சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஒருமை     ஒற்றை     ஒண்     ஒளிறூ     ஒன்னார்     ஒளி     ஒருங்கு     ஒள்ளிது     ஒடுங்கும்     ஒன்றும்     ஒழுகிய     ஒருக்கிய     ஒன்றிய     ஒண்சுட     ஒழிந்தன     ஒருவன்     ஒருவனு     ஒளித்துவைத்     ஒருங்கிய     ஒழிபல     ஒக்க     ஒருக்கால்     ஒண்ணா     ஒருபொழு     ஒத்தஇவ்     ஒன்பது     ஒடுங்கி     ஒன்றது     ஒன்றில்     ஒண்ணாத     ஒன்றிரண்     ஒத்தடங்     ஒளிக்கும்     ஒளியது     ஒத்தசெங்     ஒன்றதே     ஒத்து     ஒன்றெனக்     ஒளியும்     ஒழியாத     ஒன்பதின்     ஒன்றே     ஒளித்திட்     ஒருவனை     ஒன்றுண்டு     ஒளியை     ஒன்றாய்     ஒன்பான்     ஒத்துல     ஒளிபவ     ஒன்றுகண்     ஒளியாம்     ஒன்பதும்     ஒன்பதொ     ஒத்த     ஒன்றிநின்     ஒழிந்தேன்     ஒப்பினை     ஒருபால்     ஒத     ஒளிவிலி     ஒடுகின்ற     ஒழித்தேன்     ஒருகண்     ஒன்றுரைத்     ஒண்களபம்     ஒருங்கா     ஒருகணையும்     ஒருடம்     ஒன்று     ஒளியார்     ஒன்றுரைப்பீர்     ஒருநெடுங்     ஒழிந்த     ஒளிவந்த     ஒன்றினோ     ஒராதே     ஒற்றி     ஒளிறு     ஒலக்கத்     ஒண்கலையும்     ஒழியா     ஒண்திறற்     ஒண்து     ஒடியெறிந்து     ஒருமுன்கைத்     ஒருமகள்     ஒப்பில்     ஒருவாறு     ஒற்றியூர்     ஒருகுன்ற     ஒருபிறப்பும்     ஒன்றுவே     ஒப்பரிய     ஒளிகதிர்த்     ஒற்றியூரி     ஒருவர்     ஒருகுடைக்கீழ்     ஒருதனித்     ஒழியாப்     ஒளிரும்     ஒலிநீர்     ஒருத்திஉமையோடும்     ஒருக்கும்     ஒப்பு     ஒளிர்     ஒருவரால்     ஒண்பிறை     ஒழுகல்     ஒண்திறலின்     ஒருவரையும்     ஒள்ளியர்     ஒருக்க     ஒலிசெய்த     ஒவ்வாத     ஒட்டாத     ஒன்றவே     ஒரு     ஒருத்தி     ஒருவரும்     ஒன்றி     ஒருவரைத்     ஒருத்தனார்,     ஒருத்தன்     ஒருத்தியை     ஒருவராய்     ஒழுகு     ஒருத்தனாய்     ஒட்டி     ஒன்றுதான்     ஒள்ளியார்     ஒள்     ஒருத்தனை,     ஒளவ     ஒழித்திடுமே,     ஒன்றாலும்     ஒறுத்தான்     ஒருவனாய்     ஒன்றா     ஒருமையே     ஒறுத்தாய்,     ஒழிப்பாய்,     ஒன்றினீர்கள்,     ஒருவர்க்கு     ஒட்டு(டு)     ஒளவனத்தின்     ஒன்ற     ஒழிவு     ஒருத்தரும்     ஒருவனே     ஒண்மையனே,     ஒன்றினொடு     ஒருங்கட     ஒராக     ஒளிவளர்     ஒழிவொன்றி     ஒருங்கிரு     ஒட்டா     ஒண்ணுதலி    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.003   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒரு பூதப்படை சூழ;
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.

1.005   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே, உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம் அல்லகண்டீர்;
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை காட்டுப்பள்ளி
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே!

1.010   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்,
பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து,
வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை
அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.

1.030   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்
தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

1.034   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,
அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,
களி ஆர் பொழில் சூழ்தரு, காழி
எளிது ஆம், அது கண்டவர் இன்பே.

1.043   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருங்கு அளி, நீ இறைவா! என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,
இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்
மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,
கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

1.057   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

1.059   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!

