சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
யாவர்க்கு     யோகிகள்     யோகநற்     யோகிக்     யோகச்     யோகமும்     யோகத்தின்     யோகிஎண்     யோகியும்     யோகம்அவ்     யானே     யோசனை     யானென்று     யானை     யாமானம்     யானென்றங்     யானேத்     யாழை     யாழ்மூரி     யாரேஎம்     யாத     யாதொன்றும்     யாகம்     யானையின்     யாவருக்குந்     யாழிலெழும்     யாணரம்பில்     யாழின்     யாதும்ஒன்     யாவர்களும்     யாவ     யாங்கள்     யாழின்மொழி     யாதும்     யாவர்க்கும்     யாவர்     யாதானும்     யாழ்     யாமாமா     யாகாயாழீ     யாகாலாமே     யாதே     யாவரும்(ம்)     யாழைப்     யான்     யாழு     யாழார்     யாழியன்     யாயுந்     யாதுநீ    
3.095   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே;
தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.

3.117   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா!

3.117   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா!

3.117   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா!

5.050   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
யாதே செய்தும், யாம் அலோம்; நீ என்னில்,
ஆதே ஏயும்; அளவு இல் பெருமையான்
மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்-
போதே! என்றும், புகுந்ததும், பொய்கொலோ?

5.062   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை,
நாவின் நல் உரை ஆகிய நாதனை,
தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

7.071   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன்,
பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

8.104   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;

8.105.02   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்;
தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்
மானே! உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே.

8.105.09   8 st/nd Thirumurai   Song # 90   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்;
ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே?
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.

8.147   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்!
மற்று அறியேன் செய்யும் வகை.

8.210   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
யாழு மெழுதி யெழின்முத்
   தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
   தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
   தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
   டேற்கொண்டு போதுகவே.

8.212   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
யாழார் மொழிமங்கை பங்கத்
   திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
   தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
   வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
   சிலம்ப தருந்தழையே.

8.216   8 st/nd Thirumurai   Song # 37   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
யாழியன் மென்மொழி வன்மனப்
   பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
   துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
   றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
   யாரின் அருஞ்சுரமே.

8.218   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
யாயுந் தெறுக அயலவ
   ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
   கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
   இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
   தருவன் சுடர்க்குழையே.

8.224   8 st/nd Thirumurai   Song # 19   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
   றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
   ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
   ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
   தேர்வந்து தோன்றியதே.

9.010   9 st/nd Thirumurai   Song # 9   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
யாதுநீ நினைவ தெவரையா முடைய
   தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
   பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
   கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனம்புகுந் தானே. 

10.119   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

10.127   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.1,

10.408   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.

10.507   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

10.507   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே. 8,

10.510   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

10.510   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

10.609   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன்
றாகத்து நீறணி அங்கம் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

10.717   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

10.717   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

10.721   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

10.721   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.

11.004   11 st/nd Thirumurai   Song # 7   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.

11.008   11 st/nd Thirumurai   Song # 185   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் மாசில்சீர்ப்

11.009   11 st/nd Thirumurai   Song # 55   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை
யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண்
டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து.

11.020   11 st/nd Thirumurai   Song # 7   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என்
உள்ளக் கருத்தின் உளன்.

11.022   11 st/nd Thirumurai   Song # 13   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
யாமானம் நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.

11.022   11 st/nd Thirumurai   Song # 14   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.

11.031   11 st/nd Thirumurai   Song # 13   நம்பியாண்டார் நம்பி   திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை  
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானேச னார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.

11.037   11 st/nd Thirumurai   Song # 77   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்

11.037   11 st/nd Thirumurai   Song # 84   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி

