சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் கண்%
கண்     கண்களால்     கண்கள்     கண்ட     கண்டதுவே     கண்டவர்     கண்டவர்-தம்     கண்டாயே     கண்டார்     கண்டு     கண்டுகொண்டு     கண்டுகொண்டேன்     கண்டும்     கண்டே     கண்டேன்     கண்டோம்     கண்ண     கண்ணனை     கண்ணன்     கண்ணமங்கையுள்     கண்ணா     கண்ணாலம்     கண்ணி     கண்ணித்     கண்ணில்     கண்ணும்     கண்ணுள்     கண்ணுள்ளே     கண்ணே     கண்ணைக்    
Number of search results : 53
105.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ
      மார்வில் மறுவனே அச்சோ அச்சோ
149.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
      கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
      பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும்
      நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
      பற்பநாபா இங்கே வாராய்
171.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே
195.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காப்பிடல்

கண்ணில் மணல்கொடு தூவிக்
      காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு
      -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய்
      கண்டாரொடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்
      வள்ளலே காப்பிட வாராய்
438.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

கண்ணா நான்முகனைப் படைத்தானே
      காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
      ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
      வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
      அன்று எனக்கு அவை பட்டினி நாளே
615.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே
627.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

கண்ணன் என்னும் கருந்தெய்வம்
      காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
      புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
      பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
      வாட்டம் தணிய வீசீரே
689.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ
கொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனே
937.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 1   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே
943.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 7   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே
1037.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே
1038.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே
1242.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக்
      களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
      அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
      அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே     
1308.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே
1326.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

கண்ணன் என்றும் வானவர்கள்
      காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
      ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
1478.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:1

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
1578.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

கண் சோர வெம் குருதி வந்து இழிய
      வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்
      வானவர்-தம் கோவே என்று
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு
      மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்
      காண்மின்-என் தலைமேலாரே
1648.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 1

கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று
      காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை
      வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்
      மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில்
      கற்கலாம் கவியின் பொருள்-தானே
1663.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே
1736.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை-
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
1747.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 10

கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே
1978.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி இரங்கிக் கூறல்

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்?
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே?
2000.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய்
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே
2248.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 67   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி
2290.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 9   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு
2459.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 78   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல்
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து?    
2520.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 43   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?
2845.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே   
2874.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே
2978.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்

கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே   
2999.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே?   
3002.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்

கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே   
3074.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
      கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
      எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
      பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே
3098.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே
3162.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்மாக்கள் அனைத்தும் அவனே

கண்ணனை மாயன் தன்னை
      கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
      அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
      ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
      யாவையும் எவரும் தானே
3186.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்

கண்கள் காண்டற்கு அரியன்
      ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
      அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
      குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
      பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே             
3202.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே
3257.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கண்ணி எனது உயிர் காதல்
      கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
      ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
      நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
      கால சக்கரத்தானுக்கே
3304.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே
3328.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே
3345.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே
3353.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்

கண்டோம் கண்டோம் கண்டோம்
      கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
      தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
      மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
      பரந்து திரிகின்றனவே
3474.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே
3590.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி
      கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக்
      கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
      நீள் விசும்பும் கழியப் பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
      தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே
3611.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத

கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே?
3748.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வா

கண்கள் சிவந்து பெரியவாய்
      வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு
      விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
      நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கு கதை வாள் ஆழியான்
      ஒருவன் அடியேன் உள்ளானே.
3790.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 14   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையி

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே
3815.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 39   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாதொழியேன் என்று நான் அழைப்பனே
3822.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 46   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய

கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே
3863.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 87   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே?
3932.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்

கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே  
3935.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்

கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே  
3975.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே  
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list