சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஊன்     ஊர்     ஊரும்     ஊனத்து     ஊறி     ஊன்றும்     ஊணாப்     ஊர்கின்ற     ஊரெலாங்     ஊனாய்     ஊழி     ஊனூறல்     ஊனீர்     ஊதியம்     ஊழிதொ     ஊழிதோ     ஊனமில்     ஊமை     ஊமைக்     ஊனோ     ஊறும்     ஊரெலாந்     ஊடிப்     ஊரும     ஊணொன்றும்     ஊர்வதுவும்     ஊர்மதில்     ஊனமுது     ஊர்தொறும்     ஊரில்விடும்     ஊறு     ஊனுடம்பில்     ஊத்தைவாய்ச்     ஊனில்     ஊறினார்,     ஊடினால்     ஊனொடு     ஊழிகள்     ஊண்தானும்     ஊனம்     ஊழியும்     ஊழித்     ஊனையே     ஊனினுள்     ஊனப்     ஊழியார்;     ஊனவர்;     ஊக்கினான்     ஊனத்தை     ஊரின்     ஊட்டி     ஊர்ந்த     ஊனை     ஊசல்     ஊசலாள்     ஊகம்     ஊரானை,     ஊனவன்     ஊனவனை,     ஊற்றுத்துறை     ஊட்டிக்     ஊனைப்     ஊர்வது     ஊழிதொறு     ஊக்கம்     ஊழ்     ஊற்றிருந்து     ஊர்வா    
Search limited to first 100
1.003   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,
கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்
தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.

1.029   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

1.033   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,
பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

1.038   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே!

1.048   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து,
கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே,
மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே?

1.055   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

1.059   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில் மயங்காது, நீர்
மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும் முகில் தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.068   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம்
ண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி,
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.

1.072   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை,
மான் ஆர் தோலார்; புலியின் உடையார்; கரியின் உரி போர்வை
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில்,
கான் ஆர் நட்டம் உடையார், செல்வக் காரோணத்தாரே.

1.079   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண்
  பொலிந்து இலங்கிய உருவர்;
பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை
  அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்
நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு,
ஒண்மணி வரன்றி,
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.

1.129   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்கள்-
ஒடு, வன்னி, மத்தம், மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர்
செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளி
மலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு
சுதை மாடக் கழுமலமே.

1.130   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

2.038   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே,
பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.

2.047   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!

2.057   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண,
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்!
தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்,
வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2.059   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா! என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

2.059   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

2.069   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று
உழல்வாரும்,
தேன் அமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக்
கரைமேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே.

2.074   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு
காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த்
தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர்,
பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன் ஊர், புகலி, வெங்குரு கங்கை
தரித்தோன் ஊரே.

2.086   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய்
ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளைமதி சூடு சென்னி விதி ஆன
வேத விகிர்தன்,
கான் இடை ஆடி, பூதப்படையான், இயங்கு விடையான்,
இலங்கு முடிமேல்
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல், நண்ணு திரு
நாரையூர் கைதொழவே.

2.086   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் இடை நின்று வாழும் உயிர் செற்ற காலன், துயர்
உற்ற தீங்கு விரவி,
பார் இடை மெள்ள வந்து, பழி உற்ற வார்த்தை ஒழிவு
உற்ற வண்ணம், அகலும்
போர் இடை அன்று, மூன்று மதில் எய்த ஞான்று, புகழ்
வான் உளோர்கள் புணரும்
தேர் இடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு
நாரையூர் கைதொழவே.

2.088   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட
ஒருவன்,
ஆன் ஏறு அது ஏறி, அழகு ஏறும் நீறன், அரவு ஏறு
பூணும் அரன், ஊர்
மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து, குயில் ஏறு
சோலை மருவி,
தேன் ஏறு மாவின் வளம் ஏறி, ஆடு திரு முல்லை வாயில்
இதுவே.

2.096   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

2.102   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள்
அவை மூட,
ஆழி, எந்தை! என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து
உயர்ந்தார் தாம்,
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன்,
எம்பெருமானார்,
வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை
அடையாவே.

2.114   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண்
பொருள்களால்,
வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய,
கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.

3.010   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல ஊர்தொறும்,
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.

3.012   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!

3.021   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,
வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!

