சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
சடை     செய்ய     செய்தவத்தர்     சந்து     சங்கு,     செறி     செய்     சலசல     செற்றவர்     செம்பொன்     சுரர்,     செது     செம்     சுடு     சீலம்     சூலம்     சினம்     சுருதிகள்     சிலை     சனம்     செப்பம்     செய்யர்,     சாடிக்     சூலப்படையான்,     சிறு     செடி     சமண்     சிறை     சங்கக்     சிரம்     சடைதனைத்     சீர்     சாந்தம்     சேய்     சிட்டம்     சோலை     சுழிந்த     சால     சாம்     சேற்று     சங்கோடு     சூது     சூலப்     செங்கண்     சடையினர்,     செல்வ     சிக்கு     சூடும்     சூடும்,     சந்தம்     சித்தம்     செய்யமேனியீர்!     செல்வம்     செங்கமலப்     சோலையில்     செந்துவர்     செம்பொனின்     சிந்தை     சங்கு     சிவன்     சார்ந்தவர்க்கு     சந்த     சத்தியுள்     சரிகுழல்     சாக்கியப்பட்டும்,     சாத்துவர்,     சுடுமணி     சடம்     செருவு     செற்றிட்டே     செம்பைச்     சுடர்மணி     செருக்குவாய்ப்     சே     செந்தளிர்     சாகம்     சடையன்;     செப்பும்     சதாசிவம்     சேர்ந்திருந்     செல்கின்ற     சித்தத்தின்     சிவனொடொக்     சந்தி     சாந்து     சினஞ்செய்த     சூடுவன்     சிவன்முதல்     சோதித்த     சிவமாம்     சூரிய     சிவயோக     சித்தர்     சோம்பர்     சத்த     சந்திப்     சீக்கை     சென்றுணர்     சத்திய     சத்தியம்     செல்வங்     சிறியார்     சத்தியை     சத்தன்     செவிமந்     சமைக்கவல்     சக்கரம்     சேவடி     செந்தா     சுக்கில     சிவமாகி     செய்தான்     சன்மார்க்க     செய்த     சோதி     சமாதி     சோதித்     சமாதிசெய்     செம்பொற்     சேருறு     சித்தந்     சித்திக     சந்திரன்     சாதக     சோதனை     சுழற்றிக்     சத்தியார்     சுழலும்     சுழல்கின்ற     சாற்றிடு     செவ்வாய்     சசியுதிக்     செம்புபொன்     சொல்லும்     சூக்குமம்     சூலத்     சேவிக்கும்     சிவாயவொ     சிகார     சாங்கம     சேர்ந்த     சாதனை     சுத்தஅம்     சிகைநின்ற     சாற்றிய     சிந்தையி     சொல்லவொண்     சடங்கது     சத்தி     சிந்தையில்     சூடிடும்     சத்தியும்     சத்தியி     சொல்லிய     சாம்பவி     சட்     சேவிப்     சௌம்முதல்     சேர்ந்தவர்     சூழ்ந்தெழு     சூலந்தண்     சத்தும்     சுத்தம்     சுத்தச்     சாற்றரி     சார்ந்தமெய்ஞ்     சரியாதி     சமையம்     சத்தமும்     சாற்றுஞ்சன்     சன்மார்க்கத்     சன்மார்க்கம்     சன்மார்க்கந்     சாலோகம்     சமயம்     சயிலலோ     சைவம்     சாயுச்     செய்யன்     சிவமல்ல     சிவகதி     சேயன்     சிமையங்க     சைவப்     சிவனவன்     சைவ     சித்திகள்     சுத்த     சிவனே     சித்த     சிவமான     சாத்திரம்     சிவனரு     சிவஞானி     சாத்திக     சீராரும்     சற்குணம்     சமயத்     சத்திதான்     சத்திநற்     சத்திக்கு     சிவமொடு     சீர்நந்தி     சாத்தியும்     சிவயோகி     செத்தார்     செய்திடும்     செய்யு     செஞ்சுட     சீவன்     சிவமா     சொல்லகில்     சென்றன     செல்லு     சார்ந்தவர்க்     சிவனை     சுழுனையைச்     சாக்கிர     செறியுங்     சுழுத்தி     சாக்கிரா     சகல     சகலத்திற்     சுத்தத்திற்     சாக்கிரந்     சார்வாம்     சாத்திகம்     செயலற்     சேருஞ்     சார்ந்தவர்     சிவமாதல்     சித்தாந்தத்     சிவனைப்     செம்மைமுன்     சத்தின்     சீவன்றன்     சித்தியும்     செற்றிடும்     சீவ     செவி     சந்திர     சோடச     சுடருற     சிவசிவ     செஞ்சுடர்     சிவாய     சிற்பரஞ்     