சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அங்க
அங்கமும்     அங்கம்     அங்கமொடு     அங்கி     அங்கிசெய்     அங்கப்     அங்கியிற்     அங்கார்     அங்கே     அங்குசம்     அங்குநின்     அங்கண்     அங்கை     அங்கைத்     அங்கோல     அங்கு     அங்க     அங்குமவன்     அங்கணரை     அங்கண     அங்கண்மலைத்     அங்கப்பொழு     அங்கிவன்     அங்கவரும்     அங்கங்கள்     அங்கணைந்து     அங்குறையு     அங்குறை     அங்குறைந்து     அங்கணன்     அங்ககன்று     அங்கண்விழ     அங்கணைந்     அங்கணகன்     அங்கண்இனி     அங்கணர்     அங்கவர்     அங்கது     அங்கயற்     அங்கணரைப்     அங்குள்ள     அங்கண்வட     அங்கவள்     அங்கண்அமர்     அங்குச்     அங்கவர்தம்     அங்கணர்தம்     அங்கணைவார்     அங்கினி     அங்கவளும்     அங்கொருநாள்     அங்கணர்தங்     அங்கவர்தாம்     அங்கணனை     அங்கையில்     அங்கையுள்     அங்கத்தை     அங்கமே     அங்கங்களும்     அங்கத்து     அங்கி,     அங்கைகொண்(டு)    
Search limited to first 100
1.006   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.043   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.

1.065   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால்,
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப,
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

1.090   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

1.100   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து,
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து,
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி
பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

1.108   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.

1.109   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,
திங்களொடு அரவு அணி திகழ் முடியன்,
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.

3.007   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.

3.048   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.

3.075   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் விரி துத்தி அரவு, ஆமை, விரவு ஆரம் அமர்
மார்பில் அழகன்,
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது, பயில்கின்ற பதிதான்-
பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத்திரள் பொலிந்த அயலே,
சங்கு புரி இப்பி தரளத்திரள் பிறங்கு ஒளி கொள்
சண்பைநகரே.

4.010   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்
மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை-
நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.

4.029   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.

4.033   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

4.075   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை!
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை,
எங்கு உற்றாய்? என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாயே!

5.019   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.

5.067   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன்
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்,
செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம்
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.

6.094   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் மாகி, அருமறையோடு ஐம்பூதம் தானே யாகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே யாகி, பால் மதியோடு   ஆதி ஆய், பான்மை யாகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை யாகி, கழியும் மாகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே.

6.099   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கமே பூண்டாய்! அனல் ஆடினாய்!
ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்!
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்!
பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்!
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன்
திருப் புகலூர் மேவிய தேவதேவே!.

7.035   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த்
தங்கினோமையும், இன்னது என்றிலர், ஈசனார்; எழு, நெஞ்சமே!
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி, வானவர்தாம் தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே.

7.062   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும் ஆய நம்பனை, வேய் புரை தோளி
தங்கு மா திரு உரு உடையானை, தழல் மதி(ச்) சடைமேல் புனைந்தானை,
வெங் கண் ஆனையின் ஈர் உரியானை, விண் உளாரொடு மண் உளார் பரசும்,
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக் காவினில் கண்டு கொண்டேனே.

7.071   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை,
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி,
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.

7.080   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கம் மொழி அன்னார் அவர், அமரர், தொழுது ஏத்த,
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில்
பங்கம் செய்த பிறை சூடினன்; பாலாவியின் கரைமேல்-
செங்கண்(ண்) அரவு அசைத்தான் திருக்கேதீச்சுரத்தானே.

7.080   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்-
தெங்கு அம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சுரத்தானே.

7.097   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும்,
எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்;
பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்;
செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.

7.099   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப்
பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?-
பங்கய மா மலர்மேல் மது உண்டு, பண் வண்டு அறைய,
செங்கயல் நின்று உகளும்-திரு நாகேச்சுரத்து அரனே!

