சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அங்கண்
அங்கண்     அங்கண்மலைத்     அங்கண்விழ     அங்கண்இனி     அங்கண்வட     அங்கண்அமர்    
11.004   11 st/nd Thirumurai   Song # 52   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

12.000   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 232   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
ஆட ரம்பையர் அரங்கு  முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்குசடை  கங்கை முழங்கும்
தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
12.100   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.
12.160   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
12.170   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும்
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
12.200   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணிமணற்
புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும் வகுத்தமைத்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 306   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 348   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 279   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 404   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 548   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 679   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.
12.280   12 st/nd Thirumurai   Song # 971   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அணைவார் பணிந்தெழுந்து
போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து
புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும்
இன்ப அருவி பெருக்கினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 984   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அமரர் பெருமானைப்
பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
டத்தைச் சென்று குறுகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1026   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
12.280   12 st/nd Thirumurai   Song # 1125   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்அமர் வார்உலகா
ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார்
பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 153   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண்இனி தமர்ந்தருளால்
திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத்
திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம்
எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது
திருப்பதிகம் போற்றிசைப்பார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 192   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அமர்வார் அனேகதங்கா
வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.
12.320   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 70   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 139   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.
12.410   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
அங்கண்இனி துறையுநாள்
அரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக்
கோமன்னர் திறைகொணரத்
தங்கள் குல மரபின்முதல்
தனிநகராங் கருவூரின்
மங்கலநா ளரசுரிமைச்
சுற்றமுடன் வந்தணைந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 41   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
அங்கண் எய்திய திருவணுக்
கன்திரு வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு
நின்றனர் தம்பிரா னருளாலே
பொங்கு மாமதம் பொழிந்தவெள்
ளானையின் உம்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர்
நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000