![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
தேவார அருள் முறைத் திரட்டு
உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருவருட் பயன் பத்து அதிகாரங்களுக்கேற்ப தொண்ணூற்றொன்பது தேவாரப் பாக்களை கொண்டுள்ளது.
1. பதிமுது நிலை The Nature of The Supreme Lord
2 . உயிரவை நிலை The State of Souls
3. இருண் மல திலை The Nature of The Impurity of Darkness :
4, அருளது நிலை The Nature of Grace
5. அருளுரு நிலை The Form of Grace
6. அறியும் நெறி The Way of Knowledge
7. உயிர் விளக்கம் The Soul’s Purification
8. இன்புறு நிலை The State of Bliss
9. அஞ்செழுத்தருணிலை The State of Grace of The Five Letters
10. அணைந்தோர் தன்மை The State of Those Who Have Attained The Lord
திருவருட் பயன் 1 1.001 - திருஞானசம்பந்த சுவாமிகள் தோடு உடைய செவியன், விடை
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!
[ 1]
2 1.003 - திருஞானசம்பந்த சுவாமிகள் பத்தரோடு பலரும் பொலிய மலர்
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி,
அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.
[ 8]
3 1.017 - திருஞானசம்பந்த சுவாமிகள் மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி,
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி,
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்,
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
[ 6]
4 1.021 - திருஞானசம்பந்த சுவாமிகள் புவம், வளி, கனல், புனல்,
புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.
[ 1]
5 1.021 - திருஞானசம்பந்த சுவாமிகள் புவம், வளி, கனல், புனல்,
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.
[ 2]
6 1.021 - திருஞானசம்பந்த சுவாமிகள் புவம், வளி, கனல், புனல்,
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.
[ 3]
7 1.021 - திருஞானசம்பந்த சுவாமிகள் புவம், வளி, கனல், புனல்,
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.
[ 4]
8 1.021 - திருஞானசம்பந்த சுவாமிகள் புவம், வளி, கனல், புனல்,
சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.
[ 5]
9 1.021 - திருஞானசம்பந்த சுவாமிகள் புவம், வளி, கனல், புனல்,
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.
[ 6]
10 1.042 - திருஞானசம்பந்த சுவாமிகள் பைம் மா நாகம், பல்மலர்க்
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து
புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,
நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,
மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.
[ 4]
11 1.045 - திருஞானசம்பந்த சுவாமிகள் துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
[ 1]
12 1.103 - திருஞானசம்பந்த சுவாமிகள் தோடு உடையான் ஒரு காதில்-தூய
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.
[ 6]
13 1.126 - திருஞானசம்பந்த சுவாமிகள் பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா,
முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய்,
சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம்
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.
[ 7]
14 1.131 - திருஞானசம்பந்த சுவாமிகள் மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்!
ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று,
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.
[ 10]
15 1.132 - திருஞானசம்பந்த சுவாமிகள் ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
அந்தி திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலை ஆமே.
[ 6]
16 2.040 - திருஞானசம்பந்த சுவாமிகள் எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.
[ 1]
17 2.086 - திருஞானசம்பந்த சுவாமிகள் உரையினில் வந்த பாவம், உணர்
வேறு உயர் வாழ்வு தன்மை; வினை; துக்கம், மிக்க பகை
தீர்க்கும்; மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க, நின்ற கரவைக்
கரந்து, திகழும்
சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும்
நேட, எரி ஆய்ச்
சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.
[ 9]
18 2.106 - திருஞானசம்பந்த சுவாமிகள் என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா நீர்
மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு ஒண்ணாதே.
[ 10]
19 3.037 - திருஞானசம்பந்த சுவாமிகள் கரம் முனம் மலரால், புனல்
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம் காண்மினே!
[ 4]
20 3.054 - திருஞானசம்பந்த சுவாமிகள் வாழ்க அந்தணர், வானவர், ஆன்
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
[ 3]
21 3.054 - திருஞானசம்பந்த சுவாமிகள் வாழ்க அந்தணர், வானவர், ஆன்
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்
[ 4]
22 3.054 - திருஞானசம்பந்த சுவாமிகள் வாழ்க அந்தணர், வானவர், ஆன்
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
[ 5]
23 3.119 - திருஞானசம்பந்த சுவாமிகள் புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்
என, வினை கெடுமே.
[ 4]
24 4.005 - திருநாவுக்கரசர் மெய் எலாம் வெண் நீறு
துன்நாகத்தேன் ஆகி, துர்ச்சனவர் சொல் கேட்டு, துவர் வாய்க்கொண்டு(வ்)
என்னாகத் திரிதந்து, ஈங்கு இருகை ஏற்றிட உண்டேன், ஏழையேன் நான்,
பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே,-ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே!
[ 5]
25 4.008 - திருநாவுக்கரசர் சிவன் எனும் ஓசை அல்லது,
விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.
[ 2]
26 4.025 - திருநாவுக்கரசர் வெண் நிலா மதியம் தன்னை
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.
[ 8]
27 4.026 - திருநாவுக்கரசர் நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!
[ 6]
28 4.026 - திருநாவுக்கரசர் நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே!
[ 7]
29 4.029 - திருநாவுக்கரசர் ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே
[ 1]
30 4.031 - திருநாவுக்கரசர் பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்;
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!
[ 6]
31 4.032 - திருநாவுக்கரசர் உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர
புலன்களைப் போக நீக்கி, புந்தியை ஒருங்க வைத்து(வ்)
இனங்களைப் போக நின்று, இரண்டையும் நீக்கி, ஒன்று ஆய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகிச்
சினங்களைக் களைவர் போலும்-திருப் பயற்றூரனாரே.
[ 9]
32 4.033 - திருநாவுக்கரசர் இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.
[ 4]
33 4.063 - திருநாவுக்கரசர் ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே!
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.
[ 3]
34 4.067 - திருநாவுக்கரசர் வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[ 1]
35 4.067 - திருநாவுக்கரசர் வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த,
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!
[ 5]
36 4.075 - திருநாவுக்கரசர் தொண்டனேன் பட்டது என்னே! தூய
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!
[ 3]
37 4.075 - திருநாவுக்கரசர் தொண்டனேன் பட்டது என்னே! தூய
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி,
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.
[ 4]
38 4.075 - திருநாவுக்கரசர் தொண்டனேன் பட்டது என்னே! தூய
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.
[ 9]
39 4.076 - திருநாவுக்கரசர் மருள் அவா மனத்தன் ஆகி
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி,
பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி,
தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு,
செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே!
[ 2]
40 4.076 - திருநாவுக்கரசர் மருள் அவா மனத்தன் ஆகி
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே
வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே,
உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும்,
கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே?
[ 7]
41 4.077 - திருநாவுக்கரசர் கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று
துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார்
முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்
உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே.
[ 5]
42 4.078 - திருநாவுக்கரசர் வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்;
மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்;
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை;
ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே!
[ 3]
43 4.095 - திருநாவுக்கரசர் வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர்
கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால்
குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[ 3]
44 4.095 - திருநாவுக்கரசர் வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர்
நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம்
கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[ 5]
45 4.095 - திருநாவுக்கரசர் வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
[ 6]
46 4.097 - திருநாவுக்கரசர் அட்டுமின், இல் பலி! என்று
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய,
நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால்
துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான்
நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே.
[ 4]
47 4.100 - திருநாவுக்கரசர் மன்னும் மலைமகள் கையால் வருடின;
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.
[ 6]
48 4.113 - திருநாவுக்கரசர் பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?
[ 4]
49 5.012 - திருநாவுக்கரசர் கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.
[ 5]
50 5.013 - திருநாவுக்கரசர் என் பொனே! இமையோர் தொழு
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற
திருவனே! திரு வீழிமிழலையுள்
குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!
[ 5]
51 5.046 - திருநாவுக்கரசர் துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!
[ 5]
52 5.048 - திருநாவுக்கரசர் பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை
நெறிப்படுத்து, நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு உறும்(ம்) அமுது ஆயவன் ஏகம்பம்
குறிப்பினால், சென்று, கூடி, தொழுதுமே.
[ 4]
53 5.050 - திருநாவுக்கரசர் எங்கே என்ன, இருந்த இடம்
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?
[ 6]
54 5.060 - திருநாவுக்கரசர் ஏதும் ஒன்றும் அறிவு இலர்
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
[ 1]
55 5.091 - திருநாவுக்கரசர் ஏ இலானை, என் இச்சை
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?
[ 9]
56 5.093 - திருநாவுக்கரசர் காசனை, கனலை, கதிர் மா
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்;
ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்;
ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்),
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
[ 3]
57 5.093 - திருநாவுக்கரசர் காசனை, கனலை, கதிர் மா
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை,
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை,
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை,
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?
[ 8]
58 5.097 - திருநாவுக்கரசர் சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ?
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்,
மரணம் எய்தியபின், நவை நீக்குவான்
அரணம் மூ எயில் எய்தவன் அல்லனே?
[ 17]
59 5.097 - திருநாவுக்கரசர் சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
அண்டம் ஆர் இருள் ஊடு கடந்து உம்பர்
உண்டுபோலும், ஓர் ஒண்சுடர்; அச் சுடர்
கண்டு இங்கு ஆர் அறிவார்? அறிவார் எலாம்,
வெண் திங்கள் கண்ணி வேதியன் என்பரே.
[ 2]
60 6.001 - திருநாவுக்கரசர் அரியானை, அந்தணர் தம் சிந்தை
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்
புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்
பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.
[ 5]
61 6.013 - திருநாவுக்கரசர் கொடி மாட நீள் தெருவு
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு,
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்று ஒன்றா எண்ணுகின்றார்;
மற்று ஒருவர் இல்லை, துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்கு,
புற்று அரவக் கச்சு ஆர்த்துப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[ 2]
62 6.013 - திருநாவுக்கரசர் கொடி மாட நீள் தெருவு
நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி, நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி,
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக,
பராய்த்துறையேன் என்று ஓர் பவள வண்ணர்
துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட,
துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்;
புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
[ 6]
63 6.019 - திருநாவுக்கரசர் முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்
கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
[ 4]
64 6.020 - திருநாவுக்கரசர் ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை, குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
[ 6]
65 6.025 - திருநாவுக்கரசர் உயிரா வணம் இருந்து, உற்று
உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி, உள்ளக்கிழியின் உரு எழுதி,
உயிர் ஆவணம் செய்திட்டு, உன் கைத் தந்தால், உணரப்படுவாரோடு ஒட்டி, வாழ்தி;
அயிராவணம் ஏறாது, ஆன் ஏறு ஏறி, அமரர் நாடு ஆளாதே, ஆரூர் ஆண்ட
அயிராவணமே! என் அம்மானே! நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.
