சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.001  
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி
)
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! | [1] |
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.002  
குறி கலந்த இசை பாடலினான்,
Tune - நட்டபாடை (Location: திருப்புகலூர் God: அக்கினீசுவரர் Goddess: கருந்தார்க்குழலியம்மை)
குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம் நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி, முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின் பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே. | [1] |
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை, கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து, குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.003  
பத்தரோடு பலரும் பொலிய மலர்
Tune - நட்டபாடை (Location: திருவலிதாயம் (பாடி) God: வலிதாயநாதர் Goddess: தாயம்மை)
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி, ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம், சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே. | [1] |
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக, கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.004  
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை (Location: திருவீழிமிழலை God: பிரமபுரீசர் வீழியழகர் Goddess: திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும், பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய் மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே? | [1] |
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி, புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி, நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.005  
செய் அருகே புனல் பாய,
Tune - நட்டபாடை (Location: கீழைத்திருக்காட்டுப்பள்ளி God: ஆரணியச்சுந்தரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)
செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்- கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி, பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம் மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.006  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
Tune - நட்டபாடை (Location: திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் God: மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் Goddess: வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ, மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.007  
பாடக மெல் அடிப் பாவையோடும்,
Tune - நட்டபாடை (Location: திருநள்ளாறும் திருஆலவாயும் God: தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி Goddess: போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை)
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று, நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த, ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே? | [1] |
அன்பு உடையானை, அரனை, கூடல் ஆலவாய் மேவியது என்கொல்? என்று, நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும் பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.008  
புண்ணியர், பூதியர், பூத நாதர்,
Tune - நட்டபாடை (Location: திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) God: பசுபதீச்சுரர் Goddess: மங்களநாயகியம்மை)
புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள் கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம் விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும் பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! | [1] |
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப் பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல், கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.009  
வண்டு ஆர் குழல் அரிவையொடு
Tune - நட்டபாடை (Location: திருவேணுபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம் பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர் தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம் விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.010  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
Tune - நட்டபாடை (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே. | [1] |
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல், அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை, கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.011  
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான், படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான், மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான், விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே. | [1] |
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர் காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம் ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.012  
மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)
மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம் கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே. | [1] |
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர் புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.013  
குரவம் கமழ் நறு மென்
Tune - நட்டபாடை (Location: திருவியலூர் God: யோகாநந்தேசுவரர் Goddess: சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை)
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ, பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன், அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும், விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே. | [1] |
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை, தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன் துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும் விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.014  
வானில் பொலிவு எய்தும் மழை
Tune - நட்டபாடை (Location: திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) God: கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் Goddess: அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி, கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த, தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே. | [1] |
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக் கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி, ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார், ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.015  
மை ஆடிய கண்டன், மலை
Tune - நட்டபாடை (Location: திருநெய்த்தானம் God: நெய்யாடியப்பர் Goddess: வாலாம்பிகையம்மை)
மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான், கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன், செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும் நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே! | [1] |
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார், சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.016  
பால் உந்து உறு திரள்
Tune - நட்டபாடை (Location: திருப்புள்ளமங்கை God: பசுபதிநாயகர் Goddess: பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை)
பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான் போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை, காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில், ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே. | [1] |
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக் கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.017  
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்
Tune - நட்டபாடை (Location: திருஇடும்பாவனம் God: சற்குணநாதர் Goddess: மங்களநாயகியம்மை)
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய், தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி, சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில் இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. | [1] |
