சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
முதல் எழுத்து :                                      

Search: Order By:

பாசுர பாடல் சொல் வ%
வகை     வகையால்     வக்கரன்     வங்க     வங்கக்     வங்கத்தால்     வங்கம்     வசை     வஞ்சனே     வஞ்சனை     வஞ்சனையால்     வஞ்சம்     வஞ்சி     வட     வடிக்     வடிவாய்     வடிவு     வட்கு     வட்ட     வட்டு     வணங்கல்     வணங்கும்     வணம்     வண்     வண்டினம்     வண்டு     வண்டுகளோ     வண்ண     வண்ணக்     வண்ணப்     வண்ணம்     வண்ணம்-திரிவும்     வண்மையினாலும்     வதுவை     வந்த     வந்தருளி     வந்தாய்     வந்திக்கும்     வந்தித்து     வந்திருந்து     வந்து     வன்     வம்பவிழ்     வம்பு     வம்மின்     வயிறு     வயிற்றிற்     வயிற்றில்     வரத்தால்     வரத்தினிற்     வரம்     வரம்பு     வரவு     வரி     வரிசிலை     வருக     வருங்கால்     வருத்தும்     வருந்தாத     வருந்தாது     வரும்     வருவார்     வரை     வரைச்     வற்பு     வற்றா     வலங்     வலஞ்செய்து     வலத்தனன்     வலம்     வலம்புரி     வலி     வலியம்     வலையுள்     வல்     வல்லாளன்     வல்லாள்     வல்லி     வல்லிச்     வல்வினை     வள     வளரும்     வளர்ந்த     வளர்ந்தவனைத்     வளைக்     வளைத்து     வள்ளலே     வள்ளி     வழக்கு     வழக்கொடு     வழி     வழித்     வழிபட்டு     வழு     வவ்வி     வா     வாக்குத்     வாங்கு     வாசகமே     வாசகம்     வாசி     வாட     வாடினேன்     வாட்டம்     வாட்டாற்றான்     வாத     வாதை     வானகமும்     வானத்தில்     வானத்து     வானத்தும்     வானவர்     வானவர்-தங்கள்     வானவர்-தங்கள்-கோனும்     வானவர்-தம்     வானவர்தாம்     வானிடை     வானிடைப்     வானுளார்     வானே     வானை     வானோ     வானோர்     வான்     வாமனன்     வாம்     வாயிற்     வாயும்     வாயுள்     வாய்     வாய்கொண்டு     வாய்க்க     வாய்க்கும்கொல்     வாய்த்     வாய்ப்போ     வாரணம்     வாரா     வாராகம்-அது     வாராது     வாராய்     வாரி     வாரிக்கொண்டு     வார்     வார்த்தை     வாலி     வாலியது     வால்     வாளா     வாளால்     வாளை     வாள்     வாள்கள்     வாழக்     வாழாட்பட்டு     வாழும்     வாழ்தல்     வாழ்த்தி     வாழ்த்திய     வாழ்த்துக     வாழ்த்துவார்     வாழ்ந்தார்கள்     வாழ்வு     வாவித்     விடத்த     விடம்     விடம்-தான்     விடல்     விடுவேனோ     விடை     விடைக்     விட்டு     விண்     விண்ட     விண்டான்     விண்டாரை     விண்ணகரம்     விண்ணவர்-தங்கள்     விண்ணின்மீது     விண்ணுளார்     விண்ணெல்லாம்     விண்மீது     விதியினால்     விதிவகை     வித்தும்     வித்துவக்கோட்டு     வினை     வினையார்     வினையால்     வினையேன்     வியன்     வியப்பு     வியம்     வியலிடம்     விரலோடு     விரும்பி     விரும்பிப்     விரை     விரைந்து     விற்     விலங்கலால்     விலங்கும்     விலைக்கு     வில்     வில்லார்     வில்லால்     விளங்கனியை     விளம்பும்     விளரிக்     விளைத்த     விள்வு     வீசும்     வீடு     வீடுமின்     வீற்றிருந்து     வீற்று     வீவன்     வீவு     வெங்கண்-திண்களிறு     வெஞ்சினத்த     வெண்     வெண்கலப்     வெண்ணிறத்     வெண்ணெய்     வெண்ணெய்-தான்     வெந்     வெந்தார்     வென்ற     வென்றி     வென்றியே     வெம்     வெம்பும்     வெய்ய     வெய்யன்     வெருவாதாள்     வெறி     வெறுப்பொடு     வெற்பால்     வெற்பு     வெற்பை     வெற்றிக்     வெளிய     வெள்ள-நீர்     வெள்ளத்துள்     வெள்ளியான்     வெள்ளியார்     வெள்ளை     வெள்ளைச்     வெள்ளைப்     வெவ்வாயேன்     வேங்கடமும்     வேங்கடமே     வேடர்     வேடு     வேட்டத்தைக்     வேண்டிச்     வேண்டித்     வேத     வேதத்தை     வேதமும்     வேதம்     வேதியாநிற்கும்     வேந்தர்     வேம்     வேம்பின்     வேயர்     வேயின்     வேய்     வேறா     வேறு     வேறுகொண்டு     வேறே     வேலிக்     வேலை     வேல்     வேள்வி     வேவு     வை     வைகலும்     வைகல்     வைகுந்த     வைகுந்தம்     வைகுந்தா     வைது     வைத்த     வைத்தார்     வைத்தேன்     வைப்பன்     வைப்பு     வைம்மின்     வையத்து     வையம்    
Number of search results : 416
Pages:    1    2  3  4  5  Next
3.0   திருப்பல்லாண்டு -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   திருப்பல்லாண்டு  