சத்திகள்     சிவம்ஆடச்     சிவமாதி     சீய     சிவமாய்     சமையச்     சொரூபம்     செத்தில்என்     சிந்தைய     சிவபெரு     சிவன்வந்து     சூழுங்     செழுந்சடை     செத்த     சங்கரனைத்     சடைமேல்அக்     சீரார்ந்த     சிலம்படியாள்     செருக்கினால்     சார்ந்தார்க்குப்     செப்பேந்     சாற்றுவன்     சொல்லா     செப்பன     சங்கரன்     சந்தித்த     செறிவளை     சிந்தனை     சீரார்     சூளா     சேனா     சங்கணையும்     சல்லரி     சங்கரனே     சிலம்பு     சூளிகையும்     செல்ல     செங்கேழ்நல்     சூழும்     செங்கழுநீர்ப்     சுணங்கும்     சார்ந்தாரை     சென்றிறைஞ்சும்     சந்தனப்பூம்     சந்தின்     சாரற்     செடிமுட்டச்     சுனைநீடு     செந்தினையின்     சங்கம்     சூல     செழுந்தழல்     சக்கரத்தால்     சரணுடை     சங்குகோள்     செய்யான்     சூதொன்     சிவன்மாட்     சார்ந்துரைப்ப     சாராவார்     சென்றுசெருப்     சொல்லாயம்     சேரும்     சிவனந்தஞ்     செல்லும்     சேர்வும்     சேர்கின்ற     சடையே
நீரகம்
    சுடர்ப்பிழம்பு     செய்தரு     சிரமே
விசும்பு
    சூர்தந்த     சங்கிடத்     சதுர்முகன்     சடைமேல்     சுடர்விடு     சேய்தந்த     சென்றே     சிறைவண்டு     சுடலைப்     சங்கோர்     சிந்திக்     சிறைப்புள     சேண்தில்லை     சிரித்திட்ட     செப்பத்     சொல்லச்     செய்தவர்     சிறைநன்     சூதப்பொழி     சேரற்குத்     சத்தித்     சிங்கத்     செருவிலி     செழுநீர்     செம்பொ     சுரபுரத்     சூடுநற்     சிந்தையைத்     செப்பிய     சொற்செறி     சூதத்     சித்திரக்     சிந்தனையால்     செஞ்சொற்     செழுமலர்த்தார்     செஞ்சடைவெண்     சயமி     சரத     சதுரன்     சென்றுழிச்     சிவசம்     சம்பு     சையமால்     சாலிநீள்     சாலியின்     சூதபா     சொன்ன     சடைமருங்கில்     செல்லுநான்     சொல்லார்தமி     சிவனுறையுந்     செம்மாந்திங்     சோதிமணி     சீறடிமேல்     செம்மையால்     சாலநாள்     சென்னியால்     சென்னி     சென்றவர்     சொரிந்தன     செய்வதற்     சொல்லுவ     செல்லல்     சேதிநன்     சென்றடி     சேணார்     சீரின்     செயத்த     சங்கொடு     செறிந்தவர்     சேட்டாருங்     சுற்றத்தார்     சிலையினைக்     செந்தினை     சொன்னவுரை     சிலைமறவ     செங்கண்வயக்     சார்வருந்     செந்தழல்     செங்கண்வெள்     சேனையும்     சிலபகல்     சேறணிதண்     சென்றவருங்     செந்நெ     சாலி     சேவடியில்     சென்றணைந்த     சுரமகளிர்     சீர்மன்னு     சாயுந்     சூழுமிதழ்ப்     சால்பாய     செக்கர்ச்     செம்மாண்வினை     சங்கங்கள்     செறிவலித்திண்     சீரேறும்     சிவலோகம்     செந்தீமேல்     சுழிப்பு     சாயை     சாய     சீதமலி     சீர்நிலவு     செம்மை     செயலிப்     சென்ற     சிந்தும்     சென்றுதிரு     சுலவிவயிற்     சொற்றுணை     சினவிடைஏ     செஞ்சடைக்     சென்று     சூழுந்     செய்யமா     சீர்தரு     செங்குமுத     சீர்மன்னுந்     சார்ந்தார்தம்     சென்றுள்     சண்பை     சிலந்திக்     சீர்வளரு     சேணிலவு     சேர்ந்து     சண்பைவருந்     சென்றணைந்து     சீர்திகழும்     செம்பொன்னும்     சூத     செய்தபடி     சீல     சென்னிவளர்     சிவனருள்     சுண்ணமொடு     செம்பொன்முத     சூழவரும்     சிறுமணித்தேர்     சிவனடியே     சீர்மறையோர்     செம்மைபெற     செங்கமல     செழுந்தரளப்     சீரினில்     சிறியமறைக்     சிரபுரத்தில்     செல்வத்     சுற்று     சூடி     சிவிகை     சீர்வளர்     செல்வநெடு     சுருதியா     செந்தமிழ்     சின்னந்     சங்க     செழுந்திரு     செங்கைமான்     