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை, அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.018  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை (Location: திருநின்றியூர் God: இலட்சுமியீசுவரர் Goddess: உலகநாயகியம்மை)
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு; பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக் காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும் நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.019  
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல் உடையவன்; நிறை இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்; நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே! | [1] |
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்- மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.020  
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு, அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே. | [1] |
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும் மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள், இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.021  
புவம், வளி, கனல், புனல்,
Tune - நட்டபாடை (Location: திருச்சிவபுரம் God: பிரமபுரிநாயகர் Goddess: பெரியநாயகியம்மை)
புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி, திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே. | [1] |
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர், நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்; புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.022  
சிலை தனை நடு இடை
Tune - நட்டபாடை (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: மறைக்காட்டீசுரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)
சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில் மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே. | [1] |
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்
Tune - தக்கராகம் (Location: திருக்கோலக்கா God: சத்தபுரீசர் Goddess: ஓசைகொடுத்தநாயகியம்மை)
மடையில் வாளை பாய, மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா உளான் சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ் உடையும், கொண்ட உருவம் என்கொலோ? | [1] |
நலம் கொள் காழி ஞானசம்பந்தன், குலம் கொள் கோலக்கா உளானையே வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார், உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.024  
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம் (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா! காவாய்! என நின்று ஏத்தும் காழியார், மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம் பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே. | [1] |
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச் சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.025  
மரு ஆர் குழலிமாது ஓர்
Tune - தக்கராகம் (Location: திருச்செம்பொன்பள்ளி God: சொர்னபுரீசர் Goddess: சுகந்தவனநாயகியம்மை)
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய், திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை மருவாதவர் மேல் மன்னும், பாவமே. | [1] |
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப் பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும் உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.026  
வெங் கள் விம்மு வெறி
Tune - தக்கராகம் (Location: திருப்புத்தூர் God: புத்தூரீசர் Goddess: சிவகாமியம்மை)
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர், கங்கை தங்கும் முடியார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே. | [1] |
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் அல்லல் தீரும்; அவலம் அடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.027  
முந்தி நின்ற வினைகள் அவை
Tune - தக்கராகம் (Location: திருப்புன்கூர் God: சிவலோகநாதர் Goddess: சொக்கநாயகியம்மை)
முந்தி நின்ற வினைகள் அவை போகச் சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்; அந்தம் இல்லா அடிகள் அவர் போலும் கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே. | [1] |
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன், சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர் நாட வல்ல ஞானசம்பந்தன், பாடல்பத்தும் பரவி வாழ்மினே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.028  
செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம் (Location: திருச்சோற்றுத்துறை God: தொலையாச்செல்வர் Goddess: ஒப்பிலாம்பிகையம்மை)
செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம் துப்பன் என்னாது, அருளே துணை ஆக, ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே. | [1] |
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச் சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்! சந்தம் பரவு ஞானசம்பந்தன் வந்த ஆறே புனைதல் வழிபாடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.029  
ஊர் உலாவு பலி கொண்டு,
Tune - தக்கராகம் (Location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) God: சித்தநாதேசர் Goddess: அழகாம்பிகையம்மை)
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த, நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல், சீர் உலாவும் மறையோர் நறையூரில், சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே! | [1] |
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் பத்தும் பாட, பறையும், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.030  
விதி ஆய், விளைவு ஆய்,
Tune - தக்கராகம் (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி, கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன் பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே. | [1] |
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்- புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல் உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.031  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல்
Tune - தக்கராகம் (Location: திருக்குரங்குஅணில்முட்டம் God: வாலீசுவரர் Goddess: இறையார்வளையம்மை)
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும் கழுநீர் குவளை மலரக் கயல் பாயும் கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே. | [1] |
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன் கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம் சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.032  
ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம் (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை; காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ் வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து, ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ. | [1] |
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல் பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.033  
கணை நீடு எரி, மால்,
Tune - தக்கராகம் (Location: திருஅன்பில் ஆலந்துறை God: சத்திவாகீசர் Goddess: சவுந்தரநாயகியம்மை)
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா, இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம், அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே. | [1] |
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.034  
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம் (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல் மடல் ஆர் குழலாளொடு மன்னும், கடல் ஆர் புடை சூழ் தரு, காழி தொடர்வார் அவர் தூ நெறியாரே. | [1] |
நலம் ஆகிய ஞானசம்பந்தன் கலம் ஆர் கடல் சூழ் தரு காழி நிலை ஆக நினைந்தவர் பாடல் வலர் ஆனவர் வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.035  
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம் (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
அரை ஆர் விரி கோவண ஆடை, நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான், விரை ஆர் பொழில், வீழி மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே. | [1] |
