சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் உ%
உகக்கும்     உகந்து     உகந்தே     உகப்பு     உகவையால்     உங்கள்     உச்சியில்     உச்சியுள்ளே     உடன்     உடம்பினால்     உடம்பு     உடல்     உடுத்துக்     உடை     உடையானை     உடையார்     உணர     உணரில்     உணர்த்தல்     உணர்ந்த     உணர்ந்தாய்     உணர்ந்து     உணர்வார்     உணர்வில்     உண்டாய்     உண்டாய்-உறிமேல்     உண்டியே     உண்டு     உண்டும்     உண்ண     உண்ணாது     உண்ணும்     உண்பது     உதவிக்     உதிப்பன     உந்தம்     உந்தி     உந்திமேல்     உந்து     உனக்குப்     உன்னி     உன்னித்து     உன்னிய     உன்னுடைய     உன்னைச்     உன்னையும்     உன்னோடு     உமர்     உம்பரால்     உம்பரும்     உம்பர்     உம்பர்-உலகோடு     உயர்வு     உயிரினால்     உயிர்     உயிர்கள்     உயிர்க்கு     உய்த்து     உய்ந்து     உய்ம்மின்     உய்ய     உய்யும்     உய்வு     உரக     உரங்களால்     உரம்     உரு     உருகி     உருகுமால்     உருக்கு     உருத்து     உருப்பிணி     உருவின்     உருவு     உரை     உரைக்க     உரைக்கின்ற     உரைக்கில்     உரையா     உறகல்     உறங்குவான்     உறவு     உறி     உறிகள்     உறியை     உறு     உறுகின்ற     உறுமோ     உறும்     உறுவது     உற்ற     உற்றார்கள்     உற்று     உற்றேன்     உலகமும்     உலகம்     உலகில்     உலகு     உலகுதன்னை     உலகும்     உலவு     உலாகின்ற     உளது     உளனாகவே     உளனாய     உளன்     உளம்     உளரும்     உளைந்த     உளைந்திட்டு     உளைய     உள்     உள்ளத்தே     உள்ளன     உள்ளமோ     உள்ளம்     உள்ளிலும்     உள்ளே     உழந்தாள்     உழலை     உழுவது     உவந்த    
Number of search results : 146
Pages:    1    2  Next
9.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே
16.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே   
26.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே
45.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும்
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
      உலகம் அளந்தானே தாலேலோ
64.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
      ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே
      பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி
      செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
71.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி
      உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர
      கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ்
      சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
169.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்
சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்
      தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்
309.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
      தேவகி சிங்கத்தைப் பாடிப் பற
349.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-2

உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே
363.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

உரக மெல் அணையான் கையில் உறை
      சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம் பரந்து ஏறும் செங்
      கமல வயற் திருக்கோட்டியூர்
நரகநாசனை நாவிற் கொண்டு அழை
      யாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங் கூறையும்
      பாவம் செய்தன தாம் கொலோ
383.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்?
பிச்சை புக்கு ஆகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
395.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்
      ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய
      மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்
      பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே
419.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு
      உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத்
      தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல்
      உயர்ந்து காட்ட
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும்
      தண் அரங்கமே
448.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

உற்ற உறுபிணி நோய்காள்
      உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
      பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
      ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
451.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

உறகல் உறகல் உறகல்
      ஒண்சுடர் ஆழியே சங்கே
அற எறி நாந்தக வாளே
      அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த
      எண்மர் உலோகபாலீர்காள்
பறவை அரையா உறகல்
      பள்ளியறை குறிக்கொண்மின்
455.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடை
      யேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
      சாயை அழிவு கண்டாய்
புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன்
      பொன்னடி வாழ்க என்று
இனத்துக் குறவர் புதியது உண்ணும் எழில்
      மாலிருஞ் சோலை எந்தாய்
468.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

உன்னுடைய விக்கிரமம்
      ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால்
      சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கைக்
      கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான்
      இனி எங்குப் போகின்றதே?            
487.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 14   ஆண்டாள்   திருப்பாவை  

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
      செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்
      தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
      நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
      பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்
491.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 18   ஆண்டாள்   திருப்பாவை  

உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன்
      நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
      வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தர்மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்
  பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
      வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்
509.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

