சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் திரு%
திரு     திருக்     திருக்கடித்தானமும்     திருச்செங்குன்றூரில்     திருத்தனை     திருத்தாய்     திருந்தக்     திருந்து     திருப்பேர்     திருமகளும்     திருமங்கை     திருமறுமார்வ     திருமாலிருஞ்சோலை     திருமாலிருஞ்சோலையானே     திருமால்     திருமேனி     திருவடியை     திருவடிவில்     திருவில்     திருவுக்கும்    
Number of search results : 31
204.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
      தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
      உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
      செய்வதுதான் வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்
      வாழ ஒட்டான் மதுசூதனனே
854.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 103   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

திருக் கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
இருக் கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கருக் கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே
911.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 40   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

திருமறுமார்வ நின்னைச்
      சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
      மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
      ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
      அரங்க மா நகருளானே             
1238.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்
      தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
      அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்-
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
      தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1605.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா
உரு ஆய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அரு ஆய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கரு ஆர் கற்பகத்தை-கண்டுகொண்டு களித்தேனே
1609.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 3

திருவுக்கும் திரு ஆகிய செல்வா
      தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே
      உலகு உண்ட ஒருவா திரு மார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்
      உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
1645.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணமங்கை

திருத்தனை திசை நான்முகன் தந்தையை
      தேவ-தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை
      விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை அரியை பரி கீறிய
      அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற
கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே
1880.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்
1942.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள்-தன் கணவன்
மருத் தார் தொல் புகழ் மாதவனை வர-
திருத்தாய் செம்போத்தே
2054.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
      திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
      பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை
      ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது
      ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை-
      கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே?
2123.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 42   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல்
பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மால் ஓத வண்ணர் மனம்?
2238.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 57   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந் தடக்கை எந்தை பேர்
நால் திசையும் கேட்டீரே? நாம்
2282.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 1   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று
2443.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 62   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்த்
தார் தன்னைச் சூடித் தரித்து    
2565.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 88   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும்
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே?
3054.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்

திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே
3271.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும்

திரு உடை மன்னரைக் காணில்
      திருமாலைக் கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில்
      உலகு அளந்தான் என்று துள்ளும்
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
      கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்
      கண்ணன் கழல்கள் விரும்புமே
3329.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்க

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே
3447.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் எ

திரு உருவு கிடந்த ஆறும் கொப்பூழ்ச்
      செந்தாமரைமேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்
      என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே?
3458.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்
பெரும் தண் தாமரைக்கண் பெரு நீள் முடி நால் தடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே
3502.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)

திருந்து வேதமும் வேள்வியும்
      திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
      வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
      தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன
      என்று என்றே நைந்து இரங்குமே
3701.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அர

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக்
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே
3710.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திரு

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
      கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
      செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல உந்தியும் செய்ய
      கமலை மார்பும் செய்ய உடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
      திகழ என் சிந்தையுளானே
3727.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால்

திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே
3764.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத

திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர்
      நிறக் கண்ண பிரான்
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடை
      யாளம் திருந்த உள
திரு அருள் அருளால் அவன் சென்று
      சேர் தண் திருப்புலியூர்
திரு அருள் கமுகு ஒண் பழத்தது
      மெல்லியல் செவ்விதழே
3840.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 64   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (த

திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே
3850.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 74   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக

திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள்
திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே?
3962.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா

திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே  
3964.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே  
3968.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே  
3973.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே  
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list