நளிர் காழியுள் ஞானசம்பந்தன் குளிர் ஆர் சடையான் அடி கூற, மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.036  
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம் (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)
கலை ஆர் மதியோடு உர நீரும் நிலை ஆர் சடையார் இடம் ஆகும் மலை ஆரமும் மா மணி சந்தோடு அலை ஆர் புனல் சேரும் ஐயாறே. | [1] |
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்- நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்- அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச் சொலும் மாலை வல்லார் துயர் வீடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.037  
அரவச் சடை மேல் மதி,
Tune - தக்கராகம் (Location: திருப்பனையூர் God: சவுந்தரேசர் Goddess: பெரியநாயகியம்மை)
அரவச் சடை மேல் மதி, மத்தம், விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம் நிரவிப் பல தொண்டர்கள் நாளும் பரவிப் பொலியும் பனையூரே. | [1] |
பார் ஆர் விடையான் பனையூர் மேல் சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் ஆராத சொல் மாலைகள் பத்தும் ஊர் ஊர் நினைவார் உயர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.038  
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும்
Tune - தக்கராகம் (Location: திருமயிலாடுதுறை God: மாயூரநாதர் Goddess: அஞ்சநாயகியம்மை)
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே இரவும் பகலும் தொழுவார்கள் சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ் வர மா மயிலாடுதுறையே. | [1] |
நயர் காழியுள் ஞானசம்பந்தன் மயர் தீர் மயிலாடுதுறைமேல் செயலால் உரை செய்தன பத்தும் உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.039  
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
Tune - தக்கராகம் (Location: திருவேட்களம் God: பாசுபதேசுவரர் Goddess: நல்லநாயகியம்மை)
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க; மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி; சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப; வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே. | [1] |
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க, நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.040  
பொடி உடை மார்பினர், போர்
Tune - தக்கராகம் (Location: திருவாழ்கொளிபுத்தூர் God: மாணிக்கவண்ணவீசுரர் Goddess: வண்டார்பூங்குழலம்மை)
பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ, கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி, வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர், கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம். | [1] |
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர் நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன் வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர், சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.041  
சீர் அணி திகழ் திருமார்பில்
Tune - தக்கராகம் (Location: திருப்பாம்புரம் God: பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர், வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர், கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும் பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே. | [1] |
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக் கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார் சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.042  
பைம் மா நாகம், பல்மலர்க்
Tune - தக்கராகம் (Location: திருப்பேணுபெருந்துறை God: சிவாநந்தநாதர் Goddess: மலையரசியம்மை)
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு, செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்; அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே. | [1] |
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.043  
வடம் திகழ் மென் முலையாளைப்
Tune - தக்கராகம் (Location: திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) God: முத்தீசர் Goddess: அஞ்சனாட்சியம்மை)
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து, தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்; இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம் கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே. | [1] |
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.044  
துணி வளர் திங்கள் துளங்கி
Tune - தக்கராகம் (Location: திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) God: மாற்றறிவரதர் Goddess: பாலசுந்தரநாயகியம்மை)
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து, பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே? | [1] |
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன் தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.045  
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
Tune - தக்கராகம் (Location: திருவாலங்காடு (பழையனூர்) God: ஊர்த்ததாண்டவேசுரர் Goddess: வண்டார்குழலியம்மை)
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய் நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய் வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு, அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [1] |
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும், வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும், கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.046  
குண்டைக் குறள் பூதம் குழும,
Tune - தக்கராகம் (Location: திருவதிகை வீரட்டானம் God: அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் Goddess: திருவதிகைநாயகி)
குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி, கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம், வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே. | [1] |
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன், வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச் சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை, வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.047  
பல் அடைந்த வெண் தலையில்
Tune - பழந்தக்கராகம் (Location: திருச்சிரபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய், வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம் செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே? | [1] |
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்
Tune - பழந்தக்கராகம் (Location: திருச்சேஞலூர் God: சத்தகிரீசுவரர் Goddess: சகிதேவிநாயகியம்மை)
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை, ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே? | [1] |
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி, தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்- சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள் வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்
Tune - பழந்தக்கராகம் (Location: திருநள்ளாறு God: தெர்ப்பாரணியர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. | [1] |
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.050  
ஒல்லைஆறி உள்ளமொன்றிக்
Tune - பழந்தக்கராகம் (Location: திருவலிவலம் God: மனத்துணைநாதர் Goddess: வாளையங்கண்ணியம்மை)
ஒல்லைஆறி உள்ளமொன்றிக் கள்ளம் ஒழிந் துவெய்ய சொல்லைஆறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றன் நாமம் நாவில்நவின் ஏத்த வல்லவாறே வந்துநல்காய் வலிவலம்மே யவனே. | [1] |
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப் பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.051  
வெங் கண் ஆனை ஈர்
Tune - பழந்தக்கராகம் (Location: திருச்சோபுரம் (தியாகவல்லி) God: சோபுரநாதர் Goddess: சோபுரநாயகியம்மை)
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்? கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத் தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே! | [1] |
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை, சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான், ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!
