சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அஞ்சும்
அஞ்சும்    
2.101   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில்,
குஞ்சி ஆர வந்தி செய்ய, அஞ்சல்! என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி, பணைத்த கொங்கை, நுண்
இடை,
அம்சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே.

5.089   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை
அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்
அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;
அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.

7.017   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அஞ்சும் கொண்டு ஆடுவர், ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்;
தஞ்சம் கொண்டார், அடிச்சண்டியை, தாம் என வைத்து உகந்தார்;
நெஞ்சம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே .

10.733   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.

10.808   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

12.260   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அஞ்சும் உள்ளமோ டவர்மருங்
கணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல்லணைப் பள்ளியிற்
பள்ளிகொள் கின்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 788   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அஞ்சும் உள்ளத்த ராகியும்
அறிவிலா அமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில்
விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது
படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை
சோர்ந்திலர் நின்றார்.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000