சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
எண்     எறி     எந்தை!     எடுத்த     எண்ணார்     என்தான்     எரி     எருதே     எனைத்து     எடுத்தான்     எங்கள்     எண்ணும்     எய்யா     எண்திசையோர்     எழில்     எரித்தவன்,     எழுந்து     எழுந்துநீர்     எவ்வாறு     எய்திய     எட்டி     என்பே     என்னன்     எங்கும்     எலும்புங்     எட்டுத்     என்பால்     எட்டினுள்     எம்பெரு     எங்கே     எருவிடும்     எண்ணா     எட்டா     எட்டிவை     எழுகின்ற     எய்தும்     எட்டெட்     எட்டெட்டும்     எல்லாக்     எட்டு     எட்டும்     எட்டினில்     எண்ஆக்     எய்தி     எடுத்தஅக்     எந்தை     எடுக்கின்ற     என்     எய்திட     என்றும்     எழுத்தவை     எட்டாகிய     எண்ணமர்     என்றங்     எழுத்தொடு     எளியநற்     எல்லா     எம்மா     எண்ணில்     என்தாயொ     எண்ணிலா     எரிகதிர்     எண்ணிலி     எல்லாம்     எண்சாண்     எல்லாம்தன்     எய்தின     என்னை     எதிர்அற     என்னிலும்     எய்துவ(து)     எறிவது     எளிய     எப்பாழும்     எழுதாத     என்நெஞ்சம்     எனக்கினிய     எமக்கிதுவோ     என்னெஞ்சே     எண்ணம்     எரிகின்ற     எம்மிறை     எவ்வுருவில்     எண்தோட்கும்     எண்ணருங்     எல்லாரும்     எய்யத்     எனக்குவளை     என்னே     எரியாடி     எமையாள     எளியமென்     எனவே     என்நாம்     எம்மையும்     எழுமலர்த்     என்பும்     என்று     எழுவாள்     எம்மனை     எளிவந்த     எண்டலைக்     என்னையே     எனவாங்கு     எழுகுல     என்பட்டிக்     எம்பி     எனமொழிந்து     என்றுரைசெ     என்றான்     என்றலும்     எம்பிரான்     என்றெழு     எண்ணிய     என்றினைய     எய்து     என்றவுரை     என்றின்     என்றவர்     என்ன     எண்ணு     என்றவன்     என்னும்     என்றவ     என்றுபகைத்     என்செய்தாய்     எய்தியசீர்     எண்ணிறந்த     என்செய்தால்     என்றுமெய்த்     எடுத்தகுழற்     எம்மருங்கும்     எண்ணியநூற்     எள்ளுஞ்செயல்     என்றிவ்வுரை     எண்ண     எய்துமவர்     எறிந்த     எயிற்குலவும்     எந்தையும்எம்     என்றவன்முன்     எடுத்தமனக்     என்றபொழு     எறிபுனல்பொன்     எழும்பணியும்     எய்ப்பு     எதிர்கொண்     எய்தியபே     என்றபின்     என்றுரைக்க     எரிவிடம்     எழுந்த     எண்ணரிய     எப்பொருளும்     எச்சில்மயங்     எல்லையிலா     எடுத்ததிருப்     எண்ணருஞ்சீர்த்     எழுது     என்றவர்கள்     என்பொ     என்றுமுன்     என்றுவாது     என்னவாது     என்றபோது     என்றமண்     எரியிடை     எண்ணரும்     என்றுரைத்த     எடுத்துரைத்த     எதிர்சென்று     எண்திசையும்     எல்லை     எரியவிழ்     எண்ணில்ஆண்     எல்லையில்ஞா     எதிர்கொண்டு     எங்கணும்மெய்த்     எண்திசையில்     எண்தி     எழுந்தன     எதிர்வர     என்றுதம்     எத்திசையுந்     எஞ்சாத     என்னஅதி     எம்பெருமான்     என்னினைந்     என்றடி     எவ்வுலகும்     எத்தன்     எந்நிலையில்     என்ற     என்றருளிச்     எயிலணையும்     எல்லையில்பல்     எண்ணில்திரு     எடுத்துடன்ற     எழுந்திரைமா     எண்ணில்பெரும்     எதிர்கொண்ட     எல்லோரும்     எப்போதும்     எருக்கத்தம்     எற்று     எய்ப்புஆனார்க்கு     எண்ணானை,     எடுத்தானை     எளியாய்!     என்தன்     எண்ணும்,     எம்பிரான்,     எங்கேனும்     எரித்த     என்போடு,     எயில்     எம்மான்     என்பினார்,     என்பினால்     என்பொடு     எய்த     எரிதரு     எடுத்தனன்     எரிசரம்     எரிதர     எறிகடல்     எக்கர்     எண்திசைக்கு     எம்     எற்றினார்,     எடுத்தவன்     எண்ணாத     எண்பெ     எரிப்பிறைக்கண்ணியினானை     என்பு     எத்     எட்டுக்     எல்லியும்     எஞ்சல்     எண்பதும்     எரித்து     எரியும்     எழுவாய்     எண்ணாது     எத்தைக்கொடு     எப்போதும்(ம்)     எந்த     எம்பிரான்;     எரியினார்;     என்னில்     எளியனா     எட்ட     என்னன்,     எண்ணி     எட்டுமூர்த்தியாய்     எருக்கு     எந்தை,     எந்தையே!     எனக்கு     எரித்தானை,     எறிந்தானே!     எவரேனும்     எய்தானை,     எத்திசையும்     எச்சில்     எத்திக்கும்     எச்சன்     எண்ணுகேன்;     எம்பெருமான்!     எம்மான்,     எள்     என்பினையே     எறிக்கும்     எண்ணவன்     எற்றே,     எம்மான்!     எந்தையை,     எள்கல்     எவ்     எயிலார்     என்(ன்)னது     எற்றால்     எல்லாப்     என்னுடை     எறியது     எஞ்சா     எய்தினர்க்கு     எய்தல்     எறும்பிடை     எய்த்தேன்     எண்ணிலேன்     எனை,     எச்சம்     என்பாலைப்     என்னால்     எயிற்குல     என்னறி     எளிதன்     எழில்வா     எலும்பா     எழுங்குலை     என்கடைக்     எட்டுரு     எச்சனைத்     என்செய்கோம்     என்னைஉன்     எவருமா     எழிலையாழ்     எம்பந்த     எழுந்தருளாய்     எங்களை     எந்தைஎந்    
Search limited to first 100
1.008   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப்
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல்,
கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன
கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.