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
      மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
      குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
      இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே
13.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே
19.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன்திருவவதாரம்

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே   
30.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
      ஒளியிழையீர் வந்து காணீரே
35.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 13   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
      காரிகையீர் வந்து காணீரே
38.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 16   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனது திருமேனியழகு

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே
      கனவளையீர் வந்து காணீரே
53.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாலப் பருவம்

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே
67.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
செங்கீரைப் பருவம்

வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள
      வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்
      கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
      என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
      ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே
94.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தளர்நடைப் பருவம்

வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்
      வேழத்தின் கருங்கன்று போல்
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்
      சிறு புகர்பட வியர்த்து
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து
      ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே
      தளர்நடை நடவானோ
108.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க-
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
      கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்
112.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
புறம் புல்கல்

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப்
பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம்புல்குவான்
      வாமனன் என்னைப் புறம்புல்குவான்
127.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் அப்பூச்சி காட்டுதல்

வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே
129.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
      வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன்
      எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய்;
      ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து
      மூக்கு உறிஞ்சி முலை உணாயே
138.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தாய்ப்பால் உண்ண அழைத்தல்

வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி
      மாதவா உண் என்ற மாற்றம்
நீர் அணிந்த குவளை வாசம்
      நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்
பார் அணிந்த தொல் புகழான்
      பட்டர்பிரான் பாடல் வல்லார்
சீர் அணிந்த செங்கண்மால் மேல்
      சென்ற சிந்தை பெறுவர் தாமே
140.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
      மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
      நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
      எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
      கனகக் கடிப்பும் இவையாம்
141.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்
      மகரக்குழை கொண்டுவைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ
      வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய
      ஒண்சுடர் ஆயர்கொழுந்தே
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து
      மாதவனே இங்கே வாராய்
142.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
      வார்காது தாழப் பெருக்கிக்
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
      கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
      இனிய பலாப்பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்
      சோத்தம் பிரான் இங்கே வாராய்
144.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில்
      விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
      மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்
      பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா
      காவலனே முலை உணாயே
150.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 12   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வா என்று சொல்லி என்கையைப் பிடித்து
      வலியவே காதிற் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?
      காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டுவைத்தேன் இவை காணாய்
      நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட
      தாமோதரா இங்கே வாராய்
151.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 13   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
காது குத்தல்

வார் காது தாழப் பெருக்கி அமைத்து
      மகரக்குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
      சிந்தையுள் நின்று திகழப்
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்
      பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்
      அச்சுதனுக்கு அடியாரே
152.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நீராட்டம்

வெண்ணெய் அளைந்த குணுங்கும்
      விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
      தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
      எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
      நாரணா நீராட வாராய்
172.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோல் கொண்டுவா எனல்

