சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
ஈறு     ஈர்க்கும்     ஈசன்     ஈட்டிய     ஈவது     ஈசனடியார்     ஈரைந்திற்     ஈராறு     ஈரைந்தும்     ஈறது     ஈரும்     ஈரண்டத்     ஈனப்     ஈசத்து     ஈதென்     ஈரைந்     ஈசன்நின்     ஈறான     ஈற்றுப்     ஈசன்என்     ஈண்டொளிசேர்     ஈசனைக்     ஈசானன்     ஈங்கேவா     ஈன்ற     ஈரம்     ஈயும்     ஈண்டுமுற்     ஈரவே     ஈர     ஈண்டு     ஈன்றாளு     ஈசர்     ஈசனருள்     ஈங்கிவன்     ஈறில்     ஈண்டுச்     ஈறிலாப்     ஈசன்அடி     ஈசருக்கே     ஈசனையே     ஈடு     ஈசன்,     ஈன     ஈன்றாளும்     ஈட்டும்     ஈசனாய்,     ஈண்டா     ஈங்கைப்     ஈசனை,     ஈழ     ஈன்று     ஈசனே!     ஈசனே     ஈரம்பு     ஈண்டிய     ஈசற்     ஈவிளை     ஈண்டொல்லை    
1.011   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய்,
மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய்,
ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய்,
வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.

1.045   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம் பூண்டு ஆடி, வேடம் பயின்றாரும்
கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி, கருந்தேன் மொய்த்து,
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.093   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்
வாசமலர் தூவ, பாசவினை போமே.

2.005   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன்
வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான்,
ஆரம் பாம்புஅது அணிவான்தன், அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினைஆயின மாயுமே.

2.080   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே

2.090   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல்,
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

2.092   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈசன், ஏறு அமர் கடவுள், இன் அமுது, எந்தை,
எம்பெருமான்,
பூசும் மாசு இல் வெண் நீற்றர் பொலிவு உடைப் பூம்
புகலூரில்,
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்
முடிமேல்
வாசமாமலர் உடையார், வர்த்தமானீச்சுரத்தாரே.

2.120   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈர்க்கும் நீர் செஞ்சடைக்கு ஏற்றதும், கூற்றை உதைத்ததும்,
கூர்க்கும் நல் மூஇலைவேல் வலன் ஏந்திய கொள்கையும்,
ஆர்க்கும் வாயான் அரக்கன்(ன்) உரத்தை(ந்) நெரித்து,
அவ் அடல்
மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யா நின்ற மொய்ம்பு
அதே.

3.071   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈசன், எமை ஆள் உடைய எந்தை பெருமான், இறைவன் என்று தனையே
பேசுதல் செயா அமணர், புத்தர் அவர், சித்தம் அணையா அவன் இடம்
தேசம் அது எலாம் மருவி நின்று பரவித் திகழ நின்ற புகழோன்,
வாசமலர் ஆன பல தூவி, அணையும் பதி நல் வைகாவிலே.

3.113   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி அப்பினனே;
தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே;
வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
பூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த
உமாபதியே.

3.115   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே.

4.016   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச;
மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும்
பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.

4.094   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே.

5.010   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ!
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்!
நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!

5.060   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈட்டும் மா நிதி சால இழக்கினும்,
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்,
காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில்,
வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.

5.093   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்;
ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்;
ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்),
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

5.093   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,-
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,-
ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?

5.097   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈறு இல் கூறையன் ஆகி, எரிந்தவெண்-
நீறு பூசி நிலாமதி சூடிலும்,
வீறு இலாதன செய்யினும், விண்ணவர்,
ஊறலாய், அருளாய்! என்று உரைப்பரே.

6.034   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈசனாய், உலகு ஏழும் மலையும் ஆகி, இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ? மதயானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ? சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

6.042   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல் ஆம்; விதி உண்டு என்று சொல்ல
வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ; விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை
ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.

6.052   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்; கைம்மாவின் உரி போர்த்தான் காண்;
ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய் நின்றான் காண்; ஓங்காரன் காண்;
கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்; கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்;
வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

6.098   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை, இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க
தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?.

7.012   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஈழ நாட்டு மாதோட்டம், தென்நாட்டு இராமேச்சுரம்,
சோழ நாட்டுத் துருத்தி, நெய்த்தானம், திருமலை,
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய
கீழையில், அரனார்க்கு இடம் கிள்ளி குடி அதே .

7.054   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால்; யாவர் ஆகில் என், அன்பு உடையார்கள்?
தோன்ற நின்று அருள் செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்;
மூன்று கண் உடையாய்! அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்கு ஆகில்,
ஊன்று கோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எலும் ஊர் உறைவானே!.

7.103   7 st/nd Thirumurai   Song # 4      
ஈண்டு நன் மலர் கொண்டு(டு) உன் அடியார் ஏத்த, இருபொழுதும் மறையோர்கள் புனல் கொண்டு(டு) என்றும்
காண்டம் எனும் கடுஞ்சரத்தால் அசுரர் மாள, காதல் இரு மடவார்கள் அருகே நிற்க, பூண்ட ஏழ் புரவிக்
கொணர்ந்து(து) அருணன் ஊர, புவனம் எலாம் ஒளிவிளங்கப் போந்தே, என்னை
ஆண்டு கொண்ட பரமேட்டி! ஆதி மூர்த்தி! ஆதித்தா! அடியேன் என் இடர் தீர்ப் பாயே .

8.101   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

8.105.06   8 st/nd Thirumurai   Song # 51   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி
நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே:
தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.

8.105.08   8 st/nd Thirumurai   Song # 78   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என்எம்பிரான்
நீசனேனை ஆண்டு கொண்ட நின் மலா ஒர் நின்அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.

