சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் அடி%
அடி     அடிகள்     அடிக்கீழ்     அடிச்     அடிச்சியோம்     அடித்தலமும்     அடிமையிற்     அடியான்     அடியால்     அடியும்     அடியேன்     அடியை     அடியைத்     அடியோமோடும்    
Number of search results : 21
2.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
      ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
      மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
      ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
      சன்னியமும் பல்லாண்டே
910.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 39   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

அடிமையிற் குடிமை இல்லா
      அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
      மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
      அரங்க மா நகருளானே
1653.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே
      என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா
      என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்?
      என்கின்றாளால்-
கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?
2098.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 17   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று
2186.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 5   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து?
2273.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 92   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடிமேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது
2286.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 5   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு
2414.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 33   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள
வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு    
2611.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 27   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று
2841.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 2   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப்
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே     
2949.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
மாறனை மால் சீலகுணத்தால் சேர்த்தல்

அடியேன் சிறிய ஞானத்தன்
      அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
      புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
      சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
      இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?   
3196.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும
்படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
3197.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே
3233.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
3448.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும்
      மண்ணும் விண்ணும்
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
      நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல்வினையேன் உன்னை என்றுகொல் கூடுவதே?
3459.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே
3556.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

அடியேன் மேவி அமர்கின்ற
      அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
      கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
      திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
      காண நோலாது ஆற்றேனே
3560.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திர

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
      வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
      பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
      திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
      பெரிய வானுள் நிலாவுவரே.
3749.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
      அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
      படியன் அல்லன் பரம்பரன்
கடிசேர் நாற்றத்துள் ஆலை
      இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
      உணர்வில் உம்பர் ஒருவனே
3823.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 47   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே
3918.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போ

அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்
      ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்
      பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
      மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
      வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே  
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list