சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
    ஏறு     ஏனம்     ஏதம்     ஏறும்     ஏனத்து     ஏறில்     ஏர்     ஏலம்     ஏன     ஏரின்     ஏற     ஏயங்     ஏறுதல்     ஏற்றி     ஏழா     ஏறிய     ஏயிரு     ஏய்ந்த     ஏடங்கை     ஏந்திழை     ஏரொளி     ஏக     ஏதும்     ஏயெனின்     ஏத்தினர்     ஏத்துவர்     ஏறுடை     ஏனோர்     ஏலங்கொண்     ஏழும்     ஏழினில்     ஏத்தம்     ஏழு     ஏயும்     ஏறலால்     ஏதொக்கும்     ஏய்ந்து     ஏற்றின்     ஏழை     ஏனங்கிளைத்த     ஏத்தியே     ஏத்துற்றுப்     ஏறேய     ஏகம்ப     ஏவுசெய்     ஏழையென்     ஏந்தும்     ஏசுவார்     ஏனமு     ஏடநீ     ஏனமோடு     ஏறுகாற்     ஏழுவிரல்     ஏலங்கமழ்     ஏயு     ஏத     ஏகம்பன்     ஏறுதற்குச்     ஏறுயர்த்     ஏய     ஏதமே     ஏடுகள்     ஏடுநீ     ஏடகம்     ஏறுயர்த்தார்     ஏர்கெழு     ஏறணிந்த     ஏதமில்சீர்     ஏல     ஏகமாம்     ஏத்தாதே     ஏட்டு     ஏதமில்     ஏய்ந்தகடல்     ஏற்ற     ஏதனை,     ஏவும்     ஏடு     ஏழைமார்     ஏனையோர்     ஏந்து     ஏவம்     ஏண்     ஏனமருப்பினொடு     ஏவில்     ஏனப்     ஏறனார்,     ஏதுக்களாலும்     ஏழ்கடல்     ஏத்த(அ)ரும்     ஏனம்மால்     ஏலும்     ஏடுமதிக்கண்ணியானை     ஏறினர்,     ஏன்று     ஏற்று     ஏறினார்     ஏழித்     ஏழைமாரிடம்     ஏகாசம்     ஏற்றானை,     ஏயவன்     ஏவி,     ஏற்றார்     ஏலம்(ம்)     ஏசின     ஏனக்கொம்பும்(ம்)     ஏத்தாது     ஏரிக்     ஏசு     ஏழ்     ஏன்ற     ஏனத்திரள்     ஏவி     ஏகம்பத்து     ஏனக்     ஏனை     ஏசினும்,     ஏகாசமிட்ட     ஏழைத்     ஏசா     ஏழுடை     ஏனற்     ஏர்ப்பின்னை     ஏர்கொள்கற்     ஏகநா     ஏயிவரே    
Search limited to first 100
1.012   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு
ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,
மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.

1.013   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான்,
ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான்,
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள்
வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?

1.049   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

1.056   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார்
பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

1.058   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏதம் வந்து அடையா, இனி நல்லன
பூதம் பல்படை ஆக்கிய
காதலான், திகழும் கரவீரத்து எம்
நாதன், பாதம் நணுகவே.

1.077   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு
    ஒருங்கு உடன் ஆகிக்
கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர,
ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

1.084   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,
வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல்
ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த,
கானல் கடல் நாகைக்காரோணத்தானே.

1.086   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும்
வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன,
நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.

1.089   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை,
சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.

1.104   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,
சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல
மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.

1.106   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும்
கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம்
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை
ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

1.132   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

1.133   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,
சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.

2.013   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்
வேதனை, வெண்குழை தோடு விளங்கிய
காதனை, கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!

2.015   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.

2.017   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏவும் படை வேந்தன் இராவணனை,
ஆ என்று அலற, அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறிமானொடு தண்மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.

2.033   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

2.038   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,
கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.

2.038   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.

2.071   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ்
அடர ஊன்றி,
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம்போலும்
சாரல்சாரல்,
பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில்
பொலிய ஏந்தி,
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.