[ 1]
66 6.025 - திருநாவுக்கரசர் உயிரா வணம் இருந்து, உற்று
கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக் கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி,
உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால் வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்;
மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்!
மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,-
திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.
[ 6]
67 6.025 - திருநாவுக்கரசர் உயிரா வணம் இருந்து, உற்று
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள், நங்கை தலைவன் தாளே!.
[ 7]
68 6.027 - திருநாவுக்கரசர் பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள்
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு, ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர்
பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை,
புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை
தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை, தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!.
[ 4]
69 6.031 - திருநாவுக்கரசர் இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு, பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, சங்கரா, சய! போற்றி போற்றி! என்றும்,
அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ! என்றும், ஆரூரா! என்று என்றே, அலறா நில்லே!.
[ 3]
70 6.035 - திருநாவுக்கரசர் தூண்டு சுடர் மேனித் தூநீறு
பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்; பாதாளம் ஏழ் உருவப் பாய்ந்த பாதர்;
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர்; ஏழ் உலகும் ஆய் நின்ற ஏகபாதர்;
ஓதத்து ஒலி மடங்கி, ஊர் உண்டு ஏறி, ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய(ப்)பின்,
வேதத்து ஒலி கொண்டு, வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[ 2]
71 6.035 - திருநாவுக்கரசர் தூண்டு சுடர் மேனித் தூநீறு
கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட,
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர்; நான் தெரியமாட்டேன், மீண்டேன்;
கள்ளவிழி விழிப்பார், காணாக் கண்ணால்; கண்ணுளார் போலே கரந்து நிற்பர்;
வெள்ளச் சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே.
[ 5]
72 6.040 - திருநாவுக்கரசர் அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர்
இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்!
பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே! சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த,
வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.
[ 7]
73 6.043 - திருநாவுக்கரசர் நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா என் நெஞ்சை நினைவித்தானை;
கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன எல்லாம் காட்டினானை;
சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு,
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை, புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.
[ 1]
74 6.043 - திருநாவுக்கரசர் நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை,
வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை,
அறியாது அடியேன் அகப்பட்டேனை, அல்லல் கடல் நின்றும் ஏற வாங்கி
நெறிதான் இது என்று காட்டினானை, நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான் தன்னை,
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை, பொய் இலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.
[ 4]
75 6.054 - திருநாவுக்கரசர் ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[ 4]
76 6.054 - திருநாவுக்கரசர் ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்-
தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச
மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப்
பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.
[ 5]
77 6.061 - திருநாவுக்கரசர் மாதினை ஓர் கூறு உகந்தாய்!
எவரேனும் தாம் ஆக; இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே, அவர் அவரைக் கண்ட போது உகந்து அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர், அவர் தேவர், என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.
[ 3]
78 6.062 - திருநாவுக்கரசர் எத் தாயர், எத் தந்தை,
ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்;
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்;
தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்-
ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[ 2]
79 6.062 - திருநாவுக்கரசர் எத் தாயர், எத் தந்தை,
ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான், ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று,
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன் திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர்
அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
[ 3]
80 6.067 - திருநாவுக்கரசர் ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்
அளை வாயில் அரவு அசைத்த அழகன் தன்னை, ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை, வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை, உலப்பு இலியை, உள் புக்கு என் மனத்து மாசு
கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.
[ 3]
81 6.075 - திருநாவுக்கரசர் சொல் மலிந்த மறைநான்கு ஆறு
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க்
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
[ 10]
82 6.084 - திருநாவுக்கரசர் பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை, உம்பர் மணி முடிக்கு அணியை, உண்மை நின்ற
பெருகு நிலைக் குறியாளர் அறிவு தன்னை, பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை, பின்னும்
முருகு விரி நறுமலர் மேல் அயற்கும் மாற்கும்
முழுமுதலை, மெய்த் தவத்தோர் துணையை, வாய்த்த
திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
[ 3]
83 6.094 - திருநாவுக்கரசர் இரு நிலன் ஆய், தீ
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் மாகி, இயமானனாய், எறியும் காற்றும் மாகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி யாகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை யாகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே!.
[ 1]
84 6.095 - திருநாவுக்கரசர் அப்பன் நீ, அம்மை நீ,
வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;| வெய்ய வினைப் பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;| எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி,| அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர்,| செவ்வான வண்ணர், என் சிந்தையாரே.
[ 2]
85 6.095 - திருநாவுக்கரசர் அப்பன் நீ, அம்மை நீ,
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?.
[ 3]
86 6.095 - திருநாவுக்கரசர் அப்பன் நீ, அம்மை நீ,
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; | குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; | நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; | வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; |என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?.
[ 9]
87 6.098 - திருநாவுக்கரசர் நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
[ 1]
88 7.007 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் மத்தயானை ஏறி, மன்னர் சூழ
கூசம் நீக்கி, குற்றம் நீக்கி, செற்றம் மனம் நீக்கி,
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை
ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
[ 7]
89 7.021 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே;
தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்;
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .
[ 9]
90 7.026 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
மறி சேர் கையினனே! மதமா உரி போர்த்தவனே!
குறியே! என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்;
நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
[ 4]
91 7.040 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் வள் வாய மதி மிளிரும்
அருமணியை, முத்தினை, ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை, அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
[ 7]
92 7.051 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து அயர்வேன்; அயராமே
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அரு மருந்து, என் ஆரமுதை,
வெங்கனல் மா மேனியனை, மான் மருவும் கையானை,
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[ 4]
93 7.051 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
வல்-நாகம் நாண், வரை வில், அங்கி கணை, அரி பகழி,
தன் ஆகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை,
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
என் ஆகப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
[ 6]
94 7.056 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஊர்வது ஓர் விடை ஒன்று
மாயம் ஆய மனம் கெடுப்பானை, மனத்துளே மதி ஆய் இருப்பானை,
காய மாயமும் ஆக்குவிப்பானை, காற்றும் ஆய்க் கனல் ஆய்க் கழிப்பானை,
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை, ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை,
வேய் கொள் தோள் உமை பாகனை, நீடூர் வேந்தனை, பணியா விடல் ஆமே?
[ 8]
95 7.059 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப்
பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை,
ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,
ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .
[ 3]
96 7.060 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் கழுதை குங்குமம் தான் சுமந்து
ஐவகையர் அரையர் அவர் ஆகி, ஆட்சிகொண்டு, ஒரு கால் அவர் நீங்கார்;
அவ் வகை அவர் வேண்டுவது ஆனால், அவர் அவர் வழி ஒழுகி, நான் வந்து
செய்வகை அறியேன்; சிவலோகா! தீவணா! சிவனே! எரிஆடீ!
எவ் வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது(வ்) உறை எந்தைபிரானே!.
[ 8]
97 7.067 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
பந்தித்த வல் வினைப் பற்று அற, பிறவிப்-படுகடல் பரப்புத் தவிர்ப்பானை;
சந்தித்த(த்) திறலால் பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு,
சிந்தித்தற்கு எளிது ஆய், திருப்பாதம், சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை;
வந்திப்பார் தம் மனத்தின் உள்ளானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே .
[ 7]
98 7.084 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை, வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை,
மூவர் உருத் தனது ஆம் மூல முதல் கருவை, மூசிடும் மால்விடையின் பாகனை, ஆகம் உறப்
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை, பால் நறுநெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை,-
காவல் எனக்கு இறை என்று, எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .
[ 7]
99 7.091 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
என்(ன்)னது எழிலும் நிறையும் கவர்வான்,-
புன்னை மலரும் புறவில்-திகழும்-
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்,
உன்னப்படுவான், -ஒற்றியூரே
[ 4]
காப்பு
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்களன்று காண்
பொழிப்பு : நல்ல யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானை (நாம்) அடைந்து வழிபட்டால், பின்பு (நமக்கு) எந்தக் கலைஞானமும் கற்க வேண்டிய பண்டமன்று| (அவனருளால் எல்லா ஞானமும் எளிதிற் பெறுவோம்.)
குறிப்பு : குஞ்சரம்-யானை, சரக்கு-பண்டம், இனி கன்று நண்ணில் என்பதற்கு விநாயகப் பெருமான் எமது அன்புள்ளத்தில் எய்தி வீற்றிருந்தால் என்பது பொருள்,
1ஆம் அதிகாரம்: பதுமுது நிலை
அஃதாவது அநாதியான இறைவனது பழம்பொருள் நிலை
பதியின் பொது இயல்பு
1. அகர உயிர்போல் அறிவா எங்கும் நிகரில்இறை நிற்கும் நிறைந்து.
பொழிப்பு : அகரமாகிய உயிரெழுத்து (ஏனைய எல்லா எழுத்துக்களிலும் கலந்திருந்து அவற்றை ஒலிப்பித்தல்) போலவே தன்னிகரில்லாத இறைவனும் எங்கும் எவற்றிலும் அறிவாகக் கலந்து நிறைந்து நின்று இயக்குகின்றான்.
குறிப்பு: நிகரில். இறை-தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கடவுள், ஒப்பில், உணர்வால் உணர்தற்குரியன்.
பதியும் அதன் சத்தியும்
2. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்.
பொழிப்பு : எங்கள் பிரானாகிய சிவன், (பதியாகிய) தனது (பாசபந்தமற்ற) நிலையை, நிலைபேறுடைய பசுக்கள் சேரும்படி உபகரிக்கின்ற திருவருட் சத்தியோடு என்றும் பிரியாதிருப்பன்.
குறிப்பு : தன்னிலை – சிவத்துவம்; சிவன் – பாசபந்தமுடைய பசு. அது பந்தமற்ற சிவத்துவத்தை அடைய வழிப்படுத்துவது சிவசத்தி, அச்சத்தியும் சிவமும் என்றும் பிரிவின்றி, அபின்னமாய் இருக்கும். சிவசத்தியே ஐந்தொழிலாகிய உபகாரத்தால் பசுவின் பந்தமறச் செய்து, சிவத்துவமாகிய. வீடு பெறச் செய்வதாம் அதைத் திருவருள் என்றுஞ் சொல்வர்; சத்தி சிவசம்பந்தம் சூடும் நெருப்பும் பொன்றது.