Tune - பழந்தக்கராகம் (Location: திருநெடுங்களம் God: நித்தியசுந்தரர் Goddess: ஒப்பிலாநாயகியம்மை)
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும் பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால், குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [1] |
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால் நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.053  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம் (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர் நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,
Tune - பழந்தக்கராகம் (Location: திருஓத்தூர் (செய்யாறு) God: வேதநாதர் Goddess: இளமுலைநாயகியம்மை)
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம குணங்களே. | [1] |
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.055  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
Tune - பழந்தக்கராகம் (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை நீறு சேர் திருமேனியர் சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறு இலா மணிகண்டரே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.056  
கார் ஆர் கொன்றை கலந்த
Tune - பழந்தக்கராகம் (Location: திருப்பாற்றுறை God: திருமூலநாதர் Goddess: மோகாம்பிகையம்மை)
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர், சீர் ஆர் சிந்தை செலச் செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை யார், ஆர் ஆதி முதல்வரே. | [1] |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து-நூறு பெயரனை, பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் பத்தும் பாடிப் பரவுமே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.057  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
Tune - பழந்தக்கராகம் (Location: திருவேற்காடு God: வேற்காட்டீசுவரர் Goddess: வேற்கண்ணியம்மை)
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி வெள்ளியான் உறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில் தெள்ளியார்; அவர் தேவரே. | [1] |
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு கண்டு, நம்பன் கழல் பேணி, சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு பாட, குணம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.058  
அரியும், நம் வினை உள்ளன
Tune - பழந்தக்கராகம் (Location: திருக்கரவீரம் God: கரவீரேசுவரர் Goddess: பிரத்தியட்சமின்னாளம்மை)
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற வரி கொள் மாமணி போல் கண்டம் கரியவன், திகழும் கரவீரத்து எம் பெரியவன், கழல் பேணவே. | [1] |
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம் சேடன் மேல் கசிவால்-தமிழ் நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை பாடுவார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.059  
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,
Tune - பழந்தக்கராகம் (Location: திருத்தூங்கானைமாடம் God: சுடர்க்கொழுந்தீசர் Goddess: கடந்தைநாயகியம்மை)
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம் அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம், கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே! | [1] |
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான் கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய், விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.060  
வண் தரங்கப் புனல் கமல
Tune - பழந்தக்கராகம் (Location: சீர்காழி God: தோணியப்பர் Goddess: திருநிலைநாயகியம்மை)
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும் ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத் துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும் பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே! | [1] |
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம் கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத் தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.061  
நறை கொண்ட மலர் தூவி,
Tune - பழந்தக்கராகம் (Location: திருச்செங்காட்டங்குடி God: கணபதீசுவரர் Goddess: திருக்குழல்மாதம்மை)
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும் முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய, சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள், கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே. | [1] |
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின் நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன், சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும் மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு
Tune - பழந்தக்கராகம் (Location: திருக்கோளிலி (திருக்குவளை) God: கோளிலியப்பர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)
நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம் கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [1] |
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை, வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.063  
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா, வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே? சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன், பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே! | [1] |
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே? நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.064  
அறை ஆர் புனலும் மா
Tune - தக்கேசி (Location: திருப்பூவணம் God: பூவணநாதர் Goddess: மின்னாம்பிகையம்மை)
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல் குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம் முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும், திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே. | [1] |
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப் பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால், நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.065  
அடையார் தம் புரங்கள் மூன்றும்
Tune - தக்கேசி (Location: திருப்பல்லவனீச்சரம் God: பல்லவனேசர் Goddess: சவுந்தராம்பிகையம்மை)
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த, விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ, படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே. | [1] |
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம் அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய், ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.066  
பங்கம் ஏறு மதி சேர்
Tune - தக்கேசி (Location: திருச்சண்பைநகர் (சீர்காழி) God: Goddess: )
பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம் அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே. | [1] |
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி, பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்; நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று, பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.067  
கண் மேல் கண்ணும், சடைமேல்
Tune - தக்கேசி (Location: திருப்பழனம் God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)
கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப் புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால் எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும், பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.068  
பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி (Location: திருக்கயிலாயம் God: கயிலாயநாதர் Goddess: பார்வதியம்மை)
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில் கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர், இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல் கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.069  
