சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஆசி     ஆயாதன     ஆற்றல்     ஆழியானும்     ஆழ்     ஆடல்     ஆன்     ஆதி     ஆழ்கடல்     ஆடு     ஆமை     ஆலும்     ஆறு     ஆற்றையும்     ஆம்     ஆலக்     ஆணும்     ஆகத்து     ஆவா!     ஆலநீழலார்,     ஆரம்     ஆவிக்     ஆதல்     ஆல்     ஆவில்     ஆடலான்,     ஆச்சியப்     ஆர்அறி     ஆதியு     ஆற்றுகி     ஆதிப்     ஆறங்க     ஆமேவு     ஆர்த்தெழு     ஆண்டு     ஆம்விதி     ஆத்த     ஆகுதி     ஆவையும்     ஆர்க்கும்     ஆர்வம்     ஆய்ந்துகொள்     ஆழி     ஆனே     ஆலிங்     ஆதியோ     ஆகின்ற     ஆணவச்     ஆகாய     ஆதித்தன்     ஆரும்     ஆக்குகின்     ஆண்மிகில்     ஆணவந்     ஆவன     ஆமா     ஆற்றரு     ஆண்டான்     ஆதியை     ஆரியன்     ஆன     ஆறது     ஆய்வரும்     ஆதார     ஆகுஞ்     ஆறும்     ஆமே     ஆரு     ஆய்ந்துரை     ஆறாற     ஆமுயிர்த்     ஆமேபொன்     ஆனந்தம்     ஆலய     ஆயும்     ஆறெட்     ஆறெழுத்     ஆமத்     ஆங்கு     ஆருயி     ஆவின்     ஆணைய     ஆறி     ஆலிக்குங்     ஆரே     ஆமைஒன்     ஆம்அயன்     ஆலம்உண்     ஆயிழை     ஆமது     ஆகிய     ஆமயன்     ஆகாச     ஆஇன     ஆமேவப்     ஆறிரு     ஆனை     ஆகமம்     ஆயத்துள்நின்ற     ஆய்ந்துண     ஆய்ந்தறி     ஆற்றில்     ஆடம்     ஆறந்     ஆகும்     ஆய     ஆங்கவை     ஆதாரம்     ஆடியும்     ஆரா     ஆன்ஐந்தும்     ஆறிடு     ஆதன     ஆறைந்து     ஆதித்த     ஆறாறின்     ஆக     ஆர்வ     ஆட்கொண்     ஆறந்த     ஆசான்முன்     ஆணவ     ஆணவம்     ஆறாறில்     ஆனஅவ்     ஆம்உயிர்     ஆம்அவ     ஆணவத்     ஆணவமா     ஆறாறும்     ஆறாறுக்     ஆயும்பொய்     ஆறா     ஆனந்த     ஆன்மாவே     ஆனைகள்     ஆடிய     ஆவுடை     ஆறாறு     ஆதியும்     ஆவ     ஆறே     ஆசூசம்     ஆவது     ஆசை     ஆன்கன்று     ஆறொடு     ஆயன     ஆளத்தி     ஆறிட்ட     ஆமாக்கள்     ஆலைக்     ஆராலும்     ஆளும்     ஆளானோம்     ஆயினேன்     ஆர்வல்லார்     ஆர்க்கின்ற     ஆரணங்     ஆயின     ஆயினஅன்     ஆழாதே     ஆறாம்     ஆம்என்பார்     ஆகுலம்     ஆடும்     ஆம்என்று     ஆளி     ஆறுகற்     ஆலமர்     ஆழும்     ஆயம்     ஆக்கூர்     ஆளானம்     ஆவா     ஆறாவெங்     ஆட்டும்     ஆங்குரைக்க     ஆல     ஆர்துணையா     ஆயன்     ஆய்ந்துன்றன்     ஆன்ஆய     ஆறுடையர்     ஆதரித்த     ஆளெனப்     ஆனேறே     ஆரணம்     ஆலையங்     ஆகங்     ஆதர     ஆறதே     ஆறுமண்     ஆலை     ஆகமங்கள்     ஆரணங்கும்     ஆதிச்     ஆடரங்கின்     ஆரூயிரை     ஆர்மலி     ஆமாண்பொன்     ஆதிமா     ஆங்கது     ஆரங்     ஆண்டகை     ஆலுமறை     ஆவதிது     ஆவணம்     ஆட்சியில்     ஆடுகின்     ஆர்த்தி     ஆரநறுஞ்     ஆதியாய்     ஆனதங்     ஆதியார்     ஆவதென்     ஆர     ஆளு     ஆனசீர்த்     ஆளுடைத்     ஆர்கொல்     ஆறலைத்     ஆண்டெதிர்     ஆங்கதன்     ஆர்தம     ஆறுசெஞ்     ஆட்கொள்ளும்     ஆயர்     ஆனிரை     ஆயஇசைப்     ஆனிரைகள்     ஆடுமயில்     ஆனாயர்     ஆங்கப்     