சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் அன்ன%
அன்ன     அன்னதோர்     அன்னமும்     அன்னம்     அன்னவனை     அன்னே     அன்னை     அன்னைமீர்     அன்னையும்    
Number of search results : 19
74.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்
      ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு
      ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில்
      எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே
1117.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
      ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும்
      இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
      மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்று அறுப்பாரே
1214.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ?
1618.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
      ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
      தூய மாலை இவை-பத்தும் வல்லார்
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
      மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே
1767.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

அன்னமும் கேழலும் மீனும் ஆய
      ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
      காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
      வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே
1921.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 14   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து
      அஞ்ச அரு வரைபோல்
மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய
      மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன்
      காமரு சீர்க் கலிகன்றி
இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு
      ஏதும் இடர் இல்லையே   
1966.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்

அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்-
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூங் குழல்-
பின்னை மணாளர்திறத்தம் ஆயின பின்னையே
1974.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே-இவர் எண்ணும் எண்ணம்? அறியோமே
2507.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 30   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் செல்லீரோ? இதுவோ தகவு? என்று இசைமின்களே
2721.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும்
தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க

2731.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்

2733.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்
மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு

2752.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த

2775.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, - வெகாவில்

2777.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல்
மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்

2782.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை

3368.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே
3501.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்
      இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
      தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
      வண்ணன் மாயம் கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள்
      வாயனகள் திருந்தவே
3760.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத

அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? அணி
      மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும்
      பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான்
      உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர்
      புகழும் இவளே
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list