பதியின் பெருமை
3. பெருமைக்கும் நுண்மைக்கும் பேரட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.
பொழிப்பு : இறைவன் பெருமையிலும் நுண்மையிலும் பேரருள் உடைமையிலும் பெறுதற்கருமையிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
குறிப்பு : பெருமை – அண்டங்கள் அணுவாக அடங்கும் வியாபக நிலை. நுண்மை-அணுக்கள் அண்டமாய்த் தோன்றப் பரமாணுவிலும் நுட்பமாயிருத்தல். பேரருள் – எல்லையில்லா அருளுடைமை. பேற்றினருமை-அரும் பெருந் தவத்தாலன்றி அடையமுடியாமை, இவற்றில் இறைவன் தன்னொப்பாரும் தன்னின் மிக்காருமில்லாத தனிப்பெரு முதல்வன்.
பதியும் ஐந்தொழில்களும்
4. ஆக்க எவையும் அளித்தா சுடனடங்கப்
போக்குமவன் போகாப் புகல்.
பொழிப்பு : (உலகு உயிர். ஆகிய) எவற்றையும் படைத்தும், விதித்த காலவரை வாழும்படி) காத்தும், (உரிய காலத்தில், ஆணவதோடு கேவலமாய்த் தன்னுள் அடங்கும்படி அழித்தும் (இங்ஙனம் முத்தொழிலையும்) நடத்தும் இறைவன் (உயிர்களுக்கு என்றும்) நீங்காத புகலாவான்.
குறிப்பு : ஆன்ம ஈடேற்றத்துக்காகவே ஆக்கல், அளித்தல், அழித்தல், ஆகிய தொழில்களை ஆடலாக நடத்துகின்றான். மகா சங்காரத்தில் ஆணவத்தோடு மாத்திரம் கேவலநிலையில் ஆன்மா வைத்தன்னுள்ஒடுக்குவன். பின் மகாசிருட்டி ஆரம்பத்தில் அவ்வவற்றுக்குரிய மாயா கன்மங்களையுங் கூட்டி சகலாவத்தைப் படுத்துப் படைப்பான். உயிர்கள் எடுத்த உடப்புக்குரிய இருவினைப் பயனை நுகரும்வரை ஊட்டிக் காப்பான். ஆகவே. எந்த நிலையிலும் உயிர்க்கு என்றும் ஆதாரம் இறைவனே.
பதியின் மூவகைத் திருமேனிகள்
5. அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொழிப்பு: அருவமும் உருவமும் அருவுருவமும் அறிஞர்களுக்கு அறிவுருவும் -ஆகிய திருமேனிகளை உடையானாய் ( அவ்வவர் பக்குவத்திற்கேற்க நின்று அருள் புரிய) உளன் எம்மிறைவன்.
குறிப்பு: இறைவன் தனக்கே உரிய நித்த சுத்த சொரூப நிலையில் குறிகுணஞ்செயல் ஏதுமில்லா அரூபியாக இருப்பன். உயிர்களுக்கு இரங்கி ஐந்தொழில் நடத்தும் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு குணங்குறி செயலுடைய தடத்த மூர்த்திகளாவர். அவ்வகையில் பிரம விஷ்ணு உருத்திரன். மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவத் திருமேனியராவர், சதாசிவ மூர்த்தியாகிய சிவலிங்கம் அருஉருவத் திருமேனியாகும். மெய்யுணர்ந்த ஞானிகளால் ஞானந்தானுருவாகக் காணநின்று அருள்புரிவன. இவ்வாறு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப நின்று வழிபாட்டை ஏற்று அருள்புரிவன்.
பதியின் மேலானவர் இல்லை
6. பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பொழிப்பு: பலவாகிய அரிய உயிர்கள் (உடம்பை எடுத்துக்கருவி கரணங்களோடு கூடிநின்று அறிவிக்க) அறிகின்ற முறை பாலில்லாது, (அறிவிப்பானும் அறிதற்கருவிகளின் துணையும் இல்லாமல், இயல்பாகவே முற்றும் அறியவல்ல முதன்மை உடையான் எம்மிறைவன்.
குறிப்பு : உயிர்கள் கருவிகளோடு பொருந்தி மேலொருவன் நின்று உணர்த்த உணர்வன. காட்டுஞ் சூரியனும், காணும் கண்ணுமின்றி உயிர் ஒன்றையுங் காணமாட்டாது. இறைவனோ காட்டுவானுங் கருவியும் இல்லாமல் இயல்பாக முற்றம் அறிவான். உயிர்களின் அறிவு சிற்றறிவு | சுட்டறிவு. ஒன்றை அறியும் போது பிறவற்றை மறந்து விடும். அறை அறிவு சுட்டிறந்த முற்றிறவு, உயிர்களுக்கு அறிவிப்பவனாகிய மேலோருவன் இறைவன். அவனுக்கு அறிவிப்பாரில்லை.
பதி அன்புடையார்க்கு எளியார்
7. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொழிப்பு: வானவராலும் அறியமுடியாத எம்மறைவன், தன்னுடைய அடியவர்களுக்கு கொடாத அறிவாகப் பொருந்தி என்றும் அவர்களை விட்டகலாதிருந்து அருள்புரிவான்.
குறிப்பு : வானாடர் – வானவர் – தேவர். ஆனா அறிவு – கொடாத அறிவு – குறையாத யுhனம். மன் – பதி_ கடவுள்.
பதியின் அத்துவித நிலை
8. எங்கும் எவையும் எரியுறுநீர் போல்ஏகம்
தங்கமவன் தானே தனி.
பொழிப்பு : வெந்நீரிலே வெப்பமானது எங்கும் ஒரே மாதிரக் கலந்திருத்தல்போல, உலகெங்குமுள்ள எப்பொருளிலும் ஒரே மாதிக் கலந்து நிறைந்திருக்கும் இறைவன் (அவற்றால் தான் கட்டுண்ணாது) தன்னியல்பாகத் தனித்து நிற்பன்.
குறிப்பு : எரியுறுநீர் – வெப்பமூட்டி;ய நீர், வெந்நீர், சூரியன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தன் சக்தியாலே ஈர்த்து இயக்கி எல்லாவற்றுடனும் தொடர்புற்றிந்தாலும், இவற்றால் தன்னிலை மாறாது தனித்திருத்தில் போலவே இறைவனும் எல்லாவற்றிலும் கலந்து நின்று இயங்கும் தொடர்புகொண்டிருந்ததும் தான் தனித்தே இருப்பன்.
பதி ஆன்மாக்களக்கு நன்மை செய்பவர்
9. நலமில் நண்ணார்க்க நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்.
பொழிப்பு: இறைவன் தன்னை அடையாதார்க்கு நல்லவன்போல இரான், தன்னை அடைந்தவர்க்கு நல்லவனாகவே இருப்பான். ஆயினும் (எவரிடத்தும் விருப்பு வெறுப்பு என்ற) விகாரமிலன், (எல்லார்க்கும் நன்மைகளையே செய்வதால்) அவன் பெயர் சங்கரன் ஆகும்.
குறிப்பு: நண்ணார்-அடைந்து வழிபடாதவர், நண்ணினர்-வழிபடுவோர். சலம்-விருப்பு வெறுப்பாகிய விசாரம். சம்£கரன்-சுகம் செய்பவன். ஆன்மா துன்பத்துக்கு ஏதுவான மலங்களில் இருந்தும்- நீங்கி முத்தி பெறுதலாகிய சுகத்தைச் செய்பவன். சூரியன் ஒளி தருவதைக் குருடன் அறியான். நெருப்பு குளிரை நீக்கும் என்பதை அணுகாதவன் அறியான். அவ்வாறே இறைவனை அடைந்து வழிபடாதவர் அவனை நல்லவனாக அறியமாட்டார்.
பதியை வழிபடுதலால் வரும் பயன்
10. உன்னுமுளது ஐயமிலது உணர்வாய் ஓவாது
மன்னுபவந் தீர்க்கும் மருந்து.
பொழிப்பு : (உயிர்களுக்கு) உள்ளுணர்வாய் நீங்காதிருந்து கொண்டே அவ்வுயிர்களில் நிலைபெற்றிருக்கிற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்தாகிய இறைவன் உள்ள பொருளே, இதில் ஐயமில்லை, (அவ்விறைவனை) தியானிப்பீராக.
குறிப்பு: பவம்-பிறப்பு-இவ்வுருவகத்தில் ஆன்மாவே நோயாளி, பிறவியே நோய். அதற்குத் திருவருளே மருந்து. வைத்தியநாதன் சிவபெருமானே, ஆதலால் நோயை நீக்க அவனை வழிபடுவதே வழியாம்.
2ஆம் அதிகாரம்: உயிரவை நிலை
அஃதாவது ஆன்மாவின் இயல்பு.
ஆன்மாக்கள் எண்ணில்லாதன்
1. பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாளன் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
மொழிப்பு : உயிர்களில் பாசங்களைத் துறந்தோர் தொகை பிறந்தநாட்களின் எண்ணிக்கை அளவாம்; இனிப்பாசத்தை நீக்கி முத்தி பெற உள்ளவற்றின் தொகை இனிமேல் பிறக்க உள்ள நாளின் எண்ணிக்கை அளவாம்.
குறிப்பு: ஆன்மாக்கள் பாசபந்தம் நீங்கி முத்திபெற்றனவும் இனி நீக்கி முத்திபெற உள்ளனவும் என இரு பிரிவினர்; ஆனால் அவை எண்ணிலடங்காத அளவின் பிறந்தநாள் – கழிந்த நாள்கள்.
ஆன்மாக்கள் வகை
2. திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயும் உளர்.
பொழிப்பு : (அந்த ஆன்மாக்களில் முத்திபெராதவை) மூன்று மலங்களும் (ஆணவம், கர்மம், மாயை) உள்ள சகலரும், (அவற்றில் ஒன்றாகிய). மாயாமலம் மாத்திரம் நீங்கிய பிரளயாகலரும், ஒருமலம் (ஆணவம்) மாத்திரமே உடைய விஞ்ஞானாகலரும் என மூவகையினராய் உளர்.
குறிப்பு: திரி-மூன்று, முத்திபெறாத ஆன்மாக்கள் சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர் என மூன்றுவகையின ஒன்றதனிற் சென்றார்- பிரளயாகவர். ஒரு மலத்தார்-விஞ்ஞானாகலர், தரிமலத்தார்-சகலர்.
