சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அகலிட
அகலிடத்     அகலிட     அகலிடமே     அகலிடந்    
6.098   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும் அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;
புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;
இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்;
இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;
துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே.

8.202   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
அகலிடந் தாவிய வானோ
   னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
   ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
   நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
   வாய்தரு பூங்கொடியே.

10.100   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

10.702   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே. 3,

12.010   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அகலிடத் துயர்ந்த தில்லை
யந்தண ரகில மெல்லாம்
புகழ்திரு மறையோ ரென்றும்
பொதுநடம் போற்றி வாழ்க
நிகழ்திரு நீல கண்டக்
குயவனார் நீடு வாய்மை
திகழுமன் புடைய தொண்டர்
செய்தவங் கூற லுற்றாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list