சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் கா%
கா     காக்கும்     காசின்     காசும்     காசை     காடுகள்     காட்கரை     காட்டி     காட்டித்     காட்டில்     காண     காணக்     காணப்புகில்     காணல்     காணிலும்     காணுமாறு     காண்     காண்கின்ற     காண்கின்றனகளும்     காண்கொடுப்பான்     காண்டாவனம்     காண்டும்கொலோ     காண்பது     காண்பார்     காண்மின்கள்     காதம்     காதல்     காதில்     காத்த     கான     கானிடை     கான்     காப்பார்     காப்பு     காமன்     காமன்-தனக்கு     காமர்     காமற்கு     காமுற்ற     காய     காயும்     காயோடு     காய்     காய்த்த     காய்ந்து     காரார்     காரிகையார்     காரிகையார்க்கும்     காரியம்     காரும்     காரொடு     கார்     கார்-இனம்     கார்க்கோடற்     கார்த்     கார்த்திகையானும்     காறை     காற்றிடைப்     காற்றினை     கால     காலநேமி     காலம்     காலம்பெற     காலும்     காலே     காலை     காலைக்     காலையும்     காளியன்     காவலன்     காவலிற்     காவி     காவிப்     காவியும்     காவியை    
Number of search results : 105
Pages:    1    2  Next
50.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
      குடந்தைக் கிடந்தானே தாலேலோ
69.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா
      கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா
      துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
      அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
120.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்
தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
148.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
      காதுகள் வீங்கி எரியில்?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
      விட்டிட்டேன் குற்றமே அன்றே?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
      பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
      இருடிகேசா என்தன் கண்ணே <>
161.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே
233.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
      கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்
      அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
      பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்
      இருடிகேசன் அடியாரே             
246.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
      மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
      தூளி காண் உன் உடம்பு
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா
      நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
      உன்னோடு உடனே உண்பான்
293.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
      கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
      தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே
313.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
      தூ மணிவண்ணனைப் பாடிப் பற
316.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
      அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
369.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

காசின் வாய்க் கரம் விற்கிலும் கர
      வாது மாற்று இலி சோறு இட்டுத்
தேச வார்த்தை படைக்கும் வண்கையி
      னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க்
கேசவா புருடோத்தமா கிளர்
      சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எம்தம்மை
      விற்கவும் பெறுவார்களே
381.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
442.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

காமர் தாதை கருதலர் சிங்கம்
      காண இனிய கருங்குழற் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன்
      மாதவன் மதுசூதனன் தன்னைச்
சேம நன்கு அமரும் புதுவையர் கோன்
      விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
      நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
456.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர்
      நிழல் இல்லை நீர் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
      நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர்
      பொய்ச்சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
457.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல்
      சோர்ந்து நடுங்கிக் குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என
      தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை
      வாழத் தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
510.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
      கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
      மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
      திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும்
      தரணியில்-தலைப்புகழ் தரக்கிற்றியே
528.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

காலைக் கதுவிடுகின்ற
      கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்கள்
      ஓட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும்
      கொண்டு நீ ஏறியிராதே
கோலம் கரிய பிரானே
      குருந்திடைக் கூறை பணியாய்
535.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே
584.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

கார் காலத்து எழுகின்ற
      கார்முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப்
      பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்
      பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம்
      வாசகம் தந்தருளாரே             
594.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

காலை எழுந்திருந்து
      கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
      மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
      துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
      அவன் வார்த்தை உரைக்கின்றதே
597.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்?
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த்
தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ
622.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

கார்த் தண் முகிலும் கருவிளையும்
      காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு
      இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து
      வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்
      பத்தவிலோசனத்து உய்த்திடுமின்
640.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

கார்த் தண் கமலக் கண் என்னும்
      நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
      ஈசன்தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
      புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே
664.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

கார்-இனம் புரை மேனி நற் கதிர்
      முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆர-மார்வன் அரங்கன் என்னும்
      அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து
      கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு
      வாரம் ஆகும் என் நெஞ்சமே
782.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 31   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

காலநேமி காலனே கணக்கு இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே
788.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 37   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத் தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா
798.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 47   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீர் இடத்து அராவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு-இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே
820.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 69   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதிபாற்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே
850.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 99   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

காட்டி நான் செய் வல்வினைப் பயன்தனால் மனந்தனை
நாட்டி வைத்து நல்ல-அல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
858.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 107   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
மாசினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன்
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே
872.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 1   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

காவலிற் புலனை வைத்து
      கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம்
      நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த
      முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
      அரங்க மா நகருளானே
964.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பிரிதி

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய
      கறி வளர் கொடி துன்னிப்
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய
      பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர்
      எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே
979.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

கானிடை உருவை சுடு சரம் துரந்து
      கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப
      உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்-
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்
      சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
1058.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1079.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
      அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும்
      அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம்
      உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1129.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
      சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
      தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
      செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1159.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

காயோடு நீடு கனி உண்டு வீசு
      கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
      -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்
      மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1216.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:3

காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து   
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?
1257.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை

கார் ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல்
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
1311.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த்
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே
1343.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவெள்ளியங்குடி

காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
      உற கடல் அரக்கர்-தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
      கோல வில் இராமன்-தன் கோயில்-
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்
      ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்-
      திருவெள்ளியங்குடி-அதுவே
1367.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கூடலூர்

காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர்மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாட பாவம் போமே             
1453.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             
1455.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             
1543.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:7

கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்-
நானும் சொன்னேன் நமரும் உரைமின்-நமோ நாராயணமே
1668.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 3

கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப்
பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல்
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே
1778.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 2

கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே?
1790.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்குறுங்குடி: 1

காலையும் மாலை ஒத்துண்டு கங்குல்
      நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்
      பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம்
      மற்றும் உள அவை வந்திடாமுன்
கோல மயில் பயிலும் புறவின்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
1843.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோட்டியூர்

காவலன் இலங்கைக்கு இறை கலங்க
      சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்-
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால்
      உறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே
1897.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
சப்பாணி கொட்ட வேண்டுதல்

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி
      தட மார்வா கொட்டாய் சப்பாணி
1909.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்

காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
      போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
      மற்று வந்தாரும் இல்லை
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள்
      வெண்ணெயே அன்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன்
      என் செய்கேன்? என் செய்கேனோ?
1922.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்

காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து
போது மறுத்து புறமே வந்து நின்றீர்-
ஏதுக்கு? இது என்? இது என்? இது என்னோ?
1948.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத

காமற்கு என் கடவேன்?
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்ய-
காமற்கு என் கடவேன்?
1953.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்

காரும் வார் பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ-
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை-தான் ஈரும் என்னையே?
1968.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்

காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தானும் மகன் சொல்லில்
யாமங்கள் தோறு எரி வீசும் என் இளங் கொங்கைகள்
மா மணி வண்ணர்திறத்தவாய் வளர்கின்றவே
1970.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்

காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணல் ஆம்கொலோ?
2033.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

காற்றினை புனலை தீயை
      கடிமதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய
      எழில் மணித் திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை
      அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம்
      கூறு-நீ கூறுமாறே
2045.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 14   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

காவியை வென்ற கண்ணார்
      கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி
      அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும்
      சூழ் புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது
      பாவியேன் ஆயினேனே
2069.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 18   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
      கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
      பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
      எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
      இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே
2147.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 66   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர்
2156.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 75   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி
2237.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 56   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால்
நாணப்படும் என்றால் நாணுமே? பேணி
கரு மாலைப் பொன் மேனி காட்டாமுன் காட்டும்
திருமாலை நங்கள் திரு
2316.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 35   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண்
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை
2347.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 66   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மது கைடபரும் வயிறு உருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு
2422.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 41   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று     
2474.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 93   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்  
2485.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே
2496.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 19   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ
சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே
2544.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 67   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரைச் செற்றமா வியம் புள் வல்ல மாதவன்
கோவிந்தன் வேங்கடம் சேர்தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணைமலரே
2546.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 69   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான்
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம்
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?
வார் ஏற்று இளமுலையாய் வருந்தேல் உன் வளைத்திறமே
2570.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 93   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப் படியே
2604.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 20   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று
2606.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 22   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து
2670.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 86   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது?     
2673.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்

2682.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   

2683.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   

2705.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்

2708.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்

2812.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 6   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என் தன் சேம வைப்பே   
2815.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே   
3011.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே   
3028.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே       
3095.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை

காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே
3258.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கால சக்கரத்தொடு வெண்
      சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
      நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
      ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
      கமலம் அன்ன குரைகழலே
3300.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல

காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே?
3326.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக்
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?
3351.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே
3380.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ?
3398.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
      காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
      காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்
      காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
      காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?
3434.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் த

காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே?
3452.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே
3483.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே
3525.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே
3588.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

காலம்பெற என்னைக் காட்டுமின்கள்
      காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம் பெருமான்
      நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த
      நான்மறையாளரும் வேள்வி ஓவா
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
      கூடு புனல் திருப்பேரெயிற்கே.
3618.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப

காத்த எம் கூத்தா ஓ! மலை ஏந்திக் கல் மாரி தன்னை
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆர் உயிர் நீ ஆனால்
ஏத்து அரும் கீர்த்தியினாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
3624.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுப

காண்டும்கொலோ நெஞ்சமே! கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரியேற்றினையே?
3633.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலைகொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே
3672.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும்

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
      கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
      பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா
      தொண்டனேன் கற்பகக் கனியே
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ்
      பெரு நிலம் எடுத்த பேராளா
3684.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனை நோக்கிச் செல்லக் கருதிய தலைவி கூற்று

காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
      நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
      நல் நுதலீர் இனி நாணித் தான் என்
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த
      நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளையொடும் மாமை கொள்வான்
      எத்தனை காலமும் கூடச் சென்றே?
Pages:    1    2  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list