மூவகை ஆன்மாக்களின் வேறுபாடு
3. மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்
தோன்றலர்தொத் துள்ளார் துணே.
பொழிப்பு: மூவகை ஆன்மாக்களும் மூலமலத்தோடு (ஆணவத்தோடு பொருந்தியவர்கள்; துணைமலமாகிய மாயாமலம் உள்ள சகலர் தம்மை மலங்கள் தொத்தியிருப்பதை அறியார்.
குறிப்பு : மூலமலம்-ஆணவம், இது மூவகை ஆன்மாவிலும் உண்டு துணைமலம்-மாயாமலம் இது சகலரிடம் மாத்திரம் உள்ளது. தொத்து- மலம்; தோன்றலர்-அறியார். துணை உள்ளார் தொத்துத் தோன்றலர் எனச் சொற்களைக் கூட்டுக. ஆடையிலுள்ள அழுக்கை நீக்கச் சவர்க்காரமாகிய புதிய அழுக்கையும் சேர்த்துப் பின் கழுவுவது போல், ஆன்மாவின் மூலமல அழுக்கை நீக்கப் புதிதாகச் சேர்த்த மலம் மாயை ஆதலால் துணை எனப்படும். ஆன்மா சிறிது அறிவைப் பெறத் துணை செய்வதும் மாயையாகும். சகலர் தாம் பாசபந்த முற்றிருப்பதை அறியார். எனவே பிரளயாகலரும் விஞ்ஞானாகலரும் அதனை அறிவர் என்பதாம்.
ஆன்மா தனக்கென வலிமையில்லாதது
4. கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கயீடுந்
திண்டிறலுக்கு என்னோ செயல்.
பொழிப்பு : தான் நனவிலே கண்ட அநுபவத்தை நாடோறும் கனவிலே மாறுபாடாகக் காணுகின்ற ஆன்மாவுக்கு என்ன சுதந்திரம் உள்ளது.
குறிப்பு : நனவு (விழிப்பு), கனவு, உறக்கம் என மூன்று அவத்தைகள் நமக்கு வருகின்றன| நனவில் இருக்கும்போது நம்மைச் சுதந்திரர் என்று எண்ணுகிறோம். ஆனால் கனவும் உறக்கமும் நமது எண்ணத்தை மீறி நமக்கு வருகின்றன. உறக்கத்தில் ஒன்றும் அறியாது கிடக்கிறோம். கனவிலோ, நாம் விழித்திருக்கும்போது கண்டதை மாறுபடக் கண்டு மருளுகிறோம். ஆதலால் ஆன்மாவுக்குச் சுதந்திரம் இல்லை. இறைவனே சுதந்திரன், அவனது ஆணைவழி நடக்கும் பரதந்திரரே உயிர்கள் திண்டிறல்- பெரிய வலிமையுடையது. என்றது இகழ்ச்சிக் குறிப்பு-வலியற்ற ஆன்மா என்பதாம்.
ஆன்மா தானாக அறியும் தன்மையில்லாதது
5. பொறியின்றி ஒன்றும் புணராத புந்தக்கு
அறினெ;ற பேர்நன் றற.
பொழிப்பு: கண்முதலான பொறிகளின் துணையில்லாமல் தானாக ஒன்றையும் அறியமாட்டாத. ஆன்மாவுக்கு அறிவு என்ற பெயர் மிக தல்ல பொருத்தம்.
குறிப்பு : அறநன்று-மிகவும் நன்று| இதுவும் இகழ்ச்சிக் குறிப்பு பொருத்தமற்றது என்பதாம். புந்தி, அறிவு என்பன ஆன்மாவுக்கு. வழங்கும் பெயர்கள் | கண் முதலான அறிதற்கருவிகளின் துணை கொண்டு அறிவித்தால் அறியவல்லதே ஆன்மா தானாக அறியாது அறிவிக்க அறியும் தன்மை இருப்பதால் ஆன்மாவை அறிவென்றும் சித்தென்றும் சொல்வர்,
ஆன்மா உணர்த்த உணரும் தன்மையுள்ளது
6. ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவி லெனில்என் செய,
மொழிப்பு : விழித்திருக்கும் கண்ணுக்கு சூரிய ஒளியும் இருளும் உலகத்துப் பொருள்களும் ஆகிய இவற்றைக் காணமுடியாவிடில், கண்ணால் என்ன பயன்? அன்றியும் இவற்றால் அக்கண்ணுக்குத்தான் பயன் என்ன?
குறிப்பு : அலர்கண்-விழித்தகண், ஒளி இருள் பொருள் இவற்றை அறியாத கண் குருடு, குருடருக்காகப் படைக்கப்படவில்லை. இவற்றைக் காணும் பார்வை உடையவருக்காகவே படைக்கப்பட்டன. அதுபோலவே உயிர்களுக்கு அறியுந்தன்மை சிறிதுமில்லையாயின் உலகம் படைக்கப்பட்டதால் ஒரு பயனுமில்லை. உயிர்கள் அறிவிக்க அறியும் அறிவுடைமையாலேயே உலகம் படைக்கப்பட்டது. அவை உய்திபெற உபகரிக்கப்பட்டது.
ஆன்மா சதசத்தாம் தன்மையுள்ளது
7. சத்தசத்தைச் சாராது அசத்தறியாது அங்கணிவை
உய்த்தல்சத சத்தாம் உயிர்.
பொழிப்பு: சத்தாகிய இறைவன், அசத்தாகிய பாசத்தைச் சாரவும் அறியவும் வேண்டுவதில்லை அசத்தாகிய பாசம் தானாக எதையும் சாரவும் அறியவும் வல்லதன்று எனவே அவ்விரண்டையும் சாருவதும் அறிவதும் (பொய்ச் சார்பாகிய பாசத்தை விட்டு மெய்ச்சார்பாகிய பதியைச் சார்வதும்) ஆகிய ஆன்மா சதசத்து எனப்படும்.
குறிப்பு: சத்து உள்ளபொருள்; அசத்து- இல்பொருள். சதசத்து ஒருகால் உள்ளதும் ஒருகால் இல்லதும்போலக் காணப்படுவது. சித்து-அறிவுப்பொருள். அசத்து-அறிவில்பொருள், சதசித்து-அறிவித்தால் அறியும் பொருள், ஆன்மா சத்து அல்லது சத்து எனப்படும். பதியேயானால், அது இயல்பாக எல்லாவற்றையும் ஒருங்கு அறியவேண்டும், ஆனால் ஆன்மா அறிவிக்கும்போதே ஒவ்வொன்றாகச் சுட்டி அறியும். அசத்தாகியபாசமோ அறிவித்தாலும் அறியாது. ஆதலால் ஆன்மாசத்தாகிய பதியுமன்று, அசத்தாகிய பாசமுமன்று, எனவேதான் அது “சதசத்து” எனப்படுகிறது. சூரிய ஒளியில் நட்சத்திரம் இல்பொருள்போல மறைந்தும், இருளில் உள்ள பொருள்போல விளங்குவதும் எப்படியோ அப்படியே பதியோடு ஒப்பிடப் பசு இல்பொருள் போலவும், பாசத்தோடு ஒப்பிடப் பசு உள்ள பொருள்போலவும் தோன்றுதலாலும் சதசத்தாகிறது,
ஆன்மா சார்ந்ததன் வண்ணமாம் தன்மையுள்ளது
8. இருளில் இருளா எல்லிடத்தில் எலலாம்
பொருள்கள் இல்தோ புவி.
பொழிப்பு : இருளில் கடக்கும்போது இருள்போலவே இல்பொருளாகியும், ஒளியில் இருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் பளிங்கு முதலான பொருள்கள் உலகில் இல்லையா? (அது போலவே ஆன்மாவும் இருளாகிய பாசத்தோடு கூடியிருக்கும்போது பாசம்போல இல்பொருளாகியும், ஒளியாகிய திருவருளோடு கூடியிருக்கும்போது ஒளிபோல உள்ள பொருளாகியும் தோன்றும் என்பதாம்.
குறிப்பு : எல்-ஓளி- சூரியன்| இது பிறிது மொழிதலணி, பாசத்தோடு கூடியிருக்குப்போது இல்பொருள்போல மறைந்தும், திருவருளோடு கூடியிருக்கும்போது உள்ள பொருளாய் அறிவு விளக்கம் பெற்றும் ஆன்மா காணப்படுவதாலே அதனைச் ‘சதசத்து’ என்பது தகும், சீவன் திருவருளைச் சார்ந்துவிடின் சிவப்பிரகாசம் பெற்று விளங்கும்.
ஆன்மா கடவுளை அறியாதபடி மலம் மறைக்கின்றது
9. ஊமன்கண் போல ஒளியும் மிகவிருளே
யாம்மன்கண் காணா தவை.
பொழிப்பு : இறைவனது திருவருட்கண் காட்டக் காணாத கண்களுக்குக் கோட்டானின் கணணைப்போலத் திருவருளாகிய ஒளியும் இருளாகவே தோன்றும்.
குறிப்பு : ஊமன் – கூகை – கோட்டான். அதற்குப் பகலில் கண் தெரியாது) இரவிலேதான் தெரியும். மன்கண் – இறைவனுடைய திருவருட்கண். பக்குவமடைந்த ஆன்மாவுக்குத் திருவருளாகிய கண்காட்டும்போதே அது திருவருளையும் சிவத்தைபும் அறியும். அருள்காட்டாதபோது ஆன்மாவுக்கு அருள் இருளாகவே தோன்றும் இருளாகிய பாசப் பொருள்களே ஒளியாகத் தோன்றும். இது கோட்டானின் கண்ணிலுள்ள குற்றம்போல ஆன்மாவின் பக்குவக் குறைவாகிய குற்றத்தால் வருவது.
ஆன்மா இருவருளின் துணைகொண்டு
மலத்தை நீக்குதல் வேண்டும்
1. அன்றளவும் ஆற்றும்உயிர் அந்தோ அருள் தெரிவது என்றளவொன் றில்லா இடர்.
பொழிப்பு : அளவிட முடியாத பிறவித் துன்பத்தை அன்றுமுதல் இன்றுவரை அநுபவித்து வருகின்ற ஆன்மா, (அத்துன்பத்தை நீக்கும் மருந்தாக) திருவருளை அறிந்துகொள்ளுவதும் அதை அடைந்து பிறவித் துன்பத்தை நீக்குவதும் என்றுதானோ?