1.068   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார்,
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி,
கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.

1.122   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்
எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

1.124   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்
அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-
கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.

2.017   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடைமேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலில் நல செங்கயல் கண்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே.

2.018   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

2.031   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.

2.036   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது சொல்லீர்
பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே?

2.054   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

2.061   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

2.078   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

2.087   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும், அங்கம் அவை ஆர,
ஆடல் அரவம்
மிளிர்தரு கை இலங்க, அனல் ஏந்தி ஆடும் விகிர்தன்;
விடம் கொள் மிடறன்
துளி தரு சோலை ஆலை தொழில் மேவ, வேதம் எழில்
ஆர, வென்றி அருளும்,
நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும், நறையூரில்
நம்பன் அவனே.

2.088   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு
மூன்றொடு ஏழும் உடன் ஆய்,
அன்று இன்றொடு என்றும், அறிவு ஆனவர்க்கும்
அறியாமை நின்ற அரன் ஊர்
குன்று ஒன்றொடு ஒன்று, குலை ஒன்றொடு ஒன்று, கொடி
ஒன்றொடு ஒன்று, குழுமிச்
சென்று, ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு
முல்லைவாயில் இதுவே.

2.106   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர்
இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்;
அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும்
பலிக்கு என்று
வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை
கவர்ந்தாரே!

2.109   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர்வரை
எடுத்தலும், உமை அஞ்சி,
சுளிய ஊன்றலும், சோர்ந்திட, வாளொடு நாள் அவற்கு
அருள் செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்
நற்கொழுந்தினைத் தொழுவார்கள்,
தளிர் கொள் தாமரைப்பாதங்கள் அருள்பெறும் தவம்
உடையவர் தாமே.

3.057   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.

3.067   3 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு வழியை நினையா,
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு, கெழுவு சிவனைத்
தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி மொழிகள் மொழி தகையவே.

3.070   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்,
அண்டம் உற அங்கி உரு ஆகி, மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
கெண்டை இரை கொண்டு, கெளிறு ஆர் உடன் இருந்து, கிளர்வாய் அறுதல் சேர்
வண்டல் மணல் கெண்டி, மடநாரை விளையாடும் மயிலாடுதுறையே.

3.082   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன், இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ? என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.

3.088   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒள்ளியர் தொழுது எழ, உலகினில் உரை செயும் மொழிபல;
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய் எனக் கருதன்மின்! பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே!

3.118   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர
உழறிய படையர்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார்,
அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல
அறங்களே பயிற்றி,
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர்
எனல் ஆமே.

3.121   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க! எனவும்
உமையவள் கணவன் வாழ்க! எனவும்,
அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி இணை தொழவே,
நண்பினார் எல்லாம், நல்லர்! என்று ஏத்த, அல்லவர்,
தீயர்! என்று ஏத்தும்
பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

3.121   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால் ஆடல் அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும், அரக்கன்
வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு
நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.

3.901   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.

4.002   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும்,
முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும்,
சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை



4.005   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!

4.008   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;
களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.

4.018   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்;
ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது;
ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே.

4.018   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன;
ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை;
ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை;
ஒன்பது போல் அவர் பார் இடம்தானே.

4.025   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்;
நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று
அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே.

4.044   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்;
அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து;
பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!

4.045   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

4.062   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்;
பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க்
கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும்
அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

4.073   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம்
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு
வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெங் கானகத்துச்
சென்று அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.073   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி,
பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று,
மருவி, எம்பெருமான்! என்ன, மலர் அடி மெள்ள வாங்கித்
திரு அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.081   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை;
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா;
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
என்று வந்தாய்? என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

4.101   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

4.110   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்வி கண்டாய்-அண்டமே அளவும்
பெருவரைக்குன்றம் பிளிறப் பிளந்து, வேய்த்தோளி அஞ்சப்
பருவரைத் தோல் உரித்தாய்! எம்மை ஆளும் பசுபதியே!

5.001   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார், இளையார், விடம் உண்ட எம்
அருத்தனார், அடியாரை அறிவரே.

5.013   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே! திரு வீழிமிழலையுள்
அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

5.017   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல்
நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

5.020   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

5.024   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

5.024   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று;
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது;
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று;
ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.

