சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் கோ%
கோ     கோக்     கோங்கு     கோட்டுமண்     கோது     கோதை     கோமள     கோயில்     கோல     கோலப்     கோலமே     கோலம்     கோலால்     கோல்     கோளரியின்     கோள்     கோழி     கோழியும்     கோவலனாய்     கோவிந்தன்     கோவை    
Number of search results : 30
65.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்
      குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி
      மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்
      கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
357.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே
524.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

கோழி அழைப்பதன் முன்னம்
      குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்
      அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம்
      இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
      துகிலைப் பணித்தருளாயே
595.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

கோங்கு அலரும் பொழில்
      மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
      உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
      மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
      தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?
599.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
காதல்-நோய் செய்த பரிசு

கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர்தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பு-அணையார்க்கும் தம் பாம்புபோல்
நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே
654.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
      கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
      கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
      வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே
1162.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய
      குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்
      தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்
பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி
      புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1314.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்

கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச்   
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல் வினை தீர்த்தருளாயே
1600.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
ஆஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதிதேவனை-யான் கண்டுகொண்டு திளைத்தேனே
1617.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி
      கூறை சோறு இவை தா என்று குமைத்து
போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன்
      புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாகணையில் துயில்வானே
      திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1762.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாகை: அச்சோப்பதிகம்

கோழியும் கூடலும் கோயில் கொண்ட
      கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
      வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
      மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-
      அச்சோ ஒருவர் அழகியவா
1846.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோட்டியூர்

கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார்
      தட மா மலர்மிசை
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி
      ஆறு அங்கம் வல்லவர் தொழும்
தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே
1947.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத

கோழி கூ என்னுமால்
தோழி நான் என் செய்கேன்?
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று-
கோழி கூ என்னுமால்
1998.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாழல்

கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ!-
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே
2250.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 69   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

கோ ஆகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங் கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர்
2323.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 42   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
தெரி உகிரால் கீண்டான் சினம்
2517.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 40   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்றுகொலோ?
2846.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 7   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கோக் குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே   
3010.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்
தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே?   
3078.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பன்னிரு நாமப் பாட்டு

கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே
3205.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?
3245.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இர

கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே
3253.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்

கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
      எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்
      குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்
      போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப்
      பூசும் சாந்து என் நெஞ்சமே
3268.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்

கோமள வான் கன்றைப் புல்கி
      கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
      அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
      அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
      மால் செய்து செய்கின்ற கூத்தே
3405.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின்

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
      கோலம் இல் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
      கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்
      கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
      கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே?
3634.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலை

கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோள் இழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே?
3730.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால்

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்;
கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே
3843.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 67   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது? என் ஆர் உயிர் பட்டதே
3864.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 88   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான தி

கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய்
தேவாசுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே
3996.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல்

கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனிப் போக்குவனோ? 
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list