உருவு உடையார் இளையார்கள் நல்லார்
      ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள்
      திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்
      கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திரு உடை முகத்தினிற் திருக் கண்களால்
      திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய்
571.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன் ஆகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே
574.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே
613.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துப்
பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்
திண்ணார் மதில் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே
634.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

உள்ளே உருகி நைவேனை
      உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
      கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
      கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
      எறிந்து என் அழலைத் தீர்வேனே
671.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

உண்டியே உடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்
அண்டவாணன் அரங்கன் வன் பேய்-முலை
உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே
686.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள-வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே
763.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 12   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?
899.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 28   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

உம்பரால் அறியல் ஆகா
      ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும்
      முதலைமேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே?
      நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே
      என் செய்வான் தோன்றினேனே
905.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 34   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

உள்ளத்தே உறையும் மாலை
      உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
      தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
      உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
      விலவு அறச் சிரித்திட்டேனே             
928.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 2   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்
                    பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே
970.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி

உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்காமுன்
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே             
990.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

உலவு திரையும் குல வரையும்
      ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளும் ஆய்
      நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர்-தம் பெருமான்
      மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
1041.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக
கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே
1049.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன்
      உகந்தவர்-தம்மை மண்மிசைப்
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு
      குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவன் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
1090.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்
      உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து
      விளையாட வல்லானை வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்
      தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1114.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்
      உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்
வளங் கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
      மாயனே என்று வாய்வெருவும்
களங் கனி முறுவல் காரிகை பெரிது
      கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே
1130.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பரமேச்சுரவிண்ணகரம்

உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
      ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
      -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
      நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே
1143.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கோவலூர்

உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு
      உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று
      தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை-
வெறி ஆர்ந்த மலர்-மகள் நா-மங்கையோடு
      வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே
1194.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவாலி:1

உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து
      உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்-
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண்
      தாமரை மலரின்மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே
1240.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்

உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
      உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக்
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
      குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
      பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
      அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
1264.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர் வண்புருடோத்தமம்

உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது
      உரம் பிளந்து உதிரத்தை
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய
      அப்பன் வந்து உறை கோயில்-
இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு
      எழில் கொள் பந்து அடிப்போர் கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்-
      வண்புருடோத்தமமே     
1300.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்க் காவளம்பாடி

உருத்து எழு வாலி மார்வில்
      ஒரு கணை உருவ ஓட்டி   
கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
      கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும்
      பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்
கருத்தனே காவளம் தண்
      பாடியாய் களைகண் நீயே
1325.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
      ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும்
      நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே
1378.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 1

உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்-
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே             
1395.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 2

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது
      பலர் ஏசும் அலர் ஆயிற்றால
் மறவாதே எப்பொழுதும் மாயவனே
      மாதவனே என்கின்றாளால்-
பிறவாத பேராளன் பெண் ஆளன்
      மண் ஆளன் விண்ணோர்-தங்கள
்அறவாளன் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே
1439.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
      யாமை முன நாள்
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன்
      மேவும் நகர்-தான்-
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர்
      கிண்டி அதன்மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே
1440.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநந்திபுரவிண்ணகரம்

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
      யாமை முன நாள்
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட
      மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி
      கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே
1454.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிண்ணகர்:1

உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே
1491.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:2

உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறி ஆர் கூந்தல் பின்னை-பொருட்டு ஆன் வென்றான் ஊர்-
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடம் ஆட
நறு நாள்மலர்மேல் வண்டு இசை பாடும்-நறையூரே
1523.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:5

உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே
1571.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:10

உரங்களால் இயன்ற மன்னர் மாள
      பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
      எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி
      ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு
      அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே
1585.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சேறை

உண்ணாது வெம் கூற்றம் ஓவாத
      பாவங்கள் சேரா-மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
      மென் தளிர்போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ்
      தண் சேறை அம்மான்-தன்னை
கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத்
      தொழுவாரைக் கருதுங்காலே
1601.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 2

உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
உடையானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே
1662.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 2

உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ?
1721.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 8

