சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் மின்%
மின்     மின்னி     மின்னிடைச்     மின்னின்     மின்னு     மின்னுக்     மின்னும்     மின்னொத்த    
Number of search results : 24
88.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
      சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னற் துலங்கும் அரசிலையும்
      பீதகச் சிற்றாடையொடும்
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
      கழுத்தினிற் காறையொடும்
தன்னிற் பொலிந்த இருடிகேசன்
      தளர்நடை நடவானோ
133.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

மின் அனைய நுண் இடையார்
      விரி குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்
      இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
      இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
      இருடிகேசா முலை உணாயே
179.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத்
தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
      வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
324.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்
580.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

மின் ஆகத்து எழுகின்ற
      மேகங்காள் வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை
      தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை
      விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என்
      புரிவுடைமை செப்புமினே
682.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தேன் ஆவேனே
702.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு
      வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்
      போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்
      கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?
      இன்னம் அங்கே நட நம்பி நீயே.
784.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 33   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்
நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே?
1057.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

மின்னு மா முகில் மேவு தண் திரு
      வேங்கட மலை கோயில் மேவிய
அன்னம் ஆய் நிகழ்ந்த அமரர் பெருமானைக்
கன்னி மா மதிள் மங்கையர் கலி
      கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே             
1149.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள்
      உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய
      பரன் இடம்-வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர
      பிணி அவிழ் கமலத்துத்
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு
      திருவயிந்திரபுரமே
1154.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவயிந்திரபுரம்

மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்
      விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது
      இடம்-மணி வரை நீழல்
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்
      பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு தண்
      திருவயிந்திரபுரமே
1191.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார்-தம்
      சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்-
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்
      வாய்-அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே
1232.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
      வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த
      தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
      செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
      வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1353.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புள்ளம்பூதங்குடி

மின்னின் அன்ன நுண் மருங்குல்
      வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழ விடைகள்
      ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்-
மன்னும் முது நீர் அரவிந்த
      மலர்மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்-
      புள்ளம்பூதங்குடி-தானே
1483.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:1

மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து
என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான்
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
1809.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
2052.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய்
      விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய்
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப்
      பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்
      புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை
      தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே
2076.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 25   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்
      கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே
      தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
      என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
      பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே
      புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
2081.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 30   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
      விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த
      அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
      மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப்
      பழவினையை முதல் அரிய வல்லார் தாமே             
2726.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,
அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்

2750.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்
2911.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலகிற்கு உபதேசம்

மின்னின் நிலை இல
மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை
உன்னுமின் நீரே
3461.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவ

மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே
3462.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உர

மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு
      நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி
      அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list