சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் க%%
கங்குலும்     கங்கை     கங்கையிற்     கச்சொடு     கஞ்சனும்     கஞ்சனைக்     கஞ்சன்     கஞ்சன்தன்னால்     கஞ்சைக்     கடம்     கடலிற்     கடலும்     கடலே     கடல்     கடி     கடி-மலர்க்     கடிது     கடியனாய்க்     கடியன்     கடிவார்     கடு     கடுங்     கடுவினை     கடை     கடைநின்றமரர்     கடைந்த     கட்கு     கட்டப்     கட்டு     கட்டுரைக்கில்     கண     கணம்     கண்     கண்களால்     கண்கள்     கண்ட     கண்டதுவே     கண்டவர்     கண்டவர்-தம்     கண்டாயே     கண்டார்     கண்டு     கண்டுகொண்டு     கண்டுகொண்டேன்     கண்டும்     கண்டே     கண்டேன்     கண்டோம்     கண்ண     கண்ணனை     கண்ணன்     கண்ணமங்கையுள்     கண்ணா     கண்ணாலம்     கண்ணி     கண்ணித்     கண்ணில்     கண்ணும்     கண்ணுள்     கண்ணுள்ளே     கண்ணே     கண்ணைக்     கதவி     கதவு     கதிக்குப்     கதியேல்     கதிரவன்     கதிர்     கதிர்-ஒளித்     கதைப்     கதையின்     கத்தக்     கந்த     கனங்குழையாள்     கனம்     கனி     கனை     கனைத்து     கன்நிறைந்து     கன்னற்     கன்னல்     கன்னவில்தோள்     கன்னி     கன்னி,தன்     கன்னியரோடு     கன்மம்     கன்றப்     கன்றினை     கன்று     கன்று-அதனால்     கன்றுகள்     கமலக்     கம்ப     கயம்     கயலோ     கர     கரண்டம்     கரிய     கரு     கருங்கண்     கருத்தில்     கருத்தே     கருந்     கருப்பு     கருப்பூரம்     கரும     கருமமும்     கருமலர்க்     கரும்பார்     கருளக்     கருளப்     கருள்     கருவிளை     கரை     கரையாய்     கறந்த     கறவா     கறவை     கறவைகள்     கறுத்திட்டு     கறுத்து     கறை     கற்கும்     கற்பகக்     கற்பார்     கற்றா     கற்றார்     கற்றினம்     கற்றிலேன்     கற்றுக்     கற்றுப்பிணை     கலக்க     கலக்கம்     கலக்கிய     கலங்க     கலந்தான்     கலந்து     கலி     கலியுகம்     கலை     கலைகளும்     கலையும்     கல்     கல்லா     கல்லாதவர்     கல்லால்     கல்லின்     கல்லும்     களங்கனி     களி     களிப்பும்     களிறு     களைவாய்     கள்     கள்ள     கள்ளக்     கள்ளச்     கள்ளத்தால்     கள்ளத்தேன்     கள்ளம்     கள்வனேன்     கள்வன்கொல்?     கள்வா     கழறேல்     கழல்     கழி     கழிமின்     கழிய     கவள     கவியினார்     கவ்வை     கவ்வைக்     கா     காக்கும்     காசின்     காசும்     காசை     காடுகள்     காட்கரை     காட்டி     காட்டித்     காட்டில்     காண     காணக்     காணப்புகில்     காணல்     காணிலும்     காணுமாறு     காண்     காண்கின்ற     காண்கின்றனகளும்     காண்கொடுப்பான்     காண்டாவனம்     காண்டும்கொலோ     காண்பது     காண்பார்     காண்மின்கள்     காதம்     காதல்     காதில்     காத்த     கான     கானிடை     கான்     காப்பார்     காப்பு     காமன்     காமன்-தனக்கு     காமர்     காமற்கு     காமுற்ற     காய     காயும்     காயோடு     காய்     காய்த்த     காய்ந்து     காரார்     காரிகையார்     காரிகையார்க்கும்     காரியம்     காரும்     காரொடு     கார்     கார்-இனம்     கார்க்கோடற்     கார்த்     கார்த்திகையானும்     காறை     