செங்கட்     செல்வக்     செம்மணி     சக்கரப்     சண்பைவரும்     சிந்தையால்     சிறுத்தொண்ட     சிரபுரத்து     சடையானை     சொற்பெரு     செஞ்சொல்     சிறப்பு     சேணுயர்     சண்பைத்     சிரபுரத்     சொல்லரச     சண்பைநா     சிரபுரத்துப்     சீர்மலி     சிரபுரச்     செம்பியர்     சென்றகா     சேர்த்தும்     சிந்தையிற்     செழியனும்     சைவமைந்தர்     சாற்று     செய்வதொன்     சீருடைப்     செய்தவத்தாற்     செப்புதலும்     சிவபாத     செங்கண்மால்     சேதுவின்கண்     சாலமிகத்     சென்றவர்கள்     சூழ்ந்துமிடைந்     சொல்லின்     சண்பையாளும்     சேணுயர்ந்த     செம்பொன்மலைக்     சுற்றம்     சீர்கெழு     சென்னியிள     சென்றணையும்     செல்வம்மலி     சேணுயரும்     சிகையொடு     சீரணி     செம்பொன்செய்     சிவனமர்ந்     சீர்பெருகு     செந்நெல்லும்     செங்கோல்     சிறப்பித்     செறிபுன்     சிறிது     சாத்தி     சாற்றி     செப்பரும்     செல்வமலி     சங்கரனார்     சித்தநிலை     சீர்வளருந்     சீர்கொள்     சாருந்     சங்கரர்தாள்     சங்கிலியார்     சேயிழையார்     செய்வதனை     சீர்பெருகுந்     சென்றுதம்     செம்மைசேர்     சுற்றியஅக்     சூதினில்வென்     சூதம்     சீருந்     செய்வினையுஞ்     சீதமதி     சுருளுமயிர்     சண்பையர்தம்     செம்பரிதி     சேரர்     சங்கப்     சேவித்     சேரமான்     செம்பியனா     சென்றுதிருப்     செஞ்சடையார்     சேர     செண்டாடும்     செய்யுள்நிகழ்     சென்றுசிவ     சூறை     சினவிடையார்     சீலமில     செக்குநிறை     சொல்வி     செறிவுண்டென்று     சைவநெறி     சங்கரன்தன்அடி     செருவிலிபுத்     சங்கரன்றன்     சங்கரனைச்     சங்கரனுக்     சாதியினில்     செற்றார்தம்     சாதனத்     செய்வ     செந்நெல்     சேம     செம்பின்     செப்பு     சாவாயும்     சடையானை,     சொல்லானை,     சோதியை,     சேர்த்தானே!     சொல்லானை;     சற்றேயும்     சடையாய்!     சிந்தாய்!     சுலவும்     சுறவக்     சிறவார்     சுற்றமொடு     சாதல்புரிவார்     சதுர     சங்கம்,     சாமவரை     சேலின்     செய்யா     செங்கய(ல்)லொடு     சலம்     சின்     சண்பை,     செழு     சுற்றல்     சுழி     செறுத்ததுவும்     சிரமும்,     சொல்     செற்ற     சுடுகாடு     சூடக     சாயல்     சுண்ணத்தர்;     செழுந்     சாக்கியப்     சாம     சுழித்த     சாகை     சோறு     சுடப்     சுரும்பு     சேடு     சீறு     சூடல்     சுண்ண     சாதி     சாம்பலோடும்     சேர்ப்பது     சுடர்     செவ்     சேடர்     சனி,     சாக்கியர்,     சூடுவர்,     சிற்றிடை     சீர்மை     செவிகள்     செரு     சிலையினால்     சிலைதனால்     சரிவு     சந்திரன்,     சந்தம்,     செய்யன்,     சந்துசேனனும்,     சூழ்ந்த     செந்து     செய்யனே!     சித்தனே!     சிட்டனே!     சேறு     சடையினன்,     சந்திரசேகரனே,     சூழ்தரு     செற்று,     செந்தண்     சேண்     சுரர்     சிங்க     சொக்கர்;     செந்தமிழர்,     சல்லரி(யி),     சொல்-நயம்     சுற்றமும்     சாக்கியக்கயவர்,     செந்நெல     செற்றினில்     செங்கயல்     செய்த்தலைப்     சூலமோடு     செற்று     சுரபுரத்தினைத்     சதி     சுருதியான்     செந்துவர்வாயாள்     செய்யதாமரைமேல்     சேற்றின்     சம்பரற்கு     சுரிகுழல்     சிட்டப்பட்டார்க்கு     செய்யும்     சலம்,     சுண்ணவெண்     செவிகாள்,     சொல்-துணை     செம்பவளத்     சடையானே!     