சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
உண்ணாமுலை     உதிரும்     உம்பராலும்     உடையார்     உரவம்     உளையா     உமையாள்     உர     உயர்வரை     உலந்தவர்     உண்ணல்     உறி     உள்வேர்     உரையாதார்     உண்டு     உரம்     உருவில்-திகழும்     உரவன்,     உண்ணற்கு     உளம்     உரிஞ்சன     உய்யல்     உரவு     உலம்     உள்ளம்     உரித்தது,     உரை     உரு     உடம்பொ     உற்றுநின்     உறுதுணை     உள்ளுண்மை     உறுவ     உண்டுல     உற்றமுப்     உடலாய்     உற்று     உள்ளுயிர்ப்     உள்ளத்     உச்சியில்     உகந்துநின்     உண்ணின்ற     உடல்வைத்த     உருவம்     உள்ளத்தின்     உடையான்     உரைத்தன     உதிக்கின்ற     உருவறி     உடம்பார்     உடம்பினை     உந்திச்     உற்றறி     உகங்கோடி     உயருறு     உதித்து     உதமறிந்     உடலிற்     உந்திக்     உணர்விந்து     உண்ணீர்     உண்ணும்     உச்சியம்     உரைத்திடுங்     உத்தமன்     உகங்கண்ட     உணர்ந்துட     உண்டில்லை     உரைத்த     உறங்கு     உபாயம்     உணர்ந்திலர்     உடையவன்     உணர்ந்துல     உள்ளத்தி     உள்ளொளி     உறைபதி     உணர்ந்தெழு     உணர்ந்தொழிந்     உன்னிட்ட     உற்றிட     உணர்ந்திருந்     உகந்தனள்     உண்டோர்     உடலான     உயிர்க்குயிர்     உய்ந்தனம்     உயர்ந்தும்     உள்ளத்து     உள்ளத்தும்     உறுமா     உண்மையும்     உரையற்     உழவன்     உடலில்     உணர்த்தும்     உலகில்     உலந்திலிர்     உணர்ந்தேன்     உருவும்     உடல்பொருள்     உயிரும்     உணர்வுடை     உற்ற     உழைக்கொண்ட     உழைக்கவல்     உச்சியுங்     உன்னக்கருவிட்     உதயத்தில்     உரவடி     உருவிப்     உள்ள     உன்னு     உணர்வொன்     உற்றிடும்     உயிரது     உலகாணி     உன்முத     உடம்பிற்குள்     உடம்பும்     உண்ணுந்தன்     உடல்     உயிர்க்குயி     உண்ணாடும்     உருவுற்றுப்     உரிய     உன்னை     உதயம்     உயிர்க்கறி     உயிர்இச்சை     உண்மைக்     உயிரைப்     உலகம்     உடந்தசெந்     உள்ளம்உரு     உகந்தன     உயிர்பரம்     உடலும்     உய்யும்     உவாக்கடல்     உண்மை     உரையற்ற     உளங்கொளி     உம்பரில்     உள்ளத்துள்     உயிர்க்கின்ற     உய்யவல்     உருஉற்     உருவன்றி     உணர்வும்     உழவொன்று     உருவிலி     உலகம     உலவுசெய்     உணர்வது     உறுதியி     உண்ணின்     உரைக்கப்     உத்தமராய்     உரையினால்     உள்ளிடத்தான்     உத்தம     உலகா     உரைவளர்     உற்றடி     உறைகின்     உறைகழி     உலாநீர்க்     உருத்திரர்கள்     உருவு     உலக     உணருங்கால்     உரையும்     உண்டிருந்த     உளதள     உரைவந்     உளம்மால்கொண்     உறாவேயென்     உடைஓடு     உய்யாதென்     உருவியலுஞ்     உவவா     உயிராய     உற்றுரையாய்     உணரா     உரையா     உமைகங்கை     உறுமுந்த     உடைதலையின்     உளரொளிய     உழிதரல்     உந்தத்     உரையின்     உலவு     உழப்பின்     உடைமணியின்     உத்துங்க     உடைப்புலி     உறுகின்ற     உவரச்சொல்     உள்வார்     