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்துப்
பிளந்து வளைந்த உகிரானை-பெருந் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே
1769.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
முருகு வண்டு உன் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள்
பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே
1772.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்புல்லாணி: 1

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு-
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே
1813.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவல்லவாழ்

உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்று ஐவர்-தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே
1830.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருமாலிருஞ்சோலை: 2

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல்
கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர்-தம் கோவினை இன்று அணுகும்கொல்-என் ஆய்-இழையே?
1885.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள்-தம் ஆ-நிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய்
1900.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ

உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள்
      உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ
      அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று
      மலை போல் அவுணன் உடல் வள் உகிரால்
அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
      அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே
2025.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப

உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி-
இரு பாடு எரி கொள்ளியினுள்-எறும்பேபோல்-
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா
2040.0   திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   திருக்குறுந் தாண்டகம்  
திருக்குறுந் தாண்டகம்

உள்ளமோ ஒன்றில் நில்லாது
      ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
      குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
      தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
      எழுமையும் துணை இலோமே
2074.0   திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்   பாடல் # 23   திருமங்கை ஆழ்வார்   திரு நெடுந்தாண்டகம்  
திரு நெடுந்தாண்டகம்

உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
      ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்
      சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்
      கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்
      என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே
2106.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 25   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போலத் திரைமேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும்
2142.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 61   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு
2149.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 68   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்?
2180.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 99   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
2189.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 8   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று
2226.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 45   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று
2229.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 48   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை
2258.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 77   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்
2275.0   இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 94   பூதத்தாழ்வார்   இரண்டாம் திருவந்தாதி  
இரண்டாம் திருவந்தாதி

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு
2321.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 40   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்
2325.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 44   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி
2363.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 82   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி?
2365.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 84   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே
கண்டார்? உகப்பர் கவி
2375.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 94   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து
2410.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 29   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே
மகப்பு உருவன் தானே மதிக்கில் மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால்
அன்றிக்கொண்டு எய்தான் அவன்    
2467.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 86   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும்
என் ஒப்பார்க்கு ஈசன் இமை    
2469.0   நான்முகன் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 88   திருமழிசை ஆழ்வார்   நான்முகன் திருவந்தாதி  
இயற்பா

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது    
2543.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 66   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண் ஆய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே
2552.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 75   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறிப்
புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே?
2558.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 81   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார்கொல்? துழாய் குழல்வாய்த்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே
2579.0   திருவாசிரியம் -பாசுரம்   பாடல் # 2   நம்மாழ்வார்   திருவாசிரியம்  
திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு அவாவு
ஆர் உயிர் உருகி உக்க நேரிய
காதல் அன்பில் இன்பு ஈன் தேறல்
அமுத வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு
ஒரு பொருட்கு அசைவோர் அசைக
திருவொடு மருவிய
இயற்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?   
2613.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 29   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை? உணரத்
தனக்கு எளியர் எவ் அளவர் அவ் அளவன் ஆனால்
எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு
2660.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 76   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்கொல்?
உலகு அளந்த மூர்த்தி உரை     
2661.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 77   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே?
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி ஆகும் துணை     
2663.0   நம்மாழ்வார் -பாசுரம்   பாடல் # 79   இயற்பா   நம்மாழ்வார்  
பெரியதிருவந்தாதி

உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே?
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? மண் நாட்டில்
ஆர் ஆகி எவ் இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கைப்
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு     
2734.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்
துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,
தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய

2776.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

உன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,
என்னை மனங்கவர்ந்த ஈசனை, - வானவர்த்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை

2790.0   பெரிய திருமடல் -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமடல்  
இயற்பா

உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,
முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த,
மன்னியம்பூம் பெண்ணை மடல்.

2809.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 3   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே   
2840.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 1   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே     
2850.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குலக் கொழுந்தே   
2885.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 11   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும்
விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே     
2899.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்ம உபதேசம்

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே   
2907.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 11   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆத்ம உபதேசம்

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே     
2917.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 10   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உலகிற்கு உபதேசம்

உள்ளம் உரை செயல்
உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே   
2926.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியவர்க்கு எளியவன்

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
      வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
      உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
      அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
      மனப்பட்டது ஒன்றே   
Pages:    1    2  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%89