5.031   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம், கழல் அடி
தொழுது, கைகளால்-தூ மலர் தூவி நின்று,
அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.

5.032   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்தன் ஆகிலும், பூந்துருத்தி(ந்) நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே!

5.033   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற,
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

5.041   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே.

5.045   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றுதான் அறியார், உலகத்தவர்;
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்;
துன்று வார் பொழில்-தோணிபுரவர்தம்
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே.

5.050   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
உள்கி உள்கி, உகந்து, இருந்தேனுக்குத்
தெள்ளியார் இவர் போல, திரு வாய்மூர்க்
கள்ளியார் அவர் போல, கரந்ததே!

5.058   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை,
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை, புகழத் துயர் வாடுமே.

5.062   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர்
கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

5.089   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

5.089   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு;
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை;
ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.

5.097   5 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவன் ஆகி நின்றான், இவ் உலகுஎலாம்;
இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்;
அரு அரா அரை ஆர்த்தவன்; ஆர் கழல்
பரவுவார் அவர் பாவம் பறையுமே.

5.097   5 st/nd Thirumurai   Song # 13   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒளவ தன்மை அவர் அவர் ஆக்கையான்;
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ!
மௌவல் நீள் மலர்மேல் உறைவானொடு
பௌவ வண்ணனும் ஆய்ப் பணிவார்களே.

6.003   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்;
வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி   காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி,
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது,
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!

6.004   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ; வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே; இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால்
அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.006   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற(வ்) அடி;
 ஊழிதோறுஊழி உயர்ந்த(வ்) அடி;
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்(ம்) அடி;
புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி;
இரு நிலத்தார் இன்பு உற்று அங்கு ஏத்தும்(ம்) அடி;
இன்பு உற்றார் இட்ட பூ ஏறும்(ம்) அடி;
திரு அதிகைத் தென்கெடில நாடன்(ன்) அடி-திரு
 வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.

6.009   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றாலும் குறைவு இல்லை;ஊர்தி வெள் ஏறு;
ஒற்றியூர் உம் ஊரே? உணரக் கூறீர்!
நின்று தான் என் செய்வீர், போவீர் ஆகில்?
  நெற்றிமேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்;
என்றும் தான் இவ் வகையே இடர் செய்கின்றீர்;
  இருக்கும் ஊர் இனி அறிந்தோம், ஏகம்ப(ம்)மோ?
அன்றித்தான் போகின்றீர், அடிகள்! எம்மோடு; 
-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

6.015   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
அழலை மாட்டி; உடனே வைத்து(வ்)
இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்;
  இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்;
அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே
ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;
கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

6.026   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை, ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயினானை, வன்   கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை,
பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை, புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை,
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.

6.028   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார்போலும்; ஊழிபல கண்டு இருந்தார்போலும்;
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார்போலும்; பிறப்பு, இடும்பை, சாக்காடு, ஒன்று இல்லார்போலும்;
உருகாதார் உள்ளத்து நில்லார்போலும்; உகப்பார்தம் மனத்து என்றும் நீங்கார்போலும்;
அருகு ஆக வந்து என்னை, அஞ்சல்! என்பார்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6.033   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும் உறையூரும் மேவினானை,
வைப்பு அவனை, மாணிக்கச் சோதியானை, மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை,
மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற   வினை இலியை, திரு மூலட்டானம் மேய
அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

6.034   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர்   உருவே மூ உருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?  காமனையும் கண் அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
 நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.039   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்; ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்;
விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்; விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்;
இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்;
மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி   மன்னும் மணாளன் தானே.

6.046   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின்   உச்சியை, உரும் ஆனானை,
பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை, பசுபதியை, பவளக்குன்றை,
திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின் இன்சுவையை, திகழும் சோதி
அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6.062   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான், ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று,
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன் திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர்
அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

6.078   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

6.099   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்;
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி,
இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக்
கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற
பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.014   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியனும் ஆனேன்;
உரிமையால் உரியேன்; உள்ளமும் உருகும்; ஒண் மலர்ச் சேவடி காட்டாய்;
அருமை ஆம் புகழார்க்கு அருள் செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள்,
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

7.023   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச்
செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!.