3ஆம் அதிகாரம் இருண்மல நிலை
அஃதாவது இருள்போன்ற மூலமலமாகிய ஆணவத்தின் இயல்பு, அதனோடு தொடர்பு பற்றிக் கர்மமலம் மாயாமலம் பற்றியும் கூறப்படும்;.
பதி, பசு ஆகியவைகளைப் போல பாசங்களும்
உள்ள பொருள்கள்
1. துன்றும் பவத்துயரும் இன்புந் துணேப்பொருளும்
இன்றென்மது எவ்வாறும் இல்.
மொழிப்பு : ஆன்மாவுக்கு தொடர்ந்துவரும் பிறவித் துன்பமும் இதற்குக் காரணமான மலங்களும், பிறப்பை ஒழித்த பேரின்பவிடும், அதற்குக் காரணமான திருவருளும் ஆகிய இவைகளை இல்லை என்பது எவ்வகை அளவையாலும் பொருந்தாது.
குறிப்பு : அளவைகள் காட்சி, அநுமானம், ஆகமம் என மூன்றும் பிறப்புத் துன்பமென்பது காட்சியாலறியப்படும். அதற்குக் காரணம் ஒன்று உண்டென்பது அநுமான ஆகம அளவைகளாலே துணியப்படும். பிறப்புத் துன்பமெனவே, பிறப்பொழித்தல் இன்பமென்பது தெளிவு. அதற்குக் காரணமும் உண்டென்பது அறியப்படும். எனவே ஆன்மாவும் மலங்களுஞ் சிவனருளும் உள்ள பொருள்களே, அவற்றை இல்லையென ஒரு நியாயமும் இல்லை.
ஆணவ மலத்தின் இயல்பு
2. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
பொருளாக நிற்கும் பொருள்.
பொழிப்பு : எப்பொருளையும் தன்மயமாக்கி ஒரே பொருளாகக் காட்டி நிற்கும் பொருள் இருளன்றி வேறில்லை.
குறிப்பு : இது பிறிதுமொழிதலணி| ஒளி எப்பொருளையும் பகுத்தறியும்படி காட்டும். இருள் எப்பொருளையும் தன்வயமாக்கி இருளேயாக்கிப் பகுத்தறிய முடியாதபடி மறைக்கும். இதுபோலவே ஆன்மாவைப் பற்றிய ஆணவ இருளும். அது தன்னையும் பிறவற்றையும் பகுத்தறிய முடியாதபடி தன்மயமாக்கி மறைந்து நிற்கும் என்பதாம்.
ஆணவ மலத்தின் கொடிய தன்மை
3. ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டாது இது,
பொழிப்பு : இருள் வேறெப்பொருளையும் காணமுடியாதபடி மறைத்து நின்றாலும் தன்னுருவத்தையாவது காட்டும்; ஆனால் ஆணவ இருளோ பிறபொருள்களை மறைப்பதோடு தன்னையும் காட்டாது.
குறிப்பு : இருளிலே பிறபொருளைக் காணாவிடினும் இருளையாவது காணலாம். ஆணவத் தொடர்பானது. ஆன்மா பிறபொருளையும் காணவிடாது, ஆன்மாவாகிய தன்னையும் காணவிடாது. இருண்மலமாகிய அதனியல்பையும் அறியவொட்டாது. ஆதலால் ஆணவம் இருளினும் கொடியது.
ஆணவ மலம் ஆன்மாவோடு உள்ளது
4. அன்றளவி உள்ளொளியோடு ஆவி யிடையடங்கி இன்றளவும் நின்றது இருள்.
பொழிப்பு : அநாதியாகவே தன்னுள்ளே ஒளியாகிய சிவத்தோடு இருக்கும் ஆன்மாவை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை விட்டகலாது இன்றுவரை நிற்கின்றது ஆணவம்.
குறிப்பு : அனைத்துக்கும் ஆதாரமான சிவம், ஆன்மாவுக்கு உள்ளொளியாய் அநாதியாக இருக்கிறது. ஆணவமும் அநாதியே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது. ஆனால் சிவத்தைப் பற்றமாட்டாது. பற்றிய அவ்வாணவம் ஆன்மாவை மெய்யுணர்வு பெறவொட்டாது மயக்கி நிற்கிறது உள்ஒளி- சிவம்;.
ஆணவ மலம் ஆன்மாவுக்குத் தன்னை வெளிப்படுத்தாது
5. பலரைப் புணர்த்தும் இருட்பாவைக்கு உண்டுஎன்றுங்
கணவர்க்குந் தோன்றாத கற்பு.
மொழிப்பு: ஆணவமாகிய இப்பெண், பல ஆன்மாக்களாகிய கணவரைக் கலந்திருந்த போதிலும், என்றும் அவர்களுக்குத் தன்னுருவைக் காட்டாது மறைந்திருக்கும் உறுதி உண்டு.
குறிப்பு : இவ்வுருவகம் ஆணவத்தை ஒரு பென்னாகவும், அது கலந்திருக்கும் ஆன்மாக்களைக் கணவராகவும், ஆன்மாக்களுக்குத் தன்னைக் காட்டாது மறைக்கும் ஆற்றலைக் கற்பாகவும் கற்பனை செய்யப்பட்டது. ஆணவம் ஒன்றே அது பல சக்திகளை உடையதாய்ப் பல ஆன்மாவையும் பற்றி மயக்கும்.
ஆணவ மலம் ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பது
6. பன்மொழிகள் என் உணரும் பான்மை தெரியாத
தன்மைஇரு ளார்தந் தது.
பொழிப்பு: (ஆணவத்தின் இயல்பை விளக்க) பலவற்றைப் பேசுவதில் பயன் என்ன? (சுருங்கச் சொல்லில்) ஆன்மாவுக்கு மெய்யுணர்வு பெறுந்தன்மையைத் தெரியாதிருக்கும் நிலைமையைத் தந்தது ஆணர்வமே.
குறிப்பு: ஆன்மா, மெய்யுணர்வு பெறவொட்டாது மயங்கிக் கிடக்கும்படி செய்வது ஆணவமே, இருளார்- என்றது இகழ்ச்சிக் குறிப்பு ஆணவம், ஆன்மாவுக்குள்ள உணர்த்த உணரும் சிற்றறிவையும் மயங்கச் செய்து நிற்பது இருண்மலமாம்.
ஆணவ மலம் ஆன்மாவின் குணமன்று
7. இருளின்றேல் துன்பேன் உயிரியல்பேல் போக்கும்
பொருளுண்டேல் ஒன்றாகப் போம்.
பொழிப்பு: ஆன்மாவுக்கு ஆணவமாகிய குற்றம் – இல்லையாயின் பிறவித் துன்பம் வருதற்குக் காரணம் என்ன? (பிறவித் துன்பம் தொடர்தலால் அதற்குக் காரணமாகிய ஆணவம் உள்ளதே) இனி அந்த ஆணவத்தை ஆன்மாவின் குணமென்று கொள்ளலாமெனில் (அதுவும் தவறு. ஏனெனில்) ஆணவத்தைப் போக்கும் பொருளொன்று (திருவருள்) அதனைப் போக்கும் போது (குணம் அழியவே குணமாகிய ஆன்மாவும்) ஒருசேர அழித்துவிடும். (ஆதலால் ஆணவம். ஆன்மாவின் குணமன்று.)
குறிப்பு : ஆன்மாவின் வேறாய் ஆனால் அநாதியே ஆன்மாவோடு தொடர்ந்திருக்கும் பொருள் ஆணவம், அதனாலேயே ஆன்மா பிறவித் துன்பமடைகிறது. அன்றி, இது ஆன்மாவின் குணமன்று. நெருப்பின் குணம் சூடு, சூட்டை ஒழித்தால் குணியாகிய நெருப்பும் இல்லை.
ஆணவ மலம் அநாதயாக ஆன்மாவுடன் உள்ளது
8. ஆசாதி யேல் அனைவ காரணமென முத்திநிலை
பேசாது கவ்வும் பிணி.
பொழிப்பு : ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றியதாயின் அதற்குக் காரணம் யாது? (காரணமின்றியே பற்றுமாயின்) முத்தி பெற்ற ஆன்மாவை (மீளவும்) பற்றுமல்லவா?
குறிப்பு : ஆசு, பிணி என்பன ஆணவத்தைக் குறிப்பன. ஆதி, ஒரு குறித்த காலத் தொடக்கத்தை உடையது, அப்படி ஆணவமானது ஆன்மாவை இடையிலே பற்றுதற்கு ஒரு காரணம் வேண்டும் ஒன்று. இறைவன் கூட்டலாம். அல்லது ஆன்மா கூடலாம். அல்லது ஆணவமே வந்து சேரலாம். கருணை உள்ள இறைவனுங் கூட்டான்;| ஆன்மாவுந்தானே துன்பத்துள் சென்று கூடாது. ஆணவமோ அறிவற்ற சடம்;| ஆதலால் அதுவாக வந்து சேரவும் மாட்டாது. எனவே ஆணவம் அநாதியே உள்ளது. ஆணவந்தானே சேருமெனில் முத்தி பெற்ற ஆன்மாவையும் பற்றலாமே. அப்படிப் பற்றியதில்லை. ஆதலால் அது இடையிட்டு வந்ததன்று.
ஆணவத்தை நீக்கும் வழி
9. ஒன்று மினும் ஒளிகவரா தேல்உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொழிப்பு : (மும்மலங்களில் துணைமலமெனப்படும்) ஒன்றாகிய மாயாமலத்தோடு – உடம்போடு-ஆன்மா கூடியபொழுதும் அறிவைப் பெறவில்லையாயின், அந்த ஆன்மாவை விட்டு எக்காலத்தும் ஆணவம் நீங்காது.
குறிப்பு : மாயா காரியமாகிய உடம்பை எடுத்து உயிர்களைப் பிறக்கச் செய்தது. ஆன்மாவுக்கு இயற்கையாயுள்ள அறியுஞ்சக்தியை வளர்த்து அறியாமைக் கேதுவாகிய ஆணவத்தை நீக்குவதற்கேயாம் பார்வை குறைந்தவன் கண்ணாடியின் துணைகொண்டு தெளிவாகப் பார்ப்பான். கண்ணாடியில்லையேல் காணமாட்டான். அவ்வாறே சிற்றறிவுடைய ஆன்மா. உடம்பின் துணைகொண்டுதான் அறியமுடியும், கண்ணாடியணிந்தாலும் சூரிய ஒளியின்றிக் காணமுடியாது. அதுபோல உடம்போடு கூடி நின்றபொழுதும் ஆன்மா, திருவருள் காட்டும் போதுதான் காணமுடியும். எனவே உயிரை உடம்போடு கூட்டியது, அது அறிவு பெறுவதற்கு இறைவன் செய்த பேருபகாரமாகும்.