உலவிய     உயிரா     உருவாம்     உண்டேன்     உத்தமத்     உலகு     உறவும்,     உகட்டித்து     உரைப்பமரும்     உடல்தூய     உரைகெழுவு     உறுதி     உலகெ     உழுத     உடையவர     உம்பர்     உம்பர்நா     உடுத்த     உரைசெய்து     உண்ணிறைந்     உனக்கவன்தன்     உறுகவின்மெய்ப்     உள்ளுந்     உடையொ     உம்பர்தங்     உலகர்     உற்பவித்     உறையு     உளங்கொள்மறை     உம்பருல     உணர்வின்     உய்ய     உடைய     உருகியஅன்     உலகியல்பு     உரைகுழறி     உறியுடைக்     உலகியல்     உம்பருய்ய     உணர்வுபொதுச்     உள்ளத்தில்     உம்முடைய     உண்ணீரின்     உம்ப     உருநாட்டும்     உள்ளநிறை     உம்மைப்     உலகின்     உரிமை     உளம்மகிழக்     உணங்கல்     உளத்திலொரு     உள்ளும்     உலகினில்     உடையொடு     உரைப்பார்     உதியர்     உரைசெய்     உகலி     உழுது     உயர்ந்தவன்,     உரக்     உடை     உரிஞ்சு     உண்டாய்,     உறவியும்     உடுத்ததுவும்     உள்ளதன்     உரையினில்     உறை     உள்ளத்தீரே!     உருகுவார்     உயர்ந்த     உரிந்த     உருகிட     உண்ணினும்,     உளங்கையில்,     உருவின்     உறித்தலைச்     உடம்பு     உள்-நிலாவு     உடுத்தவன்,     உந்தி     உன்னி     உன்னிய     உண்ண     உறவும்     உடன்     உரிந்து     உடையேது     உயர்ந்தேன்,     உறைவது     உற்றார்     உயர்     உதைத்தார்,     உறு     உள்-தங்கு     உரித்திட்டார்;     உவந்திட்டு     உமை     உயிர்     உருவமும்     உரவனை,     உள்குவார்     உய்த்த     உளைந்தான்,     உருவினை,     உரைக்கும்     உடம்பைத்     உடலைத்     உன்     உள்ளமே!     உழைத்தும்,     உற்றாராய்     உரைப்பக்     உருளும்போது     உச்சிமேல்     உடையர்     உறவு     உரத்தினால்     உற்றவர்தம்     உலந்தார்     உம்பரானை,     உள்     உறவனாய்     உருகி     உச்சி     உரைமாலைஎல்லாம்     உண்ணா     உருள்     உற்றிருந்த     உரித்து     உழை     உய்த்தவன்     உண்ணாது     உடலின்     உரியாய்,     உரித்தவன்     உமையவளை     உரித்தானை,     உளர்     உஞ்சேனை     உற்றானை,     உறைப்பு     உருகு     உற்றவன்     உதைத்தவன்     உருத்திரனை,     உலவும்     உதிரம்     உற்றபோது     உம்பரார்     உம்பரான்,     உம்     உம்பரும்     உற்றனன்,     உற்றவர்க்கு     உழக்கே     உற்றான்,     உய்த்து     உதையும்,     உத்தமனே!     உலோகாயதன்     உறவே,     உத்தமன்,     உழிதரு     உலவாக்     உடையானே!     உள்ளனவே     உழைதரு     உலக்கை     உள்ளப்படாத     உருகிப்     உவலைச்     உண்ணப்     உன்னற்கு     உடையாள்,     உகந்தானே!     உணர்ந்த     உருத்     உம்பர்கட்கு     உற்றாரை     உரியேன்     உணர்ந்தார்க்     உயிரொன்     உளமாம்     உள்ளப்     உறுங்கண்ணி     உருப்பனை     உள்ளு     உடுத்தணி     உடைமணிகட்டிச்     உயர்கொடி     உறவா     உருக்கிஎன்     உண்ணெகிழ்ந்(து)     உலகெலாம்     உருவத்     உடையும்    
Search limited to first 100
1.010   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