1.013   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய்,
பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய்,
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

1.023   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

1.024   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

1.024   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்
கள் நின்று எழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலி செய் பனையூரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை,
விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர்,
பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்
பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.

1.046   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி;
மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி,
பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள்,
விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.

1.054   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்தான் இம் மலை! என்ற அரக்கனை
வென்றார் போலும், விரலினால்;
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே.

1.060   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!
செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!

1.063   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

1.063   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எருதே கொணர்க! என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா,
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே?
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒருபது தேர் தொலையப்
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே!

1.065   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்
கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்
மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி,
பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

1.069   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

1.079   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்;
நால் மறையாளர்;
மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை;
எட்டு இருங்கலை சேர்
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ,
மதனனை வெகுண்ட
கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம்
வினைகரிசு அறுமே.

1.079   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்;
நீறு மெய் பூசித்
திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்;
வேய் புரை தோளி,
வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர்
வடிவொடும் வந்த
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம்
வினை கரிசு அறுமே.

1.082   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.

1.086   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும்
நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா,
தம் கை தலைக்கு ஏற்றி, ஆள் என்று அடிநீழல்
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

1.095   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை,
பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே.

1.095   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே.

1.097   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

1.097   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.

1.102   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து,
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி,
பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே! என்பார்க்கு
நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.

1.106   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு,
கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில்
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே.

1.112   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன்
முழுவலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து,
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.

1.113   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

1.119   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,
கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,
பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.

1.132   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம்
புரம் மூன்றும், எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம்
முகம் காட்ட, குதித்து    நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம்
வாய் காட்டும் மிழலை ஆமே.

1.132   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர்
சாக்கியரும், என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு
அருள்புரியும்  நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்து
ஓடும் இழியும் மிழலை ஆமே.

2.001   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? பெருமானிரே!

2.006   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

2.016   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை,
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.

2.016   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை,
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

2.016   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
2.016   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே

2.018   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

2.021   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ,
வளி, காயம், என வெளி மன்னிய தூ
ஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்கு
அளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே!

2.021   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!
விரி ஆர்தரு வீழ்சடையாய்! இரவில்
கரி காடலினாய்! கழிப்பாலை உளாய்!
உரிதுஆகி வணங்குவன், உன் அடியே.

2.022   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே.

2.027   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார்
நம்பன், நால்மறை பாடு நாவினான்,
இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே!

2.027   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த வல் அரக்கன் கரம்புயம்
அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட்
படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற, முயலும், இன்பமே!

2.034   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர்
மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி,
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.

2.036   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.

2.040   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

2.040   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு
இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி,
கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே

2.040   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு
தாள
நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான்,
உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.

2.063   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை,
மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்;
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்-
பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.

2.064   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை,
மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு,
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

2.066   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

2.074   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன் ஊர், கழுமலம்,
நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன் ஊர்,
நல் தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயன் ஊர், தராய்,
சண்பை காரின்
மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல் ஆய்
விளங்கிய எம் இறைவன் ஊரே.