மாயை, கன்ம மலங்களின் இயல்புகள்
10. விடிவா மளவும் விளக்கனைய மாயை
வடிவாது கன்மத்து வந்து.
பொழிப்பு : மாயையானது வடிவம் முதலான நால்வசையாய் ஆன்மாக்களின் கர்மத்துக்கு ஏற்றவாறு அமைந்து, (அவ்வான்மாக்கள் திருவருளாகிய) விடிவைக் காணும் வரையில் விளக்குப்போல நின்று உதவும்.
குறிப்பு : வடிவாதி நான்கு-தநு, கரணம், புவனம், போகம் என்பன. ஆன்மா ஆணவ இருளில் ஒன்றுமறியாது கேவலமாய்க் கடந்தது. இறைவன் படைப்புத் தொழிலால் மாயையாகிய உலகில் (புவனத்தில்) அறிவு செயல்களுக்குரிய கருவிகளோடு (கரணங்களோடு) கூடிய உடம்பை (தநுவை) எடுத்துப் பிறந்து இன்பதுன்பங்களை (போகங்களை) அநுபவிக்கச் செய்கிறான். அத் தநு கரண புவன போகங்கள் அவ்வவ்வான்மாவின் திருவினைகளுக்கேற்றபடி வெவ்வேறு விதமாகத் தரப்படும், விடிவாகிய சூரிய ஒளியைப் பெறும் வரையும் இருளில் சிறு விளக்குகள் நமக்குச் சிறிதே ஒளி தந்துதவும். அதுபோல ஆணவ இருளிலே உடைக்கும் ஆன்மாவுக்குச் சிவனருளாகய சூரிய ஒளியைப்பெற்று மெய்யுணர்வு பெறும் வரையும் மாயாகாரியமாகிய நான்கும் சிற்றறிவைத் தந்துதவும். இதனால் ஆணவத்தோடு தொடர்புடைய காம மலம், மாயாமலங்களின் இயல்பும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
4ஆம் அதிகாரம் : அருளது நிலை
அஃதாவது திருவருட் சக்தியின் இயல்பு
திருவருளின் பெருமை
3. அருளிற் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளிற் றலைஇலது போல்.
பொழிப்பு : இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட் செல்வத்தினும் தலையானது வேறு எதுவும் இல்லாதவாறு போல, ஆன்மாவுக்கு (எக்காலத்தும் எவ்வுலகத்தும்) திருவருட் செல்வத்தினும் பெரிதாய செல்வம் பிறிதொன்றும் இல்லை.
குறிப்பு : அகிலம்-உலகம் பொருள்-பொருட் செல்வம், ஒருவனுக்குத் தேவையான எதையும் பெற்றுக்கொள்ள வேண்டப்படுவது பொருட் செல்வமே. அதனாலும் அது ஏனைய செல்வங்களிலும் தலையானதாகும். அது இல்லையேல் வேறு எதுவும் இல்லையாகிவிடும். அப்படியே ஆன்மாவுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் நீங்காத் துணையாய் நின்று உதவும் திருவருட்செல்வம் எல்லாவற்றிலும் பெரியதாகும்.
திருவருளின் செயல்
2. பெருக்கம் நுகர்வினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.
பொழிப்பு : சூரியனைப் போலலே திருவருளும், ஆன்மாக்கள் வினைகளைப் பெருக்குவதற்கும், வினைப்பயனை நுகர்வதற்கும் வழிசெய்வதாய் அனைத்துயிரிலும். எங்கும் பேரொளியாக (அறிவுக்குள் அறிவாக) நின்று உதவும்,
குறிப்பு : சூரிய ஒளி எங்கும் பரந்து காணப்பட அதனுடைய துணை கொண்டே எல்லா உயிர்களும் விரும்பியபடி வேலை செய்து இன்ப துன்பங்களை அநுபவிப்பர். அதுபோலத் திருவருளாகிய பேரறிவொளி உயிர்களிற் கலந்து நின்று இயக்குவதாலேயே அவை நல்வினை தீவினைகளைப் புரிந்து சுகதுக்கங்களை அநுபவிக்கின்றன.
திருவருள் இன்றி எதுவும் இயங்காது
3. ஊனறியா தென்றும் உயிரறியா தொன்றுமிது
தானறியா தாரறிவார் தான்.
பொழிப்பு: உடம்பு சடம் -அறிவில்லது. ஆதலால் எக்காலத்தும் அறியமாட்டாது| உயிரும் (அறிவித்தாலன்றி) ஒன்றையும் அறியமாட்டாது. ஆதலால் திருவருளானது உடம்போடு உயிரைக் கூட்டி அறிவித்தாலறிவதல்லாமல் உயிர் தானாக அறியுமா?
குறிப்பு : ஆன்மா ஆணவ இருளால் மயங்கிக் கிடப்பதால் திருவருள் அறிவித்தாலன்றி எதையும் அறியாது.
திருவருளை அறியாமைக்குக் காரணம்
4. பாலாழி மீனாளும் பான்மைத்து ௮ருளுயிர்கள்
மாலாழி ஆழும் மறித்து.
பொழிப்பு : எங்கும் நிறைந்த திருவருளே ஆதாரமாக வாழும் உயிர்கள்; அத்திருவருளை அறிந்து அநுபவியாது மாயமாகிய உலக இன்பங்களையே மேலும் மேலும் நாடி நிற்றல், பாற்கடலில் வாழும் மீன் அதனை உண்ணாது வேறு இழிந்த பிராணிகளை உண்ணும் தன்மை போலும்,
குறிப்பு: பால் ஆழி – பாற்கடல், மால் ஆழி- மாயாகாரியமான உலக இன்பங்கள்; ஆழமும் – (அதையே பொருளென்று) மயங்கிக் கிடக்கும். மறித்து – மேலும் மேலும், பாலே சிறந்த உணவாயினும் அதனை உண்பதில்லைப் பாற்கடலில் வாழும் மீன், அதன் சிறப்பை அது அறியாது, வேறு அற்ப செந்துக்களையே தின்னும்;, எங்கும் நிறைந்து என்றும் உயிர்க்கு உறுதுணையாய் உதவும் சிறப்புடையது திருவருள். நீர்க்குமிழி போலத் தோன்றி மறைவன உலகத்துச் சிற்றின்பங்கள், திருவருட் பெருமையை அறியாத ஆன்மா அதை விட்டு அற்ப உலக இன்பங்களையே பொருளென்று மேலும் மேலும் தேடி அலைகின்றது. இந்த மயக்க அறிவாலே மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் ஆழுகின்றது.
திருவருளே ஆன்மாவுக்குத் துணை
5. அணுகு துணைஅறியா ஆற்றோனில் ஐந்தின்
உணர்வை உணாரா துயிர்.
பொழிப்பு : தன்னருகே வழிகாட்டியாக வருபவனின் துணையை உணராது செல்லும் வழிப்போக்கன் போலவும், தம்மைக் கருவியாகக் கொண்டு அறியும் உயிரின் தலைமையை அறியாத ஐம்பொறிகள் போலவும், தனக்கு உள்ளுணர்வாக நின்று உதவும் திருவருளின் உப சாரத்தை உயிர் உணராதிருக்கின்றது.
குறிப்பு: ஆற்றோன் – வழிப்போக்கன். ஐந்து-ஐம்பொறி, வழி தடப்போன் வழித்துணையாய் வருபவனின் உதவியை மறந்து தன் காரியத்தையே நினைப்பது போலவும்; ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு அறிவது உயிரேயாகவும். பொறிகள் உயிரை மறந்து தாமே அறிவதாய் எண்ணுவது போலவும், தனக்குத் துணைவனாயும் நாயகனாயும் நின்று உபகரிக்கின்ற திருவருளை உயிரானது உணராதிருக்கின்றது. அதனாலே ஆன்மா தானே அனைத்தையும் அறிவதும் செய்வதுமாகக் கருதுகின்றது.
திருவருளை ஆன்மா அறிவதில்லை
6. தரையை உணராது தாமே திரிவார்
புரையை உணரா புவி.
பொழிப்பு: தாம் வாழ்வதற்கு இத்தரையே ஆதாரம் என்பதை அறியாது தாமே தமக்கு ஆதாரமென்று செருக்குற்றுத் திரிபவரது குற்றத்தை ஆன்மாக்கள் அறியா,
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, தரை – பூமி, தரை – குற்றம், புவி – உலகத்தவர் – ஆன்மா. பூமியே நமக்கு ஆதாரமாய் நமக்கு வேண்டிய அனைத்தையும் தந்து நம் பாரத்தைச் சுமக்கிறது. இதைச் சிலர் உணர்வதில்லை) தாமே தமது ஆற்றலால் வாழுவதாகத் தற்பெருமை பேசித் திரிவர். இது செருக்கென்னும் பெருங் குற்றமாம். இவ்வாறே உயிர்களும் தமக்கு என்றும் ஆதாரமாய் எல்லா உபகாரங்களையும் செய்து நிற்கும் திருவருளின் துணையை உணரா. தாமே தமக்கு ஆதாரம் எனச் செருக்குற்று வாழ்கின்றன, இது ஆணவ மறைப்பால் வரும் குற்றமாம். அதனாலே திருவருளின் துணையின்றித் தாம் வாழ முடியாதென்ற உண்மையை உணர்கிலர். இது, சூரிய ஒளியின் துணைகொண்டு கண்டுகொண்டும் தாமே கண்டதாக எண்ணுவதுபோன்ற நன்றி மறந்த செயலாகும்.
திருவருளை அறியாதார் அடையும் பயன்
7. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.
பொழிப்பு : மலையிலிருந்து கொண்டே மலையைத் தேடுவோரும், நிலத்தில் வாழ்ந்துகொண்டே, நிலத்தைத் தேடுவோரும், வானவெளியில் உலாவிக்கொண்டே வானைத் தேடுவோரும், ஞானமாகிய திருவருளோடு இருந்துகொண்டே அதனைத் தேடுவோரும், தம்மை மறந்து தம்மைத் தேடும் அறிவிலிகளாவர்.
