சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் த%
தகவிலை     தகவு     தகும்     தக்கன்     தக்கார்     தக்கிலமே     தங்கா     தங்கையை     தஞ்சம்     தட     தடத்து     தடம்     தடாவிய     தணியும்     தண்     தண்டகாரணியம்     தண்டொடு     தண்ணனவு     தத்துக்     தந்தம்     தந்தை     தந்தையும்     தனக்கு     தனம்     தனி     தனை     தன்     தன்நேர்     தன்னடியார்     தன்னாலே     தன்னிகரொன்     தன்னின்     தன்னுடைய     தன்னுளே     தன்னை     தன்முகத்துச்     தன்மை     தமக்கு     தமர்     தமர்கள்     தம்     தம்பரம்     தம்பியொடு     தம்மையே     தரங்க     தரித்திருந்தேன்     தரு     தருக்கினால்     தரும     தருமம்     தற்கச்     தற்பு     தலைக்     தலைபெய்து     தலைப்பெய்     தலைப்பெய்து     தலைமேல     தலைமேல்     தளர்ந்திட்டு     தளர்ந்தும்     தளர்வு     தளிர்     தளை     தளைக்     தள்ளித்     தழும்பு     தழுவிநின்ற     தழைகளும்     தவத்துளார்     தவம்     தவள     தா     தாங்காதது     தாங்கு     தாங்கு-அரும்     தாது     தான     தானவன்     தானாக     தானே     தான்     தான்போலும்     தாமத்     தாமரை     தாமரைக்     தாமோதரனை     தாம்     தாம்பால்     தாயப்     தாயர்     தாயே     தாய்     தாய்-முலைப்     தாய்மார்     தாரா     தாராய்     தாரித்து     தாரேன்     தார்     தார்க்கு     தாள     தாளால்     தாள்     தாள்களை     தாழம்     தாழியில்     தாழை     தாழ்     தாழ்ந்து     தாழ்வு     தாவி     திகழ     திகழும்     திகழ்கின்ற     திக்கு     திங்கள்     திசைக்கின்றதே     திசையும்     திட     திடர்     திண்     திண்ணக்     திண்ணன்     திண்ணியது     திரண்டு     திரிகின்றது     திரிதந்து     திரிந்தது     திரிபுரம்     திரியும்     திரிவிக்கிரமன்     திரு     திருக்     திருக்கடித்தானமும்     திருச்செங்குன்றூரில்     திருத்தனை     திருத்தாய்     திருந்தக்     திருந்து     திருப்பேர்     திருமகளும்     திருமங்கை     திருமறுமார்வ     திருமாலிருஞ்சோலை     திருமாலிருஞ்சோலையானே     திருமால்     திருமேனி     திருவடியை     திருவடிவில்     திருவில்     திருவுக்கும்     திரை     திறங்கள்     திறத்துக்கு     திறம்     திறம்பாது     திறம்பாமல்     திறம்பிற்று     திறம்பேல்மின்     திறல்     தில்லைநகர்த்     திவளும்     தீ     தீதில்     தீது     தீய     தீயிற்     தீரா     தீராத     தீராது     தீர்     தீர்த்தனுக்கு     தீர்த்தன்     தீர்ந்த     தீர்ப்பாரை     தீவினை     தீவினைக்கு     துக்கச்     துக்கம்     துங்க     துஞ்சா     துடி     துடைத்த     துணிந்தது     துணிவு     துணை     துணைநிலை     துணையும்     துண்ட     துன்னி     துன்னிய     துன்னு     துன்பமும்     துன்று     துப்பனை     துப்பு     துப்புடையாரை     துயக்கு     துயரங்கள்     துயரமே     துயர்     துறந்தேன்     துறப்பேன்     துளக்கம்     துளங்கு     துளம்     துளை     துழா     துவரி     துவரிக்     துவரித்த     துவர்     துவள்     தூ     தூங்கு     தூண்     தூது     தூமணி     தூம்பு     தூயனாயும்     தூயானை     தூயாய்     தூய்மை     தூராத     தெந்தில்லைச்     தென்     தென்னவன்     தென்னிலங்கை     தெய்வ     தெய்வங்காள்     தெரிதல்     தெரிந்துணர்வு     தெரியேன்     தெரிவு     தெருளும்     தெருவின்கண்     தெருவில்     தெளி     தெளிது     தெளிந்த     தெளிவிலாக்     தெளிவுற்று     தெள்     தெள்ளிய     தெள்ளியார்     தெள்ளியீர்     தெவ்     தே     தேசும்     தேடற்கு     தேட்டு     தேனுகன்     தேனை     தேனொடு     தேன்     தேரார்     தேருங்கால்     தேர்     தேவராய்     தேவரையும்     தேவர்     தேவிமார்     தேவு     தேவும்     தை     தையலாள்மேல்     தையல்     தொகுத்த     தொக்கு     தொடர்     தொட்ட     தொண்டரும்     தொண்டர்     தொண்டீர்     தொண்டு     தொத்தார்     தொத்து     தொன்னெறிக்கட்     தொல்     தொல்லை     தொழில்     தொழுதனர்     தொழுதால்     தொழுது     தொழுத்தையோம்     தொழும்     தோடு     தோட்டம்     தோயம்     தோயா     தோய்த்த     தோற்றம்     தோற்றோம்     தோளி     தோள்    
Number of search results : 411
Pages:    1    2  3  4  5  Next
7.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
      திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
      குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
      தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே
54.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ
59.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங் காவிடில்
விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா             
62.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்புலிப் பருவம்

