சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அங்கை
அங்கை     அங்கைத்     அங்கையில்     அங்கையுள்     அங்கைகொண்(டு)    
3.007   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.

3.048   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.

4.010   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும்
மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை-
நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக்
கெங்கை அது எனப்படும் கெடில வாணரே.

4.033   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

5.019   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.

9.013   9 st/nd Thirumurai   Song # 10   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய
   அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
   உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்
   கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.
11.008   11 st/nd Thirumurai   Song # 101   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகம்கமலம் பொங்கெழிலார்

11.008   11 st/nd Thirumurai   Song # 148   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலம்தோற்றாள் அங்கொருத்தி

11.016   11 st/nd Thirumurai   Song # 26   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த
செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத்

11.021   11 st/nd Thirumurai   Song # 26   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந் திருநட்டமே.

12.280   12 st/nd Thirumurai   Song # 978   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அங்கை அனலேற் றவர்க்கடியேன்
ஆக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க்
காயா வாகக் கண்டமணர்
இங்கு நீரிட் டாக்குவன
காய்த்தற் கடைவுண் டோவென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தார்
அருள வேண்டு மெனப்புகல.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000