சோற்றுத்துறை     செய்யர்;     சேய     செஞ்     சடையனார்;     சூடினார்,     சுடலை     சதுர்     சகம்     சவை     சோமனை     செல்வியைப்     சிந்தையும்     சிலந்தியும்     சுருள்     செறிவு     சித்தராய்     சித்தி     சாண்     செத்தையேன்,     சாற்றுவர்,     செம்மலர்க்     சுற்றும்     செருத்தனை     செய்ஞ்     சித்தத்து     சாட     சிந்தித்து     செற்றுக்     சொல்லக்     சுற்றி     சுற்றிக்     சிந்திப்பு     சுணங்கு     சுழல்     சுழிப்பட்ட     செஞ்சுடர்ச்     செல்     சாம்பலைப்     சிட்டர்,     சடையின்     சுண்ணவெண்பொடிப்     சொரிவிப்பார்,     செறுவிப்பார்,     சுடரைப்     சடையனை;     சூல,     சுனையுள்     சடைக்கணாள்,     சனியும்     சிரமம்     சாம்பல்     செம்பொனே     செதுகு     சுட்ட     சுற்றுவார்;     சலவராய்     சினக்கும்     சேடனார்     சந்தியானை,     சிந்தையுள்     சாக்கியத்தொடு     சித்தர்,     சந்திர(ன்)னொடு     சீர்த்த     செருத்தனைச்     சாற்றிச்     செருத்தனால்-தன     சமர     செக்கர்     சுற்றமும்,     சங்கை,     சிட்டனை,     சினத்தினால்     சாற்றினேன்:     செங்கணானும்     சிந்திப்பார்     சரணம்     செத்துச்     சந்திரனை     செய்யனே;     செம்பொனால்     சாம்பர்     செல்வப்     செற்றான்     செற்றது     செத்தவர்     சூலப்படை     சிலந்திக்கு     சில்     சுருக்கமொடு,     சூளாமணி     சங்கரன்காண்;     சங்கரனே,     சுடர்ப்     சீரால்     சுழித்     சிலைத்தார்     சந்திரனும்     சவம்     சந்திரனைத்     சமரம்     சீர்த்தானை,     செய்யாய்,     செஞ்சடைக்கு     செய்யானை,     சங்கை     சீர்த்தானை;     சுழித்தானை,     செந்தாமரைப்     சண்டனை     செம்பொன்னை,     சிங்கத்து     சிகரம்     சொல்லிடில்     சங்கையவர்     செடித்     சொல்லுவது     செடியேன்     செண்டு     செஞ்சேல்     சிலையால்     செய்யார்     சிம்மாந்து,     செறுவினில்     சிலைத்து     செந்தமிழ்த்     சக்கிரவாளத்து     சேந்தர்     செருக்கு     சாலக்     செட்டு     சாரணன்,     சித்தம்!     செப்ப(அ)ரிய     சாதலும்     சொல்லை     செறிந்த     சந்தனவேரும்,     சொல்ல(அ)ரும்     சிகரத்து     சங்கைப்     சடசட     சொல்லில்     சள்ளை     சுடுவார்     சைவத்த     சூழ்     செந்     செருந்தி     செடியேன்,     செப்பு(பு)     சேவகன்     சிறிய     சித்தமும்     சரதம்     சதிர்     சாயா     சடையிடைக்     சாவ,     செல்வம்,     செய்வது     சங்கரா,     செழிகின்ற     சச்சையனே,     சிரிப்பிப்பன்,     சூடுவேன்     சுந்தர     சூடகம்,     சட்டோ     சாடிய     சுந்தரத்து     சோலைப்     சிரிப்பார்;     சோதியாய்த்     செழுக்     சீ     சோதியே!     சாதி,     சதிரை     செறியும்     சடையானே,     சித்தமே     சேரக்     சாதல்,     சொற்பா     சிந்தா     சிறைவான்     சேணிற்     சிலம்பணி     செந்நிற     சங்கந்     சிலையொன்று     சுற்றுஞ்     செம்மல     செழுங்கார்     சுரும்புறு     சோத்துன்     செய்குன்     சுத்திய     சுரும்பிவர்     சிறார்கவண்     சுழியா     சுணங்குற்ற     சென்றார்     சீரியல்     சிற்பந்     சீரள     சிறுகட்     சுற்றின     சிறப்பிற்     சிறுவா     சுருடரு     சேணுந்     செய்ம்முக     சிவந்தபொன்     சூன்முதிர்     சேயே     சேறான்     செந்தார்     செழுமிய     சிலைமலி     சேவேந்து     செக்கர்ஒத்     சிறப்புடை     சீர்த்ததிண்     சந்தன     சரிந்ததுகில்     செம்மனக்     சொன்னவில்     செங்கணா     சித்தனே     சடைகெழு     சரளமந்     சீரால்மல்கு     சலம்பொற்     சந்தும்     சேர்வன்கொ     சேயிழை     சேலு     சொல்லாண்ட     சேவிக்க     சீரும்     சேலும்    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