8.113   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,
செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,
பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,
பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

9.013   9 st/nd Thirumurai   Song # 10   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய
   அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
   உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்
   கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.
10.100   10 st/nd Thirumurai   Song # 26   திருமூலர்   திருமந்திரம்  
அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

10.114   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 15,

10.201   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 2,

10.211   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

10.319   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே. 

10.321   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே. 

10.716   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

10.814   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.

10.909   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

10.912   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அங்குசம் என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.

10.915   10 st/nd Thirumurai   Song # 19   திருமூலர்   திருமந்திரம்  
அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

10.919   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

11.004   11 st/nd Thirumurai   Song # 52   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

11.008   11 st/nd Thirumurai   Song # 25   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

11.008   11 st/nd Thirumurai   Song # 101   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்

11.008   11 st/nd Thirumurai   Song # 148   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி

11.016   11 st/nd Thirumurai   Song # 26   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த
செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத்

11.021   11 st/nd Thirumurai   Song # 26   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.

11.037   11 st/nd Thirumurai   Song # 133   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்

12.000   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்
நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று
அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.
12.000   12 st/nd Thirumurai   Song # 80   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கு ரைக்கென் னளவப் பதியிலார்
தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின்
பங்கி னாள்திருச் சேடி பரவையாம்
மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை.
12.000   12 st/nd Thirumurai   Song # 221   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்குமவன் திருமுடிமேல்
மீண்டுமவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ்
திருநாவ லூராளி
இங்கென்னைப் பலகாலும்
மிதித்தனைநீ யாரென்னக்
கங்கைசடைக் கரந்தபிரா
னறிந்திலையோ எனக்கரந்தான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 224   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 232   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
ஆட ரம்பையர் அரங்கு  முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்குசடை  கங்கை முழங்கும்
தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
12.080   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 63   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 116   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அங்கிவன் மலையில் தேவர்  
தம்மைக்கண் டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா  
வல்லுடும் பென்ன நீங்கான்
இங்குமத் தேவர் தின்ன
இறைச்சிகொண் டேகப் போந்தான்
நங்குலத் தலைமை விட்டான்
நலப்பட்டான் தேவர்க் கென்றான்.
12.160   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
12.170   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும்
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
12.190   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத்
திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவுந் திருவிளை யாட்டால்
ஏக மாமுதல் எதிர்ப்படா தொழியப்
பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே
புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.
12.200   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணிமணற்
புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும் வகுத்தமைத்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கவரும் அமண்சமயத்
தருங்கலைநூ லானவெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே
அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுறும் உடற்சமணர்
சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்
தங்களின்மே லாந்தரும
சேனரெனும் பெயர்கொடுத்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 72   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கங்கள் அடங்க உரோமமெலாம்
அடையப்புள கங்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப்
புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்குங்கரு ணைப்பெரு வெள்ளமிடத்
தகுமோவென இன்னன தாமொழிவார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 214   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கணைந்து தம்பெருமான்
அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப்
போற்றிசைத்துப் பணிசெயுநாள்
தங்குபெருங் காதலினால்
தாமரைமேல் விரிஞ்சனொடு
செங்கண்மால் அறிவரியார்
திருவாரூர் தொழநினைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 274   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கு நிகழ்ந்த அச்செயல்கண்
டடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திடமெய்
பொழியுங் கண்ணீர் பாய்ந்திழிய
எங்கும் நிகரொன் றில்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெருந்தகையும்
அரசும் மடத்தில் நண்ணியபின்.