ஆணை     ஆங்குவளர்     ஆத்தி     ஆங்குவன     ஆண்டகைமைத்     ஆயநா     ஆங்கவன்போய்த்     ஆண்டஅர     ஆங்கதுகேட்     ஆண்ட     ஆங்கவர்தந்     ஆனாத     ஆழிவிடம்     ஆவடுதண்     ஆளுடைய     ஆங்கவனும்     ஆங்கணையும்     ஆருயிரின்     ஆடுவார்     ஆங்கவன்தன்     ஆனஅப்     ஆய்ந்தசீர்     ஆலங்கா     ஆறணியுஞ்     ஆசனத்தில்     ஆதிநான்     ஆங்கவர்     ஆய்ந்த     ஆத     ஆளுடையா     ஆயபல     ஆறுலவு     ஆரணமும்     ஆங்கவர்தஞ்     ஆடி     ஆங்கணி     ஆரணங்கள்     ஆங்குடைய     ஆதிமாமறை     ஆங்ஙனம்     ஆவதொன்     ஆவதும்     ஆலமே     ஆற்றில்நீர்     ஆறுகொண்     ஆழ்க     ஆயி     ஆனஅற்     ஆற்றின்மேற்     ஆலவாய்     ஆனபுகழ்த்     ஆலின்கீழ்     ஆறணிந்தார்     ஆங்கவன்தான்     ஆதலினால்     ஆற்று     ஆவி     ஆங்கனம்     ஆதிமுதல்     ஆங்கவரைக்     ஆங்குமுன்     ஆறுவகைச்     ஆனசெயல்     ஆரூரன்     ஆளிடவேண்     ஆனா     ஆயிடை     ஆங்கவரும்     ஆலநிழற்     ஆழிநெடுமா     ஆதிதிரு     ஆவதே     ஆரணக்     ஆவினிரை     ஆளும்அங்     ஆயுள்வே     ஆர்வநிறை     ஆடற்     ஆராத     ஆரூரர்     ஆங்கவர்தம்     ஆங்கவன்யார்     ஆறணிந்த     ஆயசெயல்     ஆயஅர     ஆனைக்     ஆரண     ஆலம்     ஆனில்     ஆற்றானே!     ஆகம்     ஆதியார்,     ஆரூர்,     ஆறை,     ஆடை     ஆக்கு     ஆழ்ந்து     ஆறுசூடி,     ஆடினாய்,     ஆரிடம்     ஆற்ற     ஆண்     ஆடினார்,     ஆலம்,     ஆகமத்தொடு     ஆட்சியால்     ஆட்பாலவர்க்கு     ஆடும்(ம்)     ஆர்     ஆதியன்,     ஆதர்     ஆரல்     ஆறினொடு     ஆசு     ஆழியுள்     ஆதி,     ஆயிரம்     ஆக்கையால்     ஆனைக்காவில்     ஆர்த்து     ஆடினார்     ஆலின்     ஆதித்தன்,     ஆதியில்     ஆத்தம்     ஆர்,         ஆராய்ந்து,     ஆரியம்     ஆர்த்த     ஆதியான்,     ஆட்டினாய்,     ஆணி     ஆலத்து     ஆட்டினான்,     ஆதிநாதன்;     ஆரணப்     ஆற்றவும்(ம்)     ஆலநீழல்     ஆதியும்(ம்),     ஆறுகால்     ஆள்     ஆதியானை,     ஆதிப்பால்     ஆப்பி     ஆகாத     ஆதிக்கண்ணான்     ஆடுவாய்,     ஆரார்     ஆவினில்     ஆலாலம்     ஆர்த்தானை,     ஆண்டானை,     ஆர்ந்தவனே!     ஆலைப்     ஆட்சி     ஆதியனை,     ஆய்ந்தவன்     ஆரூர்     ஆர்த்தான்     ஆட்டுவித்தால்     ஆமயம்     ஆக்கும்     ஆர்த்தவர்,     ஆள்-தான்     ஆடுமின்,     ஆர்த்தாய்,     ஆவியைப்     ஆழியனாய்,     ஆழியாற்கு     ஆதியன்;     ஆக்கம்,     ஆங்கு,     ஆனந்தம்மே,     ஆதிமூர்த்திகட்கு     ஆற்றேன்     ஆண்டுகள்தோறும்     ஆடுகின்றிலை;     ஆவகை,     ஆ!     ஆட்டின்     ஆணோ,     ஆட்டுத்     ஆற்றகில்லேன்     ஆதம்     ஆர்க்கோ?     ஆலத்தி     ஆவியன்     ஆழமன்     ஆரத்     ஆளரிக்     ஆண்டி     ஆழியொன்     ஆறூர்     ஆடர     ஆயிரங்     ஆறாத     ஆரணத்தேன்     ஆயாத     ஆவியின்     ஆருயிர்     ஆசையை     ஆடிவரும்    
Search limited to first 100
1.003   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்!
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