11.038   11 st/nd Thirumurai   Song # 70   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
யாரேஎம் போல
  அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித்
  தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்தன்
  குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. 44
  பதிக வகை: பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12.000   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
யாத வன்துவ ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி யந்தம் இலாமை யடைந்தவன்.
12.110   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
யாதொன்றும் இல்லை யாகி
இருபக லுணவு மாறிப்
பேதுறும் மைந்த ரோடும்
பெருகுசுற் றத்தை நோக்கிக்
காதல்செய் மனைவி யார்தங்
கணவனார் கலய னார்கைக்
கோதில்மங் கலநூல் தாலி
கொடுத்துநெற் கொள்ளு மென்றார்
12.200   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
யாகம் நிலவும் சாலைதொறும்
மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வருமாலும்
அயனும் ஊரும் படர்சிறைப்புள்
மாகம் இகந்து வந்திருக்கும்
சேக்கை யெனவும் வானவர்கோன்
நாகம் அணையுங் கந்தெனவும்
நாட்டும் யூப ஈட்டமுள.
12.200   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
யானே இனியிந் நிரைமேய்ப்பன்
என்றார் அஞ்சி இடைமகனும்
தானேர் இறைஞ்சி விட்டகன்றான்
தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம்
அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு
வானே யென்ன நிரைகாக்க
வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 120   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
யானையின் கையிற் பிழைத்த
வினைஅமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தைய ராகித்
தானை நிலமன்னன் தாளில்
தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறிவிட்ட வேந்தன்
வெகுண்டினிச் செய்வதென் என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 69   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாவருக்குந் தந்தைதாய்
எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய
பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந்
தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 136   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாழிலெழும் ஓசையுடன்
இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார்
மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை
படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்திசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 457   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப்
பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படவோங்குந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்
புறத்தணைந்து புவன மேத்தும்
பாணனார் யாழிலிடப் பாலறா
வாயர்அருள் பணித்த போது.
12.280   12 st/nd Thirumurai   Song # 673   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாழின் மென்மொழி யார்மொழிந்
தெதிர்கழல் வணங்கக்
காழி வாழவந் தருளிய
கவுணியர் பிரானும்
சூழு மாகிய பரசம
யத்திடைத் தொண்டு
வாழு நீர்மையீர் உமைக்காண
வந்தனம் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 763   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாதும்ஒன் றறிவி லாதார்
இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன்
வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு
தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன்
சிரபுரத் தவரைப் பார்த்தான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1025   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1044   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாவ ரும்பெரு மகிழ்ச்சியால்
இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர்
பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின்
பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர்
புவியின்மேல் விளங்க.
12.290   12 st/nd Thirumurai   Song # 221   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாங்கள் உமக்குப் பணிசெய்ய
ஈசற் கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில்
உறைகின் றீரென் றுரைக்கின்றார்
தாங்கற் கரிய கண்கள்நீர்த்
தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும்இறைஞ்சிப்
போனார் எயில்சூழ் தம்பதியில்.
12.290   12 st/nd Thirumurai   Song # 268   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாழின்மொழி எழின்முறுவல்
இருகுழைமேற் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார்
மணியல்குல் துறைபடிந்து
வீழுமவர்க் கிடைதோன்றி
மிகும்புலவிப் புணர்ச்சிக்கண்
ஊழியா மொருகணந்தான்
அவ்வூழி யொருகணமாம்.
12.330   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
யாழின் மொழியாள் தனிப்பாகரைப்
12.360   12 st/nd Thirumurai   Song # 51   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
யானை மிசைநின் றிழிந்தருளி
இலங்கும் மணிமண் டபத்தின்கண்
மேன்மை அரியா சனத்தேறி
விளங்குங் கொற்றக் குடைநிழற்றப்
பானல் விழியார் சாமரைமுன்
பணிமா றப்பன் மலர்தூவி
மான அரசர் போற்றிடவீற்
றிருந்தார் மன்னர் பெருமானார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
யானை யணிகள் பரந்துவழி
யெங்கும் நிரந்து செல்லுவன
மான மலைநாட் டினின்மலிந்த
மலைக ளுடன்போ துவபோன்ற
சேனை வீரர் புடைபரந்து
செல்வ தங்கண் மலைசூழ்ந்த
கான மடைய வுடன்படர்வ
போலுங் காட்சி மேவின தால்.
12.490   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
யாவர்க்கும் மனமுவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம்
மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்.
12.520   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
யாவர் எனினும் இகலெறிந்தே
ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார்
விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி
விளங்கச் செங்கோல் முறைபுரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர்
தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.
12.580   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
யாதானும் இவ்வுடம்பால்
செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின்
பாலாக எனும்பரிவால்
காதார்வெண் குழையவர்க்காம்
பணிசெய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர்புகழ்க்குப்
புவனமெலாம் போதாவால்.
12.720   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
யானை மேல்கொண்டு செல்கின்ற
பொழுதினில் இமையவர் குழாமென்னும்
தானை முன்செலத் தானெனை
முன்படைத் தான்எனும் தமிழ்மாலை
மான வன்தொண்டர் பாடிமுன்
அணைந்தனர் மதிநதி பொதிவேணித்
தேன லம்புதண் கொன்றையார்
திருமலைத் தென்திசைத் திருவாயில்.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list