12.210   12 st/nd Thirumurai   Song # 306   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 338   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்குறையு நாளின்கண்
அருகுளவாம் சிவாலயங்கள்
எங்குஞ்சென் றினிதிறைஞ்சி
ஏத்துமவர் இறையருளால்
பொங்குபுனல் திருவொற்றி
யூர்தொழுது போந்துமையாள்
பங்குடையார் அமர்ந்ததிருப்
பாசூராம் பதியணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 348   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 352   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கு முற்றிஅ கன்று போகி
அருஞ்சு ரங்கள் இகந்துசென்
றெங்கு மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி யிகந்துபோய்
மங்குல் சுற்றிய வெற்பி னோடு
வனங்கள் யாறு கடந்தயற்
பங்க யப்பழ னத்து மத்திம
பைதி ரத்தினை எய்தினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 389   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்குறை யுந்தன்மை வேண்டி
நாமடி போற்றுவ தென்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத்தொண்டு செய்வார்
தம்பிரா னார்அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் அங்கொன்று செய்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 410   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்குறைந்து கண்ணுதலார்
அருள்சூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப்
புறம்பணைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந்
திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள்
எல்லாம்புக் கிறைஞ்சுவார்.
12.240   12 st/nd Thirumurai   Song # 59   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.
12.250   12 st/nd Thirumurai   Song # 9   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்ககன்று முனிவரும்போய்
அப்பூதி அடிகளார்
தங்குமனைக் கடைத்தலைமுன்
சார்வாக உள்ளிருந்த
திங்களூர் மறைத்தலைவர்
செழுங்கடையில் வந்தடைந்தார்
நங்கள்பிரான் தமர்ஒருவர்
எனக்கேட்டு நண்ணினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 180   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கு நின்றெழுந் தருளிமற்
றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற்
பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர்
பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது
குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 236   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 279   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 288   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்குநின் றேகிஅப் பாங்கில்
அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித்
திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 310   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 351   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கப் பதிநின் றெழுந்தருளி
அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 404   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 470   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 494   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
வாய்மை வினவி மகிழும் போது.
12.280   12 st/nd Thirumurai   Song # 513   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்க ணைந்தமர்ந் தருளுவார்
அரனெறி அமர்ந்த
செங்க ணேற்றவர் சேவடி
12.280   12 st/nd Thirumurai   Song # 517   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கு நன்மையில் வைகும்அந்
நாள்சில அகல
நங்கள் தந்திரு நாவினுக்
கரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ
அருளினாற் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை
சார்ந்தருள் செய்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 520   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்குநின் றரிதெழுந் தருளுவார்
அகிலகா ரணரும் ஆனார்
தங்குநற் பதிகளும் பிறபணிந்
தருளிவண் தமிழ்பு னைந்தே
எங்குமெய்த் தவர்குழா மெதிர்கொளத்
தொழுதெழுந் தருளி வந்தார்
பொங்குதண் பாசடைப் பங்கயப்
புனல்வயற் புகலூர் சார.
12.280   12 st/nd Thirumurai   Song # 548   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 595   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கவர் ஏகச் சண்பை
ஆண்டகை யாரும் அப்பர்
எங்குற்றார் என்று கேட்ப
எய்தினார் திருவாய் மூரில்
பொங்கிய காத லால்என்று
உரைத்திடப் போன தன்மை
சங்கையுற் றென்கொல் என்று
தாமும்அங் கணையப் போந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 666   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கம் எட்டினும் ஐந்தினும்
அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப்
புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியுந்
திகழ்திரு மேனி
எங்கு மாகிநின் றேத்தினார்
புகலியர் இறைவர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 679   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.
12.280   12 st/nd Thirumurai   Song # 798   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 861   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கயற் கண்ணி தன்னோ
டாலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம்
பணிவன்என் றெழுந்து சென்று
பொங்கொளிச் சிவிகை ஏறிப்
புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க் கரசி யாரும்
மன்னனும் போற்றி வந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 877   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணரைப் பணிந்துபோந்
தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த
காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத்
தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற்
றிதுவென்றே தெரிந்துரைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 914   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 928   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கவரும் அடிபோற்றி
ஆண்டஅர செழுந்தருளிப்
பொங்குபுனற் பூந்துருத்தி
நகரின்கண் போற்றிசைத்துத்
தங்குதிருத் தொண்டுசெயும்
மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி
எங்குநிகழ்ந் திடஇருந்த
படியெல்லாம் இயம்பினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 946   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கணரைப் போற்றியெழுந்
தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற்
புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு
தாம்பரவிச் செல்லுநாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 953   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கம் மாநிலத் தெட்டுற
வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற் புடைவலங்
கொண்டுமுன் பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாம்
கோயிலை அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந்
தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.
Search limited to first 100      
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:34:57 +0000