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா
      கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா
202.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
      வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
      காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை
      புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற
      அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்
203.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

வருக வருக வருக இங்கே
      வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம்
      காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்
      அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
      பாவியேனுக்கு இங்கே போதராயே
212.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பாலக் கிரீடை

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே
221.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
ஆயர்மங்கையர் முறையீடு

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத்
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
      தரணி இடந்தானால் இன்று முற்றும்
230.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அம்மம் தர மறுத்தல்

வாளா ஆகிலும் காணகில்லார் பிறர்
      மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ
      சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
      கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே
237.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே
240.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்

வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே
255.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
      வசை அறத் திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி
      பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்
      அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
      எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே
262.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
      மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
      தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை
      அழகு கண்டு என்மகள்
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
      வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே
263.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல்

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
      மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக்
      கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
      விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
      பரமான வைகுந்தம் நண்ணுவரே
265.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்
      வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப
      மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி
      இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
268.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல்
      அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை
      இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களி-யானை தன் கொம்பு இழந்து
      கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
272.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை

வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்
      வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்
      தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
      முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
277.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்ணன் குழல் ஊதல்

வான் இளவரசு வைகுந்தக்
      குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்
      கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி
      மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்
      சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே
287.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
நற்றாய் இரங்கல்

வாயிற் பல்லும் எழுந்தில மயி
      ரும் முடி கூடிற்றில
சாய்வு இலாத குறுந்தலைச் சில
      பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
      தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே
302.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 6   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

வேடர் மறக்குலம் போலே
      வேண்டிற்றுச் செய்து என்மகளைக்
கூடிய கூட்டமே யாகக்
      கொண்டு குடி வாழுங் கொல்லோ?
நாடும் நகரும் அறிய
      நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இறப் பாய்ந்த பெருமான்
      தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?
305.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி

வெண்ணிறத் தோய் தயிர் தன்னை
      வெள்வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து
      கடையவும் தான்வல்லள் கொல்லோ?
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
      உலகளந்தான் என்மகளைப்
பண் அறையாப் பணிகொண்டு
      பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
321.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
327.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்

வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார்
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
334.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம் கைசெய்யக் கண்டார் உளர்
339.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலை-1

வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே
362.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருக்கோட்டியூர்

வண்ண நல் மணியும் மரகதமும்
      அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
      மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
      போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
      கவளம் உந்துகின்றார்களே
379.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பத்தராய் இறப்பார் பெறும் பேறு

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப
      வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம்
      தாரமும் ஒரு பக்கம் அலற்ற
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம்
      செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
ஆய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு
      அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே
397.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி
      மேல் இருந்தவன் தலை சாடி
மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த
      மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும்
      அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
399.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
கண்டம் என்னும் திருப்பதி

வட திசை மதுரை சாளக்கிராமம்
      வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே
409.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருவரங்கம் (1)

வல் எயிற்றுக் கேழலுமாய்
      வாள்எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும்
      அவுணனையும் இடந்தான் ஊர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு
      எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும்
      மதில் அரங்கம் என்பதுவே
433.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

வாக்குத் தூய்மை இலாமையினாலே
      மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது
      நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று
      முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
      காரணா கருளக் கொடியானே
439.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை
      மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
      காணலாங்கொல் என்று ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி
      உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன்
      சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே
440.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
தன் தகவின்மையை அறிவித்தல்

வண்ண மால் வரையே குடையாக
      மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே
      காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரைக் களைவானே
      ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
      நன்மையே அருள்செய் எம்பிரானே
445.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 3   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
பண்டன்று பட்டினம் காப்பே

வயிற்றிற் தொழுவைப் பிரித்து
      வன்புலச் சேவை அதக்கிக்
கயிற்றும் அக்கு ஆணி கழித்துக்
      காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை
      இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்
      பண்டு அன்று பட்டினம் காப்பே
454.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்

வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன்
      இந்திர-ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ
      ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத்
      தீவினை தீர்க்கல் உற்றுத்
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு
      மாலிருஞ் சோலை எந்தாய்
473.0   பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   பெரியாழ்வார்   பெரியாழ்வார் திருமொழி  
அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித

வேயர் தங்கள் குலத்து உதித்த
      விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக்
      கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர்-ஏற்றை அமரர் கோவை
      அந்தணர்தம் அமுதத்தினைச்
சாயை போலப் பாட வல்லார்
      தாமும் அணுக்கர்களே
475.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   திருப்பாவை  

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
      செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
  நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
  செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
      உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்
503.0   திருப்பாவை -பாசுரம்   பாடல் # 30   ஆண்டாள்   திருப்பாவை  

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
      திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப்
      பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
      இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்             
505.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து
      வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
      முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
      கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர்
      இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே
508.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
தைத்திங்களில் காமனை வழிபடல்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
      மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
      கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
      உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
      வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
518.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
      விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
      அழித்தி யாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால்
      உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
      முகத்தன கண்கள் அல்லவே
521.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
சிற்றில் சிதையேல் எனல்

வட்ட வாய்ச் சிறுதூதையோடு
      சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
      சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
      சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
      அறிதியே கடல்வண்ணனே
546.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
      விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்
      உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்
      களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்
      வேங்கடவன் வரக் கூவாய்
555.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 11   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
குயிற் பத்து

விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை
      வேற்கண் மடந்தை விரும்பிக்
கண்ணுற என் கடல்-வண்ணனைக் கூவு
      கருங்குயிலே என்ற மாற்றம்
பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன்
      பட்டர்பிரான் கோதை சொன்ன
நண் உறு வாசக மாலை வல்லார் நமோ
      நாராயணாய என்பாரே
556.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
562.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
564.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 9   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
திருமணக் கனவை உரைத்தல்

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
577.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

விண் நீல மேலாப்பு
      விரித்தாற்போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என்
      திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டிற்
      துளி சோரச் சோர்வேனைப்
பெண் நீர்மை ஈடழிக்கும்
      இது தமக்கு ஓர் பெருமையே?             
581.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
மேகவிடு தூது

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்
      திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்-உகிரால்
      இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி-வளைகள்
      தருமாகிற் சாற்றுமினே             
623.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்

வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
      மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையும் உள்மெலிவும்
      ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
      சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
      பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்
633.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
கண்ணன் உகந்த பொருள்கொண்டு காதல்நோய் தணிமின் எனல்

வெற்றிக் கருளக் கொடியான்தன்
      மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய்
      வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலைதன்னைக்
      குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றம் அவை தீர
      அணைய அமுக்கிக் கட்டீரே
644.0   நாச்சியார் திருமொழி -பாசுரம்   பாடல் # 8   ஆண்டாள்   நாச்சியார் திருமொழி  
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை

வெளிய சங்கு ஒன்று உடையானைப்
      பீதக-ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை
      ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
      கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே
648.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த
      வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்
      மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை
      கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
      வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!
656.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
      மண் உய்ய மண்-உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
      சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
      அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு யானும்
      இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே
683.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 7   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல

வான் ஆளும் மா மதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர்தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே
691.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே
692.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

வெங்கண்-திண்களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே
697.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டி நிற்றல்

வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்து
கொற்ற வேல்-தானைக் குலசேகரன் சொன்ன
நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
709.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்
      மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்
      பொலியும் நீர்-முகிற் குழவியே போல
அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்
      அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ
      கேசவா கெடுவேன் கெடுவேனே
717.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 10   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தேவகியின் புலம்பல்

வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி
      வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க
நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ
      சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்
      கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்
      தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
730.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 1   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

வன் தாளின் இணை வணங்கி வளநகரம்
      தொழுது ஏத்த மன்னன் ஆவான்
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை
      நெடுங் கானம் படரப் போகு
என்றாள் எம் இராமாவோ உனைப் பயந்த
      கைகேசி தன் சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
      நன்மகனே உன்னை நானே
731.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை
      வேண்டாதே, விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
      மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும்
      இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ
      எம்பெருமான் என் செய்கேனே
733.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 4   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தசரதன் புலம்பல்

