக்     முள்     முழு     முழுசி     முழுது     முழுதும்     மூத்தவற்கு     மூத்தவை     மூன்று     மூள     மூவரில்     மூவர்     மூவுலகங்களும்     மெச்சு     மென்னடை     மென்ற     மெய்     மெய்ந்     மெய்ந்நின்று     மெய்யன்     மெய்யர்க்கே     மெலியும்     மெல்     மெல்லியல்     மேகங்களோ     மேகலையால்     மேட்டு     மேம்     மேயான்     மேய்     மேலாத்     மேலும்     மேல்     மேல்-தோன்றிப்     மேவா     மேவி     மேவித்     மேவு     மை     மைஆர்     மைத்     மைத்த     மைத்தடங்     மைத்துனன்மார்     மைந்     மைந்நம்பு     மைப்     மைய     மையல்     மொய்த்த     மொய்த்துக்     மொய்ம்     மொழியைக்     மோடியோடு     மோர்     மௌவல்    
Number of search results : 453
Pages:    1    2  3  4  5  Next
1594.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 1

மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர்போலும்-
வேலைக் கடல்போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே
1620.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண
      முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்
      பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்-
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம்
      -அவை முரல செங் கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
1634.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிறுபுலியூர்ச் சலசயனம்

முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார்-அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும் நீர்மை-அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே
1636.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சிறுபுலியூர்ச் சலசயனம்

மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐ வாய் அரவு-அணைமேல் உறை அமலா அருளாயே
1640.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்
      மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை
      மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலை பகலை இற்றை நாளினை
      நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலை கரும்பினிடைத் தேறலை-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1658.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக்
      கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
      கலியன் சொன்ன
பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்
      ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
      புகழ் தக்கோரே
1667.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?
1674.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே
1684.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 4

மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ
1690.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்
      வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்
      தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது
      ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன
      செய்வது ஒன்று அறியேனே
1694.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

முரியும் வெண் திரை முது கயம் தீப்பட
      முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்
      வந்திலன் என் செய்கேன்?
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன்
      இணை நெடுங் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன
      கழியும் ஆறு அறியேனே
1696.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 5

முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்
      முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய
      மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை
      அடங்க அம் சிறை கோலித்
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்
      கொடு வினை அறியேனே
1701.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 6

மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
1705.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 6

மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும்
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே
1713.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 7

மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர்-திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம்-அடிகள்-தம் இடமே
1717.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 7

மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே
1719.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை-
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே
1727.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய்
தான் ஆய் பின்னும் இராமன் ஆய் தாமோதரன் ஆய் கற்கியும்
ஆனான்-தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த
தேன் ஆர் இன் சொல் தமிழ்-மாலை செப்ப பாவம் நில்லாவே
1731.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த
அக்காரக் கனியை-அடைந்து உய்ந்துபோனேனே
1740.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே
1745.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே
1752.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணங்குடி

மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
      மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
      பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
      அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து
      அலை புனல் இலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே
1753.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணங்குடி

மழுவினால் அவனி அரசை மூவெழுகால்
      மணி முடி பொடிபடுத்து உதிரக்
குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம்
      தவிர்ந்தவன்-குலை மலி கதலிக்
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்
      குளிர் தரு சூதம் மாதவியும்
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே
1765.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
      மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
      நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
      மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
      அச்சோ ஒருவர் அழகியவா
1779.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 2

முன்னம் குறள் உரு ஆய் மூவடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன்
பொன்னம் கழிக் கானல் புள் இனங்காள் புல்லாணி
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே
1809.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1812.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1815.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1817.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச்
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன்
கறை உலாம் வேல்வல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே
1818.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 1

முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
      கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
      ஆய எம் அடிகள்-தம் கோயில்-
சந்தொடு மணியும் அணி மயில் தழையும்
      தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே
1828.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்கொலோ?
1865.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பொங்கத்தம் பொங்கோ

மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா
      அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து
      தஞ்சமே சில தாபதர் என்று
புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த
      புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ  
1871.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
குழமணிதூரம்

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால்
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே
1874.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
குழமணிதூரம்

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே
1881.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு-ஒக்கும் முதல்வா மதக் களிறு அன்னாய்
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலைமேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்
1882.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய்
1908.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
      அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று
      இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்
      நங்கைகாள் நான் என் செய்கேன்?
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத்
      தயிர் கடைகின்றான் போலும்
1911.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற
      வளை வண்ண நல் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது
      அவன் இவை செய்தறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை
      போகின்றவா தவழ்ந்திட்டு
      இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை
      என் செய்கேன்? என் செய்கேனோ?
1913.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
      நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே
      அல்லில்-தான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி
      கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய்
      என் செய்கேன்? என் செய்கேனோ?
1928.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்-
எல்லே இது என்? இது என்? இது என்னோ?
1933.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு

மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி
      மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆ-நிரை காத்த
      ஆண்மை கொலோ? அறியேன் நான்-
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா
      நீ இவள்-தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
      முன் கை வளை கவர்ந்தாயே
1935.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு

மல்கிய தோளும் மான் உரி அதளும்
      உடையவர்-தமக்கும் ஓர் பாகம்
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த
      கரதலத்து அமைதியின் கருத்தோ?
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
      வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி என்-நம்பி இவளை நீ உங்கள்
      தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே?
1959.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள்புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
ஆலி வந்ததால்-அரிது காவலே
1964.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்
அல்லி மலர்த் தண் துழாய் நினைந்திருந்தேனையே
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே
1969.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்

மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ?
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே
1972.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப்
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ்
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்-
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே
1989.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்

முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண
      முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப
      எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
      இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ
      அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த
      அது நம்மை ஆளும் அரசே
1992.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!-
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே
2002.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி
      வானவரும் யாமும் எல்லாம்
நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
      நெடுங் காலம் கிடந்தது ஓரீர்
எந் நன்றி செய்தாரா ஏதிலோர்
      தெய்வத்தை ஏத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள்
      அண்டனைய ஏத்தீர்களே
2008.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

மண் நாடும் விண் நாடும் வானவரும்
      தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
      தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
      கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
      போது எல்லாம் இனிய ஆறே
2009.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம

மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து
      பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம்
      ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை
      நினையாதார் நீசர்-தாமே
2016.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்

மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே
2021.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்

மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக்
கைந் நின்ற ஆழியான் சூழும் கழல் சூடிக்
கைந் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை
ஐயொன்றும் ஐந்தும் இவை-பாடி ஆடுமினே
2022.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப

மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்-
ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ       
2037.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

மூவரில் முதல்வன் ஆய
      ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய
      குரு மணித் திரளை இன்பப்
பாவினை பச்சைத் தேனை
      பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர்
      என் சொல்லிப் புகழ்வர் தாமே?
2046.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 15   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

முன் பொலா இராவணன்-தன்
      முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
      அடி-இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு
      என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு
      ஆட்டுவன் அடியனேனே
2047.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 16   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

மாய மான் மாயச் செற்று
      மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
      தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
      என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
      சூட்டுவன் தொண்டனேனே
2052.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய்
      விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய்
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப்
      பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்
      புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை
      தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே
2065.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 14   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்
      வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
      மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே
2070.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 19   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன்
      மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்
      அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
      பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
      பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
      பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே?
2072.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 21   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ
      மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே
      இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
      கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ
      அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
2076.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 25   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்
      கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே
      தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
      என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
      பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே
      புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
2081.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 30   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
      விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த
      அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
      மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப்
      பழவினையை முதல் அரிய வல்லார் தாமே             
2089.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 8   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!-
போர் ஆழிக் கையால் பொருது?
2091.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 10   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவும் உண்டோ உன் வாய்?
2096.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 15   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது
2100.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 19   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று?
2108.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 27   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப்
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்-
கார்க் கோடு பற்றியான் கை
2117.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 36   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனது ஆகத்தானே இரணியனைப்
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ
மண் இரந்து கொண்ட வகை?
2124.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 43   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மன மாசு தீரும் அரு வினையும் சாரா
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தம் தொழாநிற்பார் தமர்
2130.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 49   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது
2198.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 17   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றைப்
பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு?
2209.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 28   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன்
2210.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 29   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய் நீ
2213.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 32   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து
2228.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 47   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மாலை அரி உருவன் பாதமலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து
2230.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 49   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என்நெஞ்சே அழை
2232.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 51   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை மதிக் கண்டாய்
பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீர் ஆழி வண்ணன் நிறம்
2271.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 90   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின்
2281.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 100   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு
2284.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 3   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து
2285.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 4   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி
2295.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 14   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து
2322.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 41   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ
2327.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 46   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான்
2334.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 53   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள்
2370.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 89   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு
2372.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 91   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன்
2373.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 92   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச்
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறைசெய்து என் நெஞ்சே நினை
2393.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 12   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய்
மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு  
2399.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 18   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாகக் கீறிய கோளரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தியிருப்பார் தவம்      
2407.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 26   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
கற்றைச் சடையான் கரி கண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா! யான் உன்னைக்
கண்டுகொளகிற்குமாறு      
2408.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 27   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி
தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை
யான் காண வல்லேற்கு இது?  
2412.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 31   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை    
2424.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 43   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும்
குடை ஏற தாம் குவித்துக் கொண்டு    
2430.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 49   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று    
2442.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 61   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத்
தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு    
2475.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 94   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று    
2487.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ இது அறிவு அரிதே
2509.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 32   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே?
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list