2.079   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி,
வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு
மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம்
வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

2.091   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.

2.094   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட
அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பு அவர் பலபல
உடையார்;
கேழல் வெண்பிறை அன்ன கேழ் மணிமிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

2.095   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு பேணி அது ஏறி; இள மதக்களிற்றினை எற்றி,
வேறு செய்து, அதன் உரிவை வெம்புலால் கலக்க மெய்
போர்த்த
ஊறு தேன் அவன்; உம்பர்க்கு ஒருவன்; நல் ஒளி கொள்
ஒண் சுடர் ஆம்;
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

2.099   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப்
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை;
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே!

2.099   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்,
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ!
பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக்
கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே!

2.100   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை, என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல்,
போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள்,
வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே.

2.111   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு
ஏறி,
கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர்
செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன்
சடைமேல் திகழ்கின்ற
வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

2.122   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன் அருள் செய்தவர்,
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது
மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப்
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே.

3.012   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.

3.015   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த்
தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய,
ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!

3.026   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.

3.028   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய்,
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில்
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.

3.032   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவு இடம்
சால(ம்) மாதவிகளும், சந்தனம், சண்பகம்,
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம், செல்வமே.

3.034   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை-
கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல்
நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே.

3.044   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!

3.054   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே

3.060   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு, உகந்து
கூன் இளவெண்பிறையும் குளிர் மத்தமும் சூடி, நல்ல
மான் அன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்,
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

3.065   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார்
ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும்
நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.

3.068   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாயமலையே.

3.070   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய்,
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர்
வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே.

3.070   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏதம் இலர், அரிய மறை; மலையர் மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
பேதை தடமார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்,
மாதர் மறிதிரைகள் புக, வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே.

3.080   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே.

3.083   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில்
சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச்
சேறு கமர் ஆன அழியத் திகழ்தரும் திரு நலூரே.

3.089   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி,
கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு, கோட்டாறு
ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!

3.092   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏன வெண் கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள
அரவும்,
கூனல் வெண் பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல் உடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள்
தேனில் வண்டு அமர் பொழில்-திரு நெல்வேலி உறை
செல்வர் தாமே.

3.095   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.

3.095   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே;
தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்
ஆர் துயர், அருவினை, இலரே.

3.095   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.

3.106   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என நின்றவர் காணார்
கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்த
வாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்-
பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே!

3.109   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,
ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!

3.110   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடைப் பூந் தண் ஓதியாள்
சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனிமேல் சேர்ந்து இரா,
வினையே.

3.125   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்-
நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை
நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே!

3.125   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை
மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை-
நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்-
போலும், தம் கோயில் புரிசடையார்க்கே.

4.003   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

4.010   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு-
கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும்
ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும்
கீறின உடையினர்-கெடில வாணரே.

4.018   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன;
ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்;
ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே.

4.019   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர,
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.

4.022   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்;
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே!
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே!

4.038   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே.

4.049   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு உடன் ஏழ் அடர்த்தான், எண்ணி ஆயிரம் பூக் கொண்டு(வ்)
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்;
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை மிண்ட;
கூறும் ஓர் ஆழி ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

4.051   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே!
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே!
ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்!
கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!

4.051   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும்,
நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே!
கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!

4.059   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏனம் ஆய்க் கிடந்த மாலும், எழில் தரு முளரியானும்,
ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார்
சேனம் தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்-அவளி வணல்லூராரே.

4.087   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

4.099   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, அல்லம் என்னில்,
சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!

5.003   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

5.012   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.

5.014   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

5.035   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவார் அலர், தீவினையாளர்கள்;
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான், உமையாளொடும் கூடவே.

5.049   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!

5.054   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்-
பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.

5.060   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப்
பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.

5.064   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண்
கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்-
கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.

5.065   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்-
பாவகாரிகள்-சொல்வலைப்பட்டு, நான்,
தேவதேவன் திருநெறி ஆகிய
பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே!