வா போகு வா இன்னம் வந்து ஒருகாற்
      கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா
      விடையோன்தன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல்வினையேன்
      மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
      போகாதே நிற்குமாறே
742.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 2   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
      வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
      வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
      அணிமணி-ஆசனத்து இருந்த அம்மான் தானே
745.0   பெருமாள் திருமொழி -பாசுரம்   பாடல் # 5   குலசேகராழ்வார்   பெருமாள் திருமொழி  
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்

வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று
      வண் தமிழ் மா முனி கொடுத்த வரி-வில் வாங்கி
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி
      கரனோடு தூடணன்தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய எய்தான்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார்
      திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே
769.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 18   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ-நீர் அராவணைப்
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலைவண்ணனே
774.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 23   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள்-எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால்-நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால்-நிறக் கடற்கிடந்த பற்பநாபன் அல்லையே?
776.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 25   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ-இது என்ன பொய்?-இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே
778.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 27   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே?
781.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 30   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?
790.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 39   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை-நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே?
793.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 42   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன்சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன்கபால் மிசை
ஊறு செங் குருதியால் நிறைத்த காரணந்தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே
794.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 43   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?
801.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 50   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வெண் திரைக் கருங் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள்
திண் திறற் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே
822.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 71   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே
831.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 80   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே?
839.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 88   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலாக் கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே?
843.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 92   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்-கண் மாதரார்
கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை-நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே
847.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 96   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வரம்பு இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு இல் ஊழி ஏத்திலும் வரம்பு இலாத கீர்த்தியாய்
வரம்பு இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின்கழல்
பொந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே
848.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 97   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
ஐயில் ஆய ஆக்கை-நோய் அறுத்து வந்து நின் அடைந்து
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே
853.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 102   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

விள்வு இலாத காதலால் விளங்கு பாத-போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர்ப்
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால்
துள்ளுநீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே
862.0   திருச்சந்த விருத்தம் -பாசுரம்   பாடல் # 111   திருமழிசை ஆழ்வார்   திருச்சந்த விருத்தம்  

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால-நாதனே
Pages:    1    2  3  4  5  Next
Divya Prabandham songs                                                    
Aayiram Aazhvaar Thalam Prabandham Song # from Song # to Counts
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் திருப்பல்லாண்டு 1.0 12.0 12
முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் திருமொழி 13.0 473.0 461
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் திருப்பாவை 474.0 503.0 30
முதல் ஆயிரம் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் நாச்சியார் திருமொழி 504.0 646.0 143
முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி 647.0 751.0 105
முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் 752.0 871.0 120
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை 872.0 916.0 45
முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருப்பள்ளி எழுச்சி 917.0 926.0 10
முதல் ஆயிரம் திருப்பாணாழ்வார் உறையூர் அமலன் ஆதிபிரான் 927.0 936.0 10
முதல் ஆயிரம் மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு 937.0 947.0 11
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 948.0 2031.0 1084
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திருக்குறுந் தாண்டகம் 2032.0 2051.0 20
இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு நெடுந்தாண்டகம் 2052.0 2081.0 30
மூன்றாம் ஆயிரம் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082.0 2181.0 100
மூன்றாம் ஆயிரம் பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182.0 2281.0 100
மூன்றாம் ஆயிரம் பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282.0 2381.0 100
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382.0 2477.0 96
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478.0 2577.0 100
மூன்றாம் ஆயிரம் நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாசிரியம் 2578.0 2584.0 7
மூன்றாம் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரம் பெரிய திருவந்தாதி 2585.0 2589.0 5
மூன்றாம் ஆயிரம் இயற்பா காஞ்சிபுரம் நம்மாழ்வார் 2590.0 2671.0 82
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் திரு எழு கூற்றிருக்கை 2672.0 2672.0 1
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் 2673.0 2712.0 40
மூன்றாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் 2713.0 2790.0 78
மூன்றாம் ஆயிரம் திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 2791.0 2898.0 108
நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி 2899.0 4000.0 1102
Total counts 4000

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham all list column name paadal name string %E0%AE%B5