பூ ஆர் மலர் கொண்டு
Tune - தக்கேசி (Location: திருவண்ணாமலை God: அருணாசலேசுவரர் Goddess: உண்ணாமுலையம்மை)
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்; மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே. | [1] |
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை, நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.070  
வானத்து உயர் தண்மதி தோய்
Tune - தக்கேசி (Location: திருஈங்கோய்மலை God: Goddess: )
வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி, தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா, கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த, ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே. | [1] |
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள், அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன், எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.071  
பிறை கொள் சடையர்; புலியின்
Tune - தக்கேசி (Location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) God: சித்தநாதேசர் Goddess: அழகாம்பிகையம்மை)
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்; கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர் மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி, சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே. | [1] |
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை, செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரை, மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன், பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.072  
வார் ஆர் கொங்கை மாது
Tune - தக்கேசி (Location: திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்) God: சோமநாதர் Goddess: தேனார்மொழியம்மை)
வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை, நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண், கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில், கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே. | [1] |
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வக் காரோணத்தாரை, திரு ஆர் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன் உரு ஆர் செஞ்சொல்மாலை இவைபத்து உரைப்பார், உலகத்துக் கரு ஆர் இடும்பைப் பிறப்பு அது அறுத்து, கவலை கழிவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.073  
வான் ஆர் சோதி மன்னு
Tune - தக்கேசி (Location: திருக்கானூர் God: செம்மேனிநாயகர் Goddess: சிவயோகநாயகியம்மை)
வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத் தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி, மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார் கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே. | [1] |
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை, பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே, தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று, அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.074  
நறவம் நிறை வண்டு அறை
Tune - தக்கேசி (Location: திருப்புறவம் God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான், புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே. | [1] |
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை, தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.075  
காலை நல்மாமலர் கொண்டு அடி
Tune - குறிஞ்சி (Location: திருவெங்குரு (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன், ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்- மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி, வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே. | [1] |
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை, நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும் பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள், விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.076  
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,
Tune - குறிஞ்சி (Location: திருஇலம்பையங்கோட்டூர் God: சந்திரசேகரர் Goddess: கோடேந்துமுலையம்மை)
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம், நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்- கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும் இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே? | [1] |
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்- எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார், போய் வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று, வீடு எளிது ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.077  
பொன் திரண்டன்ன புரிசடை புரள,
Tune - குறிஞ்சி (Location: திருஅச்சிறுபாக்கம் God: பாக்கபுரேசர் Goddess: சுந்தரமாதம்மை)
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய, குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும்பொடி அணிவர்; மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமாப் பேணி, அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே. | [1] |
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி கவுணியர் பெருமான், கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு, அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.078  
வரி வளர் அவிர் ஒளி
Tune - குறிஞ்சி (Location: திருஇடைச்சுரம் God: இடைச்சுரநாதர் Goddess: இமயமடக்கொடியம்மை)
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி, கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக; விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும், எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே? | [1] |
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழிச் சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன், புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.079  
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்; மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை முகில் புல்கும் மிடறர்; பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர்; வலி சேர் கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. | [1] |
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல், வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல் மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை
Tune - குறிஞ்சி (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே. | [1] |
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன் சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத்தால் பாட வல்லார் நல்லாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.081  
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்- சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த, வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும் கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.082  
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,- திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே. | [1] |
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள் ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.083  
அடையார் புரம் மூன்றும் அனல்வாய்
Tune - குறிஞ்சி (Location: திருஅம்பர்மாகாளம் God: காளகண்டேசுவரர் Goddess: பட்சநாயகியம்மை)
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து, மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும் சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே. | [1] |