1.010   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம்
எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால்,
முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல்
அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.

1.029   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.030   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

1.035   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரவம் புரி புன் சடை தன்மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்,
விரவும் பொழில், வீழி மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!

1.035   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா விரல் ஊன்றிய மைந்தன்,
விளை ஆர் வயல், வீழி மிழலை
அளையா வருவார் அடியாரே.

1.036   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.

1.038   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர்
குரவம், சுரபுன்னையும், வன்னி,
மருவும் மயிலாடுதுறையே.

1.040   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி,
வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.

1.043   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,
விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்
நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலே
கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

1.049   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

1.053   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்!
மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட
முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே.

1.054   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்!
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்
கள்வீரே! உம காதலே!

1.055   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;
பரவாதார் இல்லை, நாள்களும்;
திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று
அரையானே! அருள் நல்கிடே!

1.065   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்,
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

1.067   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்,
இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும்
பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.

1.069   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்
பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்
அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.074   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.076   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும்
அண்ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத் தாங்கிய விமலன்-
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி
எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
    பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.076   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும்
  சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்கு
என்று உழல் பெரியவர் பெருமான்-
கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக
வண்டொடு தேன் இனம் முரலும்,
இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
என் எழில் கொள்வது இயல்பே?

1.091   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்
கையினால்-தொழ, நையும், வினைதானே.

1.102   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி
அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா! என்பார் தத்துவஞானத் தலையாரே.

1.102   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு,
கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி,
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
சலம் கொள் சென்னி மன்னா! என்ன, தவம் ஆமே.

1.105   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும்,
வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய,
அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

1.117   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை;
எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை;
செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல்
விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே.

1.122   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,
அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை
இரை மரும் அரவினர், இடைமருது என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.

1.123   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

1.132   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.

2.002   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

2.006   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

2.009   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை
பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு பகலோன்தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீ எழச் செற்று, முன்,
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே.

2.025   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!

2.028   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால்,
தொழுது மா மலரோனும், காண்கிலார்
கழுதினான், கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.

2.033   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே.

2.034   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு,
பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.

2.040   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்;
முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு
உருவன்;
பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும்
சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.

2.047   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில்
கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!

2.052   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,
கொடை இலார் மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,
படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனை
அடைகிலாத வண்ணம்? அருளாய், உன் அடியவர்க்கே!

2.054   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.



2.061   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

2.067   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உறவியும் இன்பு உறு சீரும் ஓங்குதல், வீடு எளிது ஆகி,
துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி,
மறவி அம்சிந்தனை மாற்றி, வாழ வல்லார்தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே.

2.067   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரிமை உடைய அடியார்கள் உள் உற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி, அருள் செயும் ஆதிமுதல்வர்;
கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப்
பெருமை உடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

2.076   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே.

2.078   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற மா
மணிவண்ணனும்,
உள்ளதன் தனைக் காண்பன், மேல் என்ற மா மலர்
அண்ணலும்,
உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும்
சடைமுடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.

2.085   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

2.086   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!

2.086   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம்
உணர்வு ஆக்கும்; உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும்; நெஞ்சில்
நிறைவு ஆற்றும்; நேசம் வளரும்
மறை வளர் நாவன், மாவின் உரி போர்த்த மெய்யன்,
அரவு ஆர்த்த அண்ணல், கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற
திரு நாரையூர் கைதொழவே.

2.086   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி
அஞ்சும்; ஆதல் உற, நீர்
மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு
இலாத கடலின்
அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய,
தடக்கை முடிகள்,
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே.

2.090   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்,
அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

2.100   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது அறிதிரேல்!
அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள்
அழுந்தாதே,
கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.

2.100   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு இழந்தபோதின்
கண்;
துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே!
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே.

2.100   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்
கண்,
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்,
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே.

2.103   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர்
மலரோனும்,
பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும்,
பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும்
களைவாரே.

2.109   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும் அன்பர்
ஆம் அடியார்கள்
பருகும் ஆர் அமுது! என நின்று, பரிவொடு பத்தி செய்து,
எத்திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே! என்று
எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய்; அவன்
அருள் பெறல் ஆமே.

2.113   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை நவின்றார், உடை விட்டு உழல்வார், இருந் தவத்தார்
முடை நவின்ற(ம்) மொழி ஒழித்து, உகந்த(ம்) முதல்வன்(ன்)
இடம்
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர,
கடை நவின்ற(ந்) நெடுமாடம் ஓங்கும் கடல் காழியே.

2.114   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால்
பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய்,
கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும்
கேதாரமே.

