சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஓடே     ஓதி     ஓர்     ஓடும்     ஓங்கிய     ஓலக்கஞ்     ஓமத்துள்     ஓடிவந்     ஓங்கு     ஓராய     ஓடவல்     ஓரணை     ஓடிச்     ஓதம்     ஓசையில்     ஓவிய     ஓசையும்     ஓரெழுத்     ஓமென்     ஓதும்     ஓங்காரம்     ஓங்காரி     ஓதிய     ஓரைம்ப     ஓரில்     ஓங்காரத்     ஓதலும்     ஓடுங்     ஓதிடு     ஓரிருள்     ஓம்புகின்     ஓம்எனும்     ஓமெனும்     ஓதின்     ஓதவன்     ஓதா     ஓங்கிப்     ஓங்கின     ஓடிடும்     ஓடைக்     ஓலைகாட்     ஓவியநான்     ஓங்கியநாற்     ஓவாதே     ஓது     ஓரெழுநாள்     ஓடி     ஓங்குதிருப்     ஓங்குபுனற்     ஓண     ஓத     ஓயாத     ஓதி,     ஓடம்     ஓத்து     ஓமையன,     ஓங்கி     ஓர்வு     ஓவு     ஓதினார்,     ஓவாத     ஓதியே     ஓம்பினேன்     ஓடை     ஓர்த்து     ஓதுவித்தாய்,     ஓணப்     ஓலி     ஓமத்தோடு     ஓட்டை     ஓதிற்று     ஓட்டு     ஓங்கி-உயர்ந்து     ஓராதார்     ஓசை     ஓவணம்     ஓர்ந்தனன்     ஓதக்கடல்     ஓடு     ஓய்வு     ஓயாதே     ஓடும்,     ஓவா     ஓமப்    
Search limited to first 100
1.032   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

1.041   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்;
மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்;
ஆதி, நீ அருள்! என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த
பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.

1.075   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது உரு அது கொண்டு,
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து, உடன் காதல் செய் பெருமான்-
நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச, விண்டு உதிர்ந்து,
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

1.088   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,
காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப்
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

1.107   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.

1.128   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

2.006   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

2.022   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓடும் நதியும், மதியோடு, உரகம்,
சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல்
கூடும் குழகன் குடவாயில்தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே.

2.024   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற,
நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே!
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத்
தாயே! என, வல்வினைதான் அறுமே.

2.050   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி, ஆரணம் ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி
நீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?
சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திரு நின்றியூர் உறை
ஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!

2.076   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்
சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

2.082   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர்
ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

3.006   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.012   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!

3.047   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்!
நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே!

3.059   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே
பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல
கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா,
ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே.

3.074   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரிய,
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்,
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே.

3.082   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓமையன, கள்ளியன, வாகையன, கூகை முரல் ஓசை,
ஈமம் எரி, சூழ் சுடலை வாசம்; முதுகாடு நடம் ஆடி;
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி, மிக்கு ஒளி துளங்க,
ஆமையொடு பூணும் அடிகள்(ள்); உறைவது
அவளிவணலூரே.

3.090   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

3.113   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓர்வு அரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள் கண்கள்
இணைக் கயலே;
ஏர் மருவும் கழல் நாகம் அதே; எழில் கொள் உதாசனன், ஆகம் அதே;
நீர் வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய கங்கையதே;
சேர்வு அரு யோக தியம்பகனே! சிரபுரம் மேய தி அம்பு அகனே!

3.114   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர் உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது, பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

3.116   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாதி கொண்டதும் மாதையே; பணிகின்றேன், மிகும் மாதையே;
காது சேர் கனம் குழையரே; காதலார் கனம் குழையரே;
வீதிவாய் மிகும் வேதியா; மிழலை மேவிய வேதியா!

3.116   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஓவு இலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே;
ஏவு சேர்வும் நின் ஆணையே; அருளில் நின்ன பொற்று ஆணையே;
பாவியாது உரை மெய் இலே; பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே!

4.006   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்;
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே! என்கின்றாளால்;
பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

4.022   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா எறிக்கும் சென்னிப்
பூதனார்; பூதம் சூழப் புலி உரி-அதளனார், தாம்;
நாதனார்; தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண் குழைகள் தாழக் கனல்-எரி ஆடும் ஆறே!

4.022   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி,
பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே!

4.029   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா
மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை;
தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.

4.041   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.

4.046   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!

4.060   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை,
வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை,
பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை,
கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே.

4.063   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.

4.073   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய் என்று எண்ணி, மயக்கில் வீழ்ந்து, அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.092   4 st/nd Thirumurai   Song # 17   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதிய ஞானமும், ஞானப்பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும், வேள்வியும், ஆவன; விண்ணும் மண்ணும்
சோதி அம் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன, தீ, மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன-ஐயாறன் அடித்தலமே.

4.099   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!

4.105   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும்,
காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத்
தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க்
கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.

5.002   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை,
பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?

5.009   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

5.022   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்,
ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை-
சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்-
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

5.031   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட, கெழுவினான்,
பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர்
ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.

5.052   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்;
ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்;
மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய
நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.

5.054   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்-
ஆலி வந்து இழியும் கெடிலக் கரை,
வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.