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்- திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர் பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.084  
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்
Tune - குறிஞ்சி (Location: திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) God: காயாரோகணேசுவரர் Goddess: நீலாயதாட்சியம்மை)
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி, வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு, கனையும் கடல் நாகைக்காரோணத்தானே. | [1] |
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன் உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம் கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.085  
கல்லால் நிழல் மேய கறை
Tune - குறிஞ்சி (Location: திருநல்லம் God: உமாமகேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த, வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே. | [1] |
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.086  
கொட்டும் பறை சீரால் குழும,
Tune - குறிஞ்சி (Location: திருநல்லூர் God: பெரியாண்டேசுவரர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு- பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே. | [1] |
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை, வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.087  
சுடு கூர் எரிமாலை அணிவர்;
Tune - குறிஞ்சி (Location: திருவடுகூர் (ஆண்டார்கோவில்) God: வடுகேசுவரர் Goddess: வடுவகிர்க்கண்ணியம்மை)
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்; கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்; கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார் வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே. | [1] |
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன, கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை, படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன் அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.088  
முற்றும் சடை முடி மேல்
Tune - குறிஞ்சி (Location: திருஆப்பனூர் God: ஆப்பனூரீசுவரர் Goddess: அம்பிகையம்மை)
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன், ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான், செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப் பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே. | [1] |
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை, நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.089  
படை ஆர்தரு பூதப் பகடு
Tune - குறிஞ்சி (Location: திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) God: நீலகண்டேசுரர் Goddess: நீலமலர்க்கண்ணம்மை)
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச் சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில் விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.090  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம் பரனையே மனம் பரவி, உய்ம்மினே! | [1] |
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன் நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.091  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே. | [1] |
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே. | [1] |
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.093  
நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே. | [1] |
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே. | [1] |
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன், முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.095  
தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்- காடு பேணி நின்று ஆடும் மருதனே. | [1] |
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி, பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.096  
மன்னி ஊர் இறை; சென்னியார்,
Tune - குறிஞ்சி (Location: திருஅன்னியூர் (பொன்னூர்) God: ஆபத்சகாயர் Goddess: பெரியநாயகியம்மை)
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை அன்னியூர் அமர் மன்னுசோதியே. | [1] |
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால், வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.097  
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
Tune - குறிஞ்சி (Location: திருப்புறவம் God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச் செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும் பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே. | [1] |
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்- இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.098  
நன்று உடையானை, தீயது இலானை,
Tune - குறிஞ்சி (Location: திருச்சிராப்பள்ளி God: தாயுமானேசுவரர் Goddess: மட்டுவார்குழலம்மை)
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை, சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்- குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே. | [1] |
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்- ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார் வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.099  
வம்பு ஆர் குன்றம், நீடு
Tune - குறிஞ்சி (Location: திருக்குற்றாலம் God: குறும்பலாவீசுவரர் Goddess: குழல்வாய்மொழியம்மை)
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக் கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம் அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்! | [1] |
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன், கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம் நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன், பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.100  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு
Tune - குறிஞ்சி (Location: திருப்பரங்குன்றம் God: பரங்கிரிநாதர் Goddess: ஆவுடைநாயகியம்மை)
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில் ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம் பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே. | [1] |
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன், படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி, விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.101  
தண் ஆர் திங்கள், பொங்கு
Tune - குறிஞ்சி (Location: திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) God: கண்ணாயிரேசுவரர் Goddess: முருகுவளர்கோதையம்மை)
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி, பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம் நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே. | [1] |
காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்- நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்- பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.102  
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும் கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த சரவா! என்பார் தத்துவஞானத் தலையாரே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.103  
தோடு உடையான் ஒரு காதில்-தூய
Tune - குறிஞ்சி (Location: திருக்கழுக்குன்றம் God: வேதகிரீசுவரர் Goddess: பெண்ணினல்லாளம்மை)
தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும் நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும் காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.104  
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான், ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே. | [1] |
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்- போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள் நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.105  