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா
70.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
      தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய
      நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
      தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
78.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நிற் புகழாநின்ற ஆயர்தம்
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி
      குடந்தைக் கிடந்தானே சப்பாணி
80.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
சப்பாணிப் பருவம்

தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி
      தேவகி சிங்கமே சப்பாணி
86.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
      தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
      பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
      உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
      தளர்நடை நடவானோ
95.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்
      செங்கண்மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி
      திகழ்ந்து எங்கும் புடைபெயர
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்
      பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்
      தளர்நடை நடவானோ
106.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அச்சோப் பருவம்

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ் உலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ
      அருமறை தந்தானே அச்சோ அச்சோ
124.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ?
சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்
கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
      அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
130.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

தந்தம் மக்கள் அழுது சென்றால்
      தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்
வந்து நின்மேற் பூசல் செய்ய
      வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன்திறத்தர் அல்லர்
      உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா
      நான் சுரந்த முலை உணாயே
132.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்
      சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயந்தன்னால் வலைப்படுக்கில்
      வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
      சாற்றிச் சொன்னேன் போகவேண்டா
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே
      அமர்ந்து வந்து என் முலை உணாயே
164.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
குழல்வாரக் காக்கையை வா எனல்

திண்ணக் கலத்திற் திரை உறிமேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்
      கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்
180.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா
      வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா
185.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பூச் சூட்டல்

தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
      மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
      மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
      பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
      உகந்து இவை சூட்ட நீ வாராய்
204.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
      தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
      உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
      செய்வதுதான் வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்
      வாழ ஒட்டான் மதுசூதனனே
215.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
      உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
216.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி
தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்
      அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
218.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
      துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்
220.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
      அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்
223.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
      தளர்நடைஇட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
      புள்ளுவன் பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
      துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே             
231.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

தாய்மார் மோர் விற்கப் போவர் தமப்பன்மார்
      கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை
      நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
      கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
232.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்
      சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
      மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை
      உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
252.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல்

திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு
      வோணம் இன்று எழு நாள்;முன்
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்
      பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது
      அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்
      கோலம் செய்து இங்கே இரு
254.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
      தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
      கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
      மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
      உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே
278.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
      தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்
கானகம் படி உலாவி உலாவிக்
      கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை
      உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி
      ஆடல் பாடல் இவை மாறினர் தாமே
283.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்
      செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
      ஊதுகின்ற குழல்-ஓசை வழியே
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து
      மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
      எழுது சித்திரங்கள் போல நின்றனவே
301.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