7.023   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித்
தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய்
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .

7.032   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ?
அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ?
முற்றா மதி சூடிய கோடிக் குழகா!
எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!

7.033   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒன்றினீர்கள், வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
குன்றி போல்வது ஒர் உருவரோ? குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ?
இன்றியே இலர் ஆவரோ? அன்றி உடையராய் இலர் ஆவரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.

7.040   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒரு மேக-முகில் ஆகி, ஒத்து உலகம் தான் ஆய், ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தான் ஆய்,
பொரு மேவு கடல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், புனைந்தவனை, புண்ணியனை,  புரிசடையினானை,
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திருத் தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும்
கருமேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

7.059   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த
பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை,
கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே?.

7.064   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு, உடல் தளர்ந்து, அரு மா நிதி இயற்றி,
என்றும் வாழல் ஆம், எமக்கு எனப் பேசும் இதுவும் பொய் எனவே நினை, உளமே!
குன்று உலாவிய புயம் உடையானை, கூத்தனை, குலாவிக் குவலயத்தோர்
சென்று எலாம் பயில் திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே! .

7.066   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ, உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு, மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஈந்தமை அறிந்து,
மிக்க நின் கழலே தொழுது, அரற்றி, வேதியா! ஆதி மூர்த்தி! நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான்! உனை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே!.

7.070   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒப்பு இலாமுலையாள் ஒருபாகா! உத்தமா! மத்தம் ஆர் தரு சடையாய்!
முப்புரங்களைத் தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே!
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே! திரு ஆவடுதுறையுள்
அப்பனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!

7.091   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாட, கழியும், வினையே.

7.101   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஒருவர்க்கு ஒருவர் அரிது ஆகில், உடை வெண்தலை கொண்டு ஊர் ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே? சொல்லீர்-எத்தனையும்
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே!

7.103   7 st/nd Thirumurai   Song # 10      
ஒட்டு(டு) இயல் ஆர் ஒருவடிவே உரைக்க என்றால் ஒளி உடைய திரு உருவம் பெரிய சோதி!
குட்டம், உடல் கொழுநோய்கள், வாத, பித்தம், கொடிய கயம்,-பாவத்தர் கூடக் கட்டி
இட்டம் உள விளையாட்டும் கோலம் காட்டி-இடர் இன்றி, விடக்கடலில் அடக்கை ஆக்கி,
அட்டகுணம் ஆய், ஆட்ட மூர்த்தி ஆனாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .

7.103   7 st/nd Thirumurai   Song # 12      
ஒளவனத்தின் அருமறையின் உச்சி உள்ளார் அணிமகர மண்டலப்புண் டரிகத்து(து) உள்ளார்,
ஒளவனத்தார் பாற்கடலின் பள்ளி ஆனார், அயன் ஆனார், மூவர்களும் ஆன சோதி!
ஒளவனத்தில் கொணர் வேடம் புனைந்து மாறா ஆயிரம் பேர் ஒளிகாட்டி, அகிலம் எல்லாம்
ஒளவனத்தில் அருந்துயரம் அகற்றி மாற்றும் ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.

8.102   8 st/nd Thirumurai   Song # 27   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,
மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,
பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,
கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,

8.103   8 st/nd Thirumurai   Song # 24   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!

8.103   8 st/nd Thirumurai   Song # 29   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
தாள் தளை இடுமின்!
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!
பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;

8.103   8 st/nd Thirumurai   Song # 33   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:
சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு

8.104   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

8.105.07   8 st/nd Thirumurai   Song # 68   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர்
குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி!
வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி!
தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.

8.106   8 st/nd Thirumurai   Song # 22   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து, ஒளி மிளிரும்
வெண்மையனே, விட்டிடுதி கண்டாய்? மெய் அடியவர்கட்கு
அண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம்
பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே.

8.107   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?'
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?'
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்: அவ்வளவும்
கண்ணைத் துயின்று, அவமே காலத்தைப் போக்காதே'
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப் பொருளை,
கண்ணுக்கு இனியானை, பாடிக் கசிந்து, உள்ளம்
உள் நெக்கு, நின்று உருக, யாம் மாட்டோம்; நீயே வந்து
எண்ணி, குறையில், துயில்' ஏல் ஓர் எம்பாவாய்!

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list