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவாரூர் God: வன்மீகநாதர் Goddess: அல்லியங்கோதையம்மை)
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள் சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி; கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.106  
மாறு இல் அவுணர் அரணம்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருஊறல் (தக்கோலம்) God: உமாபதீசுவரர் Goddess: உமையம்மை)
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று, நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.107  
வெந்த வெண் நீறு அணிந்து,
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) God: அர்த்தநாரீசுவரர் Goddess: அர்த்தநாரீசுவரி)
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி, கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. | [1] |
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும் தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன், கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும் நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.108  
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருப்பாதாளீச்சரம் God: Goddess: )
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும் அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும் பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே. | [1] |
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர, பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்- தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.109  
வார் உறு வனமுலை மங்கை
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருச்சிரபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
வார் உறு வனமுலை மங்கை பங்கன், நீர் உறு சடை முடி நிமலன், இடம் கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் சீர் உறு வளவயல் சிரபுரமே. | [1] |
அருமறை ஞானசம்பந்தன், அம் தண் சிரபுரநகர் உறை சிவன் அடியைப் பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் திருவொடு புகழ் மல்கு தேசினரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.110  
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான், அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் இருந்தவன், வள நகர் இடைமருதே. | [1] |
இலை மலி பொழில் இடைமருது இறையை நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார் உலகு உறு புகழினொடு ஓங்குவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.111  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருக்கடைமுடி (கீழையூர்) God: கடைமுடியீசுவரர் Goddess: அபிராமியம்பிகை)
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர் விருத்தனை, பாலனை, வினவுதிரேல், ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும் கருத்தவன், வள நகர் கடைமுடியே. | [1] |
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர் சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.112  
இன்குரல் இசை கெழும் யாழ்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருச்சிவபுரம் God: பிரமபுரிநாயகர் Goddess: பெரியநாயகியம்மை)
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் பொன் கரை பொரு பழங்காவிரியின் தென் கரை மருவிய சிவபுரமே. | [1] |
சிவன் உறைதரு, சிவபுரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன்- தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.113  
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவல்லம் God: வல்லநாதர் Goddess: வல்லாம்பிகையம்மை)
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்; விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.114  
குருந்து அவன், குருகு அவன்,
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருமாற்பேறு God: மால்வணங்குமீசர் Goddess: கருணைநாயகியம்மை)
குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன், பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன், கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும் மருந்து அவன், வள நகர் மாற்பேறே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.115  
சங்கு ஒளிர் முன் கையர்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருஇராமனதீச்சரம் God: இராமநாதேசுவரர் Goddess: சரிவார்குழலியம்மை)
சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே அங்கு இடு பலி கொளுமவன், கோபப் பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே. | [1] |
தேன் மலர்க் கொன்றை யோன்........ | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.116  
அவ் வினைக்கு இவ் வினை
Tune - வியாழக்குறிஞ்சி (Location: பொது -திருநீலகண்டப்பதிகம் God: Goddess: )
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.117  
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,- தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்; வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்; பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே. | [1] |
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர், எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு, மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.118  
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) God: பருப்பதேசுவரர் Goddess: பருப்பதமங்கையம்மை)
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்; இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி; விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப் படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே. | [1] |
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான், பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை, நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.119  
முள்ளின் மேல் முது கூகை
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருக்கள்ளில் God: சிவானந்தேசுவரர் Goddess: ஆனந்தவல்லியம்மை)
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை, வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே. | [1] |
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த, புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.120  
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத் துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில் பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே. | [1] |
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ் அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக் கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.121  
நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த படை மரு தழல் எழ மழு வல பகவன், புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய, இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே. | [1] |
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன், இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த, படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.122  
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவிடைமருதூர் God: மருதீசர் Goddess: நலமுலைநாயகியம்மை)
விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல் புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே. | [1] |
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப் பரவிய ஒருபது பயில வல்லவர் இடர் விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.123  
பூ இயல் புரிகுழல்; வரிசிலை
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவலிவலம் God: மனத்துணைநாதர் Goddess: வாளையங்கண்ணியம்மை)
