சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஞாலத்தை     ஞாழல்     ஞாலம்     ஞானத்திரள்     ஞாலத்து     ஞானத்     ஞேயத்தை     ஞானமி     ஞானியை     ஞானம்     ஞாலம     ஞானி     ஞானத்தின்     ஞானிக்     ஞானத்தில்     ஞானச்     ஞேயத்தே     ஞானமில்     ஞான     ஞானிக்குச்     ஞானத்தி     ஞானிக்குக்     ஞானம்தன்     ஞாயிறு     ஞான்ற     ஞானக்     ஞானவா     ஞானந்     ஞாலத்     ஞானமே     ஞால     ஞானச்செய்     ஞானசம்     ஞானபோனகர்     ஞானஆ     ஞானபோ     ஞானமெய்ந்     ஞாலம்வியப்     ஞாலந்தான்     ஞாழலும்     ஞாலமும்     ஞாயிறுஆய்,     ஞாலமே!     ஞாலத்தார்     ஞானத்தால்-தொழுவார்,     ஞாலத்தானை,     ஞமன்     ஞாலம்,    
1.038   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,
கோலத்து அயனும், அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

1.046   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை,
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.

1.053   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக்
கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால்
ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.

1.069   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்
ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

1.080   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

1.094   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்
சீலமே சொலீர், காலன் வீடவே!

2.010   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.

2.046   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.

2.060   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

2.076   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.

3.015   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்,
வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய,
யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!

3.028   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.

3.056   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஞாலம் அளித்தவனும்(ம்) அரியும்(ம்), அடியோடு முடி
காலம்பல செலவும், கண்டிலாமையினால் கதறி
ஓலம் இட, அருளி, உமை நங்கையொடும்(ம்) உடன் ஆய்
ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்துமினே!

4.029   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.

4.032   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாயிறுஆய், நமனும் ஆகி, வருணனாய், சோமன் ஆகி,
தீ அறா நிருதி வாயுத் திப்பி(ய) ஈசானன் ஆகி,
பேய் அறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன், எந்தை பெம்மான்,
தீ அறாக் கையர் போலும்-திருப் பயற்றூரனாரே.

5.013   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே!
காலமே! கருத்தே! கருத்தால்-தொழும்
சீலமே! திரு வீழிமிழலையுள்
கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!

5.026   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

5.037   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்;
ஊனை வேவ உருக்கிய ஆனையார்;
வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே,
கான ஆனைகண்டீர்-கடவூரரே.

5.063   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்;
காலத்தான் உயிர் போக்கிய காலினன்;
நீலத்து ஆர் மிடற்றான்; வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே.

5.069   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர்,
காலனார் வருதல் முன், கருவிலி,
கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

5.091   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

5.094   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாலத்தானை, நல்லானை, வல்லார் தொழும்
கோலத்தானை, குணப்பெருங்குன்றினை,
மூலத்தானை, முதல்வனை, மூ இலைச்-
சூலத்தானை-கண்டீர்-தொழல்பாலதே.

5.097   5 st/nd Thirumurai   Song # 18   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞமன் என்பான், நரகர்க்கு; நமக்கு எலாம்
சிவன் என்பான்; செழு மான்மறிக் கையினான்;
கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
தமர் என்றாலும், கெடும், தடுமாற்றமே.

6.083   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஞாலத்தை உண்ட திருமாலும், மற்றை நான்முகனும், அறியாத நெறியார்; கையில்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து, தொல்   உலகில் பல் உயிரைக் கொல்லும் கூற்றைக்
கால(த்)த்தால் உதைசெய்து, காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்;
பால் ஒத்த வெண்நீற்றர்; பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

8.109   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஞானக் கரும்பின் தெளியை, பாகை, நாடற்கு அரிய நலத்தை, நந்தாத்
தேனை, பழச் சுவை ஆயினானை, சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை, பிறப்பு அறுத்து, ஆண்டுகொண்ட கூத்தனை; நாத் தழும்பு ஏற வாழ்த்தி,
பானல் தடம் கண் மடந்தை நல்லீர்! பாடி, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!

8.123   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்;
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்!
மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்;
சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!

8.146   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்;
மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்;
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்;
வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.

10.100   10 st/nd Thirumurai   Song # 21   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

10.100   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

10.116   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

10.223   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே. 

10.223   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 24,

10.409   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்த எழுத்தே.

10.502   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே. 3,

10.508   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

10.508   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

10.508   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

10.508   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

10.508   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே. 9,

10.603   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.

10.608   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

10.611   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

10.611   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

10.611   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

10.801   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

10.813   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

10.905   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

10.917   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

11.004   11 st/nd Thirumurai   Song # 26   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.

11.008   11 st/nd Thirumurai   Song # 12   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப ஊனமில்சீர்

11.024   11 st/nd Thirumurai   Song # 17   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

11.033   11 st/nd Thirumurai   Song # 87   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.

11.036   11 st/nd Thirumurai   Song # 12   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 54   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து

11.037   11 st/nd Thirumurai   Song # 64   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்

11.037   11 st/nd Thirumurai   Song # 75   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து

12.010   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி  
மனையறம் புரிந்து வாழ்வார்.
12.060   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஞால முய்ய நாமுய்ய
நம்பி சைவ நன்னெறியின்
சீல முய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பாடச் செழுமறைகள்
ஓல மிடவும் உணர்வரியார்
அடியா ருடனாம் உளதென்றால்
ஆலம் அமுது செய்தபிரான்
அடியார் பெருமை அறிந்தார்ஆர்.
12.120   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஞானச்செய் தவரடிமேற்
பணிந்துமனை யகம்நண்ணி
மானக்கஞ் சாறனார்
மணக்கோலம் புனைந்திருந்த
தேனக்க மலர்க்கூந்தல்
திருமகளைக் கொண்டணைந்து
பானற்கந் தரமறைத்து
வருமவரைப் பணிவித்தார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 58   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஞாலம் அறியப் பிழைபுரிந்து
நம்பர் அருளால் நான்மறையின்
சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப்
பிள்ளை யார்தந் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு
குற்றம் நீங்கிச் சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான் முதுமறையோன்.
12.210   12 st/nd Thirumurai   Song # 318   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஞாலம் உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர் அருளினால்
சூலை மடுத்து முன்னாண்ட
தொண்டர் வரப்பெற் றோமென்று
காலை மலருங் கமலம்போற்
காஞ்சி வாணர் முகமெல்லாம்
சால மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 151   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 197   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
12.280   12 st/nd Thirumurai   Song # 244   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 382   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.
12.280   12 st/nd Thirumurai   Song # 672   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 728   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 760   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1166   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1247   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.
12.290   12 st/nd Thirumurai   Song # 136   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞாலம்வியப் பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 288   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞாலந்தான் இடந்தவனும்
நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார்
கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும்
குறுகிவிழுந் தெழுந்துகளித்
தாலந்தா னுகந்தவன் என்
றெடுத்தாடிப் பாடினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 337   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில்
குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப்
பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர்
ஆகித் தனியே சென்றணைந்தார்.
12.690   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
ஞானம் உண்டார் கேட்டருளி
நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி
அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில்
இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில்
உடனே பரமர் தாளடைந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list