5.089   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்-
ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு-
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல்,
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.

5.091   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

5.097   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏன வெண்மருப்போடு என்பு பூண்டு, எழில்
ஆனை ஈர் உரி போர்த்து, அனல் ஆடிலும்;
தான் அவ்(வ்)வண்ணத்தன் ஆகிலும்; தன்னையே
வான நாடர் வணங்குவர், வைகலே.

6.004   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம் தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.010   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்;
   இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்;
நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு  உண்டார்; அங்கை அனலும் உண்டார்;
ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல்
உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்;
பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.021   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6.024   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்;
தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்; சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்;
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்;
அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்;
தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு   ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.025   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏந்து மழுவாளர்; இன்னம்பரா அர்; எரிபவள வண்ணர்; குடமூக்கி(ல்)லார்;
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக   வார்சடையார்; வந்து வலஞ்சுழி(ய்)யார்;
போந்தார், அடிகள் புறம்பயத்தே; புகலூர்க்கே போயினார்; போர் ஏறு ஏறி;
ஆய்ந்தே இருப்பார் போய், ஆரூர் புக்கார்; அண்ணலார் செய்கின்ற கண் மாய(ம்)மே!.

6.028   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏனத்து இள மருப்புப் பூண்டார்போலும்; இமையவர்கள் ஏத்த இருந்தார்போலும்;
கானக் கல்லால்கீழ் நிழலார்போலும்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
வானத்து இளமதி சேர் சடையார்போலும்; வான் கயிலைவெற்பில் மகிழ்ந்தார்போலும்;
ஆனத்து முன் எழுத்து ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6.029   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை, ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை,
கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை,
காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும்   புன்சடைமேல் கங்கைவெள்ள-
ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

6.036   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு   அப் புறம் ஆய் நின்றார் தாமே;
ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே;
தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே;
பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.046   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம் ஆட வல்லான் தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய் நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6.048   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன்   காண்; துன்பங்கள் இல்லாதான் காண்;
தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; உத்தமன் காண்; தானே எங்கும்
ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம் குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்   காண்; அவன் என் மனத்து உளானே.

6.075   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை   இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க்
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

6.076   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்;
தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம், துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம்
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு - மாமணி காண் வளம் கொள் மேதி
சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.

6.090   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஏடு ஏறு மலர்க்கொன்றை, அரவு, தும்பை, இளமதியம், எருக்கு, வான் இழிந்த கங்கை,
சேடு எறிந்த சடையானை; தேவர் கோவை; செம் பொன் மால்வரையானை; சேர்ந்தார் சிந்தைக்
கேடு இலியை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கிறி பேசி, மடவார் பெய் வளைகள் கொள்ளும்
காடவனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

7.001   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7.003   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏலம்(ம்) இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல்,
நீலம் மலர்ப் பொய்கையில் அன்னம் மலி, நெல்வாயில் அரத்துறையாய்! ஒரு நெல்-
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது, அழகா! அலந்தேன், இனி யான்;
ஆல(ந்)நிழலில் அமர்ந்தாய்! அமரா! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே!.

7.014   7 st/nd Thirumurai   Song # 12   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; எம்பெருமான்! என்று எப்போதும்
பாயின புகழான், பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழப் பல்-நாள்
வாயினால் கூறி மனத்தினால் நினைவான், வள வயல் நாவல் ஆரூரன்,
பேசின பேச்சைப் பொறுக்கிலர் ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்? .

7.018   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி,
கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே,
மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு,
யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

7.024   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,
வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை,
சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .

7.025   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே!
மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே!
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே,
கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .

7.036   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்; என்பு எலாம் அணிந்து என் செய்வீர்?
காடு, நும் பதி; ஓடு, கையது; காதல் செய்பவர் பெறுவது என்?
பாடல் வண்டு இசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்;
ஆடல் பாடலும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

7.043   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ?
வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய்,
மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே!

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list