1.002   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.

1.002   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்
கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.

1.004   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப்
புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே!
எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.004   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே!
எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.004   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப்
பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே!
எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய்
வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.005   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.

1.005   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சலசல சந்து அகிலோடும் உந்தி, சந்தனமே கரை சார்த்தி, எங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி, பாய்ந்து இழி காவிரிப் பாங்கரின்வாய்,
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே!

1.005   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செற்றவர் தம் அரணம்(ம்) அவற்றைச் செவ் அழல் வாய் எரியூட்டி, நன்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர்தாம் உணர்வு எய்தி, நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால், பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே!

1.007   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும்,
நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.011   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

1.012   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா
நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்
அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்
முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்
கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்
மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா
முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.

1.013   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும்,
பெய்ம்மின், பலி! என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.

1.015   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி,
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம்
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்,
நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!

1.016   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்
பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை,
ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்,
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.

1.018   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

1.020   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.

1.021   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.

1.021   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.

1.022   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

1.022   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்-
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த கருணையன் என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.

1.028   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.028   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.028   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சாடிக் காலன் மாள, தலைமாலை
சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்
பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து
ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.031   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,
காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.

1.032   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

1.033   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,
விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-
கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

1.033   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட
படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.