1.011   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்
தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்
தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்
மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.

1.024   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்,
ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

1.029   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்
சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!

1.039   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,
தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.

1.046   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட,
பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்,
மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்,
வேடம் பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.

1.049   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.

1.050   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

1.057   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,
வீழ்சடையினன், வேற்காடு,
தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,
பாழ்படும், அவர் பாவமே.

1.061   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,
தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,
கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே.

1.062   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த
தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.

1.073   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு,
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும்
சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.075   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி,
சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத் தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்
நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர் கைதொழுது ஏத்த,
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.078   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்;
குழகு அலது அறியார்;
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள்
ஆடுவர்; கொன்றை அம்தாரார்;
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய
இவர் வணம் என்னே?

1.079   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலாச்
  சமணரும், தேரரும், கணி சேர்
நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா
முதல்வர் தம் மேனிச்
சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி
வையகத்து ஏற்று,
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம்
  நினைய, நம் வினைகரிசு அறுமே.
1.081   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்
பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.

1.084   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி,
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்-
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே.

1.086   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ
நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை,
தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.

1.089   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆவா! என அரக்கன் அலற அடர்த்திட்டு,
தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-
தேவே! என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

1.094   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலநீழலார், ஆலவாயிலார்,
காலகாலனார் பால் அது ஆமினே!

1.094   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடியே, மனம் நாடி, வாழ்மினே!

1.094   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்
தேர் அமண் செற்ற வீரன் என்பரே.

1.102   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ,
காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி,
வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்
மேவிப் பரவும் அரசே! என்ன, வினை போமே.

1.103   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின்
நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி;
பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

1.104   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

1.104   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.

1.111   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,
கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,
ஏல நல்மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே.

1.112   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-
வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.

1.119   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,
ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக்
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்;
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.

1.119   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள்,
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!

1.132   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு
மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும்
குணம் உடையோன், குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி,
மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்
பண் பாடும் மிழலை ஆமே.

2.009   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர் உயிர் வீட்டிய மா மணிகண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்,
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.

2.010   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர்
மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி
ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.

2.015   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
ஏற்றானே! ஏழ் உலகும் இமையோர்களும்
போற்றானே! பொழில் திகழும் திருக்காறாயில்
நீற்றானே! என்பவர்மேல் வினை நில்லாவே.