3.022   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

3.035   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால்
கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.

3.037   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? அழல் அன்று தன் கையில் ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே!

3.053   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊனொடு உண்டல் நன்று என, ஊனொடு உண்டல் தீது என,
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்;
வானொடு ஒன்று சூடினான்; வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான்; ஆனைக்காவு சேர்மினே!

3.053   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்,
ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை,
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

3.061   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு அரியான்;
போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்;
யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.065   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர்
மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய்
நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.

3.071   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊனம் இலர் ஆகி, உயர் நல்-தவம் மெய் கற்று, அவை உணர்ந்த அடியார்
ஞானம் மிக நின்று தொழ, நாளும் அருள் செய்ய வல நாதன் இடம் ஆம்
ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே, பொழில்கள் தோறும், அழகு ஆர்
வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே.

3.102   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான்,
ஒளிர்புன்சடைமேல் ஓர்
வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு
யாழ்முரலத்
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு
நாரையூர் மேய
ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா,
அடைவோமே.

3.103   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள் அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.

3.105   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்,
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே.

3.107   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி,
ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி,
நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில்
வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு
ஆமே.

4.004   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ் இளஞ் செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்-ஆரூர் அமர்ந்த அம்மானே.



4.004   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர் திரை வேலை உள்ளானும், உலகு இறந்த ஒண் பொருளானும்,
சீர் தரு பாடல் உள்ளானும், செங்கண் விடைக் கொடியானும்,
வார் தரு பூங்குழலாளை மருவி உடன் வைத்தவனும்,
ஆர்திரை நாள் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.



4.013   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்!
வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே!
பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம்
ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!

4.025   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து
தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்)
ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே.

4.029   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே

4.030   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார்
ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார்
வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.036   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.

4.042   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ,
வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும்
தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே!

4.043   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.

4.059   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத்
தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி;
நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே.

4.067   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்;
மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி,
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

4.080   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன்,
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன்,
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பது என்னே?

4.087   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு
பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

4.089   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

4.090   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம்;
ஆர்ந்த மடமொழி மங்கை ஓர் பாகம் மகிழ்ந்து உடையான்;
சேர்ந்த புனல் சடைச் செல்வப் பிரான்; திரு வேதி குடிச்
சார்ந்த வயல் அணி தண்ணமுதை அடைந்து ஆடுதுமே.

5.001   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்
நான் நிலாவி இருப்பன், என் நாதனை;
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.

5.008   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்-
வானை; வானவர்தாங்கள் வணங்கவே,
தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா,
ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.

5.028   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்,
வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

5.046   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-
ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று
பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.

5.047   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் நிலாவி இயங்கி, உலகு எலாம்
தான் உலாவிய தன்மையர் ஆகிலும்,
வான் உலாவிய பாணி பிறங்க, வெங்-
கானில் ஆடுவர்-கச்சி ஏகம்பரே.

5.049   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே,
வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ!
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்-
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!

5.081   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊசலாள் அல்லள்; ஒண்

5.097   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர் இலாய்! என்று, ஒன்று ஆக உரைப்பது ஓர்
பேர் இலாய்! பிறை சூடிய பிஞ்ஞகா!
கார் உலாம் கண்டனே! உன் கழல் அடி
சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே.

6.012   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார்,
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

6.016   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்
பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்,
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி,
படுவெண் தலையில் பலி கொள்வாரும்,
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும்,
மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்,
ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது
மேவிய ஈசனாரே.

6.019   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை,
ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும்
பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை, பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.024   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்; ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்;
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்; அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்;
மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா
தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்;
தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.040   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு
ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட,
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக
வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

6.048   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனவன் காண், உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண், உள்ளவன் காண், இல்லவன் காண், உமையாட்கு என்றும்
தேன் அவன் காண், திரு அவன் காண், திசை ஆனான் காண், தீர்த்தன் காண், பார்த்தன் தன் பணியைக் கண்ட
கானவன் காண், கடல் அவன் காண், மலை ஆனான் காண், களியானை ஈர் உரிவை கதறப் போர்த்த
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.

