சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் ஊ%
ஊடல்     ஊடு     ஊணுடை     ஊதும்     ஊத்தைக்     ஊனக்     ஊனில்     ஊன்     ஊரவர்     ஊரான்     ஊரார்     ஊரும்     ஊர்     ஊர்ந்த     ஊழி     ஊழிகள்     ஊழிதோறு     ஊழியின்    
Number of search results : 32
389.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலின் நாமம் இடுதல்

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு
கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ
நாத் தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
544.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே             
677.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
845.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 94   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே
900.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 29   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

ஊர் இலேன் காணி இல்லை
      உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
      பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
      கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண்? அம்மா
      அரங்க மா நகருளானே
991.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

ஊரான் குடந்தை உத்தமன்
      ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
      செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
1006.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
நைமிசாரணியம்

ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
      உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்-
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன்
      சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே
      திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்
1111.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

ஊழியின் பெரிதால் நாழிகை என்னும்
      ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா
      தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும்
      சொல்லுமின் என் செய்கேன்? என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே
1158.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
தில்லைத் திருச்சித்திரகூடம் 1

ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு
      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-
      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே
      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்
தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்
      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
1415.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 8   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 4

ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் ஒருகால்
      உடைய தேர் ஒருவன் ஆய் உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை
      மலங்க அன்று அடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி
      பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்-
      அரங்க மா நகர் அமர்ந்தானே
1431.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர்-தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே             
1566.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநறையூர்:9

ஊன் நேர் ஆக்கை-தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யான் ஆய் என்-தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்தப் பெற்றேன்-நறையூர் நின்ற நம்பீயோ
1627.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவழுந்தூர்: 4

ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
      ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி
      நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்-
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி
      திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே
2119.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 38   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
எம் என்னும் மாலது இடம்
2172.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 91   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்?
2548.0   திருவிருத்தம் -பாசுரம்   பாடல் # 71   நம்மாழ்வார்   திருவிருத்தம்  
திருவிருத்தம்

ஊழிகள் ஆய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே
2581.0   திருவாசிரியம் -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாசிரியம்  
திருவாசிரியம்

ஊழிதோறு ஊழி ஓவாது வாழிய
என்று யாம் தொழ இசையுங்கொல் யாவகை
உலகமும் யாவரும் இல்லா மேல் வரும்
பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி
மூவுலகம் விளைத்த உந்தி
மாயக் கடவுள் மா முதல் அடியே?     
2702.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு

2704.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்

2712.0   சிறிய திருமடல் -பாசுரம்   பாடல் # 0   திருமங்கை ஆழ்வார்   சிறிய திருமடல்  
இயற்பா

ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல்
3013.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமைக்கு வருந்தல்

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே?
3031.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 3   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே   
3365.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 7   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே?
3366.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடல

ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே
3374.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்

ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே?
3518.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 6   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய்

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே?
3593.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 4   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி த

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
      செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
      அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
      இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அங்கையனை ஏத்த வல்லார்
      அவர் அடிமைத்திறத்து ஆழியாரே.
3598.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே
3762.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
      பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
      நாட்டுத் திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
      தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள்
      இன்று இப் புனை இழையே
3877.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 101   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக்

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
      அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத்
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி
      தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி
பேதுறு முகம்செய்து நொந்து நொந்து
      பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம
      மாலையும் வந்தது மாயன் வாரான்
3904.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொ

ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே  
3965.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 0   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வா

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும்
ஆழிவண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே  
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%8A