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்; ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள் மேவிய திரு உரு உடையவன்-விரைமலர் மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே. | [1] |
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை, இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.124  
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர், நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ் நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே. | [1] |
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள் வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு கற்று வல்லவர் உலகினில் அடியவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.125  
கலை மலி அகல் அல்குல்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருச்சிவபுரம் God: பிரமபுரிநாயகர் Goddess: பெரியநாயகியம்மை)
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன், முலை மலிதரு திரு உருவம் அது உடையவன், சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ, இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே. | [1] |
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்- பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப் பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும், சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும் சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம் சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம் கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே. | [1] |
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக் கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத் தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை, தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள், எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா, வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.127  
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான். | [1] |
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.128  
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: Goddess: )
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை; இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை; ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை; இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம், நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம், ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை; ஒரு தனு இருகால் வளைய வாங்கி, முப்புரத்தோடு நானிலம் அஞ்ச, கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை; ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம், முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு, இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து, நால்மறை ஓதி, ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை; அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை; இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை; பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை; வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப் பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை; ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை; ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், மறை முதல் நான்கும், மூன்று காலமும், தோன்ற நின்றனை; இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும், மறு இலா மறையோர் கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்; அனைய தன்மையை ஆதலின், நின்னை நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.129  
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அவன்பால் நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட, செங்குமுதம் வாய்கள் காட்ட, காவி இருங்கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே. | [1] |
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல், நல்லோர் நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம் பந்தன்தான் நயந்து சொன்ன சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார், தூமலராள் துணைவர் ஆகி, முற்று உலகம் அது கண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.130  
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: திருவையாறு God: செம்பொன்சோதீசுரர் Goddess: அறம்வளர்த்தநாயகியம்மை)
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி, அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில் வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி, சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே. | [1] |
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல் இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள் தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.131  
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர் முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே. | [1] |
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு, தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.132  
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று, நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர் நெறி அளித்தோன் நின்றகோயில் பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு, வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே. | [1] |
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர் பாதம் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள் பயிலும் நாவன், பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி, இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.133  
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த, கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள், அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.134  
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: திருப்பறியலூர் (பரசலூர்) God: திருவீரட்டம் Goddess: )
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும் நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்- திருத்தம் உடையார் திருப் பறியலூரில், விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே. | [1] |
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன், வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை, பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.135  
நீறு சேர்வது ஒர் மேனியர்,
Tune - மேகராகக்குறிஞ்சி (Location: திருப்பராய்துறை God: திருப்பராய்த்துறைநாதர் Goddess: பசும்பொன்மயிலம்மை)
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை கூறு சேர்வது ஒர் கோலம் ஆய், பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர் சடை அண்ணலே. | [1] |
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல், சிதையாதன செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ், செல்வம் ஆம், இவை செப்பவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1 - Thirumurai
Pathigam 1.136  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும்
Tune - யாழ்முரி (Location: தருமபுரம் God: திருதருமபுரம் Goddess: பண் - யாழ்மூரி)
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர், த இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர், அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர், வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே. | [1] |
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப் பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார், இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும் உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே. | [11] |