6.055   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி!
ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி!
பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி!
பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!
நீர் ஆவி ஆன நிழலே, போற்றி!
நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!
கார் ஆகி நின்ற முகிலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.062   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்;
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்;
தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்-
ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

6.068   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை, உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை,
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார்   மேகமிடற்றானை, கனலை, காற்றை,
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

6.069   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊனவனை, உடலவனை, உயிர் ஆனானை, உலகு ஏழும் ஆனானை, உம்பர் கோவை,
வானவனை, மதி சூடும் வளவியானை, மலைமகள்   முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனை, கயிலாயமலை உளானை, கலந்து உருகி நைவார் தம் நெஞ்சினுள்ளே
பானவனை, பள்ளியின் முக்கூடலானை, பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.

6.082   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்;
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்;
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.

6.093   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஊற்றுத்துறை ஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டீர்;
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடாமுன்னம், மாயம் மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில், துயர் நீங்கித் தூ நெறிக்கண் சேரல் ஆமே.

7.001   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7.008   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள் இலாத மாயம்;
மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்;
ஆன் நல்வெள் ஏற்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே.

7.018   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்;
பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால்
பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.

7.031   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.

7.041   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊனைப் பெருக்கி, உன்னை நினையாதொழிந்தேன், செடியேன்; உணர்வு இல்லேன்-
கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறு உடையாய்! கச்சூராய்!
மானைப் புரையும் மட மென் நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத்தோலாய்! ஞானக்கண்ணாய்! ஆலக்கோயில் அம்மானே! .

7.056   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை, ஒண்நுதல்-தனிக் கண் நுதலானை,
கார் அது ஆர் கறை மாமிடற்றானை, கருதலார் புரம் மூன்று எரித்தானை,
நீரில் வாளை, வரால், குதி கொள்ளும் நிறை புனல் கழனிச் செல்வம் நீடூர்ப்
பார் உளார் பரவித் தொழ நின்ற பரமனை, பணியா விடல் ஆமே?

7.063   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊறு நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம்,
கூறு நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும்
சீறு நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும்
ஏறு நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .

7.067   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை;
வானம் கைத்தவர்க்கும்(ம்) அளப்ப(அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத்
தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; நினைத்தற்கு இனியானை;
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே.

7.074   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள,
காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி,
தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .

7.080   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊனத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி,
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில்
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்து எயிறு அணிந்தான் திருக்கேதீச்சுரத்தானே.

7.081   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற
ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்-
தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.

7.082   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும்
வான் ஆய், அதன் மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல்,
நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.

7.085   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, உண் பலி இடும்! என்று,
வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே,
கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

7.088   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊனை உற்று உயிர் ஆயினீர்; ஒளி மூன்றும் ஆய், தெளி நீரொடு ஆன் அஞ்சின்
தேனை ஆட்டு உகந்தீர்! செழு மாடத் திரு மிழலை,
மானை மேவிய கையினீர்! மழு ஏந்தினீர்! மங்கை பாகத்தீர்! விண்ணில்
ஆன வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

7.093   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊன் ஆர் உடை வெண்தலை உண் பலி கொண்டு,
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்-
வான் ஆர் மதியம் பதி வண்பொழில்வாய்த்
தேன் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

7.100   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை,
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன,
ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்,
ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!

7.103   7 st/nd Thirumurai   Song # 6      
ஊக்கம் எனும் பெருஞ்செல்வம் ஒன்று காட்டி உகந்து(து) அளித்த அதிபதியாய் உதிக்கும் சோதி!
பாற்கரனே! பரஞ்சுடரே! பாவ நாசா! பார் அடங்கத் திரிந்து வரும் பரம மூர்த்தி!
பூக்கள் கொண்டு(டு) அடி வணங்கிச் சிறப்புச் செய்து போற்றி செயும் பூதலத்தில் அடியார்க்கு(கு) எல்லாம்
ஆக்கமும் ஆய் மயக்கத்தின் பயனும் ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்த்தீர்ப் பாயே.

8.103   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்
வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்

8.103   8 st/nd Thirumurai   Song # 25   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:
மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,

8.108   8 st/nd Thirumurai   Song # 16   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!

8.141   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஊசல் ஆடும் இவ் உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை,
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கி,
பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!

8.210   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
   திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
   இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
   வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
   செய்க அறிந்தனவே.

10.105   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

10.208   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

10.208   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 9,

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list