குறிப்பு : மலையிலும் மண்ணிலும் வானவெளியினுள்ளும் இருந்து கொண்டே, அப்படிப் பொருள்களும் உண்டா? அவை நமக்கு ஆதாரமா? என்று ஒருவர் கேட்டால், அவரை அறிவீனர் என்று யாரும் சொல்லுவர்; மது முதலியவற்றால் களித்துத் தன்னையும் மறந்தவனே அப்படிப் பேசுவன், அவ்வாறே, திருவருளே எல்லா வகையாலும் தமக்கு ஆதாரம். நம்மாலாவது ஒன்றுமில்லை என்பதைக் கண்டு கொண்டும், திருவருளாவது எது? என்று வினாவுபவர் தற்கேடரான அறிவீனரேயாவர்.
திருவருளை அறியாதார் நிலை
8. வெள்ளத்துள் நாவற்றி எங்கும் விடிந்இருளாம்
கள்ளத் இறைவர் கடன்.
பொழிப்பு: (திருவருளே தம்மை நடப்பித்து நிற்கவும் அதை மறந்து தாமே தம்மை நடத்திக்கொள்வதாய் எண்ணும்) கள்ளத் தலைவராகிய ஆன்மாவின் இயல்பானது, நன்னீர் வெள்ளத்தினுள் நின்றுகொண்டும் அதனைப் பருகாது தாகத்தால் நாவரண்டு நிற்பவர் தன்மை போலவும், எங்கும் விடிந்து ஒளி பிறந்த பின்னும் ‘விடியவில்லையே, ஒளியைக் காணவில்லையே, எங்கும் இருளாயிருக்கிறதே’ என்று மயங்குபவர் தன்மை போலவும் உள்ளது. இப்படி மயங்குவோர் சகலராகிய ஆன்மா வர்க்கத்தினர்.
குறிப்பு : முன்கூறியபடி மாயாமலம் உடையோர் தாம் மலங்களாலே பற்றப்பட்டிருப்பதையே அறியார். ஆதலால் திருவருளையும் அறியாதவராயே மயங்குகின்றனர் கள்ளத்திறைவர் – பெத்தான் மாக்கள்.
திருவருளை அறியும் வழி
9. பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடும் கடன்.
பொழிப்பு : (ஞானநூற் பொருளாகிய) இத் திருவருளின் இயல்பை மனத்தை வேறு விடயங்களில் செல்லவொட்டாது தடுத்து அடங்கியிருந்து (குருவின் உபதேச வழியே) கேட்டுச் சிந்தித்துத் தெளிக் அடக்கமின்றி இருந்து கேட்பது, பாற்குடத்தின் மேலிருந்து பாலை உண்ணும் பூனையானது அதை உண்பதை விடுத்து (அயலில் ஓடும்) கரப்பான் பூச்சியை உண்பதற்குத் தாவிச் சென்றவாறு போலாய்விடும்.
குறிப்பு : பாற்குடத்தின் மீதிருந்து பாலுண்ணும் பூனை அதை விட்டுக் கரப்பான் பூச்சிமேல் தாவும்போது பாலையும் இழந்து கரப்பானையும் இழந்து தவிக்கும். அது போலவே குரு உபதேசத்தை அடங்கியிருந்து கேளாதவர் இரண்டுங் கெட்டவராய் விடுவர்,
திருவருளை அறியாதார்க்கு முத்தி இல்லை
10. இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமில்லா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.
பொழிப்பு : அதாதியாக இன்றுவரை திருவருளோடு சேர்ந்திருந்தும் ஒரு சிறிதும் அத்திருவருளை அறிந்துகொள்ளமாட்டாத இந்த வெற்றுயிருக்கு வீட்டின்பம் மிகையாகும்.
குறிப்பு : வெற்றுயிர் – அறிவில்லாத உயிர். இன்றுவரை உறுதுணையாய் நின்று எல்லா வகையாலும் உபகரித்துவரும் இருவருளின் இயல்பை உணருஞ் – சத்தியற்ற ஆன்மாவுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்தாலும் அதை அநுபவிக்கும் சத்தியும் இல்லை. ஆதலால் வீடு மிகை எனப்பட்டது. அளவுக்கு மிஞ்சிய சுமையாகும். எத்தனை காலமானாலும் திருவருளை அறிந்து. அதன் துணைகொண்டே அது தரவே வீட்டின்பத்தை ஆன்மா அடையமுடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.
5ஆம் அதிகாரம் : அருளுரு நிலை
அஃதாவது திருவருளே உருவாய் வரும் குருவின் இயல்பு
திருவருளே குருவாக வருகிறது
1. அறியாமை உண்ணின்று அளித்ததே காணும்
குறியாது நீங்காத கோ.
பொழிப்பு : (பக்குவமடையாத ஆன்மாவுக்கு) அறியாவண்ணம் (உயிருக்குயிராய் நின்று ஐந்தொழில்களால்) ௨பகரித்தலைச் செய்து வந்த திருவருள்தானே, (பக்குவமடைந்த ஆன்மாவுக்கு) வெளியே கண்டறியக்கூடியவண்ணம் (ஊரும் பெயரும் உருவும் செயலுமுடைய) குருவடிவாக வந்து உபகரிப்பதாய் (அபக்குவ நிலையில் அருவாயும் பக்குவ நிலையில் உருவாயும் பொருந்து) எக்காலத்தும் நீக்காது நின்று அருள்புரியும் மேலான பொருளாகும்.
குறிப்பு : அறியாப் பருவத்தும் அறியும் பருவத்தும் குழந்தையைப் பேணும் தாய்போலவே, திருவருளும் ஆன்மாவை அறியாப்பக்குவத்தில் அறியாத அருவாயும் அறியும் பக்குவத்தில் அறியும் உருவாயும் (குரு வடிவாயும்) நீங்காதே நின்று௨பகரிக்கும்,
திருவருள் குருவாக வருவதற்குக் காரணம்.
2. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.
பொழிப்பு : வீட்டிலுள்ள ஒருவருக்கு உற்ற நோயினை அவ்வீட்டில் அவரோடு உடனுறைபவர் அறிவாரேயன்றி அந்நோயினை (அவ்வீட்டுக்கு வெளியில்) ஊரில் வாழ்பவர்களும் அதிந்துகொள்ள முடியுமா? (அறியமாட்டார்).
குறிப்பு : இது பிறிதுமொழிதல் அணி, அகம்-வீடு. உள்ளினா வீட்டினுள்ளிருப்போர். சகத்தவர் – (வீட்டாரல்லாத) ஊரவர். ஒரு வீட்டிலுள்ளவருக்கு உற்ற நோயை அவ்வீட்டிலுடனுறையும் ஒருவரே அறிவார்; பிறர் அறியார். அதுபோல உடம்பாகிய வீட்டினுள் வசிக்கும் உயிருக்குள்ள மலநோயினை அவ்வுயிர்க்குள்ளுயிராய் உடனுறையும் திருவருளே அறியவும் பரிகரிக்கவும் வல்லதன்றிப் பிறரால் இயலாது. எனவே அத்திருவருளே நோயின் இயல்பறிந்து உரிய காலத்தில் குருவாகவந்து நோய்தீர்க்கும் என்பதாம்.
திருவருளே குருவாக வருதலை ஆன்மாக்கள் அறிவதில்லை
3. அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருளார் அறிவார் புவி.
பொழிப்பு : (பக்குவஅமடையாத ஆன்மாவுக்கு) அது அறியாhத வண்ணமே (ஐந்தொழிலாகிய) அருளைச் செய்துகொண்டிருந்தது. போலவே, (பக்குவங் கண்டபொழுது) குருவடிவாகி அருள்புரியவந்த திருவருளின் இயல்பைக் (குரு உபதேசம் பெற்றவர் அறிவதன்றி) இவ்வுலகில் பிறரும் அறிவாரோ (அறியார்).
குறிப்பு: இவ்வதிகாரத்து முதற்குறளின் பொருளை இதனோடு பொருந்த நோக்குக. “அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரனா அருளிய பெருமையை” என்ற திருவாசகப் பகுதியும் இக்கருத்தையே கூறும்.
குரு உருவை அறியாமைக்குக் காரணம்
4. பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமாம்
மெய்யிரண்டும் காணார் மிக.
பொழிப்பு : பொய்யாகிய உலக இன்பங்களையே பொருளென்று (ஆணவமறைப்பால் கருதும்) அறியாமைமிக்க உள்ளமுடைய நல்விதியில்லாதோர். ஞானமாகிய திருவருளின் அருவடிவினையும், அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவினையும் சிறிதும் அறியார்.
குறிப்பு : பொய் – தோன்றியழியும் உலகத்துச் ஈற்றின்பம்; இருண்ட- இருண்மலத்தால் அறியாமை குடிகொண்ட பொறியிலார ;- நவ்வினைப்பேறில்லாதவர். பொறி-ஊழ்-விதி. போதம்-ஞானம்- திருவருள், ஆம்மெய்-அதுவே உருக்கொண்டுவரும் குருவடிவம். ஆணவமறைப்பால் அறிவிழந்து உலக இன்பங்களில் ஈடுபடுவதால் ஆக்கம்பெறும் ஊழில்லாதவர் – தீவினையாளர். அவர் திருவருளே ஞானமும் குருவுமாம் என்பதனை அறியார்.
குரு உரு வருதலின் காரணம்
5. பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணார் புவி.
பொழிப்பு : காட்டிலுள்ள மிருகங்களைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப் பழக்கிவைத்திருக்கும் பார்வை மிருகம்போலவே, உலகத்துமக்களைத் தீட்சைவழியால் தன்வசப்படுத்துவதற்குத் திருவருள் தாங்கி வரும் மானிடப் போர்வையே குரு என்பதை உலகினர் அறியார்.
குறிப்பு : மானைக்காட்டி மானைப்பிடிப்பது வேட்டையாடுவோர் வழக்கம். அப்படிப் பழக்கிவைத்திருக்கும் மான் பார்வை எனப்படும்; மனிதரை மனித உருவில்வந்து ஆட்கொள்ளுவதுதான் நம்மை வசமாக்க எளிய வழி, ஆகவே திருவருள் மானிட உருவமாகய போர்வையைப் பூண்டு பார்வைபோல வந்து மக்களை ஆட்கொள்ளுகிறது. இவ்வுண்மையைத் தீட்சைபெற்ற சீடனன்றிப் பிறர் அறியார்.
குருவே மலத்தைக் கெடுக்க வல்லவர்
6. எமக்கென் எவனுக்கு எவைதெரியும் அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்.