2.115   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உய்ய வேண்டில்(ல்) எழு, போத! நெஞ்சே! உயர்
இலங்கைக் கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஒர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்து அருள வல்ல சிவன் மேய,
பூம்
பொய்கை சூழ்ந்த, புகலூர் புகழ, பொருள் ஆகுமே.

2.116   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை விட்டு
உழல்வார்களும்,
பெயர்த்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும்,
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

2.121   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத்
திரிந்து தின்னும் சிறு நோன்பரும், பெருந் தேரரும்,
எரிந்து சொன்ன(வ்) உரை கொள்ளாதே, எடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே!

3.003   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உருகிட உவகை தந்து உடலினுள்ளால்,
பருகிடும் அமுது அன பண்பினனே!
பொரு கடல் வண்ணனனும் பூ உளானும்
பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய்
உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ்
வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!

3.004   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;
கண்ணனும், கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

3.010   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!

3.017   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு, ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.

3.023   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே.

3.025   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே

3.026   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.

3.027   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல்
வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும்,
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே!

3.028   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்!
பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந்
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.

3.031   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே!

3.034   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்;
விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம்
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த்
திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே.

3.035   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே.

3.037   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை கூத்தனே.

3.038   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)! உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளைவான் பிறை செஞ்சடை(ம்) மிசை வைத்ததும், பெரு நீர் ஒலி-
வெள்ளம் தாங்கியது என்கொலோ, மிகு மங்கையாள் உடன் ஆகவே?

3.043   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உருவம் நீத்தவர் தாமும், உறு துவர்
தரு வல் ஆடையினாரும், தகவு இலர்;
கருமம் வேண்டுதிரேல், கடல் காழியு
ஒருவன் சேவடியே அடைந்து, உய்ம்மினே!

3.056   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.

3.062   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க வல்லார் வினைகள்
கெடுத்து அருள்செய்ய வல்லான்; கிளர் கீதம் ஓர்
நால்மறையான்;
மடுத்தவன். நஞ்சு அமுதா; மிக்க மா தவர் வேள்வியை முன்
தடுத்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3.077   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான நிலனே.

3.078   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித்
துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம்
கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக,
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே.

3.078   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே.

3.085   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.

3.103   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு, உமையோடு உடன் ஆகி,
சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று இலங்க,
பண்ண வண்ணத்தன பாணி செய்ய, பயின்றார் இடம்போலும்
வண்ண வண்ணப் பறை பாணி அறா வலம்புர நன்நகரே.

3.110   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து, நீள் புவி இலங்கு சீர்ப்
புறவ மா நகர்க்கு இறைவனே! என, தெறகிலா, வினையே.

3.113   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்
அருள் மெய்யினையே;
கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே;
அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே;
பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.

3.113   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து
இசை மா தவனே;
திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய கண்டனனே;
படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு அரை செய்தனனே;
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து
உறை நம் சிவனே.

3.118   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில்
போர்த்து உழல்வாரும்,
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார்
நன்மையால் உறைவு ஆம்
குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை,
கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர்
எனல் ஆமே.

3.901   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.

4.001   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும்,
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

4.008   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால்,
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.

4.009   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?

4.014   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்,-அவி உண்ண வந்த இமையோா
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம் ஆய்-
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டு கொள்கை கடனே.

4.016   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி;
பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

4.026   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி,
மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்;
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து
அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே!

4.030   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார்
நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.032   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே.

4.032   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உவந்திட்டு அங்கு உமை ஓர் பாகம் வைத்தவர்; ஊழி ஊழி
பவர்ந்திட்ட பரமனார் தாம் மலைச்சிலை நாகம் ஏற்றி,
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
சிவந்திட்ட கண்ணர் போலும்-திருப் பயற்றூரனாரே.

4.038   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார்
விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார்
அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே.

4.040   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உமை அலாது உருவம்- இல்லை; உலகு அலாது உடையது இல்லை-
நமை எலாம் உடையர் ஆவர்; நன்மையே; தீமை இல்லை;
கமை எலாம் உடையர் ஆகிக் கழல் அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள் கொடுப்பார் -ஐயன் ஐயாறனார்க்கே.

4.042   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ!
கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து,
பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.!

4.042   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ!
கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list