சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் கை%
கை     கைகளால்     கைதவம்     கைத்தனன்     கைத்தலத்து     கைந்நாகத்து     கைப்     கைம்     கைய     கையின்     கையில்     கையும்     கையுள்    
Number of search results : 16
18.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
294.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

கைத்தலத்து உள்ள மாடு அழியக்
      கண்ணாலங்கள் செய்து இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
      நம்மை வடுப்படுத்தும்-
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
      செய்வன செய்துகொள்ள
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
      வளர விடுமின்களே
422.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (2)

கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
      கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
      திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
      உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
      இருப்பர் தாமே
612.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்

கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்
செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான் மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே
933.0   அமலன் ஆதிபிரான் -பாசுரம்   பாடல் # 7   திருப்பாணாழ்வார்   அமலன் ஆதிபிரான்  

கையின் ஆர் சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அர
      வின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
1398.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருவரங்கம்: 3

கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த
அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே
1428.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருப்பேர் நகர்

கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே
1728.0   பெரிய திருமொழி -பாசுரம்   பாடல் # 1   திருமங்கை ஆழ்வார்   பெரிய திருமொழி  
திருக்கண்ணபுரம்: 9

கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே
2109.0   முதல் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 28   பொய்கை ஆழ்வார்   முதல் திருவந்தாதி  
முதல் திருவந்தாதி

கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை
2317.0   மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்   பாடல் # 36   பேயாழ்வார்   மூன்றாம் திருவந்தாதி  
மூன்றாம் திருவந்தாதி

கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயன் அவற்கு
2862.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 12   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கைத்தனன் தீய சமயக் கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே     
2894.0   இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்   பாடல் # 9   திருவரங்கத்தமுதனார்   இராமானுச நூற்றந்தாதி  
இயற்பா

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழுங் கொண்டலே   
3201.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 8   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே
3341.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 5   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அரு

கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே
3392.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 1   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திர

கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
      சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
      பாவியேன் முன் நிற்குமே
3477.0   திருவாய் மொழி -பாசுரம்   பாடல் # 9   நம்மாழ்வார்   திருவாய் மொழி  
தம்மை வசீகரித்தவன் ஸர்வே#வரன் என்று அருளிச் செய்தல

கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list