பொழிப்பு : எவன் எந்தச் சாத்திர வித்தையைக் கற்றுத் தேர்ந்துள்ளானோ, அந்த அந்தச் சாத்திரவித்தைகள் கற்க விரும்புவோருக்கு அவன் குருவாக வேண்டப்பட்டு அவனிடமே கேட்டறியவேண்டுதலால் ‘எமக்குக் குரு எதற்கு’ என்ற கேள்வியைத் தவிர்வாயாக.
குறிப்பு : சிலர் “நாமே சாத்திரங்களைப் பயின்று அறிவுபெற்று இறைவனை அறியலாமே, இதற்குக் குரு எதற்கு” என்று கேட்பர். இது தவருகும். ஏனெனில், எவன் எதை அறிந்தவனோ. அவனிடமே அதைக் கேட்டறிவதே உலகியல்பு. அவ்வகையால் சிவத்தை நன்கு அறிந்தது திருவருளேயாதலால் அத்திருவருளாகிய குருமூலமே நாம் சிவத்தைப்பற்றி அறியமுடியும். வேறு வழி இல்லை. ஆதலால். அக்கேள்வியை வினாவுதலை விடவேண்டியதே முறையாம்.
குரு மலத்தை நீக்கும் முறை
7. விடநகுலம் மேவினும்மெய்ப் பாவகனின் மீளும்
கடனிலிருள் போவஇவன் கண்.
பொழிப்பு: ஒருவனைப்பற்றிய (பாம்பு) விடமானது நகுலந்தானே முன்னேவந்து (பார்த்துப் பரிசித்து) நின்றாலும் அவனைவிட்டு நீங்காது; ஆனால் (தனது மந்திரஜப சாதனையால்) தன்னை மெய்யாகவே த்குலமாகப் பாவித்துக்கொண்டு (பார்த்தல், பரிசித்தல்) செய்யும் மாந்தி ரீகனாலேயே விட்டுநீங்கும் ; இத்தன்மை போலவே ஆன்மாவைப் பற்றிய (விடம்போலுள்ள) ஆணவமும், (தன்னைச் சிவனாகவே பாவனை செய்துகொண்டு தீட்சைசெய்யும்) குருவின் தீட்சைக்ரெமத்தாலேயே ஆன்மாவை விட்டகலும்,
குறிப்பு : நகுலம் – கீரி, பாவகன் – பாவிப்பவன் – மாந்திரிகன் ஒருவனைப் பற்றிய பாம்பு விடத்தை, நகுலபாவனையோ கருட பாவனையோ செய்யும் மாந்திரிகனே போக்குவான். நகுலமோகருடனோ முன்னின்றாலும் நீக்கமுடியாது. அப்படியே ஆன்மாவோடு உடனிருக்கும் திருவருளால் ஆன்மாவின் மலம் நேராகப் போக்கப்படுவதில்லை. தன்னைத் திருவருளாக (சிவமாக)ப். பாவிக்கும் குருவின் தீட்சையாலேதான் நீக்கப்படும்;.
நகுலமானது ஆதிபௌதிக நகுலம், ஆதிதைவிக நகுலம், ஆதியான் மீக நகுலம் என மூவகையாம். உலகில் நாம் காணும் கீரி பௌதிக நகுலம். அதற்கு அதிதெய்வமாயிருப்பது தைவிக நகுலம். நகுலமந்திரவடிவாயிருப்பதும் மந்திர செபஞ் செய்பவனுக்கு அவனிடமாய் நின்று அருள்புரிவதும். “அத ஆன்மீக நகுலம்” எனப்படுஞ் சிவசத்தியாகும், யாதொரு தெய்வத்தை வணங்கனாலும், அத்தெய்வமாய் நின்று அருள்வதுவமே என்பது சைவசமயத் துணிபு, ஆகவே மாந்திரிகனது பாவனையால் அவனிடம் விளங்கிநின்று விடத்தை நீக்குவது ஆதி ஆன்மிக நகுலமாகிய சிவசத்தியே.
திருவருள் மூவகை ஆன் மாக்களுக்கும் அருளும் முறை
8. அகலத்தரும் அருளை ஆக்கும்| வினை நீக்கும்
சகலர்க்கு வந்தருளும் தான்.
பொழிப்பு: ஆணவம் மாத்திரமுடைய விஞ்ஞானாகலரில் பக்குவருக்கு அவர்களது அறிவுக்கறிவாய் நின்று ஆணவமலம் நீக்கும்படியான அருளைச் செய்யும்;, பிரளயாகலரில் பக்குவருக்கு உருவத் திருமேனி தாங்வெந்து கர்மத்தோடு ஆணவத்தை நீக்கியருளும்; சகலரில் பக்குவருக்குக் குருவடிவாக வந்து தீட்சைமுறையால் மும்மலங்களையும் ஒருங்கே நீக்கியருளும்,
குறிப்பு : திருவருள் மூவகை ஆன்மாக்களிலும் பக்குவமுடையவாகளுக்கு எவ்வாறு மலநீக்கமும் மெய்ஞ்ஞான உணர்வும் நல்கி முத்திபெறச் செய்யுமென்பது கூறப்பட்டது.
குரு சிவமேயாவர்
9. ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும்
பேரறிவான் வாராத பின்.
பொழிப்பு:- எல்லா மலப்பற்றுகளும் நீங்கிய நிலையாகிய முத்தி நெறியை உபதேசித்தருளும் பேரருளறிவு வடிவினராகிய சிவபெருமானே (திருவருளே) பக்குவமறிந்து வந்து அருள் புரியாவிடின், யார்தான் முத்திநெறியை அறியவும், ஒழுகவும், முத்திபெறவும் வல்லார் (ஒருவருமில்லை),
குறிப்பு : எல்லாம் அகன்றநெறி எல்லாப்பற்றும் நீங்கிய மெய்ஞ்ஞானியர் செல்லும் முத்திநெறி. பேரறிவாளன் – அருள்ஞான உறவினனான் இறைவன் – திருவருள் மூவர்க்கும் முறையே அறிவாய் நின்றும் உருவத்திருமேனி காட்டியும் குருவடிவாக வந்தும் அருளாவிடின் எவரும் முத்திநெறியைச் சாரமாட்டார் என்பதாம்.
குரு இன்றிப் பதிஞானம் தோன்றுது
10. ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கலனல்
பானு ஒழியப் படின்.
பொழிப்பு : நல்ல சூரியகாந்தக்கல் இல்லாமலே சூரியனால் (பஞ்சில்) இப்பற்றவைக்கப்படுமாயின், குருவின்றியே இறைவனால் (திருவருளால்) சீடனிடம் ஞானம் உதிப்பிக்கப்படும். (எனவே சூரியகாந்தக் கல் நடுநின்று தீயைப் பற்றுவிப்பதுபோலவே குருவும் நடுநின்று ஞானத்தை உதிப்பிப்பன் என்பதாம்.
குறிப்பு : நீற்கல் – நல்ல சூரியகாந்தக் கல். அனல் – தீ. பானு- சூரியன். ‘பானு ஒழிய’ என்பதில் ஒழிய என்பதை ‘நற்கல்’ என்பதோடு சேர்த்து நற்கல் ‘ஒழிய’ எனக்கொண்டு பொருள் கொள்க, நற்கல் என்றது கல்லின் இன்றியமையாமையையும் குருவின் இன்றியமையாமையையும் உணர்த்தியது.
இங்கு காட்டிய உவமையும் பொருளும் ஆகியவை
உவமானம் (உவமேயம்) பொருள்
சூரியன் (ஒளி) சிவம் (திருவருள்)
சூரியகாந்தக்கல்) குரு
பஞ்சு, தீப்பற்றுதல் சீடன், ஞானம்பெறல்
என மும்மூன்று உறுப்புடையனவாகின்றன.
சூரியனுஞ், சூரியகாந்தமும், பஞ்சும் நேர்படும்போதுதான் சூரிய ஒளி சூரியகாந்தத்தினூடு பாய்ந்து பஞ்சை அடைந்து தீயைப் பற்று வித்துப் பஞ்சைத் தீயேயாக்கிவிடும் அதுபோலவே சிவமும். (திருவருளும்), குருவுஞ், சீடனும் நேர்படும் போதுதான் திருவருள் குருவினூடாகப் பாய்ந்து சடனையடைந்து ஞானத்தைத் தோற்றுவித்து அச்சீடனை ஞானந்தானே ஆக்கிவிடும். மூன்றும் நேர்படாதவிடத்துத் தீபற்றுவதும், ஞானம் உதிப்பதும் இல்லை. இக்குறள் சகலருக்கு ஞானம் உதிப்பிப்பதற்குக் குருவின் இன்றியமையை வலியுறுத்தி ஏற்றதோர் உவமையால் விளக்கி நிற்கிறது.
எப்படிச் சூரியோதயம் ஒளி கிடைத்தற்கும் இருள் நீக்கத்திற்கும் காரணமோ. அப்படியே குருவின் தீட்சை, சடனிடம் ஞானம் கிடைப்பதற்கும் பாசவிருள் நீங்குதற்கும் காரணமாம். ஆதலால் இக்குறள் ஏழாம் குறளோடு இணைந்து எட்டாம் குறளாக அமைதலே பொருத்தமாகும். மேலே உள்ள எட்டாம் ஒன்பதாம்குறள்கள் மூவகை ஆன்மாக்களும் மெய்யுணர்ந்து முத்தி பெறுவதைக் கூறுவன. அவை ஒன்பதாம் பத்தாம் குறளாய் அமைவதும், முதலேழு குறளும் சகலர் குருமூலம் மெய்யுணர்ந்து வீடு பெறுவது கூறி வருதலால் குருவைப் பற்றிக் கூறும் இதுவும் முந்தியவையோடு சேர்ந்து எட்டாவதாய் இருப்பதே பொருத்தமாம்.
ஏழாவது குறளின் உவமையையும் இதனோடு பொருந்த நோக்குவது விளக்கத்துக்கு ஏற்றது
உவமானம் (உவமேயம்) பொருள்
ஆதியான்மிக நகுலம் சிவம் (திருவருள்)
பாவகன் (விடந் தீர்ப்பவன்) குரு (இட்சை செய்பவன்)
விடந் தீண்டப்பெற்றவன் பாசபந்தமுற்ற ஆன்மா
பரிகாரத்தால் விடந்தீர்தல் தீட்சையால் பாசம் நீங்கல்
பயன்விட வேதனை நீங்கிச் சுகம் பெறல் பயன் மல நீங்கப் பெற்று சிவானந்தமடைதல்
இரு உவமை விளக்கங்களும் ஒன்றையொன்று தழுவித் தொடர் புற்றிருப்பதனைக் காண்க.
This page was last modified on Sun, 16 Mar 2025 05:36:52 +0000