1.034   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,
அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.

1.035   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.

1.035   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.

1.036   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.

1.036   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

1.038   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி, வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற,
வரம் கொள் மயிலாடுதுறையே.

1.039   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.

1.041   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி,
கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்
கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன,
பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.

1.045   1 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்
ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை,
வேந்தன் அருளாலே, விரித்த, பாடல் இவை வல்லார்
சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச் சேர்வாரே.

1.048   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.

1.049   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

1.051   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,
சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,
ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.

1.053   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,
சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.

1.055   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சால மா மலர் கொண்டு, சரண்! என்று,
மேலையார்கள் விரும்புவர்
மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று
நீலம் ஆர் கண்ட! நின்னையே.

1.058   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செடி அமணொடு சீவரத்தார் அவர்
கொடிய வெவ் உரை கொள்ளேன் மின்!
கடியவன் உறைகின்ற கரவீரத்து
அடியவர்க்கு இல்லை, அல்லலே.

1.059   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
ஆம் ஆறு அறியாது, அலமந்து, நீர் அயர்ந்தும் குறைவு இல்லை; ஆன் ஏறு உடைப்
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்
தூ மாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!

1.060   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,
வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்
தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத
கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!

1.060   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்
முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்
பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!

1.061   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே.

1.063   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,
அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?
செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய,
வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!

1.066   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்
போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்
மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த
சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.

1.070   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூலப் படை ஒன்று ஏந்தி, இரவில் சுடுகாடு இடம் ஆக,
கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே,
பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை,
மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்;
இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார்
கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.

1.074   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

1.075   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.080   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

1.082   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்
தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.

1.083   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட,
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய
நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா,
இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.

1.086   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ,
ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை
நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே.

1.087   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

1.087   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்
ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,
ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு
பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.

1.087   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்
அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.

1.088   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

1.091   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

1.091   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

1.092   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

1.099   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்
வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக
நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!

1.101   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும்
அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்
தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து
அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.

1.104   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்-
ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்
வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்
பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.

1.105   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்,
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்,
காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.

1.105   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன
இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல்,
அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த்
தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே.

1.107   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.

1.110   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே,
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா,
எந்தைதன் வள நகர் இடைமருதே.

1.112   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

1.112   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிவன் உறைதரு, சிவபுரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்-
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

1.113   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி,
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

1.114   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்
கொய் அணி நறுமலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க,
மையல் செய் வள நகர் மாற்பேறே.

1.115   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே.

1.115   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சந்த நல்மலர் அணி தாழ்சடையன்,
தந்த மதத்தவன் தாதையோ தான்,
அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல
எம் தவன், இராமன் நந்தீச்சுரமே.

1.115   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்,
முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்,
அத்திய கையினில் அழகு சூலம்
வைத்தவன், இராமன் நந்தீச்சுரமே.

1.115   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சரிகுழல் இலங்கிய தையல் காணும்
பெரியவன், காளிதன் பெரிய கூத்தை
அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும்
எரியவன், இராமன் நந்தீச்சுரமே.

1.116   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

1.117   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம்
கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்கு இறகும்,
பேர்த்தவர் பல்படை பேய் அவை, சூடுவர்; பேர் எழிலார்;
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

1.118   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

1.118   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

1.118   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

1.122   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்
நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,
இலர் என இடு பலியவர், இடைமருதினை
வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.

1.122   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்
அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,
இருவகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?

1.126   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும்
சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய்,
ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு
ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும்
பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம்
கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக்
காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.

1.126   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில்
சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன்,
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு
ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு
ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்
கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக்
கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.

1.127   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

1.127   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

1.129   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.

1.132   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செந்தளிர் மா மலரோனும் திருமாலும்,
ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த,
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி,
நெய் சமிதை கையில் கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர்
சேரும் ஊர் மிழலை ஆமே.

1.133   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய எய்து,
ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

1.134   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்;
உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்;
விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.

1.135   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

2.001   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

2.001   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list