2.077   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா மதி
உச்சியான்,
பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன், பிறப்பு இலி
என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன்
தாள்களுக்கு
அன்பினார் அறையணி நல்லூர் அம் கையால்
தொழுவார்கே

2.079   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து
இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால்
முகடு கொண்டு
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில்
மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

2.083   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற
சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற
பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய,
வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன
வளர்கின்ற கொச்சைவயமே.

2.085   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

2.086   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.

2.090   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

2.093   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்;
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர்
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

2.094   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்
உடையார்;
பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்
உடையார்;
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே.

2.103   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர்
நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர்,
மேய
மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை
உடையாரே.

2.106   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்
வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,
முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

2.111   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி
அரவினொடு, ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர்
செய்த விகிர்தனார்;
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த
வாய்மையர்; பொன்மிளிரும்
வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர்
அடிகள் வருவாரே.

2.117   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை
இரும்பைதனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்,
அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே.

2.122   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

3.008   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரிதரு வார்சடையானும்; வெள்ளை எருது ஏறியும்;
புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து, ஏத்தவே,
கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே?

3.009   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;
படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு இல்லையே.

3.016   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால்,
அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப்
படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும்,
கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே.

3.018   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்
திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை,
வரு முகில் அணவிய மாடக்கோயிலே.

3.019   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.

3.019   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன
கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.

3.021   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே.

3.037   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன் கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே.

3.039   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

3.043   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற
அடர்த்து, உகந்து அருள் செய்தவர் காழியுள
கொடித் தயங்கு நன் கோயிலுள், இன்புஉற,
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

3.051   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

3.064   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக் கோன்தனை வீழ,
முரி ஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்து, உகந்த முதலாளா
வரி ஆர் வெஞ்சிலை பிடித்து, மடவாளை ஒரு பாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

3.069   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே.

3.075   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.

3.077   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய, இறையே கருணை ஆய்,
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு, உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
பண் பயிலும் வண்டுபல கெண்டி, மது உண்டு, நிறை பைம்பொழிலின் வாய்,
ஒண் பலவின் இன்கனி சொரிந்து, மணம் நாறு உதவி
மாணிகுழியே.

3.077   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணம் அது இன்றி, எழில் ஆர் கைலை மாமலை எடுத்த திறல் ஆர்
திண்ணிய அரக்கனை நெரித்து, அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
பண் அமரும் மென்மொழியினார், பணைமுலைப் பவளவாய் அழகு அது ஆர்
ஒண் நுதல் மடந்தையர், குடைந்து புனல் ஆடு உதவி
மாணிகுழியே.

3.079   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.

3.085   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.

3.092   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச்
சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும்
இயல்பு அதுவே
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து
தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.

3.095   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.

3.095   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அருஞ் சடைமுடியீரே;
தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே.

3.095   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே;
நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.

3.121   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம் வான் உலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி இணை சேர்வான்,
முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சுலமும் மழுவும்
பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

3.123   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர்; வேள்வி
தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலைஅமர்ந்தாரே.

3.901   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.

3.902   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எண்பெ றாவினைக் கேதுசெய் நின்னருள்
நண்பு றாப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொ றாமுழுச் செல்வமும் மல்குமால்
புண்பொ றாதகி ளியன்ன வூரனே.

4.003   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!

4.005   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு, என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக் காக்கைப்பின் போன ஆறே!

4.015   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை,
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.

4.017   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை;
தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்;
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து
அத் தீ நிறத்தார்-அரநெறியாரே.

4.018   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்;
எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்;
எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன;
எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே.

4.019   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே.

4.025   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.

4.025   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே.

4.040   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எரி அலால் உருவம் இல்லை; ஏறு அலால் ஏறல் இல்லை;
கரி அலால் போர்வை இல்லை; காண் தகு சோதியார்க்கு,
பிரி இலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்-
அரி அலால்-தேவி இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே.

4.040   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
என்பு அலால் கலனும் இல்லை; எருது அலால் ஊர்வது இல்லை;
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை;
துன்பு இலாத் தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப் பாடும்
அன்பு அலால் பொருளும் இல்லை-ஐயன் ஐயாறனார்க்கே.

4.048   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எண் உடை இருக்கும் ஆகி, இருக்கின் உள் பொருளும் ஆகி,
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ஆகி,
கண் ஒரு நெற்றி ஆகி, கருதுவார் கருதல் ஆகாப்
பெண் ஒரு பாகம் ஆகி, பேணும்-ஆப்பாடியாரே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list