தம் மாமன் நந்தகோபாலன்
      தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
செம்மாந்திரே என்று சொல்லி
      செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும்
      கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர்
      இனித் தரியார் என்னுங் கொல்லோ?
314.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
உந்தி பறத்தல்

தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
      அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
326.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே
331.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

தோயம் பரந்த நடுவு சூழலிற் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர்
340.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத்
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே
377.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

தென்னவன் தமர் செப்பம் இலாதார்
      சே அதக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப்
      பின் முன் ஆக இழுப்பதன் முன்னம்
இன்னவன் இனையான் என்று சொல்லி
      எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார்
      வானகத்து மன்றாடிகள் தாமே
391.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
      தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
      எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
      கடு வினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
      கண்டம் என்னும் கடிநகரே
396.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம்
      சலசல பொழிந்திடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை
      மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்
      அவபிரதம் குடைந்து ஆடக்
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்
      கண்டம் என்னும் கடிநகரே
398.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
      வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும்
      அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம்
      நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
413.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்
      சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
      என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி
      மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு
      ஆள் ஆவரே?
420.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி
      குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
      முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி
      ஊசல் ஆடிப்
பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும்
      புனல் அரங்கமே
423.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

துப்புடையாரை அடைவது எல்லாம்
      சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்
      ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு
      ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
428.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல்

தண்ணனவு இல்லை நமன்தமர்கள்
      சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும்
      மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்
      எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே
437.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை
      துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே
      வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது
      நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக்
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
      குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே
453.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த
      வலையை அறப் பறித்துப்
புக்கினிற் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்
      போக விடுவதுண்டே?
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத
      இழந்தவள் தன்வயிற்றிற்
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
472.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
      தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
      தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
      மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
      இடவகை கொண்டனையே
482.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   திருப்பாவை  

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
      தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
      மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
      ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
      நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்
504.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

தை ஒரு திங்களும் தரை விளக்கித்
      தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
      அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி
      உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
      வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே
512.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

தொழுது முப்போதும் உன் அடி வணங்கித்
      தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
      பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க
      ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து
      ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே
529.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
துகிலைப் பணித்தருள் எனல்

தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
      தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல
      வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
      பட்டைப் பணித்தருளாயே
534.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கூடல் இழைத்தல்

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே
569.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
வலம்புரிக்குக் கிடைத்த பேறு

தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வட மதுரையார்-மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே
591.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்

துங்க மலர்ப் பொழில் சூழ்
      திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
      திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
      தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
      எனக்கு ஓர் சரண் சாற்றுமினே
607.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
619.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
      தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பு அரிது
      மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்
      குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே
      நள்-இருட்கண் என்னை உய்த்திடுமின்
642.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

தருமம் அறியாக் குறும்பனைத்
      தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
      பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் சேய்தாய்
      உதயப் பருப்பதத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
      விருந்தாவனத்தே கண்டோமே
655.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள்
      குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
      மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்
      பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!
657.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்
      திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்
      கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்
      கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்
      நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே
658.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
      அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
      வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு-
      எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
      காணும் கண் பயன் ஆவதே
659.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

தோடு உலா மலர்-மங்கை தோளிணை
      தோய்ந்ததும் சுடர்-வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை
      மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடிப் பாடி அரங்க ஓ என்று
      அழைக்கும் தொண்டர் அடிப்-பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து
      ஆடும் வேட்கை என் ஆவதே?
661.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
      உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
      அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா என்று
      அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி
      ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே
672.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்

தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்
நீதியாரொடும் கூடுவது இல்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அந் தாமரைப்
பேதை மா மணவாளன்தன் பித்தனே
688.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
695.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

தொக்கு இலங்கி யாறெல்லாம் பரந்து ஓடித் தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்று அவை போல்
மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே
701.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்

தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்
      தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று
பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு
      பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
      யான் விட வந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
      அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.
713.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா
      தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன்
      மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
      வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
      என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே
722.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன்தன்
மா மதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கருமணியே
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ
727.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ
728.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தாலாட்டு

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ
739.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும்
      சுமித்திரையும் சிந்தை நோவ
கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
      கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
       வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
      மனு-குலத்தார் தங்கள் கோவே
744.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்
      தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
      பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
      இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே
746.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
      தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு
      வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை
      ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே.
751.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
      திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
      அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்
      கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்
      நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே             
760.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 9   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே
761.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 10   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே
765.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 14   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தூய்மை யோகம் ஆயினாய் துழாய்-அலங்கல் மாலையாய்
ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?
767.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 16   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே
797.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 46   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தோடு பெற்ற தண் துழாய்-அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப் புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே
854.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 103   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

திருக் கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
இருக் கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கருக் கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே
861.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 110   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்
நீயும் நின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை-நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே
902.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 31   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

தவத்துளார் தம்மில் அல்லேன்
      தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
      உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
      துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
      அரங்க மா நகருளானே
906.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 35   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

தாவி அன்று உலகம் எல்லாம்
      தலைவிளாக்கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால்
      சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்தன்
      ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால்
      பாவியேன் பாவியேனே
908.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 37   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்
      திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
      தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஓர் அருளும் அன்றே
      என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார்
      அம்மவோ கொடியவாறே            
911.0   திருமாலை -பாசுரம்   பாடல் # 40   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்   திருமாலை  

திருமறுமார்வ நின்னைச்
      சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
      மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
      ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
      அரங்க மா நகருளானே             
932.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 6   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய-
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு
      மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே
939.0   கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்   பாடல் # 3   மதுரகவி ஆழ்வார்   கண்ணி நுண் சிறுத்தாம்பு  

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
960.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 3   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பிரிதி

துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று
      இளங்கொடிதிறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்
      இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்
      மணி அறைமிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே
981.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே
      தொழுது எழு தொண்டர்கள்- தமக்குப்
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்
      பேர் அருளாளன் எம் பெருமான்-
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்
      ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
983.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவதரி ஆச்சிரமம்

தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
      திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த
      பனி முகில் வண்ணன் எம் பெருமான்-
காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த
      கரு வரை பிளவு எழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
      வதரி ஆச்சிரமத்து உள்ளானே
993.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

தாய் ஆய் வந்த பேய் உயிரும்
      தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
      குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
      இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
996.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

தொண்டு ஆம் இனமும் இமையோரும்
      துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று
      அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து
      வயலின் அயலே கயல் பாயத்
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்
      சாளக்கிராமம் அடை நெஞ்சே
997.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 10   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருச்சாளக்கிராமம்

தாரா ஆரும் வயல் சூழ்ந்த
      சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப்
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்
      அன்றி இவையே பிதற்றுமினே
1028.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே
1034.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 2

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே
1042.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 5   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 3

தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே
1053.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 6   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

துவரி ஆடையர் மட்டையர் சமண்
      தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம்
      கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே
1054.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவேங்கடம் 4

தருக்கினால் சமண் செய்து சோறு தண்
      தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
      கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
1059.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 2   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1064.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 7   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திரு எவ்வுளூர்

திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே
1081.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 4   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருநீர்மலை

தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
      தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி
      பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே
1096.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 9   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கடல்மல்லை:1

தொண்டு ஆயார்-தாம் பரவும் அடியினானை
      படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல்
விண்டானை-தென் இலங்கை அரக்கர் வேந்தை
      -விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து
      வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானைத் தொண்டனேன் கண்டுகொண்டேன்
      -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
1108.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க

திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை
      செழுங் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்
      ஆகிலும் ஆசை விடாளால்
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை
      -சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list