8.114   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

8.136   8 st/nd Thirumurai   Song # 6   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஈண்டிய மாய இருள் கெட, எப் பொருளும் விளங்க,
தூண்டிய சோதியை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்;
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல்; விரும்புமின் தாள்;
பாண்டியனார் அருள்செய்கின்ற முத்திப் பரிசு இதுவே.

8.212   8 st/nd Thirumurai   Song # 20   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஈசற் கியான்வைத்த வன்பி
   னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
   யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
   தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
   நீளம் பெருங்கண்களே.

8.213   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஈவிளை யாட நறவிளை
   வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
   நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
   அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
   யாடி திருமலைக்கே.

8.216   8 st/nd Thirumurai   Song # 21   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
ஈண்டொல்லை ஆயமும் ஔவையும்
   நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
   நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
   சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
   சேர்க திருத்தகவே.

10.101   10 st/nd Thirumurai   Song # 49   திருமூலர்   திருமந்திரம்  
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

10.106   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

10.122   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. 

10.124   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

10.217   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே. 

10.223   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே. 

10.308   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி
சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ்
வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே. 

10.312   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 

10.315   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 

10.408   10 st/nd Thirumurai   Song # 35   திருமூலர்   திருமந்திரம்  
ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

10.519   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே.

10.701   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின்
போதா லயத்து அவிகாரந் தனில்போதம்
மேதாதி ஆதார மீதான உண்மையே.

10.724   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.

10.735   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

10.735   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.

10.806   10 st/nd Thirumurai   Song # 23   திருமூலர்   திருமந்திரம்  
ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
ஈதென் றறியும் இயல்புடை யோனே.

10.822   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தைக்கியத்(து)
ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.

10.904   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

10.914   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

10.924   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

10.928   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.

11.003   11 st/nd Thirumurai   Song # 2   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை  
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமை காக்கும் பிரான்.

11.004   11 st/nd Thirumurai   Song # 38   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.

11.006   11 st/nd Thirumurai   Song # 2   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை
விண்டன வாட்கண்களே.

11.008   11 st/nd Thirumurai   Song # 28   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் தூய

11.008   11 st/nd Thirumurai   Song # 84   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் தாய்சொன்ன

11.008   11 st/nd Thirumurai   Song # 113   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் பாசிலைய

11.009   11 st/nd Thirumurai   Song # 63   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த மடக்குருகே - கூசி
இருத்தியாய் நீயும் இருங்கயிலை மேயாற்
கருத்தியாய்க் காமுற்றா யாம்.

11.009   11 st/nd Thirumurai   Song # 96   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்ல
படுகின்ற வண்ணம் பணி.

11.010   11 st/nd Thirumurai   Song # 8   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.

11.010   11 st/nd Thirumurai   Song # 9   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.

11.023   11 st/nd Thirumurai   Song # 74   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஈரம் உடைய இளமதியம் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்காலம் ஆயினீர் வாழ்வு.

11.023   11 st/nd Thirumurai   Song # 77   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டின் ஈயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.

11.024   11 st/nd Thirumurai   Song # 21   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டவொற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப் போதுமென் நெஞ்சத்தவே.

11.026   11 st/nd Thirumurai   Song # 36   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்
தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத் தைவகை அமளிச்
சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கம்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்

வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுந்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பின்
இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்கவன்றி
இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும்
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில் நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வங் கிடைத்த லானே.

12.040   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
ஈர மேனியை நீக்கி இடங்கொடுத்
தார வின்னமு தூட்டுதற் காசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்னென்று.
12.080   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
ஈரவே பூட்டும் வாள்விட்
டெறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள்மேல்
விழுந்தனர் நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக
எறிந்துஅவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தார் விண்ணோர்
பனிமலர் மாரி தூர்த்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 78   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்
விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 134   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஈன்றாளு மாய்எனக் கெந்தையு
மாகி யெனவெடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்அடி யோங்கட்கென்று
வான்தாழ் புனல்கங்கை வாழ்சடை
யானைமற் றெவ்வுயிர்க்குஞ்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ்
மாலைகள் சாத்தினரே.
12.210   12 st/nd Thirumurai   Song # 260   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஈசர் மிழலை இறையவர்பால்
இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
கைத்தொண் டாகும் அடிமையினால்
வாசி யில்லாக் காசுபடி
பெற்று வந்தார் வாகீசர்.
12.240   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஈசனருள் எனக்கேட்ட
இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருவனையார்
தமைநோக்கி மற்றிதுதான்
தேசுடைய சடைப்பெருமான்
திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசில்கனி அவனருளால்
அழைத்தளிப்பாய் எனமொழிந்தான்.
12.240   12 st/nd Thirumurai   Song # 49   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
ஈங்கிவன் குறித்த கொள்கை
இதுஇனி இவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற
தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டும் என்று
பரமர்தாள் பரவி நின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 85   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஈறில் பெருந்தவம் முன்செய்து
தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
ளான குறிப்போர்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 837   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஈண்டுச் சாதுக்கள் என்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினிற் போற்றுவீர் சார்மின்என்
றாண்ட சண்பை அரச ரருளினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 388   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
ஈறிலாப் புகழின் ஓங்கும்
ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப்
பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு
வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்
கதனைவிண் ணப்பஞ் செய்து.
12.360   12 st/nd Thirumurai   Song # 5   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.
12.580   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
ஈசருக்கே அன்பானார்
யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக்
கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின்
கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி
இனியனவே பேசுவார்.
12.580   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்  
ஈசனையே பணிந்துருகி
இன்பமிகக் களிப்பெய்திப்
பேசினவாய் தழுதழுப்பக்
கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித்தங்
கருவிதர மயிர்சிலிர்ப்பக்
கூசியே யுடல்கம்பித்
திடுவார்மெய்க் குணமிக்கார்.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list