காற்றிடைப்     காற்றினை     கால     காலநேமி     காலம்     காலம்பெற     காலும்     காலே     காலை     காலைக்     காலையும்     காளியன்     காவலன்     காவலிற்     காவி     காவிப்     காவியும்     காவியை     கிடக்கில்     கிடந்த     கிடந்தானை     கிடந்து     கிண்கிணி     கிறி     கிற்பன்     கிளர்     கிழக்கிற்     கீசு     கீழ்     கீழ்மையினால்     கீழ்வானம்     குங்குமம்     குடங்கள்     குடதிசை     குடி     குடிக்கிடந்து     குடியிற்     குடைத்     குடைந்து     குடையா     குடையும்     குணம்     குண்டலம்     குண்டு     குத்து     குந்தமோடு     குன்றமும்     குன்றம்     குன்றால்     குன்றினால்     குன்றில்     குன்று     குமரி     குமுறும்     கும்பம்     கும்மாயத்தொடு     குயில்     குரக்கினப்     குரக்கு     குரங்குகள்     குரவை     குருந்தம்     குரை     குறள்     குறிக்கொள்     குறிப்பில்     குறிப்பு     குறுக     குறுகா     குறுகாத     குறைகொண்டு     குறையாக     குறைவு     குற்றம்     குலங்களாய     குலத்     குலம்     குலம்-தான்     குலை     குளித்து     குழகனே     குழகி     குழல்     குழாம்     குழையும்     கூக்குரல்     கூசம்     கூடச்     கூடா     கூடாரை     கூடி     கூடிக்     கூடிற்றாகில்     கூடும்     கூட்டில்     கூட்டுண்டு     கூட்டுதி     கூட்டும்     கூத்த     கூத்தன்     கூத்தர்     கூந்தலார்     கூந்தல்     கூன்     கூறு     கூறுதல்     கூறும்     கூற்றமும்     கூற்று     கூவாய்     கூவிக்     கூவுதல்     கூவும்     கெடும்     கெண்டை     கெண்டையும்     கேசவனே     கேசவன்     கேடு     கேட்க     கேட்டு     கேட்டும்     கேட்பார்கள்     கேயத்     கேவலம்     கை     கைகளால்     கைதவம்     கைத்தனன்     கைத்தலத்து     கைந்நாகத்து     கைப்     கைம்     கைய     கையின்     கையில்     கையும்     கையுள்     கொங்கு     கொங்கும்     கொங்கை     கொங்கைச்     கொடி     கொடிய     கொடியார்     கொடு     கொடுங்     கொட்டாய்     கொண்ட     கொண்டது     கொண்டல்     கொண்டல்வண்ணனைக்     கொண்டல்வண்ணா     கொண்டாட்டும்     கொண்டானை     கொண்டான்     கொண்டு     கொண்டை     கொந்து     கொன்னவிலும்     கொன்னா     கொன்று     கொன்றேன்     கொம்பின்     கொம்பு     கொம்பும்     கொம்மை     கொற்றப்     கொலை     கொலைப்     கொலையானைக்     கொல்     கொல்லா     கொல்லை     கொள்     கொள்கின்ற     கொள்கை     கொள்மின்     கொள்ள     கொள்ளக்     கொள்ளும்     கொள்வன்     கொழுங்     கொழுங்கொடி     கொழுந்து     கொழுந்துவிட்டு     கொழுப்பு     கோ     கோக்     கோங்கு     கோட்டுமண்     கோது     கோதை     கோமள     கோயில்     கோல     கோலப்     கோலமே     கோலம்     கோலால்     கோல்     கோளரியின்     கோள்     கோழி     கோழியும்     கோவலனாய்     கோவிந்தன்     கோவை    
Number of search results : 611
Pages:    1    2  3  4  5  6  7  Next
2570.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 93   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப் படியே
2580.0   திருவாசிரியம் -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாசிரியம்  
திருவாசிரியம்

குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய
தனி மாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம்
ஆளாகவே
இசையுங்கொல் ஊழிதோறு ஊழி ஓவாதே?   
2604.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 20   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று
2606.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 22   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து
2633.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 49   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள்
கார் உருவம் காண்தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேர் உரு என்று எம்மைப் பிரிந்து
2649.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 65   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு   
2652.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 68   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும்
புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்து அகம்   
2670.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 86   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது?     
2673.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்

2682.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   

2683.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   

2705.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்

2708.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்

2737.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,
கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்

2739.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்
கன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள்
கன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்

2755.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தெளப் பொதவணைந்து,
தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்

2768.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, - தாமரைமேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை

2779.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,
தன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்

2785.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்

2792.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 8   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே
2804.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னைச் சோர்விலனே
2812.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என் தன் சேம வைப்பே   
2815.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே   
2817.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கொள்ளக் குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே   
2819.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கூட்டும் விதி என்று கூடுங்கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசுந்தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே?   
2836.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 8   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே   
2845.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே   
2846.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 7   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கோக் குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே   
2849.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 10   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே   
2851.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 1   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே   
2862.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 12   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கைத்தனன் தீய சமயக் கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே     
2868.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 5   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே   
2874.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே
2878.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 4   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம்
புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே   
2883.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டிக் களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே?     
2894.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழுங் கொண்டலே   
2909.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்ம உபதேசம்

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே   
2958.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே   
2961.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனை தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே     
2963.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதனைக்கு எளியவன்

கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக்கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே     
2975.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆராதிப்பார்க்கு மிக இனியன்

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே     
2978.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே   
2981.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே     
2982.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே     
2995.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
      காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
      ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
      கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
      ஆக்கி என் நெற்றி உளானே   
2999.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே?   
3002.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே   
3010.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்
தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?   
3011.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே   
3012.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே?     
3027.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே
திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?     
3028.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே       
3029.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று br> வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே     
3038.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக்கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே
3039.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே
3040.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே?
3041.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன்கூடிநின்று ஆடுமினே
3063.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே
3074.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
      கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
      எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
      பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே
3075.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே
3078.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே
3094.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே?
3095.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே
3098.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே
3110.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே
3113.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே அடைவது திறமே
3115.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே
3122.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ
3134.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே
3137.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?
3140.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெ

கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே?
3150.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
3155.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

கூவும் ஆறு அறியமாட்டேன்
      குன்றங்கள் அனைத்தும் என்கோ?
மேவு சீர் மாரி என்கோ?
      விளங்கு தாரகைகள் என்கோ?
நா இயல் கலைகள் என்கோ?
      ஞான நல் ஆவி என்கோ?
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
      பங்கயக் கண்ணனையே
3162.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

கண்ணனை மாயன் தன்னை
      கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
      அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
      ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
      யாவையும் எவரும் தானே
3164.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

கூடி வண்டு அறையும் தண் தார்க்
      கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
      வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
      இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி
      விரும்புவர் அமரர் மொய்த்தே
3174.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை

கருமமும் கரும பலனும்
      ஆகிய காரணன் தன்னை
திரு மணி வண்ணனை செங்கண்
      மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
      உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
      பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே
3185.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
      கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக்கிடந்த
      பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
      அட வரும் படை மங்க ஐவர்கட்கு
      ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல்
      காண்பது என்றுகொல் கண்களே
3186.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

கண்கள் காண்டற்கு அரியன்
      ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
      அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
      குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
      பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே             
3195.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே
3201.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே
3202.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே
3205.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
3206.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?
3213.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்

கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ளக் குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ
3221.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை

குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன்
      கோலச் செந்தாமரைக்கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி
      வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்
      காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
      யான் ஒரு முட்டு இலனே
3230.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை
      குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும்
      பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
      நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும்
      தரும் ஒரு நாயகமே
3238.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமினோ
3240.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடு அஃதே
3245.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே
3249.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?
3253.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
      எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்
      குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்
      போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப்
      பூசும் சாந்து என் நெஞ்சமே
3257.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கண்ணி எனது உயிர் காதல்
      கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
      ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
      நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
      கால சக்கரத்தானுக்கே
3258.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கால சக்கரத்தொடு வெண்
      சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
      நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
      ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
      கமலம் அன்ன குரைகழலே
3259.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

குரை கழல்கள் நீட்டி மண்
      கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள்
      கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு
      ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திரு உருவம்
      என்னது ஆவி மேலதே
3268.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்

கோமள வான் கன்றைப் புல்கி
      கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
      அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
      அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
      மால் செய்து செய்கின்ற கூத்தே
3269.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்

கூத்தர் குடம் எடுத்து ஆடில்
      கோவிந்தன் ஆம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில்
      மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
      அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு
      என் பெண்கொடி ஏறிய பித்தே
3280.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்

கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே
3294.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
வெறி விலக்கு

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே
3298.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே
3300.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே?
Pages:    1    2  3  4  5  6  7  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list