2.017   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ,
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள்
மேகம் தவழும் வேணுபுரமே.

2.026   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதியார், அந்தம் ஆயினார், வினை
கோதியார், மதில் கூட்டுஅழித்தவர்,
நீதியார் அ நெல்வாயிலார்; மறை
ஓதியார், எமது உச்சியாரே.

2.031   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.

2.033   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.

2.039   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

2.039   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு,
அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர்,
சேறை, துலை புகலூர், அகலாது
இவை காதலித்தான் அவன் சேர் பதியே.

2.042   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி,
நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

2.044   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

2.060   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

2.066   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

2.067   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறு
அங்கம்
பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து,
அஞ்சும்
ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர் ஒளி
தாங்கி,
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

2.068   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.

2.072   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில்
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார,
சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.

2.073   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
தங்கும் ஊரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

2.089   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம் சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.

2.100   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள்
நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே.

2.114   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர்
தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால்
வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண்
மருப்பினைக்
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே.

2.115   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆணும் பெண்ணும்(ம்) என நிற்பரேனும்(ம்), அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு ஓர் பொருள் ஆயினான்;
ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு, உடைகோவணம்
பேணுமேனும், பிரான் என்பரால், எம்பெருமானையே.

2.118   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி
கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால்
தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி,
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே.

2.121   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல் ஐந்தலை
நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள்,
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.

3.001   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!

3.001   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்! அமரர்க்கு அமரா! உமை
பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்! மழுவாளினாய்! அழல்
நாகம் தோய் அரையாய்! அடியாரை நண்ணா, வினையே.

3.006   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.014   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

3.016   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்,
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே.

3.033   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம்
சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே.

3.034   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு
பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி
ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும்
தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே.

3.036   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம்,
சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே,
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி,
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!

3.039   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

3.044   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்;
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.

3.052   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!
சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்!
கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்,
ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே?

3.054   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்

3.054   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?

3.059   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.

3.061   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

3.062   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும்
நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர்
போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த்
தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3.063   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகு
உலர்த்தும்,
பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்!
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!

3.067   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர்
தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன்
பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.

3.069   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே.

3.074   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள் தான்,
சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்; ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச்
சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர் அதுவே.

3.080   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே.

3.082   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.

3.104   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த,
மாசு அடையாத வெண் நீறு பூசி, மனைகள் பலி தேர்வார்
காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும்
பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதி(ந்) நியமமே.

3.105   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு, அன்று அமரர்க்கு அமுது உண்ண
ஊழிதொறும்(ம்) உளரா அளித்தான், உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால், கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கி ஏத்த, மருவா, பிணிதானே.

3.109   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;
காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.

3.110   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆழி அங்கையில் கொண்ட மால், அயன், அறிவு ஒணாதது
ஓர் வடிவு கொண்டவன்-
காழி மா நகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்-தவமே.

3.115   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

3.125   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்!
நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய
வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே.

3.901   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.
<

4.002   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,
பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி
நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

4.004   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்- ஆரூர் அமர்ந்த அம்மானே.



4.007   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை,
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,
நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி
ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

4.007   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை;
பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை;
மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!

4.009   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து.
பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?

4.015   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.

4.016   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

4.018   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன;
ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்;
ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்;
ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே.

4.029   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்;
கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்;
நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச்
சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.

4.032   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆவி ஆய், அவியும் ஆகி, அருக்கம் ஆய், பெருக்கம் ஆகி,
பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய், பிரமன் ஆகி,
காவி அம் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்- திருப் பயற்றூரனாரே.

4.036   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.

4.036   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

4.036   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

4.040   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆல் அலால் இருக்கை இல்லை; அருந்தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை; நுண் பொருள் ஆய்ந்து கொண்டு
மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க, வேலை
ஆல் அலால் அமுதம் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list