5.058   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண்
வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை
பாதனை, பழையாறை வடதளி
நாதனை, தொழ நம் வினை நாசமே.

5.066   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
பூதநாயகன், பொன்கயிலைக்கு இறை,
மாது ஓர்பாகன், வலஞ்சுழி ஈசனை,
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

5.076   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓமத்தோடு அயன்மால் அறியா வணம்
வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள்,
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்;
சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.

5.082   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம், கழல் அடி
நாட்டி, நாள்மலர் தூவி, வலம்செயில்,
வாட்டம் தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.

5.088   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓது பைங்கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி,
பாதுகாத்துப் பலபல கற்பித்து,
மாதுதான், மருகல் பெருமானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

5.097   5 st/nd Thirumurai   Song # 12   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்,
நாதனே, அருளாய்! என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப்படுமவர்
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

6.021   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6.028   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்; ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்;
நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்; காமரங்கள் பாடித் திரிவார்போலும்;
ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும்   அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

6.034   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ? ஓர் உகம் போல் ஏழ் உகம் ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலை ஆன வானோர் செய்த தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடு மாலோடு,
நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு ஏத்தி,
வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ? வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.036   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே;
பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார் தாமே;
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை நடுங்காமல் காப்பார் தாமே;
பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

6.038   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

7.005   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.

7.045   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்,
சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு;
சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை;
ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.

7.048   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓவு நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண்புனல் வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே.

7.054   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓதம் வந்து உலவும் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை, நாளும்
ஞாலம் தான் பரவப்படுகின்ற நால் மறை அங்கம் ஓதிய நாவன்-
சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன், வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் பத்து இவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.

7.059   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி,
கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக
ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்-
ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .

7.094   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்-
சீதப்புனல் உண்டு எரியைக் காலும்
சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே.

7.097   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்-
பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக்
காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ்
நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

7.103   7 st/nd Thirumurai   Song # 11      
ஓர் எழுத்து(து) ஆய், ஒண் பொருள் ஆய், தேன் ஆய், பால் ஆய், ஒளி அழலின் பழம் ஆகி, உருவம் ஒவ்வாத்
தாரணிக்குத் தான் ஒன்று(று) ஆய், தானும் மூன்று(று) ஆய், தான் எங்கும் கலந்து(து), ஈர் ஏழ் உலகும் மிக்க
பூரணத்தின் அரும்பொருளை-புண்ணி யத்தை, பூதலத்தோர் தொழுது(து) ஏத்தும் புனிதன் தன்னை,
ஆரணத்தின் பயன் தன்னை-அறிந்தாய்! எந்தை! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே.

8.105.04   8 st/nd Thirumurai   Song # 39   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து,
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி,
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்;
தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே?

8.107   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே, நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள்; சித்தம் களி கூர,
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப,
பார் ஒரு கால் வந்தனையாள்; விண்ணோரைத் தான் பணியாள்;
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர்? இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்,
வார் உருவப் பூண் முலையீர், வாய் ஆர நாம் பாடி,
ஏர் உருவப் பூம் புனல் பாய்ந்து ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!

8.108   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை,
நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும்
ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!

8.140   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஓடும், கவந்தியுமே, உறவு' என்றிட்டு, உள் கசிந்து;
தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து;
கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன்
ஆடும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

8.214   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஓங்கு மொருவிட முண்டம்
   பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
   வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
   றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
   யேன்சொல்லும் வாசகமே.

9.020   9 st/nd Thirumurai   Song # 2   கண்டராதித்தர்   திருவிசைப்பா  
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி
   ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்த ணாளர்
   ஆகுதி வேட்டுயர்வார்
மூவா யிரவர் தங்க ளோடு
   முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
   கூடுவ தென்றுகொலோ.

9.024   9 st/nd Thirumurai   Song # 5   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
ஓமப் புகையும் அகிலின் புகையும்
   உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு
   சிற்றம் பலந்தன்னுள்
வாமத் தெழிலார் எடுத்த பாதம்
   மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
   தேவன் ஆடுமே.

10.101   10 st/nd Thirumurai   Song # 52   திருமூலர்   திருமந்திரம்  
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

10.114   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

10.203   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.4,

10.209   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்கார் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 27   திருமூலர்   திருமந்திரம்  
ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. 

10.225   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 

10.304   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 22   திருமூலர்   திருமந்திரம்  
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 67   திருமூலர்   திருமந்திரம்  
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.

10.312   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே. 13,

10.314   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 

10.315   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.

10.401   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.

10.402   10 st/nd Thirumurai   Song # 31   திருமூலர்   திருமந்திரம்  
ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

10.402   10 st/nd Thirumurai   Song # 50   திருமூலர்   திருமந்திரம்  
ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

10.403   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

10.405   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

10.406   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.

10.406   10 st/nd Thirumurai   Song # 47   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

10.408   10 st/nd Thirumurai   Song # 79   திருமூலர்   திருமந்திரம்  
ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமது
தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதம்இது சத்திய மாமே.

10.412   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

10.518   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 19,

10.606   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.

10.612   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 13,

10.719   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

10.807   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.

10.813   10 st/nd Thirumurai   Song # 49   திருமூலர்   திருமந்திரம்  
ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.

10.903   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

10.